உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று ஆராய்வு

0 502

பெண் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் அடங்­கிய குழு ஒன்று கடந்த வாரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்கள் எதிர்­நோக்கும் சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யது. ராதிகா குமா­ர­சு­வாமி, நிமல்கா பெர்­ணான்டோ, சகுந்­தலா கதிர்­காமர், சுளானி கொடிக்­கார, ரேஹப் மமூர், யாமினி ரவீந்­திரன், தியாகி ருவன்­பத்­தி­ரண, குமு­தினி சாமுவேல், ஷ்ரீன் சறூர், அம்­பிகா சற்­கு­ண­நாதன் மற்றும் முகத்­தஸா வாஹித் ஆகி­யோரே இந்த விஜ­யத்தில் பங்­கு­பற்­றி­ய­வர்­க­ளாவர். இது தொடர்பில் இத் தூதுக் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்கை வரு­மாறு:

இதன் கீழ் கையொப்­ப­மிடும் நாம், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு துய­ருறும் வேறு­பட்ட சமூ­கங்­களின் தற்­கால நிலை­யினை உறுதி செய்யும் நோக்கில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திக­தி­களில் மட்­டக்­க­ளப்­புக்கு பயணம் ஒன்றை மேற்­கொண்டோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள கிறிஸ்­த­வர்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் என்­ப­ன­வற்றின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஏற்­ப­டுத்­திய தீய தாக்­கங்கள் எவ­ராலும் மறுக்­கப்­பட முடி­யா­த­ன­வாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அதி­லி­ருந்து மீண்டு வரும் இக்­கா­லப்­ப­கு­தியில் அவர்­களை சந்­திப்­பதும் அவர்­களின் அனு­ப­வங்கள் பற்றி விசா­ரிப்­பதும் அவர்­களை மீள அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கும் என்­ப­தனை நாம் உறு­தி­யாக மனதில் நிலை­நி­றுத்­தி­யி­ருந்தோம்.

குறிப்­பாக, பல எண்­ணிக்­கை­யான குழுக்கள் மற்றும் தனி நபர்கள் அவர்­களைச் சந்­தித்து அது பற்றி உரை­யா­டி­யுள்ள நிலையில் இவ்­வி­டயம் விசே­ட­மாக கருத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். எனவே, நாம் இது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ சமு­தா­யத்தைச் சேர்ந்­த­வர்­களுடனும் பணி­களில் ஈடு­படும் நபர்­க­ளுடனும்ன் நாம் உரை­யா­டல்­களை மேற்­கொண்டோம். இந்த கலந்­து­ரை­யா­டல்­களின் போது கிறிஸ்­தவ சமூகம் தமது மத நம்­பிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்தும் உரி­மையை சுதந்­தி­ர­மாக மற்றும் பய­மின்றி பிர­யோ­கிப்­பதில் தொடர்ச்­சி­யான சவால்­களை எதிர்­கொள்­வதை எம்மால் அறிய முடிந்­தது. சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்ட வகையில் அரசு மேற்­கொள்ளும் தலை­யீ­டுகள், அத்­துடன் இந்து சமு­தாயம் மற்றும் கத்­தோ­லிக்க திருச்­சபை என்­பன ஏற்­ப­டுத்தும் பாகு­பா­டு­களே இந்­நி­லைக்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. ஹிந்­துத்­துவா போன்ற கொள்­கை­களை மக்கள் மத்­தியில் பரப்பும் குழுக்­களின் பிர­சன்னம் மற்றும் அவை இந்­தி­யாவின் சிவ­சேனை அமைப்­புடன் கொண்­டுள்ள இணைப்­புகள் கிறிஸ்­தவ சமூ­கத்தை இலக்கு வைப்­ப­தாக அறிய முடி­கின்­றது.

கிறிஸ்­தவ சமூ­கத்­துக்கு ஏற்­ப­டுத்­தப்­படும் பாகு­பா­டுகள், ஓரங்­கட்டல் மற்றும் தொந்­த­ர­வு­களில் மத வழி­பாட்­டுத்­த­லங்­களை ஸ்தாபிப்­ப­தற்கு அனு­மதி மறுக்­கப்­படல், பொது மயா­னங்­களை பயன்­ப­டுத்­து­வதில் இருந்து தடுக்­கப்­படல், அவர்­களின் பிள்­ளை­க­ளுக்கு தேசிய பாட­சா­லை­களில் அனு­மதி மறுக்­கப்­படல், தொழுகை ஆரா­த­னை­க­ளுக்கு வன்­முறை பிர­யோகம் உள்­ள­டங்­க­ளாக இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­படல் மற்றும் அருட்­தந்­தை­க­ளுக்கு எதி­ராக வன்­முறை பிர­யோ­கிக்­கப்­படல் என்­ப­னவும் உள்­ள­டங்­கு­கின்­றன. இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் பொலி­சா­ருக்கு முறைப்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் வேளை அவர்­களின் செயற்­படா நிலை கார­ண­மாக முறைப்­பா­டு­களால் எந்த வித பிர­யோ­ச­னமும் விளை­வ­தில்லை என எமக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. புல­னாய்வு முகவர் அமைப்­புகள் தேவா­ல­யங்­க­ளுக்கு வருகை தந்து ஆரா­த­னை­களில் பங்­கு­பற்­றுவோர் விப­ரங்­களை கோரு­வ­தாக தெரிய வரு­கின்­றது, இதற்­கு­ரிய காரணம் ஆரா­த­னை­களில் பங்­கேற்­கா­த­வர்கள் தேவா­ல­யங்­க­ளுக்கு வருகை தராமல் இருப்­பதை உறுதி செய்­வ­தற்­காக எனக் கூறப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும், இது பற்றி கருத்­துக்­களை வெளி­யிட்ட அருட்­தந்­தைகள் அனைத்து நம்­பிக்­கை­க­ளையும் பின்­பற்றும் மக்­க­ளையும் வர­வேற்கும் உள்­வாங்கும் கொள்­கைளை தாம் பின்­பற்றும் வேளை இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் அவ்­வாறு வர விரும்பும் நபர்­க­ளுக்கு அச்­சு­றுத்­து­லாக அமையும் எனக் குறிப்­பிட்­டனர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களின் மனை­விகள் மற்றும் தாயார்­களை எம்மால் சந்­திக்க முடிந்­தது. கைது செய்­யப்­பட்ட நபர்கள் பொது­வாக வறு­மை­யான குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­வதால் இளம் பிள்­ளை­க­ளுடன் காணப்­படும் அவர்­களின் மனை­விகள் தீவிர சமூக பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொள்­கின்­றனர். அது அவர்­களின் வாழ்வின் அனைத்து அம்­சங்­க­ளிலும் சேதம் விளை­விக்கும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட பல கைதுகள் வர­லாற்று ரீதி­யாக இடம்­பெற்று வரும் எதேச்­சை­யான கைதுகள் மற்றும் தடுத்து வைத்­தலை மீள உறுதி செய்­கின்­றன. உதா­ர­ண­மாக, பல நபர்கள் விசா­ர­ணைக்கு முன்னர் கைது செய்­யப்­பட்டு பல மாதங்­க­ளாக தடுப்­புக்­காவல் ஆணைகள் மூலம் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் அவர்­க­ளுக்கு எதி­ரான சான்­றுகள் எவையும் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அவ்­வாறு அவர்கள் விடு­த­லை­யாகும் வேளை அவர்­களின் வாழ்­வா­தாரம் இழக்­கப்­படல், நற்­பெ­ய­ருக்கு தீங்கு ஏற்­படல் என்­பன ஏற்­க­னவே அவர்­க­ளுக்கு நடந்து முடிந்த விட­யங்­க­ளாக அமை­வ­துடன் அவர்கள் தீவிர உள­வியல் அதிர்ச்­சிக்கு உட்­பட்­ட­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட பல கைதுகள் சட்­டத்­தினால் குற்றம் என குறிப்­பி­டப்­படும் குற்­றங்­க­ளுக்­காக அல்­லாமல் அனு­மா­னிக்­கப்­பட்ட கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. குற்­றங்­களை இழைக்­காத, அவற்­றுக்கு உத­வாத அல்­லது ஒத்­தாசை புரி­யாத நபர்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. உதா­ர­ண­மாக, ஸஹ்­ரா­னினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிகழ்­வு­களில் பல­வந்­தப்­ப­டுத்­தப்­பட்டு அல்­லது தவ­றான தக­வல்கள் வழங்­கப்­பட்­டதன் மூலம் ஒன்று அல்­லது இரண்டு நாட்கள் கலந்து கொண்ட பையன்கள் மற்றும் இளம் ஆண்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதன் கார­ண­மாக பலர் இன்­று­வரை பரீட்­சை­களை எழுத முடி­யா­த­வர்­க­ளா­கவும் தடுப்­புக்­கா­வலில் அல்­ல­லுறும் நிலை­யிலும் உள்­ளனர். தடுப்­புக்கு காவ­லுக்கு விதந்­து­ரைக்­கப்­பட்ட காலப்­ப­கு­தி­யான 18 மாதங்­க­ளுக்கும் அதி­க­மாக தடுப்­புக்­கா­வலில் உள்ள நபர்கள் பற்­றிய கரி­ச­னை­களும் இங்கு காணப்­ப­டு­கின்­றன. கைது செய்­யப்­பட்ட நபர்­களின் குடும்­பங்­க­ளுக்கு குறித்த நபர்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள இடங்கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை கைது செய்­யப்­பட்­டமை தொடர்­பான ஆவ­ணங்கள் கைது இடம்­பெற்று பல நாட்கள் கழிந்த பின்­னரே வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் குறித்த நபர் இன்­னொரு தடுப்­புக்­காவல் இட­மொன்­றுக்கு எப்­போது மாற்­றப்­பட்­டார் என்ற தக­வல்­களும் அவ் ஆவ­ணங்­களில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இன்று வரை கைதுகள் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் ஏனைய உறுப்­பி­னர்­களால் விலக்­கப்­ப­டு­கின்­றன, தப்பிப் பிழைப்­ப­தற்­காக மேற்­கொள்ளும் போராட்­டத்தை இன்னும் கடி­ன­மாக்­கு­கின்­றது. அவ்­வா­றான குடும்­பங்­க­ளுக்கு புல­னாய்வு முகவர் அமைப்­புகள் வருகை தரல் மற்றும் அவர்கள் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைக்­கப்­படல் என்­பன இக்­கு­டும்­பங்­களை சமூ­கத்தில் இருந்து இன்னும் தூர­மாக்­கு­கின்­றன, அது அக்­கு­டும்­பங்கள் இன்னும் சந்­தே­கத்­துடன் நோக்­கப்­ப­டு­வ­தற்கு ஏது­வா­கின்­றது. அதே நேரத்தில், தடுப்­புக்­கா­வலில் உள்­ள­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு உதவும் நபர்­களும் பாது­காப்பு முகவர் அமைப்­பு­களால் கண்­கா­ணிப்புக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர், இது அக்­கு­டும்­பங்­க­ளுக்கு மற்­ற­வர்கள் உத­வு­வ­தையும் தடுக்­கின்­றது. இவ்­வா­றான பெரும்­பா­லான குடும்­பங்­களின் ஒரே­யொரு நபர் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள நிலையில் பல தாக்­கங்­களை சமா­ளிக்கத் திணறும் குடும்­பங்­க­ளுக்கு உத­விகள் தடுக்­கப்­ப­டு­வது இக்­கு­டும்­பங்கள் எதிர்­கொள்ளும் உள­வியல் அழுத்­தத்தை மேலும் அதி­க­ரிக்­கின்­றது. இந்தக் குடும்­பங்­க­ளிடம் சட்ட விழிப்­பு­ணர்வு இல்லை அத்­துடன் சட்ட பிர­தி­நி­தித்­து­வத்தை தக்க வைத்­துக்­கொள்ள எந்த வித வழி­யு­மில்லை, எனவே இக்­கு­டும்­பங்கள் ஏமாற்று வாக்­கு­று­திகள் மற்றும் சுரண்­டல்­களால் பாதிப்­புறும் ­நிலை காணப்­ப­டு­கின்­றன.

முப்­பது வருட ஆயுதப் போராட்டம் நிறை­வுக்கு வந்த பின்னர் சமூ­கங்­க­ளுக்கு இடை­யான மற்றும் சமூ­கங்­க­ளினுள் காணப்­படும் பதற்றங்கள் முறை­யாகக் கையா­ளப்­ப­டா­ததால் அவை நீறு பூத்த நெருப்­பாக புகைந்து கொண்­டி­ருந்­தன, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் அவை மீண்டும் வெளிப்­பட்­டுள்­ள­துடன் அது ஏற்­க­னவே காணப்­படும் பிள­வு­களை மேலும் அதி­க­ரிக்கும் எனத் தெரி­கின்­றது. தற்­பொ­ழுது புதிய குழுக்கள் தோற்றம் பெற்­றுள்­ள­துடன் அவை பாகு­பாடு, ஓரங்­கட்டல் என்­ப­வற்­றுக்­கான புதிய இலக்­கு­களை கண்­ட­றிந்­துள்­ள­துடன் அதன் மூல­மாக பாதிப்­புறும் ஏது­நி­லையில் உள்ள சனத்­தொ­கை­க­ளுக்கு பாது­காப்­பின்மை மற்றும் முரண்பாடு என்பவற்றுக்கான புதிய மையங்களை உருவாக்குகின்றன.

ஒரு சமூகத்தலைவர் இரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிட்டார் “எங்கெல்லாம் பெரும்பான்மை காணப்படுகின்றதோ அங்கெல்லாம் சிறுபான்மைகள் ஒடுக்கப்படுகின்றன. இப்பிளவுகளை அகற்ற சமூக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கம் அவற்றுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக தனது செயற்பாடுகள் அல்லது செயற்படா நிலை மூலம் அவற்றுக்கு குந்தகம் விளைவிப்பதையே முன்னெடுக்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய பாதுகாப்பை அனைவருக்குமான பாதுகாப்பு என நோக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்து அச்சுறுத்தாத பாதுகாப்பு வடிவம் ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறன்றி, குறிப்பிட்ட சமூகங்களை மாத்திரம் இலக்கு வைப்பது ஏற்கனவே பாதிப்புறும் சனத்தொகைகள் மேலும் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படலுக்கு உட்படுத்தப்பட வழி வகுப்பதன் மூலம் சமூக பிணைவு மற்றும் ஒற்றுமைக்கு சேதம் ஏற்படுத்தும்.

இந்த விஜயம் பற்­றிய விரி­வான அறிக்கை விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.