65 வய­திலும் தங்கம் வென்று அசத்­திய ஓட்ட வீரர் லாபீர்

0 578

எச்.எம்.எம்.பர்ஸான்

ஒன்­பது வயதில் ஆரம்­பித்த எனது விளை­யாட்டு அறு­பத்­தைந்து வய­திலும் ஓயாமல் தொடர்­கி­றது என்­கிறார் ஓட்ட வீரர் அலியார் முகம்மட் லாபீர்.
மட்­டக்­க­ளப்பு, ஏறாவூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்­போது நான்கு பிள்­ளைகள், எட்டுப் பேரப்­பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வரு­கிறார்.

சிறு­வ­யதில் இருந்து விளை­யாட்டுத் துறையில் மிகவும் ஈடு­பாடு கொண்ட முகம்மட் லாபீர், பாட­சாலைக் காலங்­களில் மாவட்ட, மாகாண போட்­டி­களில் பங்­கு­பற்றி பல்­வேறு சாத­னை­களை நிலை­நாட்­டி­யுள்ளார்.

சிறு­வ­யதில் சாத­னை­களை நிலை­நாட்­டி­யது போன்று தனது அறு­பத்­தைந்து வய­திலும் அதே உத்­வே­கத்­துடன் சாதனை படைத்து அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.
இலங்கை மெய்­வல்­லுனர் அமைப்பு கொழும்பு சுக­த­தாச அரங்கில் இம்­மாதம் 11 ஆம், 12 ஆம் திக­தி­களில் நடாத்­திய மெய்­வல்­லுநர் போட்­டியில் கலந்து கொண்டே இவர் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டி­யுள்ளார்.

11 ஆம் திகதி நடந்த 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் 15.6 செக்­கன்­களில் ஓடி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்­ப­தக்­கத்­தையும், 12 ஆம் திகதி நடந்த 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் 34 செக்­கன்­களில் ஓடி முதலாம் இடம்­பெற்று தங்கப் பதக்­கத்­தையும் வென்று சாதனை படைத்­துள்ளார்.

இவ்­வாறு அசத்தல் சாதனை படைத்த மூத்த ஓட்ட வீரர் முகம்மட் லாபிரை “விடிவெள்ளி” க்காக ஏறாவூரிலுள்ள அவ­ரது இல்லம் சென்று சந்­தித்துப் பேசினோம்.
“தன்­னம்­பிக்கை இருந்தால் ஒவ்­வொ­ரு­வ­ராலும் சாதிக்க முடியும். என்னால் முடியும் என்ற எண்­ணத்தை நாம் ஒவ்­வொ­ரு­வரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு நம்­பிக்கை வைத்­ததன் கார­ணத்­தால்தான் நான் இன்று இவ்­வா­றான சாத­னை­களை படைத்­துள்ளேன்.

நான் ஏறாவூர் அலிகார் பாட­சா­லையில் கல்வி கற்ற காலத்தில் விளை­யாட்­டுத்­து­றையில் ஏரா­ள­மான பெரு­மை­களை தேடிக் கொடுத்­துள்ளேன்.
1971 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் கிளித்­தட்டு விளை­யாட்டில் கலந்து கொண்டு மாகாண சாம்­பி­ய­னாக தெரிவு செய்­யப்­பட்டேன்.

அத்­தோடு, நான் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. கழ­கத்தின் உதைப்­பந்­தாட்ட அணியில் கோல் காப்­பா­ள­ரா­கவும் இருந்­துள்ளேன். அந்தக் கழ­கத்தின் ஆயுட்­கால முகா­மை­யா­ள­ரா­கவும் நான் இன்­று­வரை செயற்­பட்டு வரு­கிறேன்.

விளை­யாட்டில் ஆர்வம் கொண்ட என்னை மட்­டக்­க­ளப்பு சென் மைக்கல் கல்­லூ­ரியின் ஸ்தாபகர் வெபர் பாதி­ரியார் மேலும் ஊக்­க­ம­ளித்தார். உன்னால் ஓட்டப் போட்­டியில் சிறப்­பாக பங்­கு­பற்ற முடியும். அதில் தொடர்ந்தும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று எனக்கு அப்­போது ஆலோ­ச­னை­களை வழங்­கினார். அவர்தான் எனது பயிற்­று­விப்­பா­ள­ரா­கவும் செயற்­பட்டு வந்தார்” என்று முகம்மட் லாபிர் தனது சிறு­வ­யது கால அனு­ப­வங்­களை எம்­மிடம் பகிர்ந்து கொண்டார்.

“பதின்­மூன்று வயதில் 100 மீற்றர், நீளம் பாய்தல், அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்­டி­களில் கலந்து கொண்டு மாவட்ட சாம்­பி­ய­னாக தெரிவு செய்­யப்­பட்டேன்.
அதே­போன்று அகில இலங்கை ரீதி­யாக பது­ளையில் நடந்த போட்­டி­யிலும் கலந்து கொண்டு அப்­போது நான் வெண்­க­லப்­ப­தக்கம் ஒன்­றி­னையும் பெற்று சாதனை நிலை நாட்­டினேன்.

1983 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பில் நடந்த ஏ.ஜி.ஏ.மீட்டில் 1500 மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்றி 4 நிமிடம் 29.5 செக்­கன்­களில் ஓடி முடித்து முத­லிடம் பெற்று சாதனை படைத்­துள்ளேன். அந்த சாதனை இது­வரை எவ­ராலும் முறி­ய­டிக்­கப்­ப­ட­வில்லை.
நான் அப்­போது கடற்­கரை மணலில் ஓட்டப் பயிற்சி மற்றும் நடைப்­ப­யிற்­சி­களில் ஈடு­­பட்டு வந்தேன்.

நான் 1985 ஆம் ஆண்டு திரு­மணம் முடித்தேன். அதன் பின்னர் விளை­யாட்டுப் போட்­டி­களில் கலந்து கொள்­வதை தவிர்த்து வந்த போதும் கழக நிர்­வா­கத்தில் இருந்து வந்தேன்.
விளை­யாட்டில் ஈடு­பாடு இல்­லாத அந்த காலப்­ப­கு­தியில் நான் ஆன்­மிகம், தொழில், பிள்­ளை­களின் கல்வி விட­யங்­களில் மிகவும் அக்­கறை கொண்டு செயற்­பட்டு வந்தேன். அதனால் என்னால் தொடர்ந்தும் விளை­யாட்டில் ஈடு­பாடு காட்ட முடி­ய­வில்லை.
இந்த நிலையில் தான் அண்­மையில் கொழும்பு சுக­த­தாச மைதா­னத்தில் மாஸ்டர்ஸ் அத்­லெட்டிக் சம்­பி­யன்ஷிப் போட்டி நடை­பெ­ற­வுள்­ள­தாக நான் அறிந்து கொண்டு அதற்­காக விண்­ணப்­பித்தேன்.

அதில் கலந்து கொள்­வ­தற்­காக வேண்டி நான் 36 வரு­டங்கள் தொடர்பு இல்­லாமல் இருந்த எனது ஓட்டப் பயிற்­சியை மீண்டும் தைரி­யத்­தோடு முன்­னெ­டுத்தேன்.
இந்தப் போட்­டியில் நான் சாதனை படைக்க வேண்டும் என்ற நம்­பிக்­கை­யுடன் வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்­சி­களில் ஈடு­பட்டேன்.

நீண்ட வரு­டங்கள் ஓட்டப் பயிற்­சியில் தொடர்பு இல்­லாமல் இருந்து திடீ­ரென்று பயிற்­சியில் ஈடு­பட்ட போது நான் உபா­தைக்கு ஆளா­கினேன்.
எனினும் எதையும் நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. எனது தொடர் பயிற்­சிதான் நான் இந்த சாத­னையை நிலை­நாட்ட கார­ண­மாக அமைந்­துள்­ளது.
நான் தினந்­தோறும் சுமார் பன்­னி­ரண்டு கிலோ மீற்றர் தூரம் துவிச்­சக்­க­ர­வண்டி ஓடி வரு­கிறேன்.

அல்­லாஹ்வின் உத­வியால் எனக்கு எந்த நோயும் இல்லை. நான் சாப்­பிடும் ஆரோக்­கி­ய­மான உண­வுதான் என்னை சுறு­சு­றுப்­பாக வைத்­தி­ருக்­கி­றது.
போட்­டியில் நான் நல்ல முறையில் பங்­கு­பற்ற வேண்டும் என்­ப­தற்­காக உணவுப் பழக்­க­வ­ழக்­கத்தில் நான் கூடுதல் கவனம் செலுத்தி வந்தேன்.

அதற்­காக நான் ஒவ்­வொரு நாளும் பாலும், முட்­டையும் சாப்­பிட்டு வந்தேன்.
நான் இதற்கு முன்­னரும் கொழும்பு சுக­த­தாச மைதா­னத்தில் நடை­பெற்ற போட்­டியில் கலந்து கொண்­டுள்ளேன். 1978 ஆம் ஆண்டு நடை­பெற்ற பத்­தா­யிரம் மீற்றர் ஓட்டப் போட்­டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

அதில், இறுதி சுற்றை வேக­மாக ஓடி முடித்­த­மைக்­காக எனக்கு பாராட்­டுக்கள் கிடைத்­தன. அவ்­வாறு ஓடி­யதை பாராட்டி என்­னைப்­பற்றி டெய்லி நியூஸ் பத்­தி­ரி­கையில் செய்தி ஒன்றும் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது.

நான் இவ்­வாறு சாத­னைகள் படைப்­ப­தற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கிய நபர்­களை என்னால் மறக்க முடி­யாது. எனது பிள்­ளைகள், எனது குடும்பம், நண்­பர்கள், கழக உறுப்­பி­னர்கள் எல்­லோரும் என்னை உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்கள். குறிப்­பாக நான் இந்தப் போட்­டியில் கலந்து கொள்­வ­தற்­காக வேண்டி எனக்கு விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை பெற்­றுத்­தந்து வழி­காட்­டிய கழக உறுப்­பினர் தஸ்லீம் என்­ப­வ­ருக்கு நான் விசே­ட­மாக நன்­றி­களை தெரி­விக்­கிறேன்.

அதே­போன்று நான் சாதனை நிலை­நாட்­டி­ய­மைக்­காக அர­சியல் தலை­வர்கள், கல்­வி­மான்கள், அதி­கா­ரிகள், முக்­கி­யஸ்­தர்கள் எனப்­ப­லரும் நேர­டி­யா­கவும் தொலை­பேசி மூல­மா­கவும் எனக்­கு­ வாழ்த்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

எனது வீட்­டுக்கு தினந்­தோறும் பலரும் வருகை தந்து என்னை வாழ்த்திச் செல்­கின்­றனர். எனக்கு வாழ்த்துச் சொல்­வ­தற்­காக உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­களில் இருந்தும் தொலை­பேசி அழைப்­புக்கள் வந்து கொண்டே இருக்­கின்­றன.

இதே போன்­ற­தொரு போட்டி அடுத்த வருடம் மார்ச் மாதம் சுக­த­தாச அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது அதில் 100, 200, 400 மீற்றர் ஓட்­டப்­போட்டி நடை­பெ­ற­வுள்­ளது. அதில் நானும் கலந்து கொள்­ள­வுள்ளேன். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இந்­தோ­னே­சி­யாவில் நடை­பெறும் போட்­டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதற்­கான பயிற்­சி­களை நான் மேற்­கொள்­ள­வுள்ளேன்.

தேசி­யத்தில் சாதனை படைத்­தது போன்று அல்­லாஹ்வின் உத­வியைக் கொண்டு சர்வதேசத்திலும் சாதனை படைப்பேன்” என்று உற்சாகத்துடன் கூறினார் சாதனை வீரர் முகம்மட் லாபிர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.