டொலர் நெருக்கடிக்கு உதவி கோரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் விரைவில் பயணம்

0 347

(றிப்தி அலி)
நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பிர­த­மரின் இந்த விஜ­யத்தில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரச தரப்பின் உயர் மட்­டத்­தி­ன­ருக்கும் இடையில் முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்று அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை, அமெ­ரிக்க டொலர் நெருக்­கடி தொடர்பில் பேச்சு நடத்­து­வ­தற்­காக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வலு­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் தனித்­தனி விஜ­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில், மத்­திய வங்­கியின் உயர் மட்­டக்­கு­ழு­வொன்று இந்த வாரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டுள்­ளது. கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கே இந்த குழு விஜயம் செய்து முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இக்­கு­ழுவின் சவூ­திக்­கான விஜ­யத்தில் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ராலும் இணையவுள்ளார். இந்த தூதுக்­கு­ழுவின் விஜ­யத்­தினை தொடர்ந்தே பிர­த­மரின் மத்­திய கிழக்­கிற்­கான விஜயம் இடம்­பெறும் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது,
கடந்த மார்ச் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு மேற்கொண்ட விசேட விஜயத்தினை அடுத்து, 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை இலங்கைக்கு அந்நாடு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.