கிண்ணியா விபத்து: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

0 408

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பிர­தே­சத்தில் படகுப் பாதை விபத்­துக்­குள்­ளான சம்­பவம் தேசிய ரீதி­யாக பாரிய அதிர்­வ­லை­களை எழுப்­பி­யுள்ள நிலையில், இச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து குறித்த பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­க­மைய பாலத்தை நிர்­மா­ணிக்கும் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். 9 மாதங்­க­ளுக்குள் இப் பாலத்தின் நிர்­மாணப் பணி­களை பூர்த்தி செய்­யவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மற்­று­மொரு சிறுமி மரணம்
கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி படகுப் பாதை விபத்தில் உயி­ரி­ழந்த மர­ணங்­களின் எண்­ணிக்கை ஏழாக உயர்ந்­துள்­ளது. திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்­சாக்­கேணி பகு­தியை சேர்ந்த ரபீஸ் பாத்­திமா நபா எனும் 6 வயது சிறு­மியே சிகிச்சை பல­னின்றி கடந்த சனிக்­கி­ழமை இரவு உயி­ரி­ழந்­துள்ளார்.
இவர் கிண்­ணியா அல் அஷ்கர் வித்­தி­யா­ல­யத்தில் தரம் 1 இல் கல்வி பயின்று வந்தார். தனது தாயுடன் பாட­சா­லைக்குச் செல்­வ­தற்­காக படகுப் பாதையில் பய­ணித்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்­துள்­ளது. தாய் உயிர் தப்பி கிண்­ணியா தள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வீடு திரும்­பி­யி­ருந்தார்.

குறித்த சம்­பவம் தொடர்பில் தாயிடம் வின­விய போது “எனது பிள்ளை சம்­பவம் நடந்து ஆறு நாட்­க­ளாக கண்­களை திறக்­க­வில்லை திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் இருந்து இரவு மர­ணித்­த­தாக தகவல் வந்­தது” என கண்ணீர் மல்கக் கூறினார். இரு பெண் பிள்­ளை­களில் மூத்த பெண் பிள்­ளையே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.
உயி­ரி­ழந்த சிறு­மியின் ஜனாஸா கிண்­ணியா நடுத்­தீவு பொது மைய­வா­டியில் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இதற்­க­மைய படகுப் பாதை விபத்தில் ஐந்து மாண­வர்கள் உட்­பட ஏழு பேர் மர­ணித்­துள்­ளனர்.

நகர சபை தலை­வ­ருக்கும் விளக்­க­ம­றியல்
இப் படகுப் பாதை விபத்து தொடர்பில் கிண்­னியா நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். நளீம் பொலி­ஸாரால் கடந்த வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்டார். கிண்­ணியா பொலிஸ் நிலை­யத்­துக்கு விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட அவர், விசா­ர­ணை­க­ளி­னி­டையே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது அவரை எதிர்­வரும் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதிவான் ஐ.பி. ரஸாக் உத்­த­ர­விட்டார்.
தண்­டனை சட்டக் கோவையின் 273,275 மற்றும் 298 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் அவ­ருக்கு எதி­ராக பொலிஸார் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

கிண்­ணியா பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட நகர சபை தலைவர் நளீம், அங்கு வைத்து கைது செய்­யப்­பட்டார். இக்­கைது தொடர்பில் கருத்து தெரி­வித்த பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ, ‘ இந்த 6 பேரின் உயி­ரி­ழப்­புக்கு கார­ண­மான சம்­ப­வத்­துக்கு மறை­மு­க­மாக நகர சபையின் தலைவர் உதவி ஒத்­தாசை புரிந்­துள்ளார். எந்த வித­மான பரி­சோ­த­னை­களும் இன்றி அந்த படகுப் பாதையை நடாத்திச் செல்ல அனு­ம­தி­ய­ளித்­துள்ளார். அது குறித்த எந்த அவ­தா­னத்­தையும் அவர் செலுத்­த­வில்லை. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சம்­ப­வத்­துடன் அவ­ருக்கு குற்­ற­வியல் பொறுப்பு சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்டார்” என குறிப்­பிட்டார்.

இதே­வேளை முன்­ன­தாக கைது செய்­யப்­பட்ட படகுப் பாதையின் உரி­மை­யாளர், செலுத்­துநர் மற்றும் கட்­டண பணம் வசூலிப்­பவர் ஆகிய மூவ­ரையும் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. கவ­ன­யீ­ன­மாக செயற்­பட்டு 7 பேருக்கு மர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­யமை மேலும் 20 பேருக்கு காய­மேற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டை­யினால் பாது­காப்­பான படகுச் சேவை
குறிஞ்­சாக்­கேணி படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து அதே களப்பில் பாட­சாலை மாண­வர்கள் பாது­காப்­பாக செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து சேவையை கடற்­படை ஆரம்­பித்­துள்­ளது. கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் இந்த களப்பில் படகுச் சேவையை ஆரம்­பித்­த­தாக கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் இந்­திக டி சில்வா தெரி­வித்தார்.
25 மாண­வர்கள் ஒரே தட­வை­யாக பய­ணிக்க முடி­யு­மான, போக்­கு­வ­ரத்து பட­கொன்­றினை, கடற்­ப­டையின் கிழக்கு கட்­டளை மையம் ஊடாக சேவையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பிற்­பகல் 12 மணி முதல் 2 மணி வரையும் இந்த படகு பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக சேவையில் இருக்கும் எனவும் கடற்­படை பேச்­சாளர் கெப்டன் இந்­திக டி சில்வா கூறினார்.

கிண்­ணியா படகுப் பாதை விபத்­தை­ய­டுத்து இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் பாது­காப்­பாக படகில் ஏறு­வ­தற்கு கடற்­படை தற்­கா­லிக ஜெட்டி ஒன்­றையும் அமைத்­துள்­ளது.

சகல படகுப் பாதைகள் குறித்தும் ஆய்வு
இத­னி­டையே கிழக்கு மாகா­ணத்தில் தற்­போது பயன்­பாட்டில் உள்ள அனைத்து படகுப் பாதை­க­ளி­னதும் தரம் குறித்து உட­னடி தர பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்க கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் விஷேட குழு­வொன்­றினை அமைத்­துள்ளார். மாகாண போக்­கு­வ­ரத்து பொறி­யியல் துறையின் அதி­கா­ரிகள், பொலிஸார், கடற்­படை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கி­ய­தாக குறித்த குழுவை அவர் அமைத்­துள்ளார்.

பால நிர்­மாண பணிகள் துரிதம்
இதே­வேளை, கிண்­ணியா தொடக்கம் குறிஞ்­சாக்­கேணி வரை­யான பாலத்­திற்­கான நிர்­மாணப் பணி­களை துரி­தப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

ஆறு தொடக்கம் ஒன்­பது மாதங்­க­ளுக்குள் பாலத்தின் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்­பிட்­டுள்ளார்.

ஒப்­பந்­தக்­கா­ரரின் தாமதம் கார­ண­மா­கவே குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் நிர்­மா­ணப்­ப­ணி­களும் தாம­த­மா­கி­யுள்­ள­தாக அவர் கூறி­யுள்ளார்.

இதனால் கிண்­ணியா தொடக்கம் குறிஞ்­சாக்­கேணி வரை­யான பாலத்­திற்­கான நிர்­மாணப் பணி­களை வேறொரு ஒப்­பந்­தக்­கா­ர­ரிடம் வழங்கி, நிர்­மா­ணப்­ப­ணி­களை துரி­தப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கிண்­ணி­யாவில் துக்க தினம்
பட­கு­பாதை கவிழ்ந்­த­மையின் கார­ண­மாக சிறு­வர்கள் உள்­ளிட்ட 7 பேர் உயி­ரி­ழப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்த கிண்­ணியா – குறிஞ்­சாங்­கேணி பாலத்தின் நிர்­மாணப் பணி­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தியும், உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு இரங்­கலை வெளிப்­ப­டுத்தும் வகையில் பிர­தேச மக்­களால் கடந்த வியா­ழக்­கி­ழமை துக்க தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

இதன் கார­ண­மாக கிண்­ணியா நக­ரி­லுள்ள சகல கடை­களும் மூடப்­பட்­டி­ருந்­த­தோடு, சகல அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களில் வெள்ளை கொடி­யேற்­றப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக கிண்­ணியா பகு­தி­யி­லுள்ள பாட­சா­லை­க­ளிலும் இவ்­வாறு வெள்ளைக் கொடி­யேற்றி இரங்கல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

ரிஷாத் பதி­யுதீன் விஜயம்
கிண்­ணியா, குறிஞ்­சாக்­கே­ணியில் படகுப் பாதை விபத்­துக்­குள்­ளா­னதில் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனாஸா வீடு­க­ளுக்கு கடந்த புதன் கிழமை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆறுதல் தெரி­வித்தார். அதே­போன்று கிண்­ணியா மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்­ரூபும் சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைச் சந்­தித்து ஆறுதல் கூறினார்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தாக்­குதல்
குறித்த படகுப் பாதை விபத்து தொடர்­பாக அறிக்­கை­யிடச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான எச்.எம்.ஹலால்தீன், ஏ.எல்.எம். ரபாய்தீன் மற்றும் அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கட­மை­களை செய்து கொண்­டி­ருக்­கும்­போது அச்­சு­றுத்­தப்­பட்டு தாக்­கப்­பட்டு விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் ஊட­க­வி­ய­லா­ள­ரான அப்துல் சலாம் யாசீமின் கைய­டக்­கத்­தொ­லை­பேசி பறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இது தொடர்பில் கிண்­ணியா பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் தம் கட­மை­யான படகு விபத்து மற்றும் அத­னுடன் தொடர்­பான விட­யங்­களை அறிக்கை விடு­வ­தற்கு முற்­பட்­ட­போதே தாக்­கப்­பட்­டுள்­ளனர். ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையைச் சுதந்­தி­ர­மாக மேற்­கொள்­வ­தற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் இது போன்ற முறை­யற்ற செயற்­பாட்டை வன்­மை­யாக கண்­டிப்­ப­தோடு இது தொடர்­பாக விசா­ரித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தாக்­கு­தலை கண்­டித்து நேற்­று­கிண்­ணி­யாவில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்­பெற்­றது. திரு­கோ­ண­மலை மாவட்ட ஊட­க­வி­ய­லாளர் சங்கம் மற்றும் கங்­க­த­லாவ ஐக்­கிய ஊடக ஒன்­றியம் இணைந்து இதனை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இதில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்த பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

காய­ம­டைந்­த­வர்­களை பார்­வை­யிட்ட ஆளுநர்
கிண்­ணியா விபத்தில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களை கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் கடந்த வியா­ழக்­கி­ழமை நேரில் சென்று பார்­வை­யிட்டார்.

அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட அவர், “இனிமேல் இப்­படி ஒரு விபத்து நடக்­காமல் நாம் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். ஒரு­வ­ரை­யொ­ருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இது­வல்ல. போருக்குப் பின்னர், இலங்­கையில் அதிக எண்­ணிக்­கை­யி­லான பாலங்கள் கிழக்கு மாகா­ணத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. இலங்­கையின் மிக நீள­மான பாலம் கிழக்கு மாகா­ணத்தில் உள்­ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி கொவிட் முடக்கம் கார­ண­மா­கவே தாம­த­மா­னது. மாற்று வழி இருந்­த­போ­திலும், மக்கள் அதை பயன்­ப­டுத்த விரும்­ப­வில்லை. இந்த சம்­பவம் தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கிறோம். அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது. எனினும் தற்போது இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டுமா?
இந்த விபத்தைத் தொடர்ந்து பிர­தேச அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் கூட இது குறித்து அர­சி­யல்­வா­திகள் ஒருவர் மீது ஒருவர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. மக்­களின் உயிர்­களைப் பலி கொடுத்த பின்னர் இவ்­வாறு குற்­றம்­சாட்டி விளை­யா­டு­வதில் எந்த அர்த்­த­மு­மில்லை. நிச்­ச­ய­மாக இதற்குக் கார­ண­மான அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் இம் மக்­க­ளது குறை­பா­டுகள் அனைத்தும் தீர்க்­கப்­பட வேண்டும். வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­திகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.