ஞானசாரரின் செயலணி கிழக்கிற்கு செல்கிறது

0 438

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­லணி கிழக்கு மாகாணம் உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் நேரடி விஜயம் மேற்­கொண்டு மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ள­தாக அச்­செ­ய­ல­ணியின் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

சிவில் சமூக அமைப்­புக்கள் மற்றும் நிறு­வ­னங்கள் கருத்­துக்­களை, ஆலோ­ச­னை­களைத் தெரி­விக்க விரும்­பினால் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் காரி­யா­ல­யத்­துக்கு நேர­டி­யாக வருகை தர முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் அமு­லி­லுள்ள தனியார் சட்­டங்­க­ளான கண்­டிய சட்டம், தேச­வ­ழ­மை­ சட்டம் என்­ப­ன­வற்றில் அடங்­கி­யுள்ள நல்ல விட­யங்கள் கருத்­திற்­கொள்­ளப்­பட்டு அனை­வ­ருக்கும் சம­மான முன்­னேற்­ற­க­ர­மான சிறந்­தவோர் சட்­டத்­துக்­கான சிபா­ரி­சு­களை ஆணைக்­குழு முன்­வைக்கும் என செய­ல­ணியின் தலைவர் ஞான­சா­ர­தேரர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில் கூறினார்.

அர­சி­யல்­வா­திகள் நாட்டு மக்கள் இன, மத பேத­மின்றி ஒன்­று­ப­டு­வதை விரும்­ப­வில்லை. அத­னா­லேயே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியை எதிர்க்­கி­றார்கள். இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று பல சட்­டங்கள் இருப்­ப­தனால் அந்­தச்­ சட்­டங்­களை ஒரே சட்­ட­மாக்க நாம் விரும்புகிறோம். செயலணி தனது பொறுப்பினை எவ்வித பாகுபாடுமின்றி நிறைவேற்றும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.