”என்னால் மூச்சு விடமுடியவில்லை” என உயிரிழக்க முன் கசோக்ஜி இறுதியாக கூறினார்

0 919

பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜி துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கசோக்ஜி இறுதியாக, ”என்னால் மூச்சு விடமுடியவில்லை” என கூறினார் என்று ஒலிப்பதிவில் உள்ள தகவலை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது.

கசோக்ஜி கொலை செய்வது முன்பே திட்டமிடப்பட்டது என்பதும் மற்றும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வழியே கொலை செய்வதற்கான விபரங்கள் வழங்கப்பட்டன என்பதும் ஒலிப்பதிவு வழியே தெளிவுடன் தெரிய வந்துள்ளது.

இந்த அழைப்புகள் ரியாத் நகரில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என துருக்கி அதிகாரிகள் நம்புகின்றனர் என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

இந்த கொடிய விபரங்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவில், கொலைகாரர்களிடம் கசோக்ஜி போராடும் பேச்சுகளும், அவரின் சப்தங்களும் பதிவாகியுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.