பயணப்பையில் சடலம்: பாத்திமாவின் உயிரை பறித்த சூதாட்டம்!

0 608

ஏ.ஆர்.ஏ.பரீல்

கொலை செய்­யப்­பட்டு, கைகள் கட்­டப்­பட்ட நிலையில், பிர­யாண பைக்குள் திணிக்­கப்­பட்டு சபு­கஸ்­கந்த – மாபிம பாதையில் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்­க­ருகில் குப்பை மேட்டில் வீசப்­பட்­டி­ருந்த பெண்­ணொ­ரு­வரின் சடலம் நாட்டில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தச் சடலம் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டது.
இச் சம்­பவம் தொடர்­பி­லான பிர­தான சந்­தேக நபரை பொலிஸார் நேற்று முன்­தினம் வெல்­லம்­பிட்­டி­யவில் வைத்து கைது செய்­துள்­ளனர்.

ஏற்­க­னவே பொலி­சாரால் கைது செய்­யப்­பட்டு நேற்று (9)மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட, கணவன் – மனை­வியில், மனை­வியின் சகோ­த­ர­ரான 34 வய­தான மொஹம்மட் நௌஷாட் எனும் சந்­தேக நபரே வெல்­லம்­பிட்­டிய – மெக­ட­கொ­லன்­னாவை பகு­தியில் ஒளிந்­தி­ருந்த போது சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன்­போது கொலை செய்­யப்­பட்ட மாளி­கா­வத்தை தொடர்­மாடி குடி­யி­ருப்பில் வசித்த மொஹம்மட் ஷாபி பாத்­திமா மும்­தா­சுக்கு சொந்­த­மான இரு கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும், சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து பொலிசார் மீட்­டுள்­ளனர்.

இந் நிலையில் இந்த கொலைச் சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட கணவன் – மனைவி நேற்று முன்­தினம் மஹர நீதிவான் கேமிந்த பெரேரா முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட போது, அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள், சமிட் புர, மட்­டக்­குளி எனும் முக­வ­ரியில் வசித்த மொஹம்மட் சித்தி ரொஷானா (36), சேகு ராஜா கணேஷ் ஆனந்த ராஜா (36) எனும் கணவன் மனை­வியர் ஆவர்.

இந்த சம்­ப­வத்தில் கைது செய்­யப்­பட்டு, 48 மணி நேர தடுப்புக் காவலில் இந்த கணவன் மனை­வியை விசா­ரித்­துள்ள பொலிசார் பல விட­யங்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். மனை­வி­யான ரொஷா­னா­விடம் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் பிர­காரம், கொலை செய்­யப்­பட்ட பாத்­திமா மும்தாஸ் கொலை செய்­யப்­படும் போது அணிந்­தி­ருந்­த­தாக கூறப்­படும் தங்க சங்­கிலி, காதணி ஜோடி, மோதிரம் ஆகி­யன செட்­டியார் தெருவில் தங்க ஆப­ரண கடை ஒன்றில் உருக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­தாக சப்­பு­கஸ்­கந்தை பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறிக்கை ஊடாக அறி­வித்­தனர்.

இந்த தங்க நகை­களை ஒரு இலட்­சத்து 69 ஆயிரம் ரூபா­வுக்கு சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்­டுள்ள பெண் குறித்த நகைக் கடைக்கு விற்­பனை செய்­துள்­ள­தா­கவும், இந் நிலை­யி­லேயே உருக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அந்த தங்கம் மீட்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அத்­துடன் நேற்று முன்­தினம் பிற்­பகல் கைது செய்­யப்­பட்ட, கொலையின் பிர­தான சந்­தேக நபர், இந்த கொலையை முன்­னெ­டுக்க பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் இரும்­பி­னா­லான உலக்கை மற்றும் சட­லத்தை சப்­பு­கஸ்­கந்த பகு­திக்கு கொண்டு சென்ற முச்­சக்­கர வண்­டி­யையும் கைப்­பற்­றி­யுள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.
இந்த முச்­சக்­கர வண்­டி­யா­னது, சந்­தேக நப­ரான ரொஷானா எனும் பெண்ணின் மாம­னா­ருக்கு சொந்­த­மா­னது என பொலிசார் மன்றில் அறிக்­கை­யிட்­டுள்­ளனர்.

பொலிஸார் நீதி­மன்­றுக்கு அளித்­துள்ள தக­வல்கள் பிர­காரம், ‘ சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்­டுள்ள ரொஷானா எனும் பெண், சமிட் புர பகு­தியில் ‘ரத்னா மாமி” என அறி­யப்­படும் ஒரு­வரின் தங்க வளை­யல்கள் மற்றும் சங்­கி­லியைப் பெற்று அதனை 90 ஆயிரம் ரூபா­வுக்கு அடகு வைத்­துள்ளார்.

அடகு வைத்து பெறப்­பட்ட 90 ஆயிரம் ரூபாவில் 50 ஆயிரம் ரூபாவால் கட­ன­டைத்­துள்ள சந்­தேக நப­ரான ரொஷானா, 30 ஆயிரம் ரூபாவை மும்­தா­ஸிடம் சூதாடி தோற்­றுள்ளார். இந் நிலை­யி­லேயே அந்த தங்க ஆப­ர­ணங்­களை மீட்டுத் தரு­மாறு கூறியே, சந்­தேக நபர் ரொஷானா, பாத்­திமா மும்­தாஸை (உயி­ரி­ழந்த பெண்) அழைத்துச் சென்­றுள்ளார்.
அதன் பிர­காரம் மும்தாஸ், சந்­தேக நப­ரான பெண்ணின் கோரிக்­கைக்கு அமைய, குறித்த அடகுக் கடைக்கு சென்று தங்க ஆப­ர­ணங்­களை மீட்டு, மேலும் 30 ஆயிரம் ரூபாவை சந்­தேக நப­ரான ரொஷா­னா­வுக்கு வழங்­கி­யுள்ளார்.

இந் நிலையில் கடந்த ஒக்­டோபர் 23 ஆம் திகதி, சந்­தேக நப­ரான ரொஷானா, மும்­தாசின் வீட்டில் சூது விளை­யாடி ஒரு இலட்­சத்து 12 அயிரம் ரூபாவை வென்­றுள்ளார். இந் நிலையில் அப்­ப­ணத்தில் ஒரு இலட்சம் ரூபாவை மும்­தா­ஸிடம் கொடுத்­துள்ள சந்­தேக நப­ரான ரொஷானா, ‘ரத்னா மாமி” யின் தங்க நகை­களை தம்­மிடம் மீள ஒப்­ப­டைக்­கு­மாறு கோரி­யுள்ளார்.

இந் நிலையில், அந்த தங்க நகை­களை அட­கி­லி­ருந்து மீட்­டது, மீள ஒப்­ப­டைப்­ப­தற்­காக அல்ல எனவும், அவற்றை மீண்டும் எவ­ருக்கும் வழங்கப் போவ­தில்லை எனவும் மும்தாஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே பிரச்­சினை இரு­வ­ருக்கும் இடையே தோன்­றி­யுள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­ட­தாக சப்­பு­கஸ்­கந்த பொலிஸார் நீதி­மன்­றுக்கு அளித்­துள்ள மேல­திக விசா­ரணை அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையின் பிர­காரம், ‘ரத்னா மாமி” தனது தங்க நகை­களை மீள கோரி வந்த நிலையில், ரொஷானா விட­யத்தை தனது சகோ­த­ர­ரிடம் தெரி­வித்­துள்ளார்.
அதன்­படி, மும்­தாஸை அச்­சு­றுத்தி அந்த தங்க நகை­களை பெற முதலில், ரொஷா­னாவும் பிர­தான சந்­தேக நப­ரான அவ­ரது சகோ­த­ரரும், மும்­தாஸின் வீட்­டுக்குச் சென்­றுள்­ளனர். எனினும் அப்­போதும் மும்­தாஸின் வீட்டின் வேறு இருவர் இருந்­த­மையால், மும்­தாஸை ஏமாற்றி மட்­டக்­குளி, சமிட்­பு­ரவில் உள்ள தமது வீட்­டுக்கு அழைத்து வந்து இந்த கொலையை புரிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கொலை செய்த பின்னர், கொல்­லப்­பட்ட மும்தாஸ் அணிந்­தி­ருந்த “ரத்னா மாமி” யின் நகை­களை கழற்றி, தான் அட­கி­லி­ருந்து அவற்றை மீட்­ட­தாக கூறி அவ­ரி­டமே ரொஷானா ஒப்படைத்துள்ளதுடன், ஏனைய நகைகளை விற்பனை செய்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கொலை செய்­யப்­பட்ட மும்­தாஸின் சட­லத்தை, தனது கண­வரின் துணை­யுடன் ரொஷானா, பிர­தான சந்­தேக நப­ரான சகோ­த­ர­ருடன் சேர்ந்து வீட்­டி­லி­ருந்த பயணப் பையில் இட்டு சப்­பு­கஸ்­கந்த பகு­திக்கு கொண்டு வந்து கைவிட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையில், தற்­போது கைதா­கி­யுள்ள பிர­தான சந்­தேக நப­ரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்­யப்­பட்­டுள்ள ரொசானா மற்றும் அவ­ரது சகோ­தரர் நெளசாட் ஆகிய இரு­வரும் இணைந்தே இந்­தக்­கொ­லையைச் செய்­துள்­ள­தாக கள­னிய பொலிஸ் பிரி­வுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தெரி­வித்தார்.

கடந்த 4 ஆம் திகதி சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்கு அருகில் மாபிம பகு­தியில் குப்பை மேட்டில் பிர­யாண பைக்குள் திணிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் குறிப்­பிட்ட சடலம் சபு­கஸ்­கந்த பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. நப­ரொ­ருவர் 119 அவ­சர தொலை­பேசி அழைப்­புக்கு வழங்­கிய தக­வ­லுக்கு அமை­யவே இந்த சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

அப்­ப­குதி வீதியால் பய­ணித்த ஒருவர் துர்­நாற்றம் வீசிய­தை­ய­டுத்து அப்­ப­கு­தியை நோட்டம் விட்டுள்ளார். அங்கே குப்பை மேட்டில் காணப்­பட்ட பிர­யாணப் பையி­லி­ருந்தே துர்­நாற்றம் வீசு­வதை உணர்ந்­துள்ளார். இத­னை­ய­டுத்தே அவர் 119 இலக்­கத்தை தொடர்பு கொண்டு விப­ரத்தை தெரி­வித்­துள்ளார்.

இவ்­வி­டயம் பின்பு சபு­கஸ்­கந்த பொலி­ஸாரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸ் அதி­கா­ரிகள் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து குறித்த பிர­யாணப் பையை சோத­னை­யிட்­டுள்­ளனர். அப்­போதே பிர­யாண பைக்குள் பெண்ணின் சட­ல­மொன்று இருப்­பது அறி­யப்­பட்­டது.

இது தொடர்பில் நீதித்­து­றைக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மஹர பதில் மஜிஸ்­திரேட் ரமணி சிறி­வர்தன சபு­கஸ்­கந்த பொலிஸ் பிரி­வுக்குள் இருக்கும் சடலம் அடங்­கிய பிர­யா­ணப்பை தொடர்பில் ஆரம்ப விசா­ர­ணையை நடத்­தினார். அது­வரை இந்தச் சடலம் யாரு­டை­யது என அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக ராகம வைத்­தி­ய­சாலை பிரே­த­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கள­னிய பொலிஸ் பிரி­வுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொசான் டயஸின் அறி­வு­ரை­க­ளுக்­க­மைய சபு­கஸ்­கந்த பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. விசா­ர­ணை­க­ளுக்கு பேலிய கொட குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் ஆலோ­ச­னையின் பேரில் பொலிஸ் பிரி­வுக்குள் காணாமல் போன பெண்­களை தேடி­கண்­டு­பி­டிப்­ப­தற்­காக பொலிஸ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் அறிக்­கை­யின்­படி அண்­மையில் இருவர் காணாமற் போயுள்­ள­தா­கவும் அவர்கள் இரு­வரும் முஸ்­லிம்கள் எனவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதே­வேளை பிர­யாணப் பைக்குள் இருந்த சடலம் அழு­கிய நிலையில் இருந்­ததால் அப்பெண் சில தினங்­க­ளுக்கு முன்பு கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் ஊகித்­தனர். இந்த சட­லத்தின் ஆடைக்கு அமைய அப்பெண் முஸ்­லி­மாக இருக்­கலாம் எனவும் பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

அப்­பெண்ணின் சடலம் சிந்­தெட்டிக் பாயினால் சுற்­றப்­பட்­டி­ருந்­த­துடன் அவ­ரது கை, கால்கள் கட்­டப்­பட்­டி­ருந்­தன.

காணாமற் போன­தாக முறை­ப்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பெண்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்­ட­போது ஒருவர் பிய­க­மயைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் மற்­றவர் மாளி­கா­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலி­ஸாரால் அறி­யப்­பட்­டி­ருந்­தது.
இத­ன­டிப்­ப­டையில் பொலிஸ் குழு­வொன்று பிய­கம பகு­தியில் காணா­மற்­போ­யி­ருந்த பெண்ணின் வீட்­டுக்குச் சென்­றது. ராகம வைத்­தி­ய­சாலை பிரே­த­சா­லையில் பெண்ணின் சட­ல­மொன்று வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அச்­ச­ட­லத்தை இனங்­கா­ணு­மாறும் அவ்வீட்டாரிடம் பொலிஸார் வேண்­டி­னார்கள். இத­னை­ய­டுத்து பிய­கம பகு­தி­யி­லி­ருந்து காணா­மற்­போன பெண்ணின் உற­வி­னர்கள் பிரே­த­சா­லைக்கு வந்து சட­லத்தை பார்­வை­யிட்­ட­துடன் இச்­ச­டலம் காணா­மற்­போன தங்­க­ளது பெண்­ணி­னது அல்ல என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­னார்கள். தொடர்ந்தும் பொலிஸார் விசா­ரணை நடத்­தி­யதில் அப்­பெண்ணை பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்க முடிந்­தது. அப்பெண் இளைஞர் ஒரு­வ­ருடன் பிய­கம பிர­தேச ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­த­போது பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து மாளி­கா­வத்தை பகு­தியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி காணா­மல்­போ­யுள்­ள­தாக ஏற்­க­னவே பொலிஸில் முறைப்­பாடு செய்­தி­ருந்­ததால் பொலிஸார் அவ­ரது கண­வரைத் தொடர்பு கொண்டு ராகம வைத்­தி­ய­சாலை பிரே­த­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் பெண்ணின் சட­லத்தை அடை­யாளம் காணு­மாறு வேண்­டி­னார்கள். அதற்­கி­ணங்க அங்கு சென்ற அவர் அங்கு வைக்­கப்­பட்­டுள்ள சடலம் தனது மனை­வி­யி­னு­டை­யது என அடை­யாளம் கண்டார். அவ­ரது மூக்கில் இருந்த மூக்­குத்தி மூலமே சட­லத்தை அடை­யாளம் கண்­டுள்ளார். பின்பு அவ­ரது இரு பிள்­ளை­களும் சடலம் தங்­க­ளது தாயி­னு­டை­யது என அடை­யாளம் கண்­டனர்.

பின்பு பொலிஸார் கணவரை நீண்ட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­னார்கள். கொலை செய்­யப்­பட்ட பெண் மாளி­கா­வத்தை மாடி வீட்­டுத்­திட்­டத்தில் வசித்த மொஹமட் சாபி பாத்­திமா மும்தாஸ் (45) எனும் இரு பிள்­ளை­களின் தாயாவார்.

‘தனது மனைவி கடந்த மாதம் 28ஆம் திகதி அவ­ளது நண்­பி­யான மட்­டக்­கு­ளியில் வதியும் சித்தி ரொசா­னாவைச் சந்­திக்க வீட்­டி­லி­ருந்தும் வெளி­யேறிச் சென்­ற­தாக அவ­ளது கணவர் ஏ.எம்.அமா­னுல்லா பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார். கண­வரும் பிள்­ளை­களும் கடந்த 5 ஆம் திகதி சட­லத்தை அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

கொலை செய்­யப்­பட்ட பெண் சூது விளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வ­ரென்றும் அடகு வைக்­கப்­பட்டு மீட்­ப­தற்கு முடி­யாமல் இருக்கும் நகை­களை மீட்­டெ­டுப்பவரெனவும் விசா­ர­ணை­யின்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கண­வ­ரி­ட­மி­ருந்து விப­ரங்­களைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் ரொசா­னாவின் வதி­வி­ட­மான மட்­டக்­கு­ளியில் உள்ள அவ­ளது வீட்­டுக்குச் சென்­றுள்­ளார்கள். ஆனால் அவ­ளது வீடு பூட்­டப்­பட்­டி­ருந்­தது. பொலிஸார் அய­ல­வர்­க­ளிடம் விசா­ரித்­தார்கள். ரொசா­னாவும் அவ­ரது கண­வரும் முன்­னைய தினம் வீட்டு சாமான்­களை லொறியில் ஏற்­றிக்­கொண்டு அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­தாக அய­ல­வர்கள் கூறி­னார்கள்.

அவர்கள் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­றுள்­ள­மையை உறுதி செய்து கொண்ட பொலிஸார் அரு­கி­லி­ருந்த சி.சி.ரி.வி கமெ­ராக்­களின் பதி­வு­களை பார்­வை­யிட்­டனர். அவர்கள் வீட்டு சாமான்­களை லொறியில் ஏற்­றிக்­கொண்டு வெளி­யேறிச் செல்­வது சி.சி.ரி.வி. கமெ­ராவில் பதி­வா­கி­யி­ருந்­தது. அத்­தோடு லொறியின் இலக்­கத்­தையும் பொலி­ஸாரால் அப்­ப­தி­வி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

பொலிஸார் குறிப்­பிட்ட லொறி மற்றும் அதன் சார­தியை இனங்­கண்டு விசா­ர­ணை­களைத் தொடர்ந்­தார்கள். ‘தான் வாட­கைக்கு லொறி செலுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்ட தம்­பதி லொறியை வாட­கைக்கு அமர்த்தி மினு­வாங்­கொ­டயில் புதிய வீடொன்­றுக்கு இட­மா­றி­ய­தா­கவும்’ லொறிச்­சா­ரதி வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்.

பின்னர் பொலிஸார் லொறி­சா­ர­தி­யுடன் மினு­வங்­கொ­ட­யி­லுள்ள குறிப்­பிட்ட வீட்­டுக்குச் சென்­றார்கள். அங்கு வாடகை வீட்டில் இருந்த சந்­தேக நபர்­க­ளான தம்­ப­தி­யினர் கைது செய்­யப்­பட்­டனர்.

சந்­தேக நப­ரான பெண்­ணிடம் விசா­ரணை நடத்­தி­யதில் கொலை சம்­ப­வத்தின் விப­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

கொலை நடந்த அன்று இரவு ரொசா­னாவின் கணவர் வீடு திரும்­பி­யதும் அங்­கி­ருந்த பயணப் பை தொடர்பில் வின­வி­யி­ருக்­கிறார். அப்­போதே ரொசானா அனைத்து விப­ரங்­க­ளையும் கூறி­யி­ருக்­கிறார். மறு­தினம் வீட்­டி­லி­ருந்த குளிர்­சா­தனப் பெட்­டி­யொன்­றினை திருத்த வேலை­க­ளுக்கு எடுத்துச் செல்­வ­தற்­கென்று கூறி அவர் லொறி­யொன்­றினை வாட­கைக்கு அமர்த்­தி­யுள்ளார். அந்த லொறியில் குளிர்­சா­த­னப்­பெட்­டி­யுடன் பிர­யா­ணப்­பையில் திணிக்­கப்­பட்­டி­ருந்த பாத்­தி­மாவின் சட­லத்­தையும் எடுத்துக் கொண்டு வெல்­லம்­பிட்­டிக்குச் சென்­றுள்­ளார்கள்.

வெல்­லம்­பிட்­டி­யவில் குளிர்­சா­தனப் பெட்டி திருத்தும் நிலை­யத்­துக்கு குளிர்­சா­த­னப்­பெட்­டியை வெளியில் இறக்கி கொடுத்­துள்ளார். அடுத்து பாத்­தி­மாவின் சடலம் அடங்­கிய பிர­யாணப் பையை லொறியில் இருந்து வெளியே எடுக்­கும்­போது முச்­சக்­க­ர­வண்­டி­யொன்று அங்கே வந்­துள்­ளது.

அந்த முச்­சக்­க­ர­வண்­டியில் ரொசா­னாவின் சகோ­தரர் நெள­சாட்டே வந்­துள்­ளார். அவர் சடலம் அடங்­கிய பிர­யா­ணப்­பையை முச்­சக்­க­ர­வண்­டியில் ஏற்­றிக்­கொண்டு சென்று சபு­கஸ்­கந்த பிர­தே­சத்­தி­லுள்ள குப்பை மேட்டில் வீசி­யுள்ளார் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த மாதம் 29ஆம் திக­தியே சடலம் குப்பை மேட்டில் வீசப்­பட்­டுள்­ளது. 29ஆம் திக­தி­யி­லி­ருந்து கடந்த 4ஆம் திகதி சடலம் பொலி­ஸா­ரினால் கண்­டெ­டுக்­கும்­வரை குப்பை மேட்டில் இருந்­துள்­ளது.

சந்­தேக நப­ரான ரொசானா அதி­க­ளவில் கடன் பெற்­றுள்­ள­வ­ரெ­னவும் அத்­தோடு சூது விளை­யா­டு­வதில் ஈடு­ப­டு­ப­வ­ரெ­னவும் விசா­ர­ணை­களில் பொலிஸார் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்­ன­கோனின் கண்­கா­ணிப்பின் கீழ் களனி பொலிஸ் பிரி­வுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் டயஸின் ஆலோசனைகளுக்கு அமைவாக களனி பிரிவு குற்றவியல் விசாரணை பிரிவு விசாரணைகளை தொடர்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.