(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகைகளையும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைவாக ஜமா அத்தாக தொழுவதற்கான அனுமதியினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொள்ளும் என திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.
தற்போது பள்ளிவாசல்களில் ஜும் ஆதொழுகை மாத்திரம் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய கூட்டாக தொழுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஏனைய சமயங்களின் வணக்க வழிபாடுகளைப் போலன்றி முஸ்லிம்களுக்கு ஐவேளை தொழுகை கட்டாயமானதாகும். எனவே ஐவேளை தொழுகைகளையும் கூட்டாக தொழுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். Vidivelli