உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள்: பிரதி சொலிசிட்டருக்கு கூட ஆணைக்குழு அறிக்கையை பார்வையிட முடியாத நிலை

0 472

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பிர­தான வழக்­கினை நெறிப்­ப­டுத்தும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்­வா­வுக்கு கூட,  குறித்த தாக்­குதல் தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின்  அறிக்­கையில் பகி­ரங்­க­ப்ப­டுத்­தப்­ப­டாத பகு­தி­களை பார்­வை­யிட அனு­ம­தி­யில்லை என்­பது நேற்று வெளிப்­பட்­டது.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ராக  சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள  குற்றப் பகிர்வுப் பத்­திரம்  மீதான வழக்கு  நேற்று பரி­சீ­ல­னைக்கு வந்த போதே இந் நிலைமை வெளிப்­பட்­டது.

பிர­தி­வா­தி­க­ளான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்ஸ, புத்­தளம்  அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் அதிபர் மெள­லவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள ஆகியோர் நேற்று மன்றில் விஷேட கோரிக்கை ஒன்­றினை முன் வைத்­தி­ருந்­தனர்.

அதா­வது, வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு முன்னர் பிர­தி­வா­திகள் தரப்­புக்கு தன் பக்க நியா­யத்தை முன் வைக்க முறைப்­பாட்­டாளர் தரப்பு  கைய­ளிக்க வேண்­டிய  சான்று ஆவ­ணங்கள் தொடர்பில் இதன்­போது கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டது.

அது தொடர்பில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு இது­வரை கைய­ளிக்­காத, எனினும் வழக்கு விசா­ர­ணைக்கு முன்னர் அவ­சி­ய­மா­னது என கூறும் சான்று ஆவ­ணங்­களின் பட்­டியல் மன்­றுக்கு பிர­தி­வா­திகள் சார்பில் முன் வைக்­கப்­பட்­டது. அதில் 11 ஆவது சான்று ஆவ­ண­மாக,  உயிர்த்த ஞாயிறு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரி­வுக்கு, ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கா­ரத்தின் சாட்­சி­யா­ளர்கள் வாக்கு மூலம் அளித்­தி­ருப்பின் அதன் பிர­திகள் மன்றில் முன்­னி­லை­ப்ப­டுத்­தப்­பட வேண்டும் என கோரப்­பட்­டது.

இது தொடர்பில் மன்­றுக்கு விளக்­க­ம­ளிக்கும் போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ராகும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா,  உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பிர­தான வழக்கை நெறிப்­ப­டுத்தும் தனக்கு கூட அவ்­வாணைக் குழுவின் அறிக்­கையின் இர­க­சிய இணைப்­புக்­களை பார்வையிட முடி­யாத நிலை காண­பப்­டு­வ­தாக தெரி­வித்தார்.

‘ உயிர்த்த ஞாயிறு தின ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் அறிக்­கையின் இணைப்­புகள் பிர­தி­வா­தி­களால் கோரப்பட்­டுள்­ளன. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை எனக் கூறி பகி­ரங்­க­ப்ப­டுத்­தப்­பட்ட அறிக்­கையை மட்­டுமே நானும் அறிவேன்.

ஏனைய இர­க­சிய இணைப்­புக்கள் அடங்­கிய அறிக்­கைகள் சட்ட மா அதி­ப­ருக்கு கைய­ளிக்­கப்­பட்ட போதும், அது நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே சட்ட மா அதி­ப­ருக்கு கைய­ளிக்­கப்பட்­டுள்­ளது.

ஆணைக் குழுவில் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு கூட அவர்­க­ளது சாட்­சி­யத்தின் தொகுப்பை பெற முடி­யு­மாக இருந்­ததா எனத் தெரி­ய­வில்லை. எனவே கோர­ப்படும் குறித்த பிர­தி­களை உட­ன­டி­யாக வழங்க முடி­யாது. அது தொடர்பில் ஆணைக் குழு அறிக்­கைக்கு பொறுப்­பாக இருக்கும் சட்­ட­வா­தி­யிடம் கலந்­தா­லோ­சித்தே என்னால் எதுவும் கூற முடியும்.’ என பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா கூறினார்.

இதன்­போது வழக்கை விசா­ரிக்கும் நீதி­பதி குமாரி அபே­ரத்ன, குறித்த அறிக்­கையின் பகு­தி­களை நீங்கள் இவ்­வ­ழக்கில் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சாட்­சி­ய­மாக பயன்­ப­டுத்த  உத்­தேசம் உள்­ளதா என வின­வினார்.

அதற்கு பதி­ல­ளித்த  பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, இல்லை என பதி­ல­ளித்தார். எனினும் பிர­தி­வாதி ஹிஜாஸ் சார்பில் ஆஜ­ரான  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நலின் இந்­ர­திஸ்ஸ, ஜனாதி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரி­வுக்கு, இவ்­வ­ழக்கின் சாட்­சி­யா­ளர்கள் எவ­ரேனும் வாக்கு மூலம் வழங்­கி­யி­ருப்பின் அது இந்த வழக்கு தொடர்பில் பிர­தி­வா­திகள் தரப்பு நியா­யத்தை முன் வைக்க முக்­கிய சான்­றாக அமையும் எனவும் அதனால் அவை தமக்கு வழங்­கப்­படல் வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து திறந்த மன்றில் மீளவும் கருத்து முன் வைத்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, ‘ உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பிலான பிரதான வழக்கை நெறிப்படுத்தும் அரச சட்டவாதி நான். எனக்கு கூட குறித்த அறிக்கையின் மறைக்கப்பட்ட அல்லது இரகசிய இணைப்புக் கோவைகளை பார்வையிட அனுமதியில்லை. எனவே இந்த விடயத்தில் என்னால் உடனடி பதிலை வழங்க முடியாது. ஆணைக் குழு அறிக்கைக்கு பொறுப்பான சட்டவாதியுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்த தவணையில் பதிலளிக்கிறேன் என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.