கூட்டுத் தொழுகைக்கு அனுமதி பெற முயற்சி

பணிப்பாளர் இப்றாஹிம்

0 316

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 தொடர்­பாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் வெள்­ளிக்­கி­ழமை  ஜும் ஆ தொழு­கையை மாத்­தி­ரமே கூட்­டாக தொழு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

ஏனைய ஐவேளை தொழு­கை­க­ளையும் கூட்­டாக தொழு­வது தொடர்பில் நாம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறோம். முஸ்­லிம்கள் பொறுமை காக்க வேண்டும். ‘கூடிய விரைவில் மாற்றம் வரும்’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் தெரி­வித்தார்.

கூட்டுத் தொழு­கைகள் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் இந்தக் கட்­டுப்­பா­டுகள் முஸ்லிம் சமூ­கத்­துக்கு மாத்­திரம் விதிக்­கப்­ப­ட­வில்லை. கிறிஸ்­த­வர்கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாத்­தி­ரமே கூட்டு வழி­பா­டு­களை மேற்­கொள்­ளலாம். பெளத்­தர்கள் நோன்­மதி தினங்­களில் கூட்டு வழி­பா­டு­களை மேற்­கொள்ள முடியும் என சுகா­தார அமைச்சின் சுற்று நிருபம் தெரி­வித்­துள்­ளது. எனவே முஸ்­லிம்கள் தமக்கு மாத்­திரம் விடுக்­கப்­பட்ட விதி­மு­றைகள் என்று எண்­ணக்­கூ­டாது என்றார்.

இதே­வேளை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் MRCA/A/1/62 எனும் இலக்க 2021.10.25 ஆம் திக­தி­யி­டப்­பட்ட சுற்று நிரு­ப­மொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அச்­சுற்று நிருபம் அனைத்து பள்­ளி­வாசல் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­தினால் 23.10.2021 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்ள DGHS COVID 19 /347/2021 ஆம் இலக்க சுற்று நிரு­பத்தின் வழி­காட்­டல்கள் பின்­பற்­றப்­ப­ட­வேண்­டு­மென கோரப்­பட்­டுள்­ளது.

பின்­வ­ரு­மாறு வழி­காட்­டல்கள் அமைந்­துள்­ளன.

* பள்­ளி­வா­சல்­களில் எந்த நேரத்­திலும் அதிக பட்­ச­மாக 50பேர் மாத்­திரம் தனி­யாக வணக்க வழி­பா­டு­களில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

* வெள்­ளிக்­கி­ழ­மைகள் ஜும்ஆ தொழு­கையை மாத்­திரம் கூட்­டாக 50பேர் தொழு­வ­தற்கு நிபந்­த­னை­யுடன் அனு­மதி வழங்­கப்­படும். ஜும் ஆ ஒரு அமர்வு மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­படும்.

* பள்­ளி­வா­சல்­களில் ஐவேளை ஜமா அத் தொழு­கைகள், ஜனாஸா தொழுகை,குர்ஆன் மஜ்லிஸ்,நிக்காஹ் மஜ்லிஸ் போன்ற கூட்டு செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது.

* முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் இடை­வெளி பேணுதல் சொந்­த­மாக தொழுகை விரிப்­பினை எடுத்­து­வரல், வீட்டில் இருந்து வுழூச் செய்து வரல் கட்­டா­ய­மாகும்.

* ஹவ்ழ் மூடப்­பட்­டி­ருக்க வேண்டும். பள்­ளி­வாசல் நுழை­வா­யிலில் சவர்க்­கா­ர­மிட்டு கைக­ழு­வு­வ­தற்கு வசதி செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும்.

* கை­லாகு செய்தல், கட்டித்தழுவுதல் அல்லது உடல் ரீதியான வேறு ரீதியான வாழ்த்துக்கள், தொடுகைகள் அனுமதிக்கப்படவில்லை.

என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்  இப்ராஹிம் அன்ஸார் அனுப்பி வைத்துள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.