அரசியல், மார்க்க, சிவில் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்

0 578

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து இலங்கை முஸ்­லிம்கள் சகல வழி­க­ளிலும் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி வருகின்றனர். அவற்றில் மிக முக்­கி­ய­மா­னதே தலை­மைத்­துவ நெருக்­க­டி­யாகும்.

இத் தாக்­குதல் சம்­ப­வத்தைத் தொடர்ந்து முஸ்லிம் அர­சியல், மார்க்க மற்றும் சிவில் தலை­மைத்­து­வங்கள் கடந்த காலங்­களைப் போன்று சுதந்­தி­ர­மாகச் செயற்­பட முடி­யாத நிலைக்குள் தள்­ளப்­பட்­டன. முஸ்லிம் சமூ­கத்தின் மீது அடுக்­க­டுக்­காக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களும் பொய்ப்­பி­ர­சா­ரங்­களும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்ற குற்­ற­ம­னப்­பாங்கும் இவற்­றுக்குக் கார­ண­மாகும். இத் தாக்­குதல் நடந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலா­கின்ற போதிலும் இந்த குற்­ற­ம­னப்­பாங்­கி­லி­ருந்து வெளி­வர முடி­யாத நிலை­யி­லேயே இன்றும் முஸ்லிம் சமூ­கமும் அதன் தலை­மைத்­து­வமும் உள்­ளது.

இருந்­த­போ­திலும் இத் தாக்­கு­த­லுக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் எந்­த­வித சம்­பந்­தமும் இல்லை என இன்று இந்த நாட்டில் வாழு­கின்ற சகல இன மக்­களும் உணரத் தொடங்­கி­யுள்­ளனர். இத் தாக்­கு­த­லினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க மக்­களும் அவர்­க­ளது மத தலை­வர்­களும் கூட இதனை அடிக்­கடி பகி­ரங்­க­மா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இன்­றைய அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்தி ஆட்சி பீட­மே­றி­யுள்­ள­தாக பலரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

இந் நிலையில் முஸ்லிம் சமூ­கமும் தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள பழி­களைக் களைந்­தெ­றி­வ­தற்கு துணிச்­ச­லுடன் முன்­வர வேண்­டி­யுள்­ளது. இத் தாக்­குதல் தொடர்பில் சுமார் 325 பேர் வரை இது­வரை தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 25 பேர் மீது மாத்­தி­ரமே குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தச் சிறு குழு­வினர் தொடர்பில் வழக்­குகள் நடை­பெற்று குற்­ற­மி­ழைத்­துள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­ப­டலாம். அதற்கு ஒரு­போதும் முஸ்லிம் சமூகம் ஆட்­சே­பனை தெரி­விக்கப் போவ­தில்லை.

இந்த உண்­மையை முஸ்லிம் சமூகம் முதலில் உணரத் தலைப்­பட வேண்டும். பிற சமூ­கத்­த­வர்­களே இன்று உண்­மையை உணர்ந்­துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் இன்­னமும் தலை­கு­னிந்து நிற்­பதும் பௌத்த கடும்­போக்கு சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்­களை சாத்­வீக வழியில் எதிர்­கொள்ளத் திரா­ணி­யற்­றி­ருப்­பதும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

இன்று நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலை அதிகரிப்பு, விவசாயிகளின் பிரச்சினைகள், ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு என பாரிய போராட்டங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில் அவற்றிலிருந்து திசைதிருப்புவதற்காக மீண்டும் இனவாதத்தை தூண்ட சில தீய சக்திகள் முற்படுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் அர­சியல், மார்க்க மற்றும் சிவில் தலை­மைகள் தைரி­யத்­துடன் சமூக விவ­கா­ரங்­களைக் கையாள முன்­வர வேண்டும். இன்று முஸ்லிம் இளை­ஞர்கள் தமக்கு சரி­யான தலை­மைத்­துவம் இல்­லையே என்ற விரக்தி நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். தமக்­காக குரல் கொடுப்­ப­தற்கு பிற சமூ­கங்­களின் பிர­தி­நி­தி­களை நாடி நிற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளதே என அங்­க­லாய்க்­கின்­றனர். இவ்­வாறு விரக்­தி­யுற்­றுள்ள முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு சரி­யான தலை­மைத்­துவம் வழங்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்கும் வகையில் சமூ­கத்தை சரி­யான பாதையில் வழி­ந­டாத்­து­வ­தற்­கான நேர்­மை­மிக்க குழு­வொன்று முன்­வர வேண்டும். காலத்­திற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும்.

இன்று அரசியல், மார்க்க மற்றும் சிவில் தலைமைத்துவங்களாகிய மூன்று தரப்பினரும் தமக்குள் பிளவுபட்டு, பலவீனப்பட்டு தனித்தனியாக இயங்கி வருவதை காண்கிறோம். இந் நிலை மாற்றப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு சமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும். சமூகம் நெருக்கடியிலுள்ள இன்றேனும் சரியான தலைமைத்துவத்தை வழங்க தவறுமிடத்து எதிர்காலத்தில் மேலும் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நாம் எதிர்நோக்க வேண்டி வரலாம். அதற்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.