இலங்கை – பலஸ்தீன் உறவில் மாற்றமில்லை

இம்தியாஸின் கேள்விக்கு பீரிஸ் பதில்

0 432

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘பலஸ்தீன் மக்­க­ளது போராட்டம் தொடர்­பிலும், இலங்­கைக்கும் பலஸ்­தீ­னுக்­கு­மி­டை­யி­லான நல்­லு­ற­விலும் எந்த மாற்­றங்­க­ளு­மில்லை. எமது கொள்­கையை மாற்­றிக்­கொள்­ள­வு­மில்லை, இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை’ என வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எழுப்பிய கேள்­வி­யொன்­றுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் அவ்­வாறு கூறினார்.

எமது அரச தலை­வர்கள் ஐக்­கிய நாடுகள் சபையில் பேசும் போதெல்லாம் தென் ஆபி­ரிக்கா மற்றும் பலஸ்­தீன மக்­களின் போராட்டம் பற்றிக் குறிப்­பி­டுவார்கள். ஆனால் இந்த வருடம் எமது அரச தலைவர் ஐக்­கிய நாடுகள் சபையில் பேசும்­போது பலஸ்­தீ­னர்­களின் விடு­தலைப் போராட்டம் தொடர்பில் எதுவும் குறிப்­பி­ட­வில்லை. பலஸ்தீன் தொடர்பில் அர­சாங்­கத்தின் கொள்­கையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதா? என்­பதை வெளி விவ­கார அமைச்­ச­ரி­ட­மி­ருந்து அறிந்­து­கொள்ள விரும்­பு­கிறேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இக்­கேள்­விக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், இந்த கேள்­வியை முன்­வைத்த உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை நான் பாராட்­டு­கிறேன். பலஸ்தீன் தொடர்­பான எமது கொள்­கையில் எந்த மாற்­றங்­க­ளு­மில்லை. பலஸ்தீன் தூது­வரை நான் சந்­தித்தேன். எமது கொள்­கையை தொடர்ந்தும் கட்­டா­ய­மாக நாம் பின்­பற்­று­வ­தாக அவ­ரிடம் கூறினேன். உங்­க­ளுக்குத் தெரி­யுமோ என்­னவோ நான் அறியேன். பலஸ்தீன் ரமல்லா நகரில் மஹிந்த ராஜபக் ஷவின் பெயரில் வீதி­யொன்று உள்­ளது. உலகில் வேறு எந்­தப்­ப­கு­தி­யிலும் இந்­தப்­பெ­யரில் பாதை­யொன்று இல்லை. நான் அங்கு சென்­றி­ருக்­கின்றேன். எமது துதூ­வ­ரா­லயம் ரமல்லா மாவத்­தை­யிலே அமைந்­துள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷ இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­வே­சித்­தது முதல் சுமார் 23 வரு­டங்கள் இலங்கை பலஸ்தீன் நட்­பு­றவுச் சங்­கத்தின் தலை­வ­ராக செயற்­பட்­டுள்ளார். அவ­ருக்கு பெரும் மதிப்பும் கெள­ர­வமும் உள்­ளது. அது மட்­டு­மல்ல அரபு உலகின் 57 நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் OIC இஸ்­லா­மிய அமைப்பின் தலை­வரை நிவ்­யோர்க்கில் நான் சந்­தித்தேன். அவ­ரிடம் அரபு மற்றும் முஸ்லிம் உலக நாடு­க­ளுக்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான நல்­லு­ற­வினை விளக்­கினேன். இதில் எந்த மாற்­றங்­க­ளு­மில்லை என்­பதைத் தெரி­வித்தேன்.

ஐ.நாவில் ஆற்­றிய உரையில் இவ்­வ­ருடம் எந்­த­வொரு நாட்­டி­னையும் குறிப்­பிட்டுக் கூறா­தி­ருக்­கவே தீர்­மா­னித்தோம். ஒரு நாட்டைக் குறிப்­பிட்டுக் கூறினால் ஏனைய நாடுகள் எம்மைக் கேள்­விக்­குட்­ப­டுத்­து­கிறார்கள். ஏன் எமது நாட்டைக் குறிப்­பி­ட­வில்லை எனக்­கேட்­கிறார்கள். அதனால் எந்த நாடு தொடர்பிலும் விசேடமாக குறிப்பிடுவதில்லை என கொள்கையளவில் தீர்மானித்திருக்கிறோமேயன்றி பலஸ்தீனுக்கும் இலங்கைக்கு மிடையிலான நட்புறவில் எந்த மாற்றமுமில்லை. எமது கொள்கையில் மாற்றமில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.