பௌத்த தேசிய அடிப்படைவாத கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராது விடுதலை

0 643

எழில் ராஜன்

மியன்மார் இரா­ணுவ ஆட்சி, ஏற்­க­னவே சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையை தூண்­டி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த, பௌத்த பிக்கு அஷின் விராது­வை கடந்த 7ஆம் திகதி குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­வித்­தது. 969 என்­கின்ற அமைப்­பி­னூ­டாக தேசிய – பௌத்த அடிப்­ப­டை­வாதக் கொள்­கை­க­ளையும், கருத்­தி­ய­லையும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுத்­த­தாக பல முனை­க­ளி­லி­ருந்தும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டவர். Time சஞ்­சிகை இவரை ‘பௌத்த பயங்­க­ர­வா­தத்தின் முகம்’ (The face of Buddhist terror) என வர்­ணித்­தி­ருந்­தது. ரோஹிங்­கியா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையின் போதே முக்­கிய பிர­ப­ல­மாக வெளி­வந்தார். பௌத்த தேசிய அடிப்­ப­டை­வாத அமைப்பின் நிறு­வு­ன­ரு­மான இவரை 2017இல் மியன்மார் பௌத்த அதி­யுயர் பீடம், மத கட­மை­க­ளி­லி­ருந்து தடை செய்­தி­ருந்­தது. இரா­ணுவ ஆட்­சியை ஆத­ரிக்கும் போக்குக் கொண்ட பௌத்த பிக்கு ஆங்சாங் சூயிக்கு எதி­ராக பல பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

மேற்­கூ­றப்­பட்ட பௌத்­த­பிக்கு பௌத்த – பெரும்­பான்­மை­வாத முன்­கற்­பித்­த­லி­லி­ருந்து தனது பௌத்த அடிப்­ப­டை­வாதக் கருத்­தி­யலைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் பங்­க­ளா­தே­சத்­தி­லி­ருந்து வந்­தே­றிய குடிகள். அதனால் அவர்­க­ளுக்கு மியன்­மாரில் உரித்­து­ட­மை இல்லை என்­பது அவ­ரது கோரிக்கை. இங்கு குறிப்­பிட்ட பௌத்த பிக்­கிற்கும், பொது­ப­ல­சேனா அமைப்­பிற்­கு­மி­டையில் மிக நெருங்­கிய தொடர்­புகள் இருப்­பதை வாச­கர்கள் நன்­க­றி­வார்கள். இது தொடர்பில் பல கட்­டு­ரைகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. முஸ்லிம் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து மியன்­மா­ரையும், பௌத்­தத்­தையும் காப்­பாற்­று­வதே இவர்­க­ளு­டைய அமைப்பின் இலக்கு என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தனர். டானியல் கென்ட்­னு­டைய முனைவர் பட்ட ஆய்வை இங்கு குறிப்­பி­டு­வது பொருத்­த­மாக இருக்கும்.

இலங்­கையில் உள்ள பௌத்­த­பிக்­கு­களின் ‘பௌத்த போர் தர்ம’ கட்­ட­மைப்பு என்­பது பௌத்த முன்­வி­னைப்­பயன் கற்­பி­தத்தை மீள்­வா­சிப்புச் செய்­தி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பௌத்த போத­னை­களை வழங்கும் பௌத்த பிக்­குகள் ‘நியாயப் போர் தர்­மத்தை’ முன்­வைத்து பௌத்த முன்­வி­னைப்­பயன் கற்­பி­தத்தை கட்­ட­விழ்த்­தி­ருந்­தார்கள். அதா­வது, கொலை என்­பது வெறு­மனே கொலைக்­காக அல்ல, மாறாக பௌத்­தத்தை, சிங்­கள மக்­களை, சிங்­கள மொழியை காப்­ப­தற்­காக நடக்கும் தர்ம இராச்­சி­யத்­திற்­கெ­தி­ரான போரில், மக்கள் கொல்­லப்­ப­டு­வதை நியா­யப்­ப­டுத்­தி­யது. குறிப்­பாக போரின் உள்­நோக்­கத்தைக் கொண்டு கொலையை, அழிவை நியா­யப்­ப­டுத்தி, பௌத்த கர்­ம­வினைப் பய­னுக்கு இன்­னொரு விளக்­க­வு­ரையை சிங்­கள – பௌத்தம் கொடுத்­தி­ருந்­தது. இதன் மூலம் போரில் ஈடு­படும் இரா­ணுவ வீரர்கள் கர்­ம­வினைப் பய­னி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கின்­றார்கள் அல்­லது தப்­பித்துக் கொள்­கின்­றார்கள் என்­ப­தையும் அவ­தா­னிப்­பது இன்னும் தெளி­வான புரி­தலைத் தரலாம்.

பௌத்த தர்­மத்தைக் காப்­பதே மியன்­மா­ரிலும், இலங்­கை­யிலும் உள்ள பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களின் நோக்­க­மாக இருக்­கின்­றது. இதைக் கொண்டு வன்­முறை நியா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மியன்­மாரில் பௌத்த தேசிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளான 969, மா.பா.தா. போன்ற அமைப்­புக்­களில் பௌத்த பிக்­கு­களின் வகி­பாகம் மிகக் காத்­தி­ர­மா­னது. அதேபோல் இலங்­கையில் பொது­ப­ல­சேனா, ஜாதிக ஹெல உறு­மய, இரா­வண பலய போன்ற பௌத்த தேசிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களில் பௌத்த பிக்­கு­களின் வகி­பா­கத்­தையும் மறந்து விட­லா­காது.

பௌத்த பிக்­குவின் விடு­த­லையின் வர­லாற்­றியல் சூழ­மைவு பௌத்த தேசிய அடிப்­ப­டை­வாதக் கோரிக்­கைக்கு இன்னும் வலுச் சேர்க்­கலாம். 969, மா.பா.தா. போன்ற அமைப்­புக்கள், முஸ்லிம் தீவி­ர­வா­தத்தை, பௌத்­தத்­திற்­கெ­தி­ரான எதி­ரி­யாகக் கட்­ட­மைத்து பூகோள முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தத்தின் மீது முத­லீடு செய்­வது, ஏற்­க­னவே அவ்­வா­றி­ருக்கும் செல்­நெ­றியை வலுப்­ப­டுத்தி பயன்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் எழுச்­சியை மைய­மாகக் கொண்ட சூழலில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தத்­திற்­கெ­தி­ரான வன்­மு­றை­களை நியா­யப்­ப­டுத்­து­வது இல­கு­வாக அமையும். இலங்­கை­யிலும் கூட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தமே கார­ண­மாக முன்­வைக்­கப்­பட்டு முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்­கப்­பட்­டார்கள். தொடர்ந்தும் பாதிப்­புக்­குள்­ளாகி வரு­கின்­றார்கள்.

பௌத்­த­பிக்கு விரா­துவின் பௌத்த மத போத­னைகள், பௌத்­தத்­திற்­கூ­டாக, தேசிய வாதத்தை ஊட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. குறிப்­பாக ‘ஜாதக’ கதை­க­ளுக்­கூ­டாக. தேசி­ய­வாதம் மிக அண்­மைய அர­சியல் கருத்­தி­ய­லாக இருக்­கின்ற போதும், பௌத்த புரா­ணங்­களை, கதை­களை தற்­கால பௌத்த தேசி­ய­வாத விவ­ர­ணை­க­ளூடாக மக்­க­ளுக்கு போதிப்­பதே பௌத்த பிக்­குவின் தனித்­து­வ­மாக இருந்­தது. இவ­ரு­டைய போத­னை­களைக் கேட்­ப­தற்­காக ஆயி­ரக்­க­ணக்கில் ஒன்று கூடும் பக்­தர்­க­ளுக்கு, பௌத்­தத்­தி­லி­ருந்து சம­கால முஸ்லிம் அச்­சு­றுத்தல் வரை­யான பௌத்த – அர­சியல் சொல்­லா­டல்கள் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்கும்.

969, மா.பா.தா. போன்ற பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் கௌதம புத்தர் எவ்­வாறு ஒரு தேசி­ய­வா­தி­யாக இருந்தார் என்­பதை பிர­தி­ப­லிப்­பது அவர்­க­ளு­டைய அர­சியல் இலக்கை அடை­வ­தற்கு உத­வி­யது. அவர்­க­ளு­டைய சொல்­லா­டல்­களில் போதி சத்­து­ரு­வாக இருந்த புத்­தரும், பின்னர் வந்த கௌதம புத்­தரும் தனது இனத்­தையும் மதத்­தையும் காத்த ஒரு­வ­ராக பிர­தி­ப­லித்­தனர் (N.Foxeus 2019). இவ்­வா­றான அர­சியல் சொல்­லா­டல்­களில் மியன்மார் பௌத்த மக்­களை புத்­த­ரு­டைய சாக்­கிய குலத்­தி­லி­ருந்து வந்­த­வர்­க­ளாகப் பிர­தி­ப­லித்­தனர். இவ்­வா­றான கருத்­தியல் கட்­ட­மைப்­பி­லி­ருந்து தேசி­யத்தை, இனத்தை, மதத்தைக் காப்­பாற்­று­கின்ற, பாது­காக்­கின்ற ஒரு புதிய தேசி­ய­வாத மாதி­ரியை வடி­வ­மைத்­தனர்.

மியன்­மாரில் கட்­ட­மைக்­கப்­பட்ட இன தேசி­ய­வாதம் (ethno nationalism) மத தேசி­ய­வா­தத்­துடன் (religio-nationalism) கூட்டுச் சேர்ந்­தது. இந்த இரண்டு ஆபத்­தான கூட்டு, தேசி­ய­வாதம் பௌத்த அடிப்­ப­டை­களை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது என்­கின்ற அபத்த பிர­தி­ப­லிப்பை கொடுப்­ப­த­னோடு முன்­வினைப் பய­னுக்­கு­ரிய தகு­தி­யையும், புண்­ணி­யத்­தையும் கொடுப்­ப­தாக இச் சொல்­லாடல் வடி­வ­மைக்­கப்­பட்­டது. (N.Foxeus 2019).
இதன் வர­லாற்றுப் பின்ன­ணியில் தான் அந­கா­ரிக தர்­ம­பா­லவின் மகா­வம்ச மீள்­வா­சிப்பு உற்று நோக்­கப்­பட வேண்டும். ‘தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்கள்’ சொல்­லாடல், மத சொல்­லாடல் மட்­டு­மல்ல ஓர் அர­சியல் சொல்­லா­டலும் கூட. இலங்கை கௌத­ம­புத்­தரால் தேர­வா­தத்தை பின்­பற்றும் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டது என்­கின்ற பௌத்த சிங்­கள தேசி­ய­வா­தப்­பு­னைவு அடை­யாள அர­சியல் சார்ந்­தது. தேசிய கருத்­தியல் கட்­ட­மைப்பு அடை­யாள அர­சி­ய­லி­லி­ருந்து உரு­வா­கின்­றது. அடை­யாள அர­சியல், அடை­யா­ளத்தின் அடிப்­ப­டையில் தேசத்தை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரு­கின்­றது. ஒரு குறிப்­பிட்ட தேசியக் கருத்­தி­யலை ஊக்­கு­வித்துக் கொண்டு ஏனை­ய­வற்றை முன்­னை­ய­தற்கு எதி­ரி­யாக அல்­லது முன்­னை­யதின் இருப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகக் கட்­ட­மைக்­கின்­றது. தேசி­ய­வா­தத்தை அடை­யாள கட்­ட­மைப்­பிற்­கான ஒரு பொறி­மு­றை­யாக, மற்­ற­மை­க­ளுக்­கெ­தி­ரான வெறுப்பின் அடிப்­ப­டையில் கட்­ட­மைத்தால், அதை உள­வியல் ரீதி­யாக தாழ்வு மனப்­பாங்கு தன்­மை­யி­லி­ருந்தும், தான் தாக்­கு­த­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டலாம் என்­கின்ற அச்ச ஏது நிலை­யி­லி­ருந்து உரு­வா­வ­தாக நோக்­க­லாமா? பேரா­சி­ரியர். தம்­பையா வேறு கோணத்­தி­லி­ருந்து பார்ப்­ப­தையும் உற்று நோக்­கலாம், சிங்­கள – பௌத்­தர்­க­ளுக்­குள்­ளி­ருக்கும் பெரும்­பான்மை – சிறு­பான்மைச் சிக்­கலின் வெளிப்­பாடே சிங்­கள – பௌத்த தேசிய வாதத்தின் எழுச்­சி­யாகக் குறிப்­பி­டு­கின்றார்.

Jaffrelot (2005) தனது ஆய்வில், தற்­போது மியன்­மாரில் உள்ள பௌத்த தேசிய அமைப்­புக்­களின் கட்­ட­மைப்பு பௌத்த, இனத்­துவ அடை­யா­ளத்தின் மீது கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. பின் கால­னித்­துவ சூழ­மைவில் கட்­ட­மைக்­கப்­பட்ட மியன்­மா­ரிய பௌத்த (மத) இன கூட்டு அடை­யாள கட்­ட­மைப்பு ஏற்­க­னவே பண்­பாட்டு ஏகா­தி­பத்­தி­யத்தைக் கொண்­டி­ருந்த மற்­ற­மையை கையா­ளு­வ­தற்­காக கட்­ட­மைக்­கப்­பட்­ட­தாகக் கூறு­கின்றார். ஒரு குறிப்­பிட்ட மத – இன அடை­யாளக் கட்­ட­மைப்பு மியன்­மாரின் தேசிய அடை­யாளக் கட்­ட­மைப்­பாக தற்­போது தக்­க­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இரா­ணுவ ஆட்­சியில் இவ் அடை­யாளக் கட்­ட­மைப்பு இன்னும் வலு­வ­டைந்து வரு­கின்­றது. இதன் பின்னணி­யில் பௌத்த பிக்கு அஷின் விரா­துவின் விடு­தலை உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இரண்­டா­வது, அது ஏற்­ப­டுத்­தப்­போகும் பாதிப்பு இலங்­கை­யையும் தாக்­கக்­கூடும்.

அச்­சு­றுத்தும் எதி­ரி­யி­ட­மி­ருந்து, மதத்தை இனத்தைக் காப்­ப­தற்­காக ‘நாங்கள்’ என்னும் கூட்டு உணர்­நி­லையை வலுப்­ப­டுத்தும் பொறி­மு­றையில், வேற்­று­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எல்­லைகள் வரை­ய­றுக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான கட்­ட­மைப்பில் தேசம் (மாயை­யான) ஒற்­று­மையை உரு­வாக்கிக் கொள்­கின்­றது (Finalayson 1998). மியன்மார் வர­லாற்­றி­யலில் இந்த ‘அச்­சு­றுத்தும் எதிரி’ காலத்­திற்கு காலம் மாறு­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. மிக அண்­மைய எதி­ரி­யா­கத்தான் ‘முஸ்லிம்’ சமூகம் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது. ஏறக்­கு­றைய தாய்­லாந்­திலும் இதே­போன்ற சமூக – அர­சியல் சூழல் நில­வு­வ­தையும் அவ­தா­னிக்­கலாம். அச்­சு­றுத்தும் எதி­ரிக்­கெ­தி­ரான தேசிய பதி­லி­றுப்பு குறிப்­பிட்ட சமூ­கத்தை தீய­தாகக் கட்­ட­மைக்­கின்­றது. தீய­தாக பெரும்­பான்­மைக்­கெ­தி­ராக மட்­டு­மல்ல பெரும்­பான்­மையை பிர­தி­ப­லிக்கும் தேச – அர­சிற்­கெ­தி­ரா­கவும் கட்­ட­மைக்கும் போது, தேச – அரசின் ஜன­நா­யகத் தன்மை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாகும் போது, அரச இயந்திரம் அந்த ‘தீயதிற்கெதிராக’ நடவடிக்கை எடுக்கத் தள்ளப்படுகின்றது. அதற்கான கொள்கை வகுப்பை அரச இயந்திரம் கையிலெடுக்கும் போது, சட்டவலுத்தன்மை கொடுக்கப்படுகின்றது.

Jaflrelot (1996) தொடர்ந்து குறிப்­பிடும் போது, ஓரங்­கட்­டப்­ப­டு­வ­தாக நினைக்­கின்ற அதி­காரம் மேலோங்­கிய குழு, கற்­பனை ரீதி­யான பழி­வாங்­கலை, அச்­சு­றுத்­து­கின்ற எதி­ரிக்­கெ­தி­ராக ஆரம்­பிக்­கின்­றது. ஆரம்­பத்தில் அந்த பழி­வாங்கும் படலம், எதி­ரியை தனி­ந­பர்­க­ளாக அல்­லது கூட்­டாக, ‘தீய மற்­ற­மை­யாக’ கட்­ட­மைக்­கின்­றது. ‘தீய மற்­ற­மை­யாக’ கட்­ட­மைத்தல் அனை­வ­ருக்கும் ஒத்­த­தாக பொது­வான சொல்­லாடல் கட்­ட­மைப்புப் பொறி­மு­றைக்­கூ­டாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வே­ளையில் ஏனை­ய­வர்­களை ‘தீய மற்­ற­மை­யாக’ கட்­ட­மைப்­பதன் மூலம் பெரும்­பான்மை தன்னை ஒரு முற்­று­கைக்­குள்­ளான குழு­வாக விப­ரிக்­கின்­றது. அடக்­கு­கின்ற குழுமம் தன்னை பாதிக்­கப்­பட்ட குழு­ம­மாக தோற்­று­விக்க முய­லு­வது முரண்­படு மெய்ம்மை. மியன்­மா­ரிலும், இலங்­கை­யிலும் தற்­போது முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வா­தத்தை முன்­வைத்து முஸ்­லிம்­களை ‘தீய மற்­ற­மை­யாக’ அவ்வவ் அர­சுகள் கட்­ட­மைக்­கின்­றன. வடக்­கு-­கி­ழக்கில் தமிழ்த் தேசக்கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்த நிலையில் அரசுகள் முஸ்லிம் மக்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன. நன்றி : மாற்றம்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.