போதை பாவனையை விடும்படி புத்திமதி சொன்னதற்காக தந்தையின் கண்ணை தோண்டி எடுத்த 19 வயது மகன்

வாழைச்சேனையில் கொடூர சம்பவம்

0 799

(எச்.எம்.எம்.பர்ஸான்)
“போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யான எனது மகனை திருத்­து­வ­தற்கு நான் பல்­வேறு முயற்­சி­களை செய்து வந்தேன். போதைப்­பொருள் பாவிக்க வேண்டாம். கெட்ட நண்­பர்­க­ளுடன் சேர வேண்டாம் என்று புத்­தி­மதி சொன்ன போதே எனது மகன் எனது கண்ணை தோண்டி விட்டான்” என்று 67 வய­து­டைய தந்­தை­யொ­ருவர் தனது மன வேத­னையை தெரி­வித்தார்.

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தியா­வட்­டவான் பாட­சாலை வீதியில் கடந்த சனிக்­கி­ழமை 18 ஆம் திகதி மகன் தனது தந்­தையை கொடூ­ர­மான முறையில் தாக்கி அவ­ரது கண்ணை அவ­னது விரல்­களால் தோண்டி எடுத்த கோரச் சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்ளது.

இவ்­வாறு மகனின் தாக்­கு­த­லுக்கு இலக்­கான அந்­நபர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு தற்­போது வரை அவர் அங்கு சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இவ்­வாறு கொடூ­ர­மான தாக்­கு­த­லுக்­குள்­ளான சதக்­கத்­துல்லாஹ் அசனார் கருத்து தெரி­விக்­கையில், எனது மக­னுக்கு தற்­போது பத்­தொன்­பது வயது. அவன் 2017 ஆம் ஆண்டில் இருந்தே போதைக்கு அடி­மை­யாகி விட்டான். நான் அவனை திருத்­து­வ­தற்கு என்னால் முடிந்த முயற்­சி­களை செய்­துள்ளேன்.

நான் பள்­ளி­வாசல் ஒன்­றில்தான் கடமை புரிந்து வந்தேன். எனது மகன் போதைப்­பொருள் பாவ­னை­யாளர் என்ற கார­ணத்­தினால் தான் நான் கட­மையில் இருந்து வில­கினேன்.

எனது மகனை திருத்தி எடுக்க நான் 2017 ஆம் ஆண்டு முதல் இது­வரை ஐந்து தட­வைகள் வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளேன். அது பல­ன­ளிக்­க­வில்லை.

எனது மகனை விட்டு விடுங்கள் என்று அவ­னது நண்­பர்­க­ளி­டமும் நான் அடிக்­கடி சொல்லி வரு­வ­துண்டு, அவர்கள் திருந்­தி­யதும் இல்லை எனது மகனை விட்டு அவர்கள் வில­கி­ய­து­மில்லை.

சம்­பவம் நடந்த அன்­றைய தினம் எனது மகன் என்­னிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டான். நான் கொடுக்­க­வில்லை. பணம் தரா­விட்டால் கொலை செய்வேன் என்று சொல்லிக் கொண்டே என்னை தாக்­கினான். எனது தலையில் கல்லால் கடு­மை­யாக தாக்­கினான். பின்னர் எனது கழுத்தை நெரித்து என்னை கொலை செய்ய அவன் முயற்சி செய்தான். நான் அவ­னிடம் போரா­டித்தான் எனது உயிரை காப்­பாற்றிக் கொண்டேன். ஆனால் எனது மகன் எனது கண்ணை தோண்டி எடுத்து விட்டான்.

இப்­போது எனது இடது கண் முழு­மை­யாக எடுக்­கப்­பட்­டு­விட்­டது. வலது கண்ணும் 80 வீதம் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக வைத்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான் கவலைப்படவில்லை தைரியமாக இருக்கிறேன். எனக்கு நடந்த இந்த சம்பவம் போல இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.