“அல்லாஹ் சூழ்ச்சியாளன்” என ஞானசாரர் கூறியதாக முஸ்லிம் சமூகத்தினுள் பேசப்படுவது தவறாகும்

அறிக்கை வெளியிட்டது பொதுபலசேனா

0 518

‘தனியார் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் ‘அல்லாஹ்’ தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்கள் அவ­ரது சொந்­தக்­க­ருத்து அல்ல, ஞான­சா­ர­தேரர் ‘அல்லாஹ் சூழ்ச்­சிக்­காரன்’  என கருத்து வெளி­யிட்­ட­தாக முஸ்லிம் சமூ­கத்­தினுள் பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இது தவ­றாகும்” என பொது­பல சேனா அமைப்பின் ஊடக பிரிவு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ‘தொலை­க்காட்சி நிகழ்ச்­சியில் ஞானசார தேரர் தெரி­வித்த கருத்­துக்கள் அவ­ரது தனிப்­பட்ட கருத்து அல்ல. அல்­குர்­ஆனின் 8 ஆவது அத்­தி­யாயம் 30 ஆவது வச­னத்தைக் குறிப்­பிட்டே அவர் கருத்து தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்­தினால் அப்துல் ராசீக்கின் தலை­மையில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி பெயர்ப்­பிலே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளது.

‘நபியே; உம்மை சிறைப்­ப­டுத்­தவோ அல்­லது உம்மை கொலை செய்­யவோ அல்­லது உம்மை ஊரை­விட்டும் வெளி­யேற்றி விடவோ உமக்கு விரோ­த­மாக நிரா­க­ரிப்போர் சூழ்ச்சி செய்து கொண்­டி­ருந்த நேரத்தை நினைத்­துப்­பாரும். அவர்­களும் சூழ்ச்சி செய்து கொண்­டி­ருந்­தார்கள். (அவர்­க­ளுக்கு எதி­ராக) அல்­லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்­டி­ருந்தான். ஆனால் சூழ்ச்சி செய்­வோரில் ­எல்லாம் அல்­லாஹ்வே மிக்க மேலா­னவன் 8.30
எனவே தொலைக்­காட்சி நிக­ழச்­சியில் ஞான­சார தேரர் அல்லாஹ் தொடர்பில் தனது தனிப்­பட்ட கருத்தை வெளி­யி­ட­வில்லை. ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா அத்தின் அல்­குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்பின் வச­னங்­க­ளையே வாசித்தார்.

அல்குர் ஆனின் இந்த சிங்­கள மொழி­பெ­யர்ப்பு 2015 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அன்று முதல் கடந்த ஆறு­வ­ரு­டங்­க­ளாக அந்த வசனம் பிழை­யா­னது என முஸ்லிம் சமூ­கத்தில் எவரும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக அறி­ய­வில்லை.

எனவே ஞான­சார தேரர் ‘அல்லாஹ்’’ தொடர்­பாக இவ்­வாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார். ‘அல்­லாஹ்’வை அவ­மா­னப்­ப­டுத்­தி­யுள்ளார் என்று கூறி ஊடக மாநா­டுகள் நடத்­து­வதில் எவ்­வித பிர­யோ­ச­ன­மு­மில்லை.

சூழ்ச்சி செய்­வோ­ரி­லெல்லாம் அல்­லாஹ்வே மிக்க மேலா­னவன்’ என்று கூறப்­ப­டு­வது தொடர்பில் எவ­ரா­வது ஒரு­வ­ருக்கு பிரச்சினையென்றால் இந்த வசனத்தை குர் ஆனுக்குள் உள்வாங்கியோரை தொடர்பு கொண்டு பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறும் நாம் தெரிவித்துக்கொள்கிறோம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.