சிங்களத்தில் : ஒஸ்டின் பெர்னாண்டோ
(“அனித்தா” பத்திரிகை)
தமிழில் : எம்.எச்.எம்.நியாஸ்
25/1 பிரேரணை (2014.03.27)
2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்காவை ஒரு செயலிழந்த, பொறுப்பற்ற நாடாகவே சர்வதேசம் கணித்தது. அதன் விளைவாக மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்லிணக்கம், பொறுப்புக் கூறக்கூடிய மற்றும் மனித உரிமைகளின் விருத்திக்கான 25/1 பிரேரணை ஏற்றுக் கொண்டது. அதில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் பின்வருமாறு:
- நேர்மையாக ஆய்வை மேற்கொள்ளக்கூடியதும், பொறிமுறையில் இழப்பை ஏற்படுத்தாத கொள்கையாகவும், மாற்றங்களைக் கொண்ட நீதி மிக்க வழிமுறை ஆகியவற்றை பரிந்துரை செய்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூற்றை ஏற்றுக் கொள்ளல்.
- ஸ்ரீ லங்கா அரசாங்கத்தினால் எதிர்கால கட்டமைப்புக்களை அமைத்தல், நிலக்கண்ணிகளை அப்புறப்படுத்தல், இடம்பெயர்ந்தோரில் பெரும்பான்மையினரை மீளக் குடியேற்றியமை ஆகியவற்றை பாராட்டுவதுடன், நீதி, நல்லிணக்கம், காணி உரிமை மற்றும் வாழ்வாதாரம் ஆகிய விடயங்களில் செய்து முடிக்க வேண்டிய பல விடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டல்.
- வடமாகாண தேர்தலை நடத்தியமை பற்றி பாராட்டுதல்.
- 2013 ஆகஸ்ட் மாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் ஸ்ரீ லங்காவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை செய்தமையையிட்டு பாராட்டுத் தெரிவித்தல்.
- சிவில் சமூக செயற்பாட்டினரைத் துன்புறுத்தல், மனித உரிமைகள் மீறல், சிறுபான்மை மதத்தினரை துன்புறுத்தல், நீதித்துறையின் சுதந்திரத்தை பறித்தல் ஆகிய விடயங்களில் ஈடுபடாதிருப்பதில் கவனம் செலுத்துதல்.
- சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகள் ஆகிய விடயங்களில் சட்டங்களை மீறாது சுயாதீனமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விசாரணைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளல். அதுமட்டுமன்றி அது விடயங்களில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பற்றிய அறிக்கைகளால், கோரப்படும் பரிந்துரைகளை அரசால் நடைமுறைப்படுத்தல்.
- கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட உடன்பாடான பரிந்துரைகளை ஸ்ரீ லங்கா அரசினால் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்காக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். பெறப்பட்ட தீர்மானங்களை சட்டரீதியான அர்ப்பணங்களுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோள்களை மீள முன்வைத்தல்.
- ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளைப் பாதுகாப்போர், சிறுபான்மை சமயத்தவர்களின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தேவஸ்தானங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதுடன் அது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- 2013 ஆகஸ்ட் முதலாம் திகதி ‘வெலிவேரியா’வில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் மற்றும் அது பற்றி 2013 இல் இராணுவப்
படையினரால் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய அறிக்கையை பகிரங்கப்படுத்தும்படி அரசைக் கேட்டுக் கொள்ளல். - 13ஆவது யாப்புத் திருத்தத்துக்கு உடன்பாடாக அனைத்து மாகாண சபைகளினதும் தீர்மானங்களை எடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தை ஊக்குவித்தல்.
- மனித உரிமைகள் பற்றியும் இடம்பெயர்ந்தோர் பற்றியும் ஐ.நா வின் விஷேட பிரதிநிதிகள் 2013 டிசம்பரில் ஸ்ரீ லங்காவுக்கு வருகை தந்தமை பற்றி மகிழ்ச்சியடைவதுடன், இடம்பெயர்ந்த அனைவர் சம்பந்தமாகவும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இடம்பெயர்ந்தோர் கல்வியைப் பெறும் உரிமைகள் பற்றி ஆராய்வதற்கு மற்றுமொரு விஷேட குழுவுக்கு அழைப்பு விடுத்தது பற்றியும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏனைய விடயங்கள் பற்றியும் பல்வேறு குழுக்களுடன் பேசி ஆராய்வது பற்றியும் அரசு முறையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
- நடைபெற்று வரும் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் பெறுபேறுகளை அரசு ஏற்படுத்தவில்லை. எனவே அது விடயத்தில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையாளர் கீழ்வரும் விடயங்களை கோரியுள்ளார்.
i. ஸ்ரீ லங்காவில் மனித உரிமைகள் பற்றிய நடவடிக்கைகள் பற்றியும் அது விடயத்தில் ஏற்பட்டுள்ள விருத்தி பற்றியும் மதிப்பீடு செய்தல்.
ii. கற்றறிந்த பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இயங்கிய காலத்தில் இரு சாரார் மூலமாகவும் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருத்தல் ஆகியன பற்றி முழுமையான விசாரணையொன்றை நடத்துதல். அதுமட்டுமன்றி குறித்த விஷேட ஆணைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களது பக்கச்சார்பற்ற பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல்.
iii. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 28 ஆவது கூட்டத் தொடரின் போது ஸ்ரீ லங்காவின் மனித உரிமைகள் விடயம் பற்றி வாய்மூலம் எடுத்துக்கூறல். அதன்போது ஆணைக்குழுவின் தற்போதைய பிரேரணைகளை செயல்படுத்தல் பற்றியும் அறிக்கை சமர்ப்பித்து கலந்துரையாடலுக்கு இடம்கொடுத்தல்.
ஸ்ரீ லங்கா அரசின் ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் மற்றும் உடன்பாட்டுடன் இந்தப் பிரேரணையை செயல்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கான ஒத்துழைப்பை வழங்குதல்.
இவ்வாறாக பரிந்துரைகளும் பிரேரணைகளும் அரசுக்கு முன்வைத்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை. அதற்கான காரணங்களைக் கூறுவது அர்த்தமற்றது. இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசம் பொறுமையின் எல்லையைத் தாண்டி விட்டது. அதன் பெறுபேறாக 2015 மார்ச் மாதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்ரீ லங்காவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியது. பொருளாதார தடையை ஏற்படுத்துவது, உட்பட ஸ்ரீ லங்கா அரசை பல்வேறு வழிகளில் தண்டிக்கவும் முயன்றது.
நல்லாட்சி அரசின் வருகையும் மனித உரிமைகளுக்கான பிரேரணைகளும்
2015 ஜனவரி 8 ஆம் திகதி ஏற்கனவே ஆட்சியிலிருந்த அரசு தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சி என்ற பெயரில் புதிய அரசு பதவிக்கு வந்தது. நல்லாட்சி அரசின் வெளிநாட்டமைச்சரான ‘மங்கள சமரவீர’ முன்னாள் அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலம் தேவைப்படுகிறது என்று ஐ.நா வுக்கும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கடிதம் அனுப்பினார்.
2015 ஒக்டோபர் முதலாம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எவரும் கலந்துரையாட முன் வரவில்லை. அது திடீரென வானத்திலிருந்து விழவில்லை. மகிந்த ராஜபக்ஷவின் அரசினால் 2009 மே மாதம் 27ஆம் திகதி சுயநலத்துடன் முன்வைக்கப்பட்ட பிரேரணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு அது செயலிழந்தமை காரணமாக சர்வதேசம் விரக்தியடைந்தது. அதன் விளைவாக, 2015 ஒக்டோபரில் மனித உரிமை ஆணைக்குழு இணை அனுசரணையை ஏற்றுக் கொண்டது. இந்த நிலை மகிந்த ராஜபக்ஷ செயலிழந்து, பொறுப்பற்றவராக அடையாளம் காணப்பட்டார். அது விடயத்தில் நல்லாட்சி அரசும் பொறுப்புக் கூற வேண்டி வரும். நல்லாட்சி அரசின் கோரிக்கைக்கு செவிமடுத்த சர்வதேசம், பழைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய (நல்லாட்சி) அரசுக்கு அதற்கான காலக்கெடுவை நீடிக்க இடமளித்தது. மேலும் ஏற்கனவே 2009 மே மாதம் 27ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் அதன்பிறகு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணையையும் மகிந்த ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். அதன் விளைவாகவே 2015 ல் மகிந்த ராஜபக்ஷ அல்லது நல்லாட்சி அரசு சர்வதேசத்தின் பொருளாதாரத் தடை போன்ற கெடுபிடிகளுக்கு சிக்க வேண்டியேற்பட்டது. மேற்படி குறிப்பிட்ட ஒவ்வொரு (அரசும் ஐ.நா வும்) இணைந்த பிரேரணைக்கு மகிந்த ராஜபக்ஷவே முன்னின்று வாக்குறுதியளித்திருந்தார். எனவே அனைத்துப் பிரேரணைகளிலும் மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருந்தமையால் அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு பல நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் புதியதோர் பிரேரணையை அரசுக்கு முன்வைத்தது. இது கூட இவ்விடயத்தில் புதிய பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும்.- Vidivelli