அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு, இனங்களுக்கு இடையே பகை உணர்வை தூண்டும் ஊடக சந்திப்பு:

0 431
  • மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு, இனங்களுக்கு இடையே பகை உணர்வை தூண்டும் ஊடக சந்திப்பு:
  • ஊடக சந்திப்பை திரிபுபடுத்தி தவறாக பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் சுட்டிக்காட்டு
  • விடுதலை செய்ய நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை

எம்.எப்.எம்.பஸீர்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அல்­லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்­சி­யங்­களும் இல்லை என்­பதே நீதி­மன்றின் முடிவு என அறி­வித்த கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, அவரை விடு­விக்­கு­மாறு முன் வைக்­கப்­பட்ட கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

‘இந்த விட­யத்தில் கொழும்பு மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை ஒன்று தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது. அவ்­வா­றான பின்­ன­ணியில், அக்­குற்றப் பத்­தி­ரி­கை­யுடன் தொடர்­பு­டைய பிர­தி­வா­தியை, கீழ் நிலை நீதி­மன்­ற­மான நீதிவான் நீதி­மன்றின் ஊடாக விடு­விக்க, எந்த நீதி­மன்ற அதி­கா­ரமும் இல்லை.’ என சுட்­டிக்­காட்­டியே அவரை விடு­விக்­கு­மாறு முன் வைக்­கப்­பட்ட கோரிக்கையை நீதிவான் நிரா­க­ரித்தார்.

எந்த சாட்­சி­யங்­களும் இல்­லா­ததால் அசாத் சாலியை விடு­தலை செய்ய வேண்டும் என, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றின் முன்­னி­லையில், அசாத் சாலியின் சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்த கோரிக்­கையை ஆராய்ந்தே பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல மேற்­படி உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

இது குறித்த விவ­கார வழக்கு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போது, சி.ஐ.டி. விசா­ரணை அதி­கா­ரி­க­ளுடன் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா ஆஜ­ரானார். சந்­தேக நப­ரான அசாத் சாலி சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் உள்­ளிட்­டோ­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன பிர­சன்­ன­மானார்.

இந்நிலையில் வழக்கு விசா­ர­ணை­களில் ஆரம்­பத்தில் மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்று சி.ஐ.டி.யினரால் மன்றில் முன் வைக்­கப்­பட்ட நிலையில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி வசந்த பெரேரா மன்றில் விட­யங்­களை முன் வைத்தார்.

இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ரான அசாத் சாலியை, குற்­ற­வியல் சட்­டத்தின் விதி­மு­றை­களின் கீழ் விடு­விக்க, அவர் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில் அரசின் நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தவே நான் இங்கு பிர­சன்­ன­மா­கி­யுள்ளேன்.

தற்­போ­தைய நிலையில், இந்த சந்­தேக நப­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றின் 2 ஆம் இலக்க நீதி­மன்றில் 2778/21 எனும் இலக்­கத்தின் கீழ் சட்ட மா அதி­பரால் பயங்­க­ர­வாத தடை சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் சந்­தேக நபரும் தனது கைதினை சவா­லுக்கு உட்­ப­டுத்தி உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­துள்ளார்.
இவ்­விரு மனுக்­களும் நிலு­வையில் உள்­ளன.

இந் நிலையில் மேல் நீதி­மன்ற வழக்கில் பிர­தி­வாதி ஒரு­வரை சாட்­சிகள் இல்லை எனக் கூறி விடு­விக்க நீதிவான் நீதி­மன்­றுக்கு அதி­காரம் இல்லை. அதற்­கான எந்த வழி­மு­றை­களும் குற்­ற­வியல் சட்ட ஏற்­பா­டு­களில் கிடை­யாது. எனவே இந்த சந்­தேக நபரை விடு­விக்க இந்த மன்­றுக்கு நீதி­மன்ற அதி­காரம் இல்லை.’ என வாதிட்டார்.

இத­னை­ய­டுத்து அசாத் சாலி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன வாதங்­களை முன் வைத்தார்.

மேல், உயர் நீதி­மன்­றங்களில் வழக்­குகள் இருப்­பினும், இம்­மன்­றுக்கு உள்ள நீதி­மன்ற அதி­கா­ரத்தின் கீழ், சாட்­சிகள் இல்­லை­யெனில் குற்­ற­வியல் சட்ட விதி­மு­றைகள் பிர­காரம் செயற்­பட எந்த தடையும் இல்லை.

சந்­தேக நப­ரான அசாத் சாலி, சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய கடந்த மார்ச் 16 ஆம் திகதி, சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த பயா­கல தலை­மை­யி­லான குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்பட்டார்.

கைதை அடுத்து அசாத் சாலிக்கு எதி­ராக முன் வைக்­கப்பட்ட குற்­றச்­சாட்­டுகள் மிக பார­தூ­ர­மா­னவை.

தீவி­ர­வாத பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை, தீவி­ர­வாத பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­ய­ளித்­தமை மற்றும் உடந்­தை­யா­க­வி­ருந்­தமை, வன்­முறை அல்­லது மத, இன அல்­லது சமூக ரீதி­யான விரோ­தத்தை தூண்டும் வகையில் அல்­லது வேறு­பட்ட சமூ­கங்கள் அல்­லது இனங்கள் மத குழுக்­க­ளுக்­கி­டையில் பகை­மையை தூண்டும் விதத்தில் வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­கா­கவும் மற்றும் 21.04.2019 அன்று நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­கார சந்­தேக நபர்­க­ளுடன் உள்ள தொடர்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்காக விசா­ரிக்­கப்படு­வ­தாக கூறப்­பட்­டது.

எனினும் இது குறித்த விசா­ர­ணை­களின் பின்னர் சி.ஐ.டி. மன்றில் அறிக்கை முன் வைத்­துள்­ளது.

கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி விசா­ரணை நிறை­வ­டைந்­துள்­ள­தாக கூறி சி.ஐ.டி. முன் வைத்­துள்ள அறிக்­கையில் மிகத் தெளி­வாக விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன.
எனினும் சி.ஐ.டி. ஆகஸ்ட் 17 அன்று விசா­ரணை நிறை­வ­டைந்­த­தாக கூறிய போதும், அதற்கு முன்பதா­கவே, அதா­வது ஜூன் 23 ஆம் திக­தியே சட்ட மா அதிபர் மேல் நீதி­மன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்­துள்ளார். விசா­ரணை முடிய முன்னர் அவர் எப்­படி குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்ய முடியும் என்­பது வேறு பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

எனினும் இங்கு சி.ஐ.டி. முன் வைத்­துள்ள விசா­ரணை அறிக்­கையில், மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில், அசாத் சாலிக்கு எந்த தொடர்பும் இல்லை என தெளி­வாக கூறப்பட்­டுள்­ளது. குறித்த விட­யத்தில் தொலை­பேசி வலை­ய­மைப்பு மற்றும் ஏனைய சாட்­சி­யா­ளர்­களின் வாக்கு மூலங்­களை வைத்து விசா­ரித்த போது அவ­ருக்கு தொடர்­பில்லை என தெரி­ய­வந்­த­தாக சி.ஐ.டி. கூறி­யுள்­ளது.

அதே போல, ஐ.சி.சி. பி.ஆர்.சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் என்ன?. அர­சி­ய­ல­மைப்பு ஊடா­கவும், ‘ஜன­கோஷா’ உள்­ளிட்ட வழக்குத் தீர்ப்­புகள் ஊடா­கவும் உறுதி செய்­யப்பட்ட கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தை பறிக்க இன்று இந்த ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் பயன்­ப­டுத்­த­ப்­படு­கின்றமை கவ­லைக்­கு­ரி­யது. எனினும் உண்மை அது­வல்ல.
இங்கு பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக கூறப்படும் ஊடக சந்­திப்பில் உண்­மையில் அசாத் சாலி கூறி­யது என்ன? அவர் பிரி­வி­னை­வாத, வன்­மு­றையை தூண்டும் எத­னையும் பேச­வில்லை.

அவர் பயங்­கர­வாதம், அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ரா­னவர். அவர் அனை­வரும் ஒன்­றி­ணைந்து, ஒரே தேசி­ய­மாக நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் எனும் கருத்­தையே அந்த ஊடக சந்­திப்பில் வெளி­யிட்டார். இது குற்­றமா? எனவே அசாத் சாலிக்கு எதி­ராக எந்த சாட்­சி­யங்­களும் அவர் மீது சுமத்­த­ப்படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இல்லை. அவர் 100 வீதம் நிர­ப­ராதி. எனவே அவரை குற்­ற­வியல் சட்­டத்தின் 120 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் விடு­விக்­கவும்.’ என கோரினார்.

இத­னை­ய­டுத்து அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா மீள பதில் வாதங்­களை முன் வைத்தார்.

‘மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் சாட்­சியம் இல்லை என சி.ஐ.டி. அறிக்­கை­யிட்­டுள்­ளமை எல்லாம் உண்­மையே. ஆனால் அதற்­காக மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. ஊடக சந்­திப்பின் போது வன்­முறை அல்­லது மத, இன அல்­லது சமூக ரீதி­யான விரோ­தத்தை தூண்டும் வகையில் அல்­லது வேறு­பட்ட சமூ­கங்கள் அல்­லது இனங்கள் மத குழுக்­க­ளுக்­கி­டையில் பகை­மையை தூண்டும் விதத்தில் வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­கா­கவும் அவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது.

அத்­துடன் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த ஒரு குற்றப் பத்­தி­ரி­கையை சவா­லுக்கு உட்­ப­டுத்த, எழுத்­தாணை அதி­கா­ர­முள்ள ( ரிட்) நீதி­மன்றில் மட்­டுமே முடியும். எனவே குற்றப் பத்­தி­ரிகை தொடர்பில் பிரச்­சினை இருப்பின் அவ்­வந்த நீதி­மன்றங்­கலில் அதனை சவா­லுக்கு உட்­ப­டுத்­தலாம்.

அவ்­வா­றான நிலையில், சந்­தேக நபரை குற்­ற­வியல் சட்­டத்தின் 120 (3) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய விடு­விக்க இந்த நீதி­மன்­றுக்கு அதி­கா­ர­மில்லை. ‘ என குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து கொழும்பு பிர­தான நீதிவான் தனது தீர்­மா­னத்தை அறி­வித்தார்.
இரு­த­ரப்பு வாதங்­க­ளையும் கேட்ட பின்னர் அவர் இதனை அறி­வித்தார்.

‘சந்­தேக நபர் பயங்கரவாதத் தடைச் சட்­டத்தின் 6(10) ஆம் அத்­தி­யா­யத்­துக்கமைய கைது செய்­யப்பட்­டதாக முதல் தகவல் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் அப்­பி­ரிவின் கீழ் கைது செய்­ய­ப்படும் ஒரு­வ­ருக்கு பிணை­ய­ளிக்க அச்­சட்­டத்தின் 7 (1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமைய சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை அவ­சி­ய­மாகும். இந் நிலையில் பிணை தொடர்பில் சட்டமா அதி­பரின் ஆலோ­சனை கோரப்பட்டுள்ள நிலையில், அது நிலு­வையில் உள்­ளது. இவ்­வா­றான பின்­ன­ணியில் சந்­தேக நபரை குற்­ற­வியல் சட்­டத்தின் 120 ( 3) அத்­தி­யா­யத்தின் கீழ் விடு­விக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.
இது தொடர்பில் சி.ஐ.டி. முன் வைத்­துள்ள விசா­ரணை அறிக்­கை­யினை ஆராயும் போது, மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சட்­டுக்­க­ளுக்கு எந்த ஆதா­ரமும் இல்லை என சி.ஐ.டி.யே அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது.
எனினும் ஊடக சந்­திப்பை நடாத்தி வெளி­யிட்ட கருத்து தொடர்பில் சி.ஐ.டி. அறிக்கை முன் வைத்­துள்­ளது.

இந் நிலையில் அதனை இம்­மன்று ஆராயும் போது, ஊடக சந்­திப்பின் செம்­மைப்­ப­டுத்­தப்பட்ட பிர­தியை மையப்­படுத்தி இக்­கைது இடம்­பெற்­றுள்­ள­தாக இம்­மன்று அவ­தா­னிக்­கி­றது.

ஏனெனில் செம்­மைப்­ப­டுத்­தப்­பட்ட, செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத இரு பிர­தி­க­ளையும் இந்த மன்று சி.ஐ.டி. ஊடாக பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

அவற்றை ஒப்­பீடு செய்து பார்க்கும் போது, இரண்­டுக்கும் இடையே பாரிய வித்­தி­யா­சங்கள் உள்­ளன.

செம்­மை­ப்ப­டுத்­தப்­பட்ட பிரதி இனங்­க­ளுக்கு இடையே வன்­மத்தை தூண்­டு­வ­தாக உள்­ள­போதும், செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத உண்மை பிர­தி­யா­னது இனங்­களின் ஒற்­றுமை, தேசிய ஒற்­று­மையை வலி­யு­றுத்­து­வ­தாக உள்­ளது.

அப்­படி­யானால் குறித்த ஊடக சந்­திப்பு பதி­வு­களை செம்­மை­ப்­படுத்தி பிர­சாரம் செய்­த­வர்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரின் அவ­தானம் திரும்பும் என இந்த மன்றம் எதிர்­பார்க்­கி­றது.

சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்ய முன்னர் செம்­மை­ப்­படுத்­தப்­பட்ட, படுத்­தப்­ப­டாத இரு பிர­தி­க­ளையும் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தாரா என இம்­மன்­றுக்கு தெரி­யாது.

இந்த விவ­கா­ரத்தில், செம்­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஊடக சந்­திப்பு காணொ­லி­களைப் பார்­வை­யிட்­ட­வர்கள் தமது உணர்­வுகள் தூண்­டப்­பட்­ட­தாக சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்­துள்­ளனர். எனினும் அவர்கள் செம்­மை­ப்­படுத்­தப்ப­டாத உண்மை ஊடக சந்­திப்­பினை பார்வை இட்­டி­ருந்தால் அந்த உணர்வு ஏற்­பட்­டி­ருக்­காது.

வீர­வங்ச எதிர் சட்ட மா அதிபர் வழக்குத் தீர்ப்பில் உயர் நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ரவின் பிர­காரம், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் ஒருவர் கைது செய்­யப்­பட்டால் விசா­ர­ணையின் பின்னர் மன்றில் ஆஜர் செய்­ய­ப்படும் போது அவ­ருக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை நீதி­மன்றம் சீர்­தூக்கி பார்க்க வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது. சாட்­சி­யங்கள் இல்லை எனில் அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கூடாது என அத்­தீர்ப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­கா­ரத்­திலும் நீதி­மன்றின் முன் உள்ள அனைத்து விடயங்களையும் ஆராயும் போது, சந்தேக நபருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்பதும் அவரை விடுவிப்பது உசிதம் என்பதும் இந்த மன்றின் நிலைப்பாடாகும்.
எனினும் மேல் நீதிமன்றில் இது விவகாரத்தில் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டவரை, சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்க இந்த நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. எனவே சந்தேக நபரின் கோரிக்கை இந்த மன்றம் நிராகரிக்கின்றது.’ என பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மன்றில் விடயங்களை தெளிவுபடுத்திய நீதிவான், உணர்வுகளை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்கும் போது இதனைவிட மிக்க அவதானம் தேவை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த விடயத்தில், ஊடக சந்திப்பினை செம்மைப்படுத்தி, அந்த கருத்தினை மாற்றி பிரசாரம் செய்த ஊடகங்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என நீதிவான் சுட்டிக்காட்டினார். இதனை அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேராவும் ஆமோதித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.