(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சுகாதார அமைச்சும், கொவிட் செயலணியும் அனுமதித்தால் கிண்ணியா வட்டமடுவில் கொவிட் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் என்போர் வழங்கியுள்ளனர். சுகாதார அமைச்சிடமிருந்தே அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. அவர்களின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் ‘விடிவெள்ளிக்குத்’ தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கிண்ணியா வட்டமடு மையவாடியின் உட்கட்டமைப்பு வசதிகள் கிண்ணியா பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தினால் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நலன்புரி அமைப்புகள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வட்டமடு மையவாடியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்தவற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் கூறினார்.-Vidivelli