காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

காதிநீதிபதிகள் போரம், சிவில் சமூக அமைப்புகள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சு

0 573

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்­ச­ரவை தீர்­மானத்தை எதிர்த்து காதி நீதி­ப­திகள் போரம், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் உல­மாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
காதி நீதி­ப­திகள் போரம் அண்­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமை அவ­ரது காரி­யா­ல­யத்தில் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்­தி­யது. 20ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்கி வாக்­க­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒத்­து­ழைப்­பினை இவ்­வி­வ­கா­ரத்தில் பெற்­றுக்­கொள்­வ­தென பேச்­சு­வார்த்­தை­யின்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பை பாது­காப்­ப­தற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனது முழு ஆத­ர­வி­னையும் வழங்கும் என அதன் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அத்­தோடு காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் உப­த­லைவர் இப்ஹாம் யெஹ்­யாவின் தலை­மை­யி­லான காதி­நீ­தி­ப­திகள் குழு­வினர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னையும் அவ­ரது காரி­யா­ல­யத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்­பான தெளி­வு­களை எதிர்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏம்.ஏ. சுமந்­திரன் மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகி­யோ­ருக்கு வழங்கி அவர்­க­ளது ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் பிர­தி­நி­தி­களை வேண்டிக் கொண்டார்.

தற்­போது சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்கும் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லாமற் செய்யும் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே அதனை அமைச்­ச­ரவை மீளப்­பெற்-­றுக்­கொள்ளும் வகை­யி­லான அழுத்­தங்­களை முன்­னெ­டுக்­கு­மாறும் அவர் ஆலோ­சனை வழங்­கினார்.

அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபையும் சூம் தொழி­நுட்பம் ஊடாக நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யுடன் கூட்­ட­மொன்­றினை நடாத்தி தனது நிலை­பாட்­டினை தெளி­வு­ப­பத்­தி­யுள்­ளது. இந்­நி­கழ்வில் சுமார் 60 உலமாக்கள் கலந்து கொண்டனர்.
காதிநீதிபதிகள் போரமும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் அமைச்சரவையின் அமைச்சர்களை சந்தித்து காதிநீதிமன்ற கட்டமைப்பின் அவசியம் பற்றி தெளிவுபடுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.