அமைச்சரவையின் தீர்மானம் மறுபரிசீலனைக்குட்படுமா?

0 463

காதி நீதி­மன்ற முறையை இல்­லா­தொ­ழிப்­பது தொடர்பில் அமைச்­ச­ரவை எடுத்­துள்ள தீர்­மானம் பலத்த சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சமூ­கத்தில் மேலெ­ழுந்­துள்­ளன. சமூக வலைத்­த­ளங்­களில் இது தொடர்பில் இரு கருத்­து­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­களும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து தமக்குள் முரண்­பட்டுக் கொள்­வதை காண­மு­டி­கி­றது. நவீன தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி இது தொடர்பில் ஏரா­ள­மான கூட்­டங்­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் நடந்து வரு­கின்­றன.
1950ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­ப­டா­துள்ள நிலையில் அதில் பல்­வேறு குறை­பா­டுகள் உள்­ள­தாக பல தசாப்­தங்­க­ளாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றமை உண்­மையே. இத­னால்தான் 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி அமைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் 2018ஆம் ஆண்டு சுமார் ஒன்­பது வரு­டங்­களின் பின்னர் தனது அறிக்­கையை அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தளதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளித்­தது. இருந்த போதிலும் இக் குழுவில் அங்கம் வகித்த மற்­றொரு சாரார் ரிஸ்வி முப்தி தலை­மையில் வேறொரு அறிக்­கையை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்­ததன் கார­ண­மாக அதனை அப்­போ­தைய அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் பாரிய சிக்­கல்கள் எழுந்­தன.

உலமா சபை­யினர் அன்றே விட்டுக் கொடுப்­புடன் நடந்­தி­ருப்பின் இன்று இந்த விவ­காரம் இவ்­வ­ளவு தூரம் இழு­ப­றிப்­பட்­டி­ராது. அன்று சிறிய சிறிய விட­யங்­க­ளுக்­காக சண்டை பிடித்­ததன் கார­ண­மாக இன்று ஒட்­டு­மொத்த காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பையே பறி­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தையும் இந்த இடத்தில் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்.

இந்­நி­லை­யில்தான் தற்­பொ­ழுது ஆளும் பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை காதி நீதி­மன்ற முறையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் பல­தா­ர­ம­ணத்தை இலங்­கையில் தடை செய்­வ­தற்கும் தீர்­மா­னத்­தி­ருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்­ச­ர­வையின் நிலைப்­பாட்­டுக்கு சார்­பாக நின்று தெரி­வித்து வரும் கருத்­துக்கள் முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளன. “அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை என்னால் எதிர்க்க முடி­யாது. நான் மாத்­தி­ரமே அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம்” என அவர் பல இடங்­களில் கூறி­வ­ரு­கிறார்.

உண்­மையில் அமைச்­ச­ரவை நியா­ய­மான ஆய்­வு­களின் பின்னர் இந்தத் தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருப்பின் அது பற்றி சிந்­திக்க முடியும். எனினும் அமைச்­ச­ர­வையில் இருக்­கின்ற பெரும்­பான்­மை­யானோர் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் என்ற வகையில் அவர்கள் இந்த விட­யத்தை எவ்­வாறு விளங்கிக் கொண்டு இந்த பார­தூ­ர­மான தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருக்­கி­றார்கள் என்ற கேள்வி எழு­கி­றது. சில சிங்­கள தொலைக்­காட்­சி­களில் வெளி­யி­டப்­பட்ட காதி நீதி­மன்றம் தொடர்­பான தவ­றான பிர­சா­ரங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அமைச்­ச­ர­வையில் உள்ள பெரும்­பா­லான அமைச்­சர்கள் இந்த தீர்­மா­னத்­துக்கு வந்­தி­ருப்­பார்கள் என்­பதை அனு­மா­னிக்க முடி­கி­றது.

உண்­மையில் தற்­போ­தைய அர­சாங்கம் இந்த விவ­கா­ரத்தில் முஸ்­லிம்­களை தமக்­கி­டையே மோத­விட்டு வேடிக்கை பார்ப்­ப­தா­கவே தெரி­கி­றது. இதில் அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் எவ்­வா­றி­ருப்­பினும் முஸ்லிம் சமூகம் மிக நிதா­ன­மா­கவே அணுக வேண்­டி­யுள்­ளது. கடந்த பல தசாப்­தங்­க­ளாக சர்ச்­சைக்­குள்­ளான இந்த விட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் விட்டுக் கொடுப்­பதன் மூலமே ஒரு இணக்­கப்­பாட்டை எட்ட முடியும். மாறாக தொடர்ந்து முரண்­பட்டுக் கொள்­வது சமூ­கத்தை மென்­மேலும் பிள­வு­ப­டுத்­தவும் பல­வீ­னப்­ப­டுத்­த­வுமே வழி­வ­குக்கும்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷம் தேர்தல் பிர­சா­ரத்­திற்கு பொருத்­த­மா­ன­தாக உள்­ள­போ­திலும் அது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­ற­தாகும். இலங்கை பல இனங்­களை, மதங்­களைப் பின்­பற்­று­கின்ற, பல மொழி­களைப் பேசு­கின்ற மக்கள் வாழ்­கின்ற நாடு என்­ற­வ­கையில் அவர்­களை அவர்­க­ளது தனித்­து­வ­மான சட்­டங்கள் மூலம் ஆள்­வதே பொருத்­த­மா­ன­தாகும். அனை­வ­ரையும் ஒரே சட்­டத்தின் கீழ் கொண்டு வரு­வது என்­பது பெரும் சவாலை உண்­டு­பண்ணும். என­வேதான் இந்த விட­யத்தில் அர­சாங்கம் மிகவும் பொறுப்­புடன் நடந்து கொள்­கின்ற அதே­நேரம் முஸ்­லிம்கள் தரப்பில் இதனை மென்­மேலும் ஒரு பிரச்­சி­னை­யாக பூதா­க­ரப்­ப­டுத்திக் கொண்­டி­ராது அவ­ச­ர­மாக ஒரு முடி­வுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் இந்த விட­யத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் தற்­போது எழுந்­துள்ள பல்­வேறு அபிப்­பி­ரா­யங்­க­ளையும் சமூ­கத்தின் அபிலாசைகளையும் கவனத்தில் கொண்டு ஒரு சிறந்த ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும். காதி நீதிமன்றக் கட்டமைப்பை ஒழிக்காது, அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே பொருத்தமானதொரு தீர்வாக அமையும். எனவேதான் அமைச்சரவை தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இதனை ஒரு அரசியல் விவகாரமாக மாற்றாது முஸ்லிம் சமூகத்தின் நலன்சார்ந்த விவகாரமாக அணுக வேண்டியதே சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் கடப்பாடாகும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.