உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்த நடவடிக்கை

0 627

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிதத்துல் ஆலம் அல் –  இஸ்லாமி) செயற்பாடுகள் மற்றும்  அபிவிருத்திப் பணிகளை,  இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக,  சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹம்மாட் அலி ஜீலானுக்கும்,  உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்குப்  பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று,  வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகள் மற்றும் அதன் பணிகளை,  இலங்கையில் முன்னெடுப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன், அதனை இலங்கை முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும்,  இலங்கை முஸ்லிம் சமய கலாசார அமைச்சுக்கும் இடையிலான  உடன்படிக்கைகளை  மேற்கொள்வது சம்பந்தமாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, உலக முஸ்லிம் லீக்கின் மூலம் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அதன் கிளையொன்றை,  இலங்கையில் திறந்து அதனைப்  பலப்படுத்துவது சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக்  கலந்துரையாடலில் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, அல்ஹாஜ் ஜிப்ரி  உள்ளிட்ட பிரமுகர்கள் பலர்  கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.