ஆணவத்திலிருந்து விடுபட்டு பன்முகத்தன்மைக்கு…

0 437

இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார்

தென்­னிந்­திய தொலைக்­காட்சி ஒன்றில் ஒளி­ப­ரப்­பா­கிய நேர்­காணல் ஒன்றை அண்­மையில் பார்த்­துக்­கொண்­டி­ருந்தேன். அந்த நேர்­கா­ணலை நிறைவு செய்யும் முக­மாக தெரி­விக்­கப்­பட்ட விட­யங்­களில் ஒரு விட­யத்தை மேற்­கோள்­காட்டி இந்த பதி­வு­களை வழங்க எத்­த­னிக்­கின்றேன்.

“நான் செய்­து­கொண்­டி­ருந்த சின்ன சின்ன போராட்­டங்­களை நிறுத்­தி­விட்டு சின்ன சண்­டைக்­கா­ரர்­க­ளிடம் அதனை ஒப்­ப­டைத்த நாளி­லி­ருந்து எனது வாழ்க்­கையின் வெற்றி ஆரம்­பித்­தது என நான் நம்­பு­கின்றேன்.

ஏனை­யோரின் அவ­தா­னத்தை என் பக்கம் ஈர்ப்­ப­தற்­காக நான் உரு­வாக்­கிக்­கொண்ட போராட்­டங்கள், எனது உரி­மைக்­காக நான் வெறுப்­புண்­டாக்கும் பாமர மக்­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்ட சச்­ச­ர­வுகள், என்னைப் பற்றி கோள் மூட்­டி­ய­வர்­க­ளுடன் உரு­வாக்­கிக்­கொண்ட போராட்­டங்கள் போன்ற அனைத்து போராட்­டங்­க­ளையும் கைவிட்டு விட்டு வேறு வேலைகள் இல்­லா­த­வர்­க­ளுக்கு அந்த அந்தப் போராட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்கு இட­ம­ளித்தேன்.

அதன் பின்னர் எனது இலக்கை பூர்த்தி செய்­கின்ற போராட்­டங்­க­ளுக்கும் எனது கனவை நன­வாக்கும் போராட்­டங்­க­ளுக்கும், எனது சிந்­தனைப் போக்கை மேம்­ப­டுத்தும் போராட்­டங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கினேன். சின்னச் சின்ன சச்­ச­ர­வு­களை கைவிட்ட பின்­னரே எனது வாழ்க்­கையின் வெற்றிப் பயணம் ஆரம்­ப­மா­கி­யது. பெறு­ம­தி­யான பொன்­னான காலத்தை சின்ன சண்­டை­க­ளுக்கும் சச்­ச­ர­வு­க­ளுக்கும் வீண­டிப்­பது என்­பதில் எந்தப் பெறு­ம­தியும் இல்லை என்­பதை நான் உணர்ந்­து­கொண்டேன்.

உங்கள் மனை­வி­யுடன், உங்கள் கண­வ­ருடன், உங்கள் வீட்டில் உள்­ள­வர்­க­ளுடன், உங்கள் பிள்­ளை­க­ளுடன், உங்கள் வீடு­களில் வேலை செய்­கின்­ற­வர்­க­ளுடன் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கிக்­கொண்டு காலத்தை வீண­டிக்க வேண்டாம். தேவை­யற்ற பிரச்­சி­னை­களை சிக்­கல்­களை உரு­வாக்கிக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்­க­ளிடம் தாழ்­மை­யாக வேண்­டிக்­கொள்­கின்றேன். உங்கள் வீடு எந்­த­ளவு விசா­ல­மா­ன­தாக இருந்­தாலும், உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு வரு­மானம் இருந்­தாலும், உங்­களின் வாகனம் எந்­த­ளவு பெறு­ம­தி­யாக இருந்­தாலும், உங்கள் வங்கிக் கணக்கில் எவ்­வ­ளவு பணம் இருந்­தாலும், உங்கள் தொழில் எது­வாக இருந்­தாலும், நீங்கள் தகு­தியில் தரத்தில் எந்த நிலையில் இருந்­தாலும், அதில் எந்தப் பலனும் இல்லை உங்­களின் இறுதிப் பய­ணத்தின் போது அனை­வ­ருக்கும் கிடைப்­பது ஒரே­ய­ள­வான சிறிய காணி­ய­ளவு மாத்­திரம் தான். அந்த உண்­மையை தெரிந்­து­கொள்­ளுங்கள். உங்கள் வாழ்க்­கையில் வெற்­றி­பெற வேண்டும் என்றால் ஆண­வத்தை கைவி­டுங்கள். ஆணவம் தான் மனித வர்க்­கத்தை ஒழிக்­கின்ற முதல் கருவி”.
எம் அனை­வ­ராலும் ஆண­வத்தை விட்டு விட முடியும் என்றால் இந்த உல­கத்தில் சமா­தா­னமும் நல்­லி­ணக்­கமும் இருக்கும். எம் அனை­வ­ருக்கும் உளத்­தி­ருப்­தியும் மகிழ்­சியும் நிம்­ம­தியும் இருக்கும். இந்த உண்மை ஒவ்­வொரு மனி­த­ருக்கும், அனைத்து நாடு­க­ளுக்கும், அனைத்து அர­சு­க­ளுக்கும் பொருந்தும்.

எமது சுற்­றுச்­சூ­ழ­லி­லி­ருந்து, எமது பல்­வேறு பட்­ட­வர்­க­ளு­ட­னான பழக்­க­வ­ழக்­கங்கள், எமது அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து, எமது வர­லாற்­றி­லி­ருந்து நிறைய விட­யங்­களை கற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நாம் ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்தும் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது,

அன்று எமது நாடு சுதந்­திரம் பெறும் போது காணப்­பட்ட நிலை­யி­லி­ருந்து எமது நாட்டின் தற்­போ­தைய நிலையை திரும்பி பார்க்­கின்ற போது வர­லாறு பல விட­யங்­களை எமக்கு கற்றுத் தரு­கின்­றது. அவற்றை நாம் சரி­யாக சொல்ல வேண்­டிய தேவையும் உள்­ளது.
எமது மாணவப் பருவ காலத்­தி­லி­ருந்து மிகவும் விருப்­பத்­துக்­கு­ரி­ய­வ­ராக இருந்த ஈரி­ய­கொல்­லவின் உல­கிலே மகத்­தான நாடு இலங்கை எனும் பாடல் நினை­வுக்கு வரு­கின்­றது. எமது பெரு­மை­மிக்க பாரம்­ப­ரியம் குறித்து எமது மூதா­தை­யர்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல எமக்கும் பெரு­மை­யாக இருக்­கின்­றது. அன்­றைய கால­கட்­டத்தில் எமது பொரு­ளா­தார நிலையை கருத்­திற்­கொண்டு எமக்கு அயலில் உள்ள மிகப்­பெ­ரிய நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­ட­வர்­களை கள்­ளத்­தோணி என்று அழைத்­தார்கள். பட­கு­களில் திருட்­டுத்­த­ன­மாக வந்­த­வர்கள் என்­பது அதன் அர்த்­த­மாகும். சிங்­கப்­பூரை எமது பெரி­யோர்கள் கூலிக்­காரர்­களின் நாடு என்று அழைத்­தார்கள். ஏதேனும் ஒரு இடத்தில் சேரிப்­புறம் போன்று அடுக்கு வீடுகள் இருந்தால் அந்தப் பகு­தி­களை கொரியா என்று அவர்கள் அழைத்­தார்கள். சுதந்­திரம் கிடைத்த காலப்­ப­கு­தியில் நாம் ஜப்­பா­னி­ட­மி­ருந்து மாத்­தி­ரமே இரண்டாம் நிலைக்கு இருந்தோம் என எமது பெரி­யோர்கள் சொல்லக் கேட்­டி­ருக்­கின்றோம்.

ஆனால் இன்று இலங்கை எங்கே இருக்­கின்­றது. இன்று நாம் பங்­க­ளா­தே­சத்தை விட பின்­னோக்­கி­யி­ருக்­கின்றோம். ஆசி­யாவில் எம்மை விட பின்­னி­லையில் இருந்த நாடுகள் அனைத்தும் தற்­போது எம்மை விட முன்­னோக்கி சென்­றி­ருக்­கின்­றது. ஒரு­வரை ஒருவர் குற்றம் சுமத்­திக்­கொண்டு சம்­பி­ர­தாய அடிப்­ப­டையில் அர­சி­யலில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருப்­போமா என்­பது குறித்து நாடு என்ற வகையில் தீர்­மானம் எடுக்க வேண்டும்.
சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டு தற்­போது ஏழு தசாப்­தங்­க­ளா­கின்­றன. அதில் ஐந்து தசாப்­தங்­களை வன்­மு­றை­யிலே கழித்­தி­ருக்­கின்றோம். ஒன்று ஜாதிப் போராட்டம் அல்­லது இன ரீதி­யாக போராட்டம், அல்­லது மொழி ரீதி­யான போராட்டம், அல்­லது பிர­தேச வாதம், மத­வாத போராட்­டங்கள் அல்­லது நீறு பூத்த நெருப்பு போல வெளிப்­ப­டை­யாக சொல்­வ­தற்கு பலரும் விரும்­பு­வ­தில்லை. இன்றும் சில பேதங்­க­ளையும் வைத்­துக்­கொண்­டுள்­ளார்கள். இவற்­றை­யெல்லாம் அடிப்­ப­டை­யாக கொண்டு போராட்­டங்­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். வன்­மு­றையை அணிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.
இரண்டாம் உலகப் போரின் போது தரை மட்­ட­மாக்­கப்­பட்­ட ஜப்பான் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் இன்று போர்­வை­யாக இருந்த சாம்­பலை அகற்­றிக்­கொண்டு உலகப் பொரு­ளா­தா­ரத்தில் மிகப் பெரிய இடத்­திற்கு வளர்ந்­துள்­ளன. கிழக்கு ஜேர்மன் மேற்கு ஜேர்மன் என பிரிந்­தி­ருந்த ஜேர்மன் நாடு தற்­போது பிரி­வி­னை­வா­தங்­களை கைவிட்டு இன்று ஒன்­றாக இணைந்­து­கொண்டு ஒரே ஜேர்­ம­னாக கட்­டி­யெ­ழுப்­பப்பட்­டுள்­ளது, பரம எதி­ரி­க­ளாக இருந்து யுத்தம் செய்த ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களின் மாண­வர்கள் இன்று ஒரே வர­லாற்­றுப்­பா­டத்தை கற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். சீன மற்றும் மலே என்ற பிரி­வி­னை­வா­தத்­துடன் போராட்­டங்­களை நடாத்­திக்­கொண்­டி­ருந்த சிங்­கப்பூர் இன்று உலகில் அதி­க­ளவு தனி­நபர் வரு­மானம் பெறும் நாடு­களின் பட்­டி­யலில் முன்­னி­லையில் இருக்­கின்­றது.

“One Country – One Nation” “ஒரே நாடு ஒரே தேசம்” என்ற கோட்­பாட்டின் கீழ் வேற்­று­மை­யிலும் ஒன்­றி­ணைய அவர்­களால் முடிந்­துள்­ளது ஒட்­டோமன் பேர­ரசால் கட்­டி­யெ­ழுப்­பட்ட துருக்கி பிற்­பட்ட காலங்­களில் உள்­நாட்­டிலும் அண்­டைய நாடு­க­ளுடன் காணப்­பட்ட சர்ச்­சை­களை குறைத்து கொள்­வ­தற்கு உறு­தி­யுடன் செயற்­பட்­ட­மையால் முன்­னேற்றம் கண்­டது. எமது வர­லாற்று நிகழ்­வு­க­ளையும் உலக வர­லாற்­றையும் அவ­தா­னிக்­கின்ற போது எமக்கு நிறைய விட­யங்கள் கற்­றுக்­கொள்ள கிடைக்­கின்­றன.

வெற்றி பெறு­வ­தற்கு ஆண­வத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை மேற்கோள் காட்­டியே இந்த விட­யங்­களை நான் குறிப்­பிட ஆரம்­பித்தேன். நான் கொழும்பு ஆனந்தாக் கல்­லூ­ரியில் மாண­வ­னாக இருந்த போது நினைவுப் புத்­த­கத்தில் எனது இரண்டு நண்­பர்கள் குறிப்­பிட்ட விட­யங்­களை மேற்கோள் காட்டி எனது இந்தக் கருத்­துக்­களை நிறைவு செய்ய விரும்­பு­கின்றேன். அந்த சந்­தர்ப்­பத்தில் மாக்­சிச கொள்­கையில் உறு­தி­யாக இருந்த ஹேவா­வசம் என்ற நண்­பனின் கருத்தில் இருந்து இதனைக் குறிப்­பிட விரும்­பு­கின்றேன். அவர் அந்தப் புத்தகத்தில் கால்மாக்ஸின் கருத்தொன்றை பதிவு செய்திருந்தார்.

”கவலை….
கவலைக்கு ஆரம்பம் வறுமை
அதை அழிக்கின்ற வழி
புரட்சியே…..”
– ‘கால் மாக்ஸ்’
அடுத்த பக்கத்தில் தேவசிறி ஹேவாவிதானம் என்ற நண்பர் பதிவு செய்திருந்தார். அவர் புத்தபெருமானை மேற்கோள் காட்டியிருந்தார்.

”கவலை……
கவலையின் ஆரம்பம் பேராசை
அதை அழிக்கின்ற வழி
அஸ்டாங்க கோட்பாடுகளேயாகும்.” –’புத்த பெருமான்’

நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திறந்த மனதோடு அனைத்து விடயங்களையும் அவதானிக்க வேண்டும். பிரிந்து வெவ்வேறாக செல்வதை விட ஒன்றாக இணைந்து பயணிப்பது எதிர்கால உலகிற்கு தகுதியானது. மனித வர்க்கத்தின் எதிர்காலம் சிறப்பு பெற இதுவே ஒரே வழியாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.