உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டமைச்சர் ஹமீத்

0 442

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏசிஎஸ் ஹமீத் மறைந்து 22 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

தாலிப் டீன்

வழ­மை­யாக 150 க்கும் அதி­க­மான தேசியத் தலை­வர்­களும் அர­சாங்க தலை­வர்­களும் உள்­ளிட்ட உலகத் தலை­வர்கள் பங்கு பற்றும் செப்­டம்பர் மாதத்தில் நடை­பெறும் ஐக்­கிய நாடு­களின் வரு­டாந்த பொதுச்­சபை அமர்­வு­க­ளுக்கு இலங்­கையில் இருந்து கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான வெளி­நாட்டு அமைச்­சர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.
இத்­த­கைய ஒரு அமர்வின் போது இலங்­கையின் வெளி­நாட்டு அமைச்சர் ஏ.சீ.ஸ். ஹமீ­துக்கு மறக்க முடி­யாத ஓர் சம்­பவம் நிகழ்ந்­தது. ஒரு முறை இலண்­டனைச் சேர்ந்த ஈழ ஆர்­வ­லரும் வழக்­க­றி­ஞ­ரு­மான கிருஷ்ணா வைகுண்ட வாசன் என்­பவர் நுழை­வா­யிலைத் தகர்த்துக் கொண்டு இர­க­சி­ய­மாக ஐக்­கிய நாடு­களின் சபைக்குள் உள் நுழைந்து ஹமீதை மீறி பொது மாநாட்டு அரங்­கத்தின் மேடைக்குச் செல்ல முற்­பட்­ட­தோடு , சிறிது நேரத்தில் பேச்­சா­ளரின் இடத்­தையும் பற்றிக் கெண்டார்.

வெளி­நாட்­ட­மைச்சர் என்ற வகையில் அவர் அடைந்த மகிழ்ச்­சி­யான தருணம் தான், ஹவானா உச்சி மாநாட்டின் போது ஜே.ஆர் ஜய­வர்­தன அவர்கள் பிடல் கஸ்ட்­ரோ­விடம் “ஹமீதின் முயற்­சியால் தான் மாசற்ற விதத்­திலும் மறுக்க முடி­யா­த­வாறும் இலங்கை அர­சுக்கு கியு­பா­விடம் அணி­சே­ரா­மையின் தலை­மைத்­து­வத்தை ஒப்­ப­டைக்க முடிந்­தது” என்று கூறிய தரு­ண­மாகும்.

ஐக்­கிய நாடுகள் சபை வர­லற்றில் இது ஓர் அரிய நிகழ்­வா­கவே இருந்­தது. அந்­நபர், இலங்கை அரசு வட இலங்­கையில் தனித் தாய­கத்­துக்­காக போரா­டிய தமி­ழ­ருக்கு எதி­ராக இனப்­ப­டு­கொலை செய்­த­தாக குற்றம் சாட்டி அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வசை

­மாரி பொழிந்­த­தோடு அர­சாங்கம் போர்க் குற்­றங்­களைச் செய்­த­தற்­கா­கவும் குற்றம் சுமத்­தினார்.

அப்­போது, அந்த நபர் அனு­ம­தி­யின்றி ஊடு­ரு­வி­யுள்ளார் என்­பதை உணர்ந்த சபைத் தலைவர் மைக்கைத் துண்­டித்து அவரை மண்­ட­பத்­தி­லி­ருந்து உடனே வெளி­யேற்­று­மாறு பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு கட்­ட­ளை­யிட்டார். அத்­தோடு அந்­ந­ப­ருக்கு சபை வளா­கத்தில் நுழை­வ­தற்கும் தடை விதித்தார்.

பின்னர் ஹமீத் தனது உரையை நிகழ்த்த மேடையை நோக்கி நடந்த போது சபை மண்­ட­பத்­துக்குள் பெரும் அமைதி நில­வி­யது.

அப்­பொ­ழுது இலங்­கைக்­கான தூதுக்­கு­ழுவின் ஒரு அங்­கத்­தவர் என்ற வகையில் நான் ஹமீ­துக்கு பின் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்தேன். இல­குவில் எவ­ராலும் மடக்கி விட முடி­யாத ஹமீத் தூதுக்­கு­ழுவின் எந்­த­வொரு அங்­கத்­த­வ­ரதும் தூண்­டுதல் இல்­லா­ம­லேயே நகைச்­சு­வை­யோடு தனது உரையை ஆரம்­பித்தார். அவர், “மதிப்­பிற்­கு­ரிய தலைவர் அவர்­களே எனக்கு முந்­தைய பேச்­சாளர் தனது உரையை சுருக்­க­மாக முடித்துக் கொண்­ட­மைக்கு நான் முதலில் அவ­ருக்கு நன்றி கூறு­கிறேன்” என்று உரையை ஆரம்­பித்த போது அது, சபையில் நிகழ்த்­தப்­பட்ட நீண்ட உரை­களால் சலிப்­ப­டைந்­தி­ருந்த சபை­யி­னரை சிரிப்பின் உச்­சத்­துக்கே கொண்டு சென்­றது. இவ்­வாறு அன்று அங்கு ஊடு­ரு­விய நபர் மீதான சபையின் கவ­னத்தை வெளி­நாட்டு அமைச்சர் தன்­பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
இவ்­வா­றான ஹமீதின் நகைச்­சுவை உணர்வு ஐக்­கிய நாடுகள் சபை எல்­லை­க­ளுக்கும் அப்பால் சென்­றது. ஒரு­முறை நியூ­யோர்க்கில் நடந்த ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபைக் கூட்­டத்தில் பங்­கேற்க சென்ற போது அவர் ஐந்து நட்­சத்­திர சொகுசு ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்தார் என்ற விமர்­ச­னத்­திற்கு உள்­ளான போது, அது பற்றி அவர் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி எம். பீக்­க­ளுக்கு கிண்­ட­லாக பதி­ல­ளித்தார் “வெளி­நாட்டு அமைச்சர் என்ற வகையில் நான் வெளி­நா­டு­க­ளுக்குப் பயணம் செய்யும் போது நான் எங்கே தங்க வேண்டும் என்று சொல்­கி­றீர்கள்? “ தோசைக் கடை­யிலா?” என்று அவர் கேட்டார்.
அது மற்­றொரு வகையில், ஹல்ஸ்­டோபில் உள்ள அம்பால் கஃபே அல்­லது பம்­ப­ல­பிட்­டி­யவில் உள்ள சரஸ்­வதி லொட்ஜில் ஓர் அறை­யா­கவோ அல்­லது நிவ்­யோக்கின் லெக்­சின்டன் அவ­னி­யு­வி­லுள்ள சர­வ­ன­பவன் ஆகவோ கருத முடியும்.

ஹமீத் தனது வழக்­க­மான தங்­கு­மி­ட­மாக ஒன்றில் நிவ்யோக் ஹயட் ரீஜன்சி , இன்­டர்­நே­ஷனல் பார்க்லே, த வோல்டோஃப் அஸ்­டோ­ரியா அல்­லது பலஸ் ஹோட்­ட­லையே தேர்ந்­தெ­டுப்பார். ஐக்­கிய நாட்டு அமர்­வு­க­ளுக்கு வருகை தரும் ஏனைய வெளி­நாட்டு அமைச்­சர்­களின் பாணி­யி­லேயே அவரும் நடந்து கொண்டார். அதி­க­மாக உல­கத்தை வலம் வரு­பவர் என்ற வகையில் அவர் இடைக்­கி­டையே வெளி­நாட்டு விமா­னங்­க­ளுக்கு மாறு­வ­தற்கு மட்­டுமே கொழும்பில் தங்­கி­யி­ருந்தார்.

ஹமீதைப் பொறுத்­த­ளவில் அவர் ஒரு மறக்க முடி­யாத கதா­பாத்­தி­ர­மா­கவே இருந்தார். 1977 இலி­ருந்து வெளி­நாட்­ட­மைச்சர் என்ற வகையில் அவ­ரது பதவி காலத்தின் ஒவ்­வொரு நொடி­யையும் மிகவும் ரசித்துக் கடத்­தினார். ஜே. ஆர். ஜய­வர்­தனா அவர்கள் ஐக்­கிய நாடுகள் சபையில் உரை­யாற்­றவோ அந்த வளா­கத்­திற்கு வருகை தரவோ இல்லை என்­பதால் (1983 ஏப்­ரலில் வொஷிங்டன் டீ.சீ க்கு இரா­ஜாங்கப் பய­ணத்தை மேற்­கொண்டு வோல்டோப் அஸ்­டே­ரி­யாவில் தங்­கி­யி­ருந்த போது கூட ) அவரால் அவ்­வாறு இருக்க முடிந்­தது. ஜே.ஆர் அவ்­வாறு ஐக்­கிய நாடு­களின் சபை­களை தவிர்த்­த­தற்­கான கார­ணங்­களும் மர்­ம­மா­கவே இருந்­தன.

1976 – 1979 ஆண்டுக் காலப்­ப­கு­தியில் இலங்கை அணி­சேரா நாடு­களின் அமைப்­புக்குத் தலைமை தாங்­கி­யது, 1970 களின் நடுப்­ப­கு­தியில் காணப்­பட்ட சில சர்­வ­தேச பிரச்­சி­னை­க­ளுக்குத் தலைமை தாங்க ஹமீத் தொடர்ந்தும் அழைக்­கப்­பட்டார். குறிப்­பாக இதில், இரு கம்­போ­டிய பிரி­வுகள் ஐக்­கிய நாடு­களின் இருக்­கைக்கு உரிமை கோரி­யது. (ஐக்­கிய நாடு­களின் சட்ட ஆலோ­ச­கர்­களின் ஆத­ர­வுடன் சர்ச்­சையைத் தீர்க்க உதவும் வகையில் மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதால் அன்­றைய பொதுச் சபை அமர்வு நான்கு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேல் தொடர்ந்­தது)

மேலும் மற்­றொரு சர்ச்­சை­யாக எகிப்து 1978 இல் இஸ்­ர­வே­லுடன் கேம்ப் டேவிட் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டதால் அது அணி­சேரா நாடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட வேண்­டுமா? தென்­னா­பி­ரிக்­காவின் மக்ரெப் பிராந்­தி­யத்தின் மேற்கு சஹா­ராவின் சர்ச்­சைக்­கு­ரிய பிர­தேசம் தெடர்­பா­கவும் அப்­கா­னிஸ்­தானின் சோவியத் படை­யெ­டுப்­பினால் ஏற்­பட்ட பிள­வுகள் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் ஹமீத் தலைமை வகித்த அதே சமயம் இந்த சர்ச்­சைகள் தொடர்­பாக அணி­சேரா நாடு­க­ளி­டையே பல பிரி­வுகள் காணப்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. (1979 –1989)

அவர் தீர்ப்­ப­ளிக்கும் சந்­தர்ப்­பங்­களில் பொதுச் சபை அமர்­வு­களில் போது ஹமீதின் நெருங்­கிய ஆலோ­ச­கர்­களில் சிறந்த இரு தொழில் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளான ஜயந்த தன­பால, நிஹால் ரொட்­றி­கோவும், அவர்­க­ளோடு இலங்­கைக்­கான கன­டாவின் உயர்ஸ்­தா­னி­கரும் பின்னர் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தூது­வ­ரு­மான ஏனஸ்ட் கொரி­யாவும் அங்­கி­ருந்­தனர்.

ஏனஸ்ட் என்­பவர் ஹமீத் வெளி­நாட்­ட­மைச்­ச­ராக நிய­மனம் பெற முன்­னி­ருந்தே அவ­ரது நீண்­ட­கால நண்­ப­னாக இருந்தார். அத்­தோடு மரபு நெறி­மு­றை­க­ளுக்கு அப்பால் சென்று அவரின் முதற்­பெ­ய­ரான “ஷாஹுல்” என்று அவரை அழைக்கும் ஒரே­யொரு இலங்கைத் தூது­வ­ரா­கவும் அவர் காணப்­பட்டார்.

ஏனஸ்ட் ஒரு முறை என்­னிடம் இவ்­வாறு கூறினார் “ ஷாஹுல் அவ­ரது வாழ்க்­கையில் நிறைய சவால்­களைச் சந்­தித்­துள்ளார். அதில் ஒன்று அவர் தோற்­றத்தில் உயரம் குறை­வாக இருந்­தது. ஆனால் அவ­ருக்கு மிகப் பெரும் சவா­லாக இருந்­தது இலங்கை அர­சாங்­கத்தின் வெளி­நாட்டு விவ­கா­ரங்­களை நிர்­வ­கிப்­ப­தாகும்.எனது நினை­வுக்­கெட்­டிய வரை பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தியின் நேரடித் தலை­யீ­டுகள் இல்­லாமல் நிர்­வா­கத்­தினை கொண்டு நடாத்­திய முதல் வெளி­நாட்­ட­மைச்­ச­ராக அவர் இருந்தார். முதலில் பாது­காப்பு மற்றும் வெளி­நாட்டு அலு­வல்கள் இரண்டும் ஒரே நிர்­வா­கத்தின் கீழ் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதி ஜய­வர்­தனா அவர்­களால் அப் பணி­களை சமா­ளிக்க முடி­யாத நிலையில் கொழும்பின் வெளி­யு­றவுக் கொள்கை வகுத்தல் தொடர்­பான பணிகள் அனைத்தும் தர­மி­றக்­கப்­பட்­ட­தாக பர­வ­லான கருத்து நில­வி­யது. ஆனால்“ ஷாஹுல் அவை அனைத்தும் தவ­றா­னவை “ என நிரூ­பித்தார் என ஏனஸ்ட் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­களின் ஓய்­வ­றையில் ஒரு பகு­தியில் ஹமீத் ஒரு நீதி­மன்­றத்தை வைத்­தி­ருப்­பதைப் போலவே காட்­சி­ய­ளித்­தது. அவர் சுருட்டுப் பிடிப்­பதை பழக்­க­மாக கொண்­டி­ருந்தார். ஆனாலும் அவை 1979 ஆம் ஆண்டு அணி­சேரா அமைப்பின் தலை­மைத்­து­வத்தை இலங்கை பிடெல் கஸ்­ரோ­விடம் கைய­ளிக்க முன் அடிக்­கடி அவர் சென்று வரும் கியூ­பாவின் தலை­ந­க­ர­மான ஹவா­னாவில் இருந்து பெற்றுக் கொண்ட மிகச் சிறந்த தர­மு­டைய சுருட்டு வகை­க­ளாக இருந்­தன.

பாரா­ளு­மன்­றத்­துக்குள், நம்­ப­க­மற்ற லலித் அத்­து­லத்­மு­தலி மற்றும் காமினி திசா­நா­யக்கா போன்­ற­வர்­க­ளோடு அணி­சே­ரா­மையை வழி­ந­டத்­து­வது அவ­ருக்கு பெரும் தலை­யி­டி­யாக இருந்­தது. ஜே.ஆரும் அவ்­வா­றான ஒரு­வ­ரா­கவே இருந்தார். என்­றாலும் அத்­த­ரு­ணங்­களை ஹமீத் அவ­ருக்­கே­யு­ரிய பொறு­மை­யாலும் விடா­மு­யற்­சி­யாலும் பின்­ன­டை­யாமல் தொடர்ச்­சி­யாகக் கொண்டு நடத்­தினார்.

வெளி­நாட்­ட­மைச்சர் என்ற வகையில் அவர் அடைந்த மகிழ்ச்­சி­யான தருணம் தான், ஹவானா உச்சி மாநாட்டின் போது ஜே.ஆர் ஜய­வர்­தன அவர்கள் பிடல் கஸ்ட்­ரோ­விடம் “ஹமீதின் முயற்­சியால் தான் மாசற்ற விதத்­திலும் மறுக்க முடி­யா­த­வாறும் இலங்கை அர­சுக்கு கியு­பா­விடம் அணி­சே­ரா­மையின் தலை­மைத்­து­வத்தை ஒப்­ப­டைக்க முடிந்­தது” என்று கூறிய தரு­ண­மாகும்.

இது ஹமீத் அவர்கள் வெளி­யு­றவு அமைச்சர் பத­வியை நீண்ட நாட்­க­ளுக்கு வகிக்க முடி­யாமல் போகும் என்று அவ­ரது சொந்த கட்­சிக்­குள்­ளேயே காணப்­பட்ட யூகங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தாக அமைந்­தது. “ உண்மை என்­ன­வென்றால் ஒரு சிலர் அறிந்­தி­ருந்­தது போலவே ஹமீ­துக்கு சர்­வ­தேச உற­வு­களில் ஓர் சிறப்­பான புரிந்­து­ணர்வு இருப்­ப­தாக ஜே.ஆர். ஜய­வர்த்­த­னாவும் உணர்ந்­தி­ருந்தார். அவ­ருடன் பணி­பு­ரியும் வாய்ப்பைப் பெற்­றி­ருந்­த­வர்­களும் இதைப் புரிந்து கொண்­டி­ருந்­தனர். அவ­ரிடம் சில தவ­றுகள் இருந்­தன. தவ­றுகள் யாரிடம் தான் இல்லை” என்று ஏனஸ்ட் கூறினார்.

“அவர் எம்­மத்­தியில் இப்­போது இன்­மையால் அவரை இப்­போது விமர்­சிப்­ப­வர்­க­ளோடு நானும் ஒரு­வ­னாக சேர்ந்து கொள்ள விரும்­ப­வில்லை. மாறாக அவ­ருடன் பணி­யாற்­றிய எங்­க­ளதும், அவ­ரது வேலை­களில் கவனம் செலுத்­திய ஏனை­யோ­ரி­னதும் பார்­வையில் அவர் பல துறை­களில் சிறந்து விளங்­கினார் என்­ப­தையே நினை­வூட்ட விரும்­பு­கிறேன்“
முக்­கி­ய­மாக அவர் ஆங்­கிலம், சிங்­களம் மற்றும் தமிழ் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சி­யு­டை­ய­வ­ராக இருந்தார். இது அவ­ரது சகாக்­க­ளி­டையே அவ­ருக்கு சிறப்­பான இடத்தை பெற்றுக் கொடுத்­தது. அடுத்­தது அவ­ருக்­கி­ருந்த அற்­பு­த­மான நினை­வாற்­ற­லாகும்.
முக்­கி­ய­மாக ஆவண வரைவு ஒன்­றுக்­கான அமர்வின் போது சரி­யான தரு­ணத்தில் இடை­ந­டுவில் கூட அது தொடர்­பாக அவர் மன­தி­லி­ருக்கும் ஒரு வார்த்­தை­யையோ சொற்­றொ­ட­ரையோ அல்­லது ஒரு பொதுக் கொள்கை அறிக்­கை­யொன்றில் அதற்­கான பொரு­ளையும் ஆழத்­தையும் பெறக்­கூ­டிய முக்­கி­ய­மான உசாத் துணை ஒன்­றையோ துல்­லி­ய­மாகப் பெறக் கூடி­ய­தாக இருந்­தது.

இலங்கை -இந்­திய உற­வா­னது இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்­கையின் ஒரு இன்­றி­ய­மை­யாத கூறு என்­பதில் அவரின் சகாக்­க­ளுக்கு இல்­லாத உறுதி அவ­ருக்கு இருந்­தது என ஏனஸ்ட’ குறிப்­பிட்டார்.

இன்­னு­மொரு விட­யத்­தையும் முக்­கி­ய­மாக கூற வேண்டும். அது ஒரு தனிப்­பட்ட விட­ய­மாகும். அவர் பரந்த விளக்­கங்­க­ளுடன் கூடிய ஒரு சிறந்த பேச்­சாளர். நம்மில் பெரும்­பா­லானோர் தயா­ராக இல்­லாத ஒரு சிக்­க­லான பிரச்­சினை தொடர்­பாக இடம்­பெறும் விவா­தங்­களில் கூட தலை­யிட்டு சிறப்­பாக விவா­திக்க அவரால் முடியும். “ இதோ நான் காத்­தி­ருந்த தளர்­வான பந்து “ என்று அவர் தனக்குத் தானே கூறிக் கொள்வார் என ஏனஸ்ட’ குறிப்­பிட்டார்.

நகைச்­சுவை கலந்த சுய விமர்­ச­னத்தை விரும்பும் ஹமீத் தன்னை தாக்கி வரை­யப்­பட்ட கேலிச்­சித்­தி­ரங்­களின் தொகுப்­பொன்றை வெளி­யிட நிதி­யு­தவி அளித்தார். அதில், ஒரு பெரிய பூகோ­ளத்­திற்கு முன்னால் உட்­கார்ந்­த­வாறு “ தேடிப் பார்ப்போம், வேறு எந்­தெந்த நாடு­க­ளுக்கு நான் இன்னும் விஜயம் செய்­ய­வில்லை என்று “ என்ற வாச­கத்­தோடு அமைந்த குறித்த ஒரு கேலிச்­சித்­தி­ரத்தை அவர் வெகு­வாக விரும்­பினார்.
அத்­தோடு அவ­ரது முத­லெ­ழுத்­துக்­க­ளான ACS என்­பது ஆங்­கி­லத்தில் “எல்லா நாடு­க­ளையும் பார்த்து விட்டேன்” (All Countries Seen) என்­ப­தா­கவே உச்­ச­ரிக்­கப்­பட்­டது.
அத்­தோடு அவர் விரும்­பிய மற்­று­மொரு கேலிச்­சித்­திரம் தான், 1978 இல் மிகவும் சோர்­வ­டைந்த நிலையில் கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லை­யத்­துக்கு வந்த ஹமீத் ஒரு வழிப்­போக்­க­னிடம் மிகவும் அப்­பா­வித்­த­ன­மாக இவ்­வாறு கேட்­கிறார்.

“அன்­பா­ன­வரேs , ஹாரிஸ்­பத்­து­வைக்கு போகும் வழியை காட்ட முடி­யுமா?”
அவ­ரது சொந்த ஊரான அக்­கு­ரணை அமைந்­தி­ருந்த அவ­ரு­டைய தேர்தல் தொகுதி பெரும்­பான்மை சிங்­கள பௌத்­தர்­களைக் கொண்ட ஒரு தொகு­தி­யாகும். பாரா­ளு­மன்­றத்­திற்கு நீண்ட காலமாக அவர் தொடர்ந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதைப் பார்த்தால் அது அவரது வாக்காளரிடையே அவருக்கிருந்த அரசியல் ரீதியான உறவுக்கு கிடைத்த நன்மதிப்பாகவே கொள்ள வேண்டும்.

இக் கேலிச்சித்திரங்கள் 1970 களில் இலங்கையின் புகழ்பெற்ற டப்ளியூ . ஆர். விஜேசோம , ஜிப்ரி யூனூஸ், மார்க் கேரியன், அமிதா அபேசேகர உள்ளிட்ட மற்றும் சில கலைஞர்களின் கேலிச் சித்திரங்களில் இருந்து பெறப்பட்டவையாகும். தன்னைத் தானே பார்த்து சிரிக்கக் கூடிய தன்மை என்பது ஒரு பெரும் அருட்கொடையாகும் என்று “ “திரு.வெளிநாட்டு அமைச்சர்” (Mr Foreign Minister) என்ற நூலுக்கான அறிமுக உரையில் விஜேசோம அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அவர் சிரித்தார் எனினும் அது கூட அவருக்கு மறைமுக நன்மையாகவே அமைந்தது என்று நான் நம்புகிறேன்.

ஓஸ்கார் வைல்ட் என்பவர் ஒருமுறை இரண்டு வகையான சித்திரவதைளுக்கிடையேயான வேறுபாட்டை சுட்டிக் காட்டினார். அது, உடல் வதையும் ஊடக வதையும் ஆகும்.

எந்த ஒரு அரசியல்வாதியிடம் கேட்டாலும் சொல்வார்கள் அவர் கொழும்பிலுள்ள செய்தி ஆசிரியர் அலுவலகங்களிலும் செய்திப் பீடங்களிலுமுள்ள அதிகம் சித்திரவதை செய்யும் அறையையே தேர்ந்தெடுப்பார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.