ஆப்கானிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்

0 400

ஆப்­கா­னிஸ்­தானில் தலி­பான்­க­ளுக்கு எதி­ராக கடந்த 20 ஆண்­டு­க­ளாக செய்த போர் முடி­வுக்கு வந்­து­விட்­ட­தாக அமெ­ரிக்கா அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ராணு­வத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் புறப்­பட்டு சென்­றது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்­டம்பர் 11-ம் திகதி அமெ­ரிக்­காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபு­ரத்தை அல்­கொய்தா தீவி­ர­வா­திகள் தகர்த்­தனர். அந்தத் தாக்­கு­த­லுக்கு கார­ண­மான அல்­கொய்தா தீவி­ர­வா­தி­களை அழிக்க அமெ­ரிக்க உறு­தி­பூண்­டது. அல் கொய்தா தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆப்­கா­னிஸ்­தானில் அடைக்­கலம் கொடுத்­தி­ருந்த தலி­பான்கள் மீது போர் தொடுத்து, அவர்­களின் ஆட்­சியை அமெ­ரிக்க படைகள் அகற்­றின. ஜன­நா­யக ரீதி­யி­லான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் நிறு­வப்­பட்­டன

ஆனால் தோல்வி கண்ட தலி­பான்கள் மெல்ல தங்­களை பலப்­ப­டுத்திக் கொண்­டனர். போர் ஆண்­டுக் கணக்கில் நீண்­டது. தலி­பான்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்­ப­டுத்­தினர். இரு­த­ரப்­பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்­டு­களில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர், அப்­பாவி மக்கள் லட்­சக்­க­ணக்கில் கொல்­லப்­பட்­டனர். இறு­தி­வரை அமெ­ரிக்கா, நேட்டோ படை­க­ளுக்கு முழு­மை­யான வெற்றி கிடைக்­க­வில்லை.

இதை­ய­டுத்து, ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் படிப்­ப­டி­யாக விலக்­கப்­படும் என்று அமெ­ரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறி­வித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதி­ப­ரா­க­வந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-க்குள் அமெ­ரிக்கப் படைகள் முழு­மை­யாக ஆப்­க­ானி­லி­ருந்து வெளி­யேறும் என்று அறி­வித்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் முழு­மை­யாக வெளிே­யறத் தொடங்­கி­ய­தை­ய­டுத்து, தலி­பான்கள், பல்­வேறு மாகா­ணங்­களைக் கைப்­பற்றி, முழு­மை­யாக தங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்­ளனர். கடந்த 15ஆம் திகதி ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளி­யே­றி­யதும் தலி­பான்கள் கட்­டுப்­பாட்டில் ஆப்கான் முழு­மை­யாக வந்­தது.

இந்­நி­லையில் ஆப்­கா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ஆம் திக­தி­யுடன் வெளி­யேற வேண்டும் என்­பதால், அந்தக் காலக்­கெடு முடி­வ­தற்கு முன்பே, அமெ­ரிக்க இராணு­வத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமா­ன­நி­லை­யத்­தி­லி­ருந்து  வெளிே­ய­றி­யது.

இது­கு­றித்து அமெ­ரிக்க மத்­தி­யப்­ப­டையின் காமாண்டர் ஜெனரல் ஃபிராங் மெக்­கென்ஸி நிரு­பர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:

“ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் முழு­மை­யாக வெளி­யே­றி­விட்­டன என்­பதை இந்த நேரத்தில் அறி­விக்­கிறேன். இதன் மூலம் அமெ­ரிக்க மக்கள், ஆப்கான் மக்கள், பிற­நாட்­டவர் என அனை­வ­ரையும் வெளி­யேற்றும் திட்­டமும் நிறை­வ­டைந்­தது, 20 ஆண்­டு­காலப் போரும் முடிந்­தது. அமெ­ரிக்க அரசைச் சேர்ந்த ஒவ்­வொ­ரு­வரும் ஆப்­கா­னி­லி­ருந்து முழு­மை­யாக வெளி­யே­றி­விட்­டனர்.

இறுதி அமெரிக்க வீரர் வெளியேறிய போது…

கடை­சி­யாகப் புறப்­பட்ட விமா­னத்தில் அமெ­ரிக்க மக்கள் யாரு­மில்லை. ராணு­வத்­தினர் அனை­வரும் வெளி­யே­றி­விட்­டனர். தகு­தி­யான ஆப்­கா­னிஸ்தான் மக்கள், அமெ­ரிக்­கர்கள் யாரேனும் இருந்தால், இன்று வரை வெளி­யேற வாய்ப்பு வழங்­கப்­படும். 20 ஆண்­டு­கால போர் சில மணி­நே­ரங்­களில் முடி­வுக்­கு­வர உள்­ளது.

இது சாதா­ரண போர் அல்ல, இந்த போரில் 2,461 அமெ­ரிக்க ராணுவ வீரர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர், 20ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வீரர்கள் காய­ம­டைந்­தனர். கடந்த வாரம் ஐஎஸ் தீவி­ர­வா­திகள் தாக்­கு­தலில் 13 அமெ­ரிக்க வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். அவர்­களின் தியா­கத்தை நினை­வு­கூர்­கிறோம்.” எனத் தெரி­வித்­துள்­ளனர்.

ஆப்­கா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­றி­யதை தலி­பான்கள் வர­வேற்­றுள்­ளனர். தலி­பான்கள் பெர்­சிய மொழியில் ட்விட்­டரில் பதி­விட்ட செய்­தியில் “அனைத்து முஜா­கி­தீன்கள், வீரர்கள், நம்­மு­டைய தேச மக்­க­ளுக்கு வாழ்த்­துகள். இன்று, அனைத்து வெளி­நாட்­ட­வர்­களும் நம் தேசத்­தை­விட்டு, தியாக பூமி­யை­விட்டு வெளி­யே­றி­விட்­டனர் ” எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தலி­பான்கள் கொண்­டாட்டம்

நமது வெற்றி அந்­நியப் படை­க­ளுக்கு ஒரு பாடம் என்று விமா­ன­நி­லைய ஓடு­த­ளத்தில் தலிபான் செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்தார்.

ஆப்­கா­னிஸ்தான் கடந்த 15 ஆம் திக­தி­யன்று முழு­மை­யாக தலி­பான்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தது. அதன்­பின்னர் அங்­கி­ருந்து ஒரு லட்­சத்­துக்கும் மேலானோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். ஆகஸ்ட் 31 ஆம் திக­தியை அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­று­வ­தற்­கான கடைசி நாள் என்று தலி­பான்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில், ஆப்­கானில் இருந்து அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­றி­விட்­டன. இதனைக் கொண்­டாடும் விதத்தில் தலி­பான்கள் காபூல் விமா­ன­நி­லை­யத்­துக்குச் சென்­றனர். விமான நிலை­யத்தின் ஓடு­த­ளத்தில் துப்­பாக்­கி­யுடன் குவிந்த தலி­பான்கள் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்­டா­டினர்.

பின்னர் பேசிய தலிபான் செய்தித் தொடர்­பாளர் ஜபி­புல்லா முஜாகீத், “இஸ்­லா­மிய ஆப்கான் அமீ­ரகம் இனி சுதந்­தி­ர­மான நாடு. இதில் எவ்­வித சந்­தே­கமும் கொள்ள வேண்டாம். அமெ­ரிக்கா தோற்­று­விட்­டது. இந்­நி­லையில், எங்கள் நாட்டின் சார்­பாக நாங்கள் உலகின் பிற நாடு­க­ளுடன் நல்­லு­றவை பேண விரும்­பு­கிறோம். ஆப்கான் மக்­களின் சுதந்­திரம் போற்­றப்­படும். இஸ்­லா­மிய சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு ஆட்சி நடை­பெறும். நமது வெற்றி அந்­நியப் படை­க­ளுக்கு ஒரு பாடம். தலிபான் படைகள் கண்­ணி­ய­மாக நடந்து கொள்ளும்” என்று தெரி­வித்தார்.

முன்­ன­தாக, ஆப்கான் நேரப்­படி நள்­ளி­ர­வுக்கு முன்­ன­தா­கவே அமெ­ரிக்கப் படைகள் முழு­மை­யாக வெளி­யே­றி­விட்­ட­தாக  அமெ­ரிக்க மத்­திய கமாண்ட் தலைவர் பிராங் மெக்­கன்சி தெரி­வித்தார். நாங்கள் அங்­கி­ருந்து வெளி­யேற விருப்­பப்­பட்ட அனை­வ­ரையும் வெளியே அழைத்­து­வர முடி­ய­வில்லை. ஆனால், நாங்கள் அங்கே இருந்­தி­ருந்­தாலும் கூட விரும்­பி­ய­வர்­களை வெளியே அழைத்­து­வர முடிந்­தி­ருக்­காது என்று கூறினார்.

விமான நிலையம் இயங்­குமா?

காபூல் சர்­வ­தேச விமான நிலை­யத்தை தலி­பான்கள் தங்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­து­விட்ட நிலையில், அனை­வரின் பார்­வையும் விமான நிலையம் இனி இயங்­குமா என்ற கோணத்தில் திரும்­பி­யுள்­ளது. ஆப்­கானில் இன்னும் சில வெளி­நாட்­டவர் சிக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக குறைந்­தது 100 பேர் கொண்ட அமெ­ரிக்­கர்­களும் உள்­ளனர். அவர்­களை வெளி­யேற்ற முடி­யுமா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

இந்­நி­லையில் ஐ.நா. பாது­காப்பு கவுன்சில் குழு­வா­னது திங்­கட்­கி­ழமை தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­றி­யது. அந்தத் தீர்­மா­னத்தில் வரும் நாட்­களில் ஆப்­கானில் இருந்து மக்கள் வெளி­யேற சுதந்­திரம் அளிக்க வேண்டும் என்று தலி­பான்­க­ளுக்குக் கோரப்­பட்­டது. அதுபோல் ஐ.நா. மற்றும் பிற தொண்டு அமைப்­பு­க­ளுக்கு ஆப்­கா­னிஸ்தான் அனு­மதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்­பட்­டுள்­ளது. இனி காபூல் விமான நிலை­யத்தை இயக்­கு­வது யார் என்ற பேச்­சு­வார்த்­தைகள் நடந்து வரு­கின்­றன.

துருக்கி அரசு விமான போக்­கு­வ­ரத்து சேவையைக் கையாண்டால் தாங்கள் பாது­காப்பு விட­யங்­களைக் கண்­கா­ணித்துக் கொள்­வ­தாக தலி­பான்கள் தெரி­வித்­துள்­ளனர். ஆனால் துருக்கி அதிபர் எர்­டோகன் இது­வரை இதற்கு ஒப்­புதல் தெரி­விக்­க­வில்லை.

விமா­னங்­களை செய­லி­ழக்கச் செய்த அமெ­ரிக்கப் படைகள்

காபூல் விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த தங்­க­ளுக்குச் சொந்­த­மான விமா­னங்கள், ஆயுதம் தாங்­கிய வாக­னங்கள், ஏவு­கணை அழிப்பு அமைப்­புகள் என மொத்தம் 73 வாக­னங்­களை அமெ­ரிக்கப் படைகள் இனி பயன்­ப­டுத்­தவே முடி­யா­த­படி செய­லி­ழக்கச் செய்­துள்­ளது.

இது குறித்து அமெ­ரிக்க மத்­திய படை­களின் தலைவர் ஜெனரல் கென்னத் மெக்­கன்சி கூறு­கையில், “ஹமீது கர்சாய் விமான நிலை­யத்தில் விமா­னங்கள், போர் வாக­னங்கள் உட்­பட 73 வாக­னங்­களை செய­லி­ழக்கச் செய்­துள்ளோம். அந்த விமா­னங்கள் இனி பறக்­கவே செய்­யாது. அதேபோல் அங்­குள்ள போர் தள­வா­டங்­களை வேறு எவ­ராலும் இனி பயன்­ப­டுத்­தவே முடி­யாது.

ஒவ்­வொரு வாக­னத்தின் மதிப்பும் 1 மில்­லியன் டொலர். இவற்றில் 27 ஹம்வீ (Humvee) ஏவு­கணை இடை­ம­றிப்பு வாக­னங்­களும் அடங்கும்.

அது­மட்­டு­மல்­லாமல் C-RAM system எனப்­படும் ராக்­கெட்­டுகள், பீரங்கிக் குண்­டு­களை இடை­ம­றிக்கும் சக்தி கொண்ட வாக­னத்­தையும் அங்­கேயே விட்­டு­வந்­துள்­ளது. ஆனால், சிரேம் சிஸ்டம் செய­லி­ழக்கச் செய்­யப்­பட்­டு­விட்­டது. நாங்கள் வெளி­யேறும் கடைசி நிமிடம் வரை அந்த அமைப்பை இயங்கும் நிலையில் வைத்­தி­ருந்தோம்” என்றார்.

இந்த வாக­னத்தைக் கொண்­டுதான் அமெ­ரிக்க ஐஎஸ்­ஐஎஸ் கோரோசன் பயங்­க­ர­வா­திகள் அனுப்­பிய ராக்­கெட்டை அழித்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 ஐ.நா. பாது­காப்பு கவுன்சில் தீர்­மானம்

எந்த நாட்­டுக்கு எதி­ரா­கவும் ஆப்கான் மண்ணை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்றும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு புக­லிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாது­காப்பு கவுன்­சிலில் (யுஎன்­எஸ்சி) தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. பாது­காப்பு கவுன்­சிலின் ஆகஸ்ட் மாதத்­துக்­கான தலைமை பொறுப்பை இந்­தியா ஏற்றுக் கொண்­டது. இதன்­படி இந்­திய தலை­மையில் ஆப்­கா­னிஸ்தான் விவ­காரம் குறித்து ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது.

அப்­போது பேசிய இந்­திய வெளி­யு­றவுத் துறை செய­லாளர் ஹர்ஷ் வர்தன் சிருங்லா, “எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்­குதல் நடத்­தவும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு புக­லிடம் கொடுக்­கவும் ஆப்­கா­னிஸ்தான் மண்ணை யாரும்­ப­யன்­ப­டுத்தக் கூடாது” என்று பேசினார்.

இதை­ய­டுத்து நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் ஆப்­கானில் இருந்து வெளி­யேற விரும்­புவோர் செல்ல வழி ஏற்­ப­டுத்­தப்­படும் என்று தலி­பான்கள்  தெரி­வித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஆப்­கானில் உள்ள பெண்கள், குழந்­தைகள், சிறு­பான்­மை­யினர் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரின் மனித உரி­மையை பாது­காக்க வேண்டும் என்றும் தேவை­யான உத­வி­களை வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்த தீர்­மானம் மீதான வாக்­கெ­டுப்பில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கலந்து கொள்­ள­வில்லை. மீத­முள்ள 13 நாடு­களின் ஆத­ர­வு­க­ளுடன் இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அமெ­ரிக்­காவால் ஆப்­கானில் சோகங்­களும் இழப்­பு­களும் மட்­டுமே: புதின்

அமெ­ரிக்­காவின் 20 வருடப் போர் நிறுத்தப் பிர­சா­ரத்தால் ஆப்­கா­னிஸ்­தானில் சோகங்­களும், இழப்­பு­களும் மட்­டுமே ஏற்­பட்­டுள்­ள­தாக ரஷ்ய அதிபர் புதின் தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து நிகழ்ச்சி ஒன்றில் புதின் பேசும்­போது, “20 ஆண்­டு­கால அமெ­ரிக்­காவின் போர் நிறுத்தப் பிரச்­சா­ரத்தால் ஆப்­கா­னிஸ்­தானில் சோகங்­களும், இழப்­பு­களும் மட்­டுமே ஏற்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்­கா­வுக்கு எந்த அளவு இழப்பு ஏற்­பட்­டுள்­ளதோ அதை­விட அதி­க­மாக ஆப்கான் மக்­க­ளுக்கு இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. வெளிப்­பு­றத்தில் இருந்து வந்து ஒரு நாட்டில் அதி­கா­ரத்தைச் செலுத்­து­வது முடி­யா­தது” என்றார்.

ஆப்­கானில் அமெ­ரிக்­காவின் அணு­கு­முறை குறித்து புதின் தொடர்ந்து விமர்­சித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

 ஒரு கோடி குழந்­தை­க­ளுக்கு உட­னடி மனி­த­நேய உதவி தேவை

ஆப்­கா­னிஸ்­தானில் ஒரு கோடிக்கும் மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு உட­ன­டி­யாக மனி­த­நேய அடிப்­ப­டையில் உதவி தேவைப்­ப­டு­கி­றது என்று யுனிசெஃப் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டில் மட்டும் ஆப்­கா­னிஸ்­தானில் 550 குழந்­தைகள் துப்­பாக்கிச் சூட்­டிலும், குண்­டு­வீச்­சிலும் பலி­யா­கி­யுள்­ளனர். 1400க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் உடல் உறுப்­பு­களை இழந்து படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

ஆப்கான் மக்கள் தங்கள் குழந்­தை­க­ளுடன் வேறு நாட்­டுக்கு அக­தி­க­ளாகச் சென்று வரு­கின்­றனர். போர், துப்­பாக்கிச் சண்டை, வெடி­குண்டு வீச்சு எனத் தொடர்ந்து பதற்­றத்­து­டனும், அமை­தி­யற்ற சூழலும் நில­வு­வதால் குழந்­தை­க­ளுக்குக் கிடைக்க வேண்­டிய அடிப்­படை சுகா­தார உரி­மைகள் முழு­மை­யாகக் கிடைக்­க­வில்லை. ஆப்­கா­னிஸ்­தானில் மட்டும் ஒரு கோடி குழந்­தை­க­ளுக்கு உட­ன­டி­யாக மனி­த­நேய உத­விகள் தேவை என்று யுனிசெஃப் தெரி­வித்­துள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான யுனிசெஃப் பிர­தி­நிதி ஹெர்வ் லுடோவிக் டி கூறி­ய­தா­வது: ”ஆப்­கா­னிஸ்­தானில் தற்­போதும் நிலவும் சிக்­க­லுக்குக் கார­ண­மா­ன­வர்கள் மிகப்­பெ­ரிய விலை கொடுத்து வரு­கி­றார்கள். குழந்­தை­க­ளுக்­கான உரிமை ஒட்­டு­மொத்­த­மாக மீறப்­ப­டு­கி­றது. குறிப்­பாக குழந்­தைகள் தலி­பான்கள் இராணு­வத்தில் வலுக்­கட்­டா­ய­மாகச் சேர்க்­கப்­ப­டு­கி­றார்கள்.

இந்த ஆண்டில் மட்டும் 550 குழந்­தைகள் துப்­பாக்கிச் சண்­டையில் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 1400க்கும் மேற்­பட்ட குழந்­தைகள், கை, கால்­களை இழந்து மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்தக் குழப்பம், சிக்கல், சண்டை ஆகி­ய­வற்றால், குழந்­தை­க­ளுக்குக் குடிப்­ப­தற்குக் கூட சுத்­த­மான நீர் இல்லை, கடும் வறட்சி நில­வு­கி­றது. குழந்­தைகள் உயிர் காக்கும் தடுப்­பூசி செலுத்­தப்­ப­ட­வில்லை. குறிப்­பாக போலியோ தடுப்­பூசி செலுத்­தப்­ப­ட­வில்லை. ஆப்கானில் வசிக்கும் குழந்தைகள் தங்களுக்கான அடிப்படை சுகாதார உரிமையும் பாதுகாக்கப்பட்ட குழந்தைப் பருவத்தையும் இழக்கின்றனர். சத்தான உணவுகள் இன்றி, பலவீனமான உடலுடன் மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்தபின் முதல் முறையாக உலக சுகாதார அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. 12.5 மெட்ரிக் டன் மருந்துகள் மசார் ஐ ஷெரீப் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.

2 இலட்சம் மக்­களின் அடிப்­படை சுகா­தாரத் தேவைக்­கான மருந்­துகள், 350 பேருக்கு அறுவை சிகிச்சை செய்­வ­தற்­கான மருந்­துகள், ஆபத்­தான நிலையில் இருக்கும் 6,500 பேருக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் மருந்­துகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. இந்தப் பொருட்கள் உட­ன­டி­யாக ஆப்­கானில் உள்ள 29 மாகா­ணங்­க­ளுக்கும், 40க்கும் மேற்­பட்ட சுகா­தார மையங்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட உள்­ளன.

ஆப்­கனில் இன்னும் ஒரு கோடிக்கும் மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு உட­ன­டி­யாக அடிப்­படை சுகா­தார உதவி தேவைப்­ப­டு­கி­றது. இது மிகவும் முக்­கி­ய­மான தருணம் என்­பதால், உலக நாடுகள் தங்கள் கவ­னத்தை ஆப்கான் மக்கள் பக்­கத்­தி­லி­ருந்து வேறு­பக்கம் திருப்­பி­விடக் கூடாது”. என ஹெர்வ் லுடோவிக் டி தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.