சமூகப்பற்றுமிக்க ஊடகவியலாளர் எம்.எல்.லாபீர்

0 458

– யாழ் அஸீம் –

“பொங்கு கலை கடலில் மூழ்கி முத்துக் குளித்தீர்
பூபாளம் கீழ்த்திசையும் வெளுக்க உமது
சங்கொலியில் கேட்குதம்மா ! அகதி வாழ்வில்
சருகாக அலைந்தாலும் துயரம் மாறி
திங்களினைக் கண்ட அல்லி போலச் சிரித்து
தெளிந்த நீரைத் தேடும் மான் கூட்டமானீர்!
தங்கத்தாய் மண்ணுமது நினைவுத் தடத்தில்
தொடர்ந்து வீச்சில் பயணிக்க நீவிர் வாழ்க!..

கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் நிகழ்ச்சித் திட்­டத்­துக்கு அமை­வாக, யாழ்ப்­பாணப் பிர­தே­சத்தின் கலை மேம்­பாட்­டுக்கு அரும்­ப­ணி­யாற்­றிய மறைந்த கலைஞர், எழுத்­தாளர், ஊட­க­வி­ய­லாளர் மீரா லெப்பை லாபீர் அவர்­களின் கலைச்­சே­வையைப் பாராட்டி “கலைக்­கு­ரிசில்” விருது வழங்கி கௌர­வித்து வழங்­கிய வாழ்த்துப் பாமா­லையின் ஒரு பகு­தியே மேலுள்ள மகுட வாச­கங்­க­ளாகும்.
கடந்த 23.08. 2021 அன்று எம்மை விட்டும் பிரிந்த எழுத்­தாளர், ஊட­க­வி­ய­லாளர், சமூக சேவை­யாளர், நல்­லி­ணக்கச் செயற்­பாட்­டாளர், கலா­பூ­ஷணம் மீரா லெப்பை லாபீர் அவர்­களின் இழப்பு ஈடு­செய்ய முடி­யா­த­தாகும். கலைப் பணி­யோடு சமூகப் பணி­யையும் இரு கண்­க­ளாக போற்றிச் சேவை­யாற்­றிய ஒரு நல்ல மனி­தனை யாழ் மண் இழந்து நிற்­கி­றது.

யாழ்ப்­பாணம் ஐந்து சந்­தியில் அமைந்­தி­ருந்த பிலவ்ஸ் ஹோட்­ட­ளையும், பிளவ்ஸ் கிரீம் ஹவு­ஸையும் அறி­யாத யாழ் மக்கள் எவரும் இருக்க மாட்­டார்கள். பிளவ்ஸ் ஹோட்­டளை லாபிர் அவர்­க­ளு­டைய தந்தை அல்ஹாஜ் மீரா­லெப்பை அவர்­களும், பிளவ்ஸ் கிறீம் ஹவுஸை லாபிர் அவர்­களும் சிறப்­பாக நடாத்தி வந்­தனர். இதன் கார­ண­மாக எழுத்­தாளர் லாபிர் அவர்­களை பிளவ்ஸ் லாபிர் என்றே யாழ் மக்கள் அன்­புடன் அழைத்து வந்­தனர்.

அல்ஹாஜ் ஸாஹிப் மரைக்கார், மீரா லெப்பை ஆயிஷா தம்­ப­தி­களின் தவப் புதல்­வ­னாக 01. 04.1949 இல் பிறந்த லாபீர், தனது ஆரம்பக் கல்­வியை யாழ் மஸ்ற உத்தீன் பாட­சா­லை­யிலும், பின்னர் க.பொ.த உயர்­தரம் வரை வைத்­தீஸ்­வரக் கல்­லூ­ரி­யிலும், உயர் வணிகக் கல்­வியை கொக்­குவில் தொழில் நுட்பக் கல்­லூ­ரி­யிலும் கற்றார்.

லாபீர் வர்த்­தகத் துறையில் ஈடு­பட்­டாலும், இளம் வய­தி­லி­ருந்தே கலைத்­து­றை­யிலும் நாட்டம் கொண்­ட­வ­ராக செயற்­பட்டார். 1972ஆம் ஆண்டு “ஒளி” என்னும் சஞ்­சி­கையை வெளி­யிட்டு நீண்ட கால­மாக நடாத்தி வந்தார். கலை நிகழ்ச்­சிகள், நாட­கங்­களின் அமைப்­பா­ள­ரா­கவும், செயற்­பாட்டு கலை இலக்­கியத் துறையில் நீண்ட காலம் சேவை­யாற்­றினார். சமூகப் பற்­றுடன் சமூக முன்­னேற்­றத்­தையும் இலக்­காகக் கொண்டு செயற்­பட்ட லாபீர் அவர்கள் கொழும்பில் இருந்து வெளி­வந்த “பாமிஸ்” சஞ்­சி­கையை பொது­மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்தி விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்த முயன்றார். இதன் கார­ண­மாக அவர் பல பிரச்­சி­னை­க­ளையும் எதிர்­நோக்க நேரிட்­டது.

1990ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் வட மாகா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்ட வேளை மாவ­னல்­லைக்கு இடம்­பெ­யர்ந்து பல வரு­டங்கள் அங்கு வாழ்ந்து வந்தார். மாவ­னல்லை சாஹிராக் கல்­லூரி, ஆயிஷா சித்­திக்கா பது­ரியாக் கல்­லூரி நிகழ்­வு­க­ளையும் அங்­குள்ள கலை நிகழ்ச்­சி­க­ளையும் பத்­தி­ரி­கை­க­ளுக்கு அனுப்பி இடம்­பெ­யர்ந்த வேளை­யிலும் ஊடகப் பணி புரிந்தார்.

வட­மா­காண முஸ்­லிம்கள் மீண்டும் தம் சொந்த மண்­ணுக்கு மீள­கு­டி­யேறக் கூடிய சூழ்­நிலை ஏற்­பட்­ட­போது, ஆரம்ப கட்­டத்­தி­லேயே தாயக மண்­ணுக்கு மீண்டும் குடி­யே­றினார். லாபிர் அவா;கள் சிறந்­த­தொரு ஊட­க­வி­ய­லாளர், எழுத்­தாளர் என்­ப­தையும் தாண்டி சிறந்த முறையில் உப­ச­ரிக்கும் பண்­பினைக் கொண்­டவர். செய்தி சேக­ரிப்­புக்­கா­கவும் கலை நிகழ்­வு­க­ளுக்­கா­கவும் யாழ் செல்லும் எழுத்­தா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், கலை­ஞர்­களில் லாபிர் அவர்­களின் உத­வி­யையும் ஒத்­து­ழைப்­பையும் பெறா­த­வர்கள் குறைவு எனக் கூறலாம். அவர்கள் யாரையும் முக்­கி­ய­மான இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­வ­துடன் தேவை­யான தக­வல்­களைத் தொகுப்­ப­தற்குப் பொருத்­த­மான நபர்­களை அடை­யாளம் காட்டி உத­வு­வதை அவ­ரு­டைய முக்­கிய பணி­யாகக் கொண்­டி­ருந்தார்.

மேலும் லாபிர் அவர்கள் யாழ் மண்­ணி­லுள்ள இலக்­கியம் சார் அமைப்­பு­க­ளு­டனும் இனங்கள், மதங்­க­ளுக்­கான இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சர்­வோ­தயா இயக்கம் போன்ற அமைப்­பு­க­ளு­டனும் நல்­லு­றவை ஏற்­ப­டுத்தி அதற்­காக கடு­மை­யான உழைப்பை மேற்­கொண்டார். வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்ட பின் ஏற்­பட்ட கசப்­பு­ணர்வை மாற்றி தமிழ், முஸ்லிம் உறவை மீளக் கட்­டி­யெ­ழுப்­பி­யதில் லாபிர் அவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பு போற்­றத்­தக்­க­தாகும். அத்­துடன் அவ­ரு­டைய தந்­தையின் பெயரால் பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்­டேஷன் எனும் அமைப்பை உரு­வாக்கி பல சமூ­கப்­ப­ணி­களை ஆற்றி வந்தார். வறிய மாணவா;களுக்­கான நிதி­யு­தவி, வித­வை­க­ளுக்­கான நிதி­யு­தவி, இடர் காலங்­களில் உலர் உணவு வழங்­குதல், வைத்­திய முகாம்­களை ஏற்­பாடு செய்தல், உயர்­கல்­விக்­கான நிதி உதவி போன்ற பல சமூக நலத் திட்­டங்­களை நிறை­வேற்­று­வதில் முன்­னின்று உழைத்தார்.

யாழ் மானிப்பாய் வீதி முஹதீன் ஜும்மாப் பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலை­வ­ராக சேவை­யாற்­றி­ய­துடன், யாழ்/கிளி­நொச்சி முஸ்லிம் சம்­மே­ள­னத்தின் உப செய­லா­ள­ரா­கவும் செயற்­பட்டார். யாழ் ஒஸ்­மா­னியா கல்­லூ­ரியில் அஹ­திய்யா பாட­சா­லையை ஆரம்­பித்த ஸ்தாபர்­களில் ஒரு­வ­ராக இருப்­ப­துடன் அகில இலங்கை முஸ்லிம் வாலிப சம்­மே­ள­னத்தின் யாழ் மாவட்ட அமைப்­பா­ள­ரா­கவும் செயற்­பட்டு வந்­துள்ளார்.
விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே செய்­தி­யா­ள­ராகக் கட­மை­யாற்­றிய லாபிர் அவர்கள் இப்­பத்­தி­ரி­கை­யுடன் நெருக்­க­மான தொடர்பை கொண்­டி­ருந்தார். குறிப்­பாக யாழ். மண்ணில் விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் விற்­ப­னையை விஸ்­த­ரிப்­ப­திலும் புதிய வாச­கர்­களை உரு­வாக்­கு­வ­திலும் அவர் அதிக ஈடு­பாடு கொண்­டி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்தில் மீளக்­கு­டி­யேறி வாழும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தொடர்ந்தும் செய்­தி­க­ளாக வெளி­யி­டு­வதில் அவர் அக்­க­றை­யுடன் செயற்­பட்டார். மேலும் நவ­மணி, வீர­கே­சரி, தின­மு­ரசு, தமிழ் மிரர், எங்கள் தேசம் என்­ப­வற்றின் செய்­தி­யா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றிய லாபிர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்­பா­ள­ராக பல வரு­டங்கள் சேவை­யாற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அன்­னா­ரது கலை, இலக்­கியப் பணி­க­ளுக்­காக 2013ஆம் ஆண்டு கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தால் “கலா­பூ­ஷணம்” பட்டம் வழங்கி கௌர­விக்­கப்­பட்டார். தெலுங்கு காங்­கிரஸ் அமைப்பின் மூல­மாக “தேச­கீர்த்தி”, மலை­யக கலை கலா­சார சங்­கத்தால் “தேச­சக்தி”, அகில இன நல்­லு­றவு ஒன்­றி­யத்தால் “தேச­கீர்த்தி”, கண்டி இரத்­தின தீபம் அமைப்பால் “ஊடகச் சுடர்”, யாழ் கொட்­டடி சன­ச­மூக நிலை­யத்தால் “நிழல் படத் தாரகை” ஆகிய கௌரவ விரு­து­களைப் பெற்ற லாபிர் அவர்­க­ளுக்கு யாழ் கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தால் “கலைக்­கு­ரிசில்” விருது வழங்­கப்­பட்­டது. பட்டங்கள், விருதுகள் பல பெற்றப்போதும் ஆரவாரமின்றி அமைதியுடனும் தன்னடக்கத்துடனும் கருமமாற்றும் அவரது தன்மை காரணமாகவே லாபிர் அவர்கள் எம் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்.

லாபீர் அவர்களின் கலை, இலக்கிய, சமூகப் பணிகளுக்கு உற்ற துணையாகவிருந்த அவரது மனைவி ரலீனா மற்றும் பிள்ளைகளான ரவ்ஸானா, ராஜிதா, சன்ஹார் ஆகியோருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பொறுமையையும் மன உறுதியையும் வழங்குவானாக!

மேலும் அன்னாருடைய இலக்கிய சமூகப் பணிகளைப் பொருந்திக் கொள்வதுடன் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.