சஹ்ரான் கும்பல் பயங்கரவாத வலையமைப்பின் சிறு பகுதியினரே

0 409
  • விசாரணையில் தெளிவானதாக கூறுகின்றார் பொலிஸ் மா அதிபர்

  • 723 பேர் மொத்தமாக கைது

  • 311 பேர் தடுத்து வைப்பு

  • 46 பேருக்கு எதிராக 11 வழக்குகள் இதுவரை தாக்கல்

  • 365 மில்லியன் ரூபா பணம், சொத்துக்கள் அரசுடமை

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட கும்பலானது, மொத்த பயங்கரவாத வலையமைப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார். அத்துடன் மிக்க சூட்சுமமாக, குறித்த பயங்கரவாத வலையமைப்பு 2 ஆம் நிலை குழுவொன்றினை தயார்படுத்தி, சிறுவர்களுக்கு தமது சிந்தனைகளை விதைத்துள்ளமையும் அவ்விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக நேற்று விஷேட தெளி­வு­ப­டுத்­தல்­களை வெளி­யிட்டே பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன இதனை குறிப்­பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் மொத்­த­மாக 723 சந்­தேக நபர்கள் பொலிஸ் விசா­ர­ணை­யா­ளர்­களால் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், அவர்­களில் 311 பேர் விளக்­க­ம­றி­ய­லிலோ அல்­லது தடுப்புக் காவலின் கீழோ வைக்­கப்­பட்டு தொடர்ந்தும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன குறிப்­பிட்டார்.

அத்­துடன் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட அல்­லது அதற்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய நபர்­களின் 356 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பணம், அசையும், அசையா சொத்­துக்கள் இது­வரை அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல்லும் 168 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் மா அதிபர் குறிப்­பிட்டார். இத­னை­விட விஷே­ட­மாக சுமார் ஒரு இலட்சம் தொலை­பேசி இலக்­கங்கள் வரை பகுப்­பாய்வு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், இது­வரை பிர­தான 8 குண்­டு­வெ­டிப்­புக்கள் தொடர்பில் சதி செய்­தமை உட்­பட 46 பேருக்கு எதி­ராக 11 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் உறுதி செய்தார்.

சுமார் 20 நிமி­டங்கள் நீடித்த பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் விஷேட தெளி­வு­ப­டுத்தல் உரையில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
‘ உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் முன் வைக்­கப்­படும் அடிப்­ப­டை­யற்ற கருத்­துக்­களை கருத்தில் கொண்டு, பொது மக்­க­ளுக்கு சரி­யான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வ­த­ற­்காக அவ்­வி­சா­ர­ணை­களை மேற்­பார்வை செய்யும் உயர் அதி­காரி, பொலிஸ் மா அதிபர் எனும் ரீதியில் இந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­கின்றேன்.

இந்த விசா­ர­ணை­களில் அனைத்து விட­யங்­க­ளையும் அவ்­வாறே வெளிப்­ப­டுத்த முடி­யாது. அது விசா­ர­ணை­க­ளையும், வழக்­கு­க­ளையும் பாதிக்கும். எனவே வெளிப்­ப­டுத்த முடி­யு­மான விட­யங்­களை எம்மால் வெளிப்­ப­டுத்த முடியும்.

இந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் வெறு­மனே குறு­கிய காலத்தில் திட்­ட­மி­டப்­பட்டு நடாத்­தப்­பட்­டது அல்ல. 2019 ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்னர் நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் அதனை உறுதி செய்­கின்­றன. கடந்த 2017 மார்ச் 10 ஆம் திகதி தமக்கு மாற்­ற­மான சிந்­த­னை­களை கொண்­டி­ருந்த முஸ்லிம் குழு­வினர் மீது காத்­தான்­கு­டியில் நடாத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள், 2018 பெப்­ர­வரி 6 ஆம் திகதி வீடொன்றின் மீதான குண்டுத் தாக்­குதல், 2018 பெப்­ர­வரி 12 ஆம் திகதி அர­சியல் அலு­வ­லகம் ஒன்றின் மீதான குண்டு வீச்சு, 2018 மே7 ஆம் திகதி நுவ­ரெ­லியா விடு­முறை விடுதி ஒன்றில் அளிக்­கப்­பட்ட ஆயுத பயிற்சி, 2018 ஆகஸ்ட் 26 இல் வெடிப்­பொன்­றினால் காய­ம­டைந்த ரில்வான் என்­ப­வ­ருக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை, 2018 நவம்பர் 30 வவுண தீவு பகு­தியில் இரு பொலிசார் சுட்டுக் கொல்­லப்­பட்டு அவர்­க­ளது துப்­பாக்­கிகள் அப­க­ரிக்­கப்­பட்­டமை, 2018 டிசம்பர் 25 மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு நட­வ­டிக்­கைகள், 2019 ஜன­வரி 16 வனாத்­து­வில்­லுவில் ஆயுத களஞ்­சியம் கண்­டு­பி­டிப்பும் 4 பேர் கைதும், 2019 மார்ச் 9 தஸ்லீம் என்­பவர் மீது நடாத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூடு, 2019 ஏப்ரல் 16 காத்­தான்­குடி பால­முனை பகு­தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று குண்­டு­வைத்து வெடிக்கச் செய்­யப்­பட்­டமை போன்ற சம்­ப­வங்கள் தனித் தனி சம்­ப­வங்­க­ளாக பார்க்­கப்­பட்டே சி.ஐ.டி. மற்றும் பிராந்­திய பொலி­ஸா­ரினால் விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் அவை அனைத்தும் ஒன்­றுடன் ஒன்று பிணைந்த சம்­ப­வங்கள் என்­பது பின்னர் தெளி­வா­னது.

விசா­ர­ணை­யா­ளர்கள், பொலிசார், உளவுத் துறை அதி­கா­ரி­க­ளி­டையே ஒரு தகவல் பரி­மாற்ற வலை­ய­மைப்பு காணப்­ப­டாத நிலையில், குண்டுத் தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரேயே இவற்­றுக்கு இடை­யி­லான தொடர்­பினை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்­டது.
குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து இது தொடர்பில் விசா­ரணை செய்த சி.ஐ.டி.யின் ஒரு குழு இது தொடர்பில் சரி­யாக விசா­ரிக்­க­வில்லை. குறு­கிய காலத்தில் விசா­ர­ணை­களை நிறைவு செய்து, பிர­சித்தம் தேடிக்­கொள்ளும் நோக்கில் அக்­குழு செயற்­பட்­டுள்­ளது. அதனால் சஹ்ரான் கும்­பலின் அனை­வரும் இறந்­து­விட்­ட­தா­கவும், எஞ்­சியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்­களை அவர்கள் குறிப்­பிட்­டனர். இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதர­வா­ளர்கள் என தாங்­களை தாங்­களே அழைத்­துக்­கொண்ட ஒரு சிரு குழு இந்த தாக்­கு­தல்­களை நடாத்­தி­ய­தாக கூறி அவர்கள் விசா­ர­ணை­களை நிறைவு செய்ய முற்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஆழ­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வில்லை.
அப்­போது சி.ஐ.டி.க்கு பொறுப்­பாக தனி­யாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இருந்தார்.

நான் பொலிஸ் மா அதி­ப­ராக பத­வி­யேற்ற பின்னர், ஜனா­தி­ப­தியால் எனக்கு இவ்­வி­வ­காரம் தொடர்பில் பூரண விசா­ரணை செய்யும் அதி­காரம் , சுதந்­திரம் அளிக்­கப்­பட்­டது. அதன்­படி சி.ஐ.டி., ரி.ஐ.டி., ஏனைய பொலிஸ் உளவுப் பிரி­வு­களை ஒருங்­க­மைத்து, இணைத்து இவ்­வி­சா­ர­ணை­களை புது வியூ­கத்­துடன் முன்­னெ­டுத்தோம்.

முன்னர் விசா­ர­ணை­யா­ளர்கள், தாக்­குதல் குறித்த சந்­தேக நபர்­களின் 4 மாத தொலை­பேசி விப­ரங்­க­ளையே பகுப்­பாய்வு செய்து விசா­ரித்­தனர். எனினும் பின்னர் நாங்கள் கடந்த 2014 ஜூன் 29 ஆம் திகதி முதல் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் வரை­யிலும் அதன் பின்­ன­ரு­மான தொலை­பேசி தர­வு­களை பகுப்­பாய்வு செய்தோம்.

இந் நிலையில் 2019 ஆம் ஆண்டு தாக்­கு­த­லுடன் வெளிப்­பட்ட இந்த அடிப்­ப­டை­வாத சிந்­தனை, எப்­போது, எப்­படி ஆரம்­பித்­தது, வளர்க்­கப்­பட்­டது போன்ற விட­யங்­களும் விசா­ர­ணைக்கு உட்­பட்­டன.

இந் நிலையில் இது தொடர்பில் எனது கோரிக்­கைக்கு அமைய விசா­ர­ணை­க­ளுக்கு சட்ட ஆலோ­ச­னை­களை அளிக்க சட்ட மா அதிபர், சிரேஷ்ட நிலை அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வொன்­றி­னையும் நிய­மித்தார். அவர்­க­ளது ஆலோ­ச­னைக்கு அமைய விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

இந்த விசா­ர­ணை­களில், தாக்­குதல் நடாத்த உத­விய உள்­நாட்டு வெளி­நாட்டு சக்­திகள் தொடர்பில் வெளிப்­பட்­டது. அது தொடர்பில் விசா­ரணை நடக்­கி­றது. வெளி­நாட்டில் உள்­ள­வர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­சா­ர­ணை­களில் வெளிப்­பட்ட பிர­தான விடயம், இந்த பயங்­க­ர­வாத வலை­ய­மைப்பின் சிந்­த­னை­களை எதிர்­கா­லத்தை நோக்கி கொண்டு செல்ல 2 ஆம் நிலை குழு தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தாகும். அதற்­காக சிறு­வர்­க­ளுக்கு அச்­சிந்­தனை புத்­தி­ஜீ­விகள் மூலம் விதைக்­கப்­பட்­டுள்­ள­மையும், சஹ்­ரானின் கும்­ப­லா­னது இந்த பயங்­க­ர­வாத கும்­பலின் ஒரு பகுதி மட்­டுமே என்­பதும் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டது.

எனவே இந்த தாக்­கு­தல்­க­ளுடன் நேரடி, மறை­மு­க­மாக தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக இலங்­கையின் தண்­டனைச் சட்டக் கோவைக்கு உட்­பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க விசா­ர­ணைகள் கவ­ன­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை எம்மால் தற்­போ­தைக்கு தடுக்க முடி­யு­மாக இருந்­தாலும், உறு­தி­யாக அதனை முற்­றாக இல்­லாமல் செய்ய, தொடர்ச்­சி­யான விசா­ரணை, உளவு நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும்.

இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் 723 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதில் 311 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் அல்­லது தடுப்புக் காவலின் கீழ் உள்­ளனர். பல வங்கிக் கணக்­குகள் பரி­சீ­லிக்­கப்­பட்­டுள்­ளன. 365 மில்­லியன் ரூபா பணம், அசையும் அசையா சொத்­துக்கள் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்டு, 168 மில்­லியன் சொத்­துக்கள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

இது­வரை 11 குற்றப் பத்­தி­ரி­கைகள் 46 பேருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. சுமார் 100 இற்கும் அதி­க­மான சம்­ப­வங்கள் குறித்த விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்டு ஆவ­ணங்கள் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.
சுமார் 52 ஆயிரம் பக்­கங்­களை கொண்ட 104 ஆவ­ணங்கள் இவ்­வாறு சட்­டமா அதி­பரின் பரி­சீ­ல­னையின் கீழ் உள்ளன.

எனவே இது ஒரு பரந்துபட்ட விசாரணை என்பது தெளிவாகிறது. இவ்விசாரணைகள் தொடர்பில் எனக்கு எந்த அழுத்தங்களும் எவராலும் பிரயோகிக்கப்படவில்லை.
இவ்விசாரணைகள் தொடர்பிலும், தொடர்புபட்ட பின்னணி தொடர்பிலும் பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர். அவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும் வெறும் கருத்துக்களை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அது தொடர்பில் சான்றுகள் இருப்பின் அவற்றை சி.ஐ.டி.க்கு தருமாறு நாம் கோருகின்றோம். அப்போது அது குறித்து நாம் விசாரிக்க முடியும்.

இந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தவர்களுக்கு நீதி நிலை நாட்டப்படும். நியாயமாக, உறுதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகளை தண்டிப்பதையே நாம் கருதுகின்றோம். எனவே தான் மிக ஆழமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.