ஒக்டோபரில் இலங்கையில் கொவிட் தாக்கம் அதிகரிக்கும்; தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே ஒரே தீர்வு

டாக்டர் கமால் அப்துல் நாசர்

0 405

சுகா­தார அறிக்­கை­யிடல் தொடர்பில் விடியல் இணை­யத்­தளம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடாத்­திய இணை­ய­வழி செய­ல­மர்வு கடந்த சனிக்­கி­ழமை (14) நடை­பெற்­றது. இதில் வள­வா­ள­ராக கலந்து கொண்ட பிரித்­தா­னி­யா­வினை தள­மாகக் கொண்டு செயற்­படும் பொது வைத்­திய நிபு­ண­ரான டாக்டர் கமால் அப்துல் நாசர் கொவிட்-19 வைரஸ் பரவல் மற்றும் தடுப்­பூசி தொடர்பில் முன்­வைத்த கருத்­துக்­களின் தொகுப்பு.

ஹஸ்பர் ஏ. ஹலீம்

கொரோனா வைர­ஸினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தடுப்­பூசி­யேற்­று­வதே சிறந்த தீர்­வாகும். எனினும் தடுப்­பூசி தொடர்பில் சமயத் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போலிப் பிரச்­சா­ரங்­களை ஒரு­போதும் நம்ப வேண்டாம்.
இதில் எந்­த­வித உண்­மையும் இல்லை. சமயத் தலை­வர்கள் யாரா­வது தடுப்­பூசி தொடர்­பில் பிழை­யான விட­யத்­தினை சொன்னால், அவர்­களை நேர­டி­யாக எதிர்ப்­பது நல்­ல­தல்ல. அந்த பிழை­யான விட­யத்­தினை வெளிக்­கொண்டு வந்து, வைத்­திய நிபு­ணர்கள் மூலம் சரி­யான விட­யத்­தினை மக்­க­ளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்­வாறு தொடர்ச்­சி­யாக உண்­மை­யினை வெளிப்­ப­டுத்­தும்­போது நிச்­சயம் தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை போக்­கலாம்.

கொவிட் தடுப்­பூ­சி­யினை பெற்­றுக் ­கொண்டால் குழந்தை கிடைக்­காது என்ற பிரச்­சா­ர­மொன்று தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இது முற்­றிலும் பொய்­யா­ன­தாகும்.
கர்ப்­பிணித் தாய்­மார்கள், பாலூட் டும் தாய்­மார்கள் இந்த தடுப்­பூசி­யினைப் பெற முடியும். அதனால் எந்த பிரச்­சி­னையும் வர­மாட்­டாது. அத்­துடன் எதிர்­கா­லத்தில் குழந்­தை­களைப் பெற்றுக் கொள்ள எதிர்­பார்த்­தி­ருப்­ப­வர்­களும் இந்த தடுப்­பூசி­யினை பெற முடியும். எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.

கொவிட் தொடர்பில் பேஸ்புக், வட்ஸ்அப் போன்­ற­வற்றில் வரும் தக­வல்கள் அனைத்­தையும் நம்ப வேண்டாம். அது தொடர்பில் வைத்­திய நிபு­ணர்­களை அணுகி தெளிவினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். சரி­யான தெளிவின்றி கிடைக்கும் தக­வல்­க­ளை­யெல்லாம் பிற­ருடன் பகிரக் கூடாது.

தடுப்­பூ­சி­களின் ஊடாக நோய்த் தாக்­கத்தை குறைத்து மரண எண்­ணிக்­கை­யி­னையும் குறைக்க முடியும். அமெரிக்­கா­வினால் கொவிட்–19க்கு எதி­ராக தயா­ரிக்­கப்­பட்ட பைசர் மற்றும் மொடோனா தடுப்­பூசிகள் சுமார் 92 வீத­மான பாது­காப்பை வழங்­குகின்­றன. இது போன்று இலங்­கையில் அதிகம் ஏற்­றப்­படும் சீனாவின் தயா­ரிப்­பான சைனோபாம் தடுப்­பூசியும் கொவிட் – 19 இல் இருந்து பாது­காப்பை தரு­கி­றது. இதனால் தாம­திக்­காமல் ஏதா­வ­தொரு தடுப்­பூ­சி­யினை உட­ன­டி­யாக பெற்­றுக்­கொள்­வதே சிறந்­த­தாகும்.
இன்­னு­மொரு தடுப்­பூசி வரும் வரை பொறு­மை­யாக இருக்க வேண்டாம். தடுப்­பூசி­க­ளி­டையே அதன் திறனில் வித்­தி­யாசம் காணப்­ப­டலாம். எனினும் ஏதா­வ­தொரு தடுப்­பூ­சியைப் பெறு­வதே சிறந்­த­தாகும்.

தடுப்­பூசி­யேற்றல் நட­வ­டிக்­கையின் போது கட்­டாயம் சமூக இடை­வெளி­யினைப் பேண வேண்டும். இலங்­கையில் தடுப்­பூசி வழங்­கப்­படும் இடங்­களில் சமூக இடைவெளியைக் காண முடி­ய­வில்லை. சமூக இடைவெளி பேணாது தடுப்­பூசி பெற்றால் அங்கு வைத்து கொவிட் தொற்­றுக்­குள்­ளாக வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்­ளன.

இன்று சிலர் தடுப்­பூசி ஏற்­றி­யதால் கொவிட் தொற்று ஏற்­ப­டு­வ­தாக பிழை­யான கருத்­துக்­களைப் பரப்­பு­கின்­றனர். இது தவ­றா­ன­தாகும். தடுப்­பூ­சிகள் மூலம் வைரஸ் பர­வாது.
மாறாக தடுப்­பூசி ஏற்­றப்­படும் இடங்­களில் மக்கள் உரிய சுகா­தார வழி­மு­றை­களைப் பேணா­ததன் கார­ண­மா­கவே தொற்று ஏற்­பட அதிகம் வாய்ப்­புண்டு. இதனை அறி­யாமல் தடுப்­பூசி­யேற்­றி­யதன் பின்­னரும் கொவிட் தொற்­றி­யுள்­ள­தாக பிழை­யான தக­வல்­களை பரப்­பு­கின்­றனர்.

முத­லா­வது, இரண்­டா­வது டோஸ்­களை பெற்று இரு கிழ­மைக்கு பின்­னரே நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் அதி­க­ரிக்­கின்­றது.

முத­லா­வது டோஸ் எடுத்து நான்கு கிழ­மைக்கு பின் இரண்­டா­வது டோஸ் எடுப்­பது சிறந்­தது. இதன் மூல­மாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெறு­கி­றது. கொவிட் தொற்று ஏற்­பட்­டவர் அந்த நாளில் இருந்து 28 நாட்­களின் பின்­னரே தடுப்­பூசி­யினை பெறு­வது சிறந்­த­தாகும்.

இந்த நோயினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக அதிகம் அதிகம் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள வேண்டும். இதற்­காக பிசிஆர், அன்­டிஜன் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு பொது­மக்கள் முன்­வர வேண்டும்.

அண்­மையில் சீனாவின் வூஹான் நகரில் கொவிட் மீண்டும் பர­வி­ய­தாக தெரிவிக்­கப்­பட்­டதை அடுத்து சுமார் 1 மில்­லியன் பிசிஆர் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டு இதன் தாக்கம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையின் தற்­போ­தைய நிலை­யினை ஒப்­பி­டு­கையில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் கொவிட்19 தாக்கம் உச்­சத்தை அடை­யக்­கூ­டிய வாய்ப்­புள்­ளது. இதனால் அந்த கால கட்­டத்தில் கொவிட் மர­ணங்கள் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. மூக்கு வடிதல், இருமல் போன்­றன டெல்டா போன்ற வைரஸ் தொற்­றா­ளர்­க­ளுக்­கான அறி­கு­றி­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு காணப்­ப­டு­கின்­ற­வர்கள் உட­ன­டி­யாக பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது சிறந்­த­தாகும்.

கொவிட் தடுப்­பூ­சி­களை பெற்­றுக்­கொண்­ட­வர்கள் இரு நாட்கள் ஓய்­வெ­டுத்த பின்­னரே தொழி­லுக்குச் செல்­வது சிறந்­த­தாகும். ஏனென்றால் சில­ருக்கு 24 மணி நேரத்தின் பின் உடம்பு வலி, காய்ச்சல் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. எனினும், இது 48 மணி நேரத்­திற்குள் மறைந்து விடும்.

‘தடுப்­பூ­சி­க­ளினால் தான் கொரோனா வைரஸ் உரு­மாறி மீண்டும் வரு­கின்­றது: நோபல் பரிசு விஞ்­ஞானி டாக்டர் லூக் அதிர்ச்சி தகவல்’ எனும் செய்­தி­யொன்று தற்­போது சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கின்­றது.

இது முற்­றிலும் பொய்­யா­ன­தாகும். பிரான்ஸ் விஞ்­ஞா­னி­யொ­ரு­வரை அடிப்­ப­டை­யாக வைத்து பிரெஞ்சு மொழியில் வெளியான செய்­தியின் ஆங்­கில மொழி பெயர்ப்பே தமிழ் மொழிக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. ஆங்­கில மொழி­பெ­யர்ப்பில் இடம்­பெற்ற பிழை­யி­னா­லேயே தமிழ் மொழி­பெ­யர்ப்­பிலும் பிழை­யாக கூறப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் தடுப்­பூ­சி­யேற்­றி­வர்­க­ளிடம் வைரஸ் ஒரு­போதும் உரு­மாற்றம் பெறாது. தடுப்­பூசி தயா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே இந்த வைரஸ், இங்­கி­லாந்து, தென்­னா­பி­ரிக்கா மற்றும் இந்­தியா போன்ற நாடு­களில் உரு­மாற்றம் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தடுப்­பூசி கார­ண­மாக இந்த உரு­மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தில்லை என்­பது முக்­கிய விட­ய­மாகும்.

இது போன்று சமூக ஊட­கங்­களில் வெளி­யாகும் உண்­மைக்குப் புறம்­பான விட­யங்­களை நம்­பு­வதை தவிர்த்து நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் எவ்­வ­ளவு வேக­மாக தடுப்­பூசி ஏற்ற முடி­யுமோ அந்­த­ள­விற்கு தடுப்­பூசி­யேற்றி கொவிட்–19 இனை முறியடிக்க முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.