வீதியில் கண்டெடுத்த பணப் பையை வீடு தேடிச் சென்று ஒப்படைத்த இளைஞர்கள்

6 மாதங்களின் பின் பௌத்த பிக்குவுடன் வந்து பாராட்டிய உரிமையாளர்

0 439

எஸ்.என்.எம்.சுஹைல்

வீதி­யோ­ரத்தில் கிடந்த பணப் பைக்குள் பெருந் தொகை காசு இருக்க, எவ்­வ­ளவு பணம் இருக்­கி­ற­தென்று கூட கணக்­கிட்டுப் பாராது, உரி­ய­வரை தேடி அவரின் வீட்­டுக்குச் சென்று குறித்த பணப்­பையை கொடுத்த நெகிழ்ச்­சி­யான சம்­ப­வ­மொன்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்­றுள்­ளது. எனினும், அச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட நல்­லுள்­ளம்­கொண்ட இரு இளை­ஞர்­களும் விட­யத்தை மறந்­தி­ருந்­தாலும் பணப்­பையை தொலைத்து சில நிமி­டங்கள் ஆடிப்­போன அந்த வங்கி ஊழியர் 6 மாதங்கள் கடந்த பின்னர் இளை­ஞர்­களை தேடி சந்­தித்து அவர்­களை பாராட்­டி­யி­ருப்­பது கௌர­வத்தை தரு­கி­றது. இந்த பாராட்டும் சம்­பவம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மைதான் இடம்­பெற்­றது. சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட 22 வய­து­டைய இரு முஸ்லிம் இளை­ஞர்­க­ளையும் தேரர் ஒரு­வ­ருடன் தேடி­வந்து நிட்­டம்­புவ மல்­வத்தை பகு­தியைச் சேர்ந்த வங்கி முகா­மை­யாளர் டீ.பீ.கரு­ண­பந்து பரிசுப் பொருட்­க­ளையும் வழங்­கி­யி­ருக்­கிறார்.

கொழும்பில் பணி­யாற்றும் பாராட்­டு­பெற்ற இளை­ஞர்­களை விடி­வெள்ளி அலு­வ­ல­கத்­துக்கு அழைத்து சம்­பவம் பற்றி விரி­வாக தெரிந்­து­கொண்டோம்.

பாராட்­டு­பெற்ற இளை­ஞர்கள்
கஹட்­டோ­விட்ட கிரா­மத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் உம்மு ரம்லா தம்­ப­தியின் புதல்வன் அப்துர் ரஹ்மான் அப்துல் ஹக்கீம் மற்றும் மொஹமட் சாதீக் பௌசுல் நிசா தம்­ப­தியின் புதல்வன் மொஹமட் சித்தீக் மொஹமட் சாஜித் ஆகியோர் சிறு­வ­ய­து­முத

ஹக்கீம், சாஜித்

ல் நண்­பர்­க­ளாவர். கஹட்­டோ­விட்ட அல் பத்­ரியா கல்­லூ­ரியில் சாதா­ரண தரம் வரை கல்வி கற்­றனர். அப்துல் ஹக்கீம் மாவ­னெல்லை நூரா­ணி­யா­விலும் கஹட்­டோ­விட்ட அல் பத்­ரி­யா­விலும் உயர்­தரம் படித்தார். ஹக்கீம் வர­கா­பொல தாருல் ஹஸனாத் எக­ட­மியில் கல்வி பயின்றார். 2018 ஆம் ஆண்டு உயர்­தர பரீட்­சைக்கு முகம்­கொ­டுத்த இவர்கள், CMA கற்­­கை நெ­றியை தொடர்­கின்­றனர். அத்­துடன், கொழும்பில் மாஸ் எசோ­சியேட் எனும் நிறு­வ­னத்தில் அனு­ப­வத்­திற்­கான தொழிற் பயிற்­சியில் ஈடு­ப­டு­கின்­றனர்.

சம்­பவம்
கொரோ­னாவின் தாக்­கத்­தினால் அடிக்­கடி வீடு­க­ளி­லி­ருந்து தொழில் புரியும் நிலை ஏற்­ப­டு­கின்ற நிலையில், கொரோனா 2 ஆம் அலை கடந்து கடந்த பெப்­ர­வரி மாத­ம­ளவில் மீண்டும் தொழில் நிறு­வ­னங்கள் ஆரம்­பித்­தன. மீளவும் தொழி­லுக்கு திரும்­பிய சில நாட்­க­ளில்தான் அந்த சம்­பவம் நடந்­தது.

காலை ஏழரை மணி­ய­ளவில் வியங்­கொடை புகை­யி­ரத நிலை­யத்­திற்­க­ருகே மோட்டார் சைக்­கிளை நிறுத்­தி­விட்டு கொழும்­புக்கு வேலைக்கு வந்த ஹக்­கீமும் சாஜிதும் மாலை ஐந்­தரை மணி­ய­ளவில் கொழும்­பி­லி­ருந்து வீடு திரும்­ப­லா­னார்கள். ஆறரை மணி­ய­ளவில் வியங்­கொ­டையை அடைந்த அவர்கள் மோட்டார் சைக்­கிளில் கஹட்­டோ­விட்­ட­விற்கு செல்ல முற்­பட்டபோது வீதிக் கடவை சமிக்ஞை விளக்கை தாண்­டு­கையில் பணத் தாள்கள் கீழே விழுந்­தி­ருந்­த நி­லையில் பணப்­பையும் கிடந்­துள்­ளது. அதனை கண்ட அப்துல் ஹக்கீம், சாஜி­திடம் கூற அப்­பையை எடுக்­கிறார் சாஜித். அதனுள், கீழே கிடந்த 5 ஆயிரம் ரூபா நோட்­டு­களும் அத­னோடு பெயர் குறிப்­பிட்டு எழு­தப்­பட்ட துண்­டு­களும் கிடந்­துள்­ளன. அத்­தோடு, பணப் பையி­னுள்ளும் ஐயா­யிரம் ரூபா தாள்கள் அதி­க­மாக இருந்­துள்­ளன. அதனை கண்ட இளை­ஞர்கள் ஆரம்­பத்தில் பொலிஸில் ஒப்­ப­டைக்க நினைத்­தனர். எனினும் பணத்தை இழந்­த­வ­ருக்கு உட­ன­டி­யாக பையை கொடுக்க வேண்டும் என்றால் தாமே கொண்­டுபோய் ஒப்­ப­டைக்க வேண்டும் என முடி­வெ­டுத்­தனர்.
பணப்­பைக்குள் இருந்த ஆள் அடை­யாள அட்­டையை கொண்டு அவரின் முக­வ­ரியை தேடி புறப்­பட்­டனர். அதில் குறிப்­பிட்ட முக­வ­ரியின் படி மல்­வத்தை எனும் கிரா­மத்தை சேர்ந்­தவர் என அறிய முடிந்­தது. ஆக, அவர்கள் வியாங்­கொடை பகு­தியில் உள்ள மல்­வத்தை எனும் கிரா­மத்­திற்கு சென்று குறித்த இலக்­க­மு­டைய வீடொன்றின் அரு­கா­மைக்கு சென்று விசா­ரித்­துள்­ளனர். எனினும் பணப்­பையை தொலைத்­தவர் அந்த கிரா­மத்தை சேர்ந்­த­வ­ரல்ல என்­பதை அறிந்­து­கொண்ட சாஜிதும் ஹக்­கீமும், வியாங்­கொ­டை­யி­லி­ருந்து 6 கி.மீ. தொலை­வி­லுள்ள நிட்­டம்­புவ மல்­வத்தை கிரா­மத்­திற்கு கூகிள் மெப் தொழி­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி குறித்த நபரின் வீட்டை தேடி அங்கு சென்­றனர்.
ஆள் அடை­யாள அட்­டையில் உள்ள நபரின் பெயரை கூறி விசா­ரித்து குறித்த நபரை அடை­யாளம் கண்­டுள்­ளனர். பின்னர் இவ்­வாறு பணப்­பையை தொலைத்­து­விட்­டீர்­களா என விசா­ரித்து அவ­ரிடம் பணப் பையை ஒப்­ப­டைத்­தாக கூறினார்கள் இளை­ஞர்கள்.
இந்­நி­லையில் இச்சம்பவம் குறித்து தனது பணப்பை தொலைந்­த குறித்த வங்கி முகா­மை­யாளர் ‘விடிவெள்ளி’யிடம் தொலை­பேசி ஊடாக இவ்­வாறு விப­ரித்தார். கொழும்­பி­லி­ருந்து வியாங்­கொடை புகை­யிரத நிலை­யத்தை அடைந்­ததும் அருகே உள்ள எனது மைத்­து­னரின் கரா­ஜி­லி­ருந்த மோட்டார் சைக்­கிளை எடுத்­துக்­கொண்டு வீடு திரும்­பினேன். அப்­போது வியாங்­கொடை – நிட்­டம்­புவ வீதி நெரி­ச­லாக காணப்­பட்­டது. சமிக்ஞை விளக்­கிற்கு அருகே எனது இரு பைகள் விழும் நிலையில் இருந்­தது. உட­ன­டி­யாக அத­னை­பி­டித்­துக்­கொண்டு வீட்­டுக்குச் சென்றேன். கொரோனா பாது­காப்­பிற்­காக வீடு திரும்­பி­யதும் கைய­டக்கத் தொலை­பேசி, பணப்பை, கைக்­க­டி­காரம் எல்­லா­வற்­றையும் கழற்றி செனி­டைஸர் பயன்­ப­டுத்தி மனை­வி­யிடம் கொடுத்­து­விட்டு, அதே ஆடை­யுடன் சென்று குளித்­து­விட்­டுத்தான் வீட்­டுக்குள் செல்­வது வழமை. வீட்­டுக்கு சென்­ற­போது தான் பணப்பை இல்­லாமல் போயி­ருந்­ததை தெரிந்­து­கொண்டேன். வீட்­டுக்கு மனை­வியின் உற­வி­னர்கள் வந்­தி­ருந்­தனர்.

அன்று சம்­பள தினம் என்­பதால் பணப் பைக்குள் 1 இலட்­சத்­திற்கும் மேல் பணமும் முக்­கிய ஆவ­ணங்கள் மற்று தேவை­யான குறி­ப்பு­களும் இருந்­தன. இந்­நி­லையில் பதற்­ற­மாக இருந்­தாலும் பணப்­பைக்கு என்ன நடந்­தது என நிதா­ன­மாக சிந்­தித்தேன். புகை­யி­ரத நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யே­றும்­போது பணப்பை இருந்­த­தையும் உறுதி செய்­து­கொண்டேன்.

வீட்­டுக்கு தேடி வந்த இளை­ஞர்கள்
இந்த சந்­தர்ப்­பத்­தில்தான் இரு இளை­ஞர்கள் மோட்டார் சைக்­கிளில் வீட்­டுக்கு வந்­தனர். தலை­க­வ­சத்­துடன் இருந்­தனர். பணப்­பையை என்­னிடம் தந்­து­விட்டு சரி­பார்த்­துக்­கொள்­ளுங்கள் என்­றனர்.

பையி­லி­ருந்து ஒரு சதம் கூட குறை­ய­வில்லை. எல்லா ஆவ­ணங்­களும் இருந்­தது. அவர்­களை வீட்­டுக்குள் வரச் சொன்னேன். முடி­யாது அவ­ச­ர­மாக போக வேண்டும் என திரும்­பி­விட்­டனர். அவர்­க­ளது ஊரை மட்டும் கேட்­டுக்­கொண்டேன்.
வீட்­டுக்குள் சென்­றதும் உற­வி­னர்கள் என்னை கடிந்­து­கொண்­டனர். பெரும் உதவி செய்­த­வர்­களை வீட்­டுக்குள் அழைக்­கா­மையை கண்­டித்­தனர்.

இளை­ஞர்­களை தேடிய கரு­ண­பந்து
தனது பணப்­பையில் பெருந்­தொகை பணம் இருந்த நிலையில் அதனை மீட்டு தன்னை தேடி­வந்து ஒப்­ப­டைத்த இளை­ஞர்­களை தேட பெரும் பாடு பட்­டுள்ளார். வெறு­மனே ஊரின் பெயரை வைத்­துக்­கொண்டு அவர் அந்த இளை­ஞர்­களை நீண்ட நாட்­க­ளாக தேடி­யுள்ளார். வியாங்­கொடை பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் தனது நண்பர் மூலம் தேடி­யுள்ளார். எனினும், குறித்த இளை­ஞர்­களை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. ஒரு மாதத்­திற்கும் மேல் இளை­ஞர்­களை கண்­டு­பி­டிக்க அவர் முயற்சி செய்­துள்ளார்.

தேரரின் ஆலோ­சனை
நிட்­டம்­புவ மல்­வத்தை கிரா­மத்­தி­லுள்ள பௌத்த விகாரை நிர்­வாக முக்­கி­யஸ்­த­ராக இருக்கும் வங்கி முகா­மை­யாளர் கரு­ண­பந்து விட­யத்தை விகா­ரா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில், விகாரை வளா­கத்­தினுல் தங்­கி­யி­ருந்த கிராம சேவை­அ­தி­காரி ஊடாக கஹட்­டோ­விட்ட கிராம சேவை அதி­கா­ரியை தொடர்­பு­கொண்டு இளை­ஞர்­களை கண்­டு­பி­டிக்க முடியும் என்று கூறி­ய­துடன், குறித்த இளை­ஞர்­களின் நற் பண்­பு­களை ஊக்­கு­விக்க வேண்டும் என்ற ஆலோ­ச­னை­யையும் வழங்­கி­யுள்ளார்.

கிராம சேவை அதி­காரி ஊடாக கஹட்­டோ­விட்டை கிராம சேவை அதி­கா­ரியை தொடர்­பு­கொண்டு சம்­பந்­த­ப்பட்ட இளை­ஞர்கள் தொடர்பில் தெரி­வித்து அடை­யாளம் கண்டு தரு­மாறு கோரி­யுள்ளார். இந்­நி­லையில் கிராம சேவகர் பள்­ளி­வாசல் நிரு­வாக தலைவர் ஊடாக ஊரில் குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இளை­ஞர்­களை தேடி­யி­ருக்­கின்றார். பள்ளி தலைவர் ஊடாக இளை­ஞர்­களை தேடிக்­கொண்­டி­ருக்­கையில் தலை­வரின் பேரன் ஒருவன் ஹக்­கீமின் சகோ­த­ரரான ரய்­யா­னிடம் (சாச்­சாவின் மகன்) விட­யத்தை கூற அவர் தனது தம்­பி­யிடம் விசா­ரித்­துள்ளார். ஹக்கீம் ஏற்­கெ­னவே பெப்­ர­வரி மாதத்தில் சம்­பவம் இடம்­பெற்­ற­போது தனது பெற்­றோர்­க­ளுக்கு விட­யத்தை சாடை­யாக கூறி­யி­ருந்தார். ஆனால் இவ்­வி­ட­யத்தை அவர் பின்னர் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. இத­ன­டிப்­ப­டையில் ஹக்­கீமும் சாஜி­தும்தான் இவ்­வாறு நல்­லுள்­ளம்­கொண்டு உத­வி­ய­வர்கள் என்­பதை வங்கி முகா­மை­யா­ளரும் பிக்­குவும் தேடிப்­பி­டித்­தனர்.

இந்­நி­லையில், இரு கிராம சேவ­கர்கள், தேரர் மற்றும் வங்கி முகா­மை­யா­ளர்கள் சகிதம் இளை­ஞர்­களை சந்­தித்து பாராட்ட வேண்டும் என தீர்­மா­னித்­தனர். எனினும் எல்­லோ­ருக்கும் ஒரே தரு­ணத்தில் இளை­ஞர்­களை சந்­திக்கச் செல்ல நேரம் கிடைக்­காது மேலும் 4 மாதங்கள் கடந்து விட்­டன.

திடீர் அழைப்பு
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கிரிக்கெட் விளை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது ஹக்­கீ­முக்கு அழைப்­பொன்று வந்­துள்­ளது. இதன்­போது, மறு­மு­னையில் பணப்­பையை தொலைத்த வங்கி முகா­மை­யாளர் டீ.பீ.கரு­ண­பந்து பேசினார். உங்­களை சந்­திக்க வேண்டும் என குறிப்­பிட்­டி­ருக்­கிறார். தாம் விளை­யா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறிய ஹக்கீம் யாரோ தன்னை கேலி செய்­வ­தாக நினைத்­துக்­கொண்டு அப்­ப­டியே இருந்­து­விட்டார்.

கடந்த வாரம்
பின்னர் கடந்த வாரம் அவ்­வி­ளை­ஞர்­களின் வீட்­டுக்கு வங்கி முகா­மை­யாளர் கரு­ண­பந்து மற்றும் தேரர் ஆகியோர் வந்து இளை­ஞர்­களின் நல்ல உணர்வை மதித்து அன்­ப­ளிப்பு பொருட்­களை வழங்கி அவர்­களை பாராட்­டி­யுள்­ளனர்.
இந்த சம்­பவம் தொடர்பில் மிக ஆழ­மான கருத்தை வெளி­யிட்ட வங்கி முகா­மை­யாளர் கருணபந்து, நான் வதியும் வீட்டுக்கு அருகே நீதிமன்றம் இருக்கிறது. அங்கு பணப்பை தொலைத்தவர்களின் விடயங்கள் விசாரணைக்கு வரும். பெரும்பாலும் பணப்பை மீளக் கிடைப்பது அரிது. இருந்தாலும் திரும்ப கிடைத்த பணப்பையை கொண்டு வந்து ஒப்படைத்தவர்கள் முஸ்லிம்களாகவே இருந்துள்ளனர். முஸ்லிம்களின் இந்த மனப்பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது. ஏற்கனவே என்னுடைய பணப்பை இதற்கு முதல் தொலைந்திருக்கிறது. அப்போது, அதிலிருந்த 35 ரூபா காசு எனக்கு கிடைக்கவில்லை. ஆவணங்கள் சிலவே கிடைத்தன. எனினும், இவ்விளைஞர்கள் பணப்பையை கண்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு தேடிவந்து அதனை ஒப்படைத்தமையானது பண்பு சார் விடயமாகும். முஸ்லிம்கள் மார்க்க ரீதியில் இவ்வாறான நற்பண்பை கொண்டிருக்கின்றனரா, அல்லது அவர்களது குடும்பச் சூழல் இந் நற் கருமத்தை செய்ய உந்துகிறதா என்று தெரியவில்லை. இந்த பண்பை கண்டு வியந்து சந்தோஷப்படுகின்றேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.