கர்­தி­னாலின் கரங்­களை முஸ்­லிம்கள் பலப்­ப­டுத்த வேண்டும்

தேசிய ஐக்­கிய முன்­னணி கேரிக்கை

0 502

(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கேட்டு, தனி ஒரு சமூ­க­மாக நடத்தி வரும் போராட்­டத்­துக்கு கத்­தோ­லிக்க சமூ­கத்­திற்கு முஸ்லிம் சமூ­கமும் ஆத­ரவு வழங்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். இதற்­காக முஸ்லிம் அர­சியல், சமய மற்றும் சிவில் அமைப்­புக்கள் யாவும் முன்­வர வேண்டும் தேசிய ஐக்­கிய முன்­னணி தெரி­வித்­துள்­ளது.

கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித் அண்­மையில் ஊடக சந்­திப்­பொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ரணை தொடர்பில் தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதில் மேலும் தெரி­விக்­கப்­ப­டுள்­ள­தா­வது,

இலங்­கையில் உள்ள கத்­தோ­லிக்க மக்­களின் தலைவர் கர்­தினால் மெல்கம் ரன்ஜித் உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்­பாக அண்­மையில் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் மீண்டும் சமூக அரங்கில் கலந்­து­ரை­யா­ட­லுக்கு உரிய ஒரு விட­ய­மாக மாறி உள்­ளன.
உயிர்த்­த­ஞா­யிறு சம்­பவம் தொடர்­பாக தற்­போது நடத்­தப்­பட்டு வரும் விசா­ர­ணைகள் சரி­யான திக்கில் செல்­ல­வில்லை என்றும், தனக்கு அதில் எவ்­வித நம்­பிக்­கையும் இல்லை என்றும், இன்­னமும் இந்த அர­சாங்கம் விசா­ரணை என்ற போர்­வையில் அப்­பா­வி­களை நெருக்­கு­த­லுக்கு உள்­ளாக்கி சம்­பந்­தப்­பட்ட உண்­மை­யான நபர்­களை தப்ப வைப்­ப­தற்­கான ஒரு முயற்­சி­யி­லேயே ஈடு­பட்­டுள்­ளது என பல விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார்.
அத்­துடன் தனது எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களின் ஒரு கட்­ட­மாக எதிர்­வரும் 21ஆம் திகதி தமது அதி­ருப்­தி­யையும் எதிர்ப்­பையும் நாடு தழு­விய ரீதியில் வெளிக்­காட்டும் வகை­யிலும் சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஈர்க்கும் வகை­யிலும் சகல கத்­தோ­லிக்க மக்­களும் தமது வீடு­களில் கறுப்புக் கொடியை பறக்க விட வேண்டும் என்றும் கேட்­டுள்ளார்.
இந்­நி­லையில், முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் எமது கருத்­துக்­களும் இது­வா­கவே இருக்க வேண்டும் என்­பது தான் எமது நிலைப்­பா­டாகும். உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களும் குற்­ற­வா­ளி­களும் கண்டு பிடிக்­கப்­பட்டால் தான் இந்த சம்­பவம் கார­ண­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது பூசப்­பட்ட அழிக்க முடி­யாத கறையை முற்­றாக நீக்க முடியும். இதற்­காக தனித்துக் குரல் கொடுத்தால் எமது குரல்­வ­ளைகள் நசுக்­கப்­படும். அதனால் நாம் எடுக்க வேண்­டிய நிலைப்­பாட்டை உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்தில் எம்மைப் போலவே பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க மக்­களின் தலைவர் எடுத்­துள்­ளமை வர­வேற்கத்தக்­கது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­கேட்டு, உண்­மையும் சத்­தி­யமும் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என அவர் தனி ஒரு சமூ­க­மாக நடத்தி வரும் போராட்­டத்­துக்கு நாமும் சமூக ரீதி­யான ஆத­ரவை வழங்க வேண்­டி­யது காலத்தின் தேவையும் எமது கட்­டாயக் கட­மையும் ஆகும். இன்­றைய முஸ்லிம் மக்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களில் கொழும்பு மாவட்­டத்தின் பிர­தி­நி­தி­களைத் தவிர ஏனை­ய­வர்கள் வாய்­மூடி, கையேந்தி மௌனம் காத்து வரு­கின்­றனர். முஸ்­லிம்­களின் பிர­தான கட்சி என சொல்­லப்­படும் கட்­சியின் தலைவர் ஓரிரு சந்­தர்ப்­பங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் மிகவும் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தாலும் கூட கட்­சிக்குள் அவர் ஒரு சூழ்­நிலைக் கைதி­யாக மாறி உள்­ளதால் போதிய அர­சியல் பல­மின்­றியே அவ­ரது கருத்­துக்கள் ஒலிக்­கின்­றன.

அண்­மையில் நம்மை விட்டுப் பிரிந்த அப்­லலுல் உலமா தைக்கா சுஹைப் ஆலிம் அவர்­களின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கர்­தினால் பேசும் போது “கத்­தோ­லிக்­கர்­க­ளா­கிய நாங்கள் எமது முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்போம் அவர்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச மட்­டத்­திலும் உள்­ளு­ரிலும் சதி வலைகள் பின்­னப்­பட்­டுள்­ளன. தயவு செய்து அவை­களில் சிக்கி விடா­தீர்கள். விழிப்­பாக இருங்கள் நாங்கள் உங்­க­ளுடன் இருக்­கின்றோம்” என்றும் குறிப்­பிட்­டுள்ளார். எனவே முன்­னைய சம்­ப­வங்­களும் கருத்­துக்­களும் எவ்­வாறு இருப்­பினும் கத்­தோ­லிக்க தரப்பில் இருந்து எம்மை நோக்கி நீட்­டப்­படும் நேசக்­க­ரத்தை நாம் பற்றிப் பிடிக்க வேண்­டிய தருணம் இப்­போது வந்­துள்­ளது.
எனவே அர­சியல் பேதங்­க­ளையும் ஏனைய கருத்து பேதங்­க­ளையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு சமூகம் என்ற ரீதியில் உண்­மை­களை வெளிக் கொண்டு வந்து, உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­க­ளையும் குற்­ற­வா­ளி­க­ளையும் சட்­டத்தின் முன் நிறுத்தி, எமது சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்க வேண்டிய தேவையும் கடமையும் எம்மீது இருக்கின்றது. அதற்காக தனித்து செயற்பட முடியாது. அதனால் கத்தோலிக்க சமூகத்தின் நேசக்கரத்தை ஏற்று இந்த விடயத்தில் அவர்களோடு இணைந்து செயற்பட்டு, நீதிக்கும் நியாயத்துக்குமான போராட்டம் வலுவடைய உதவுவதற்கு முஸ்லிம் அரசியல், சமய மற்றும் சிவில் அமைப்புக்கள் யாவும் முன்வர வேண்டும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.