ரிசாத் சார்பில் 26 ஆம் திகதி நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்க அனுமதி

0 394

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு என கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலி  ல் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் சார்பில் விஷேட வாதங்­களை முன் வைக்க கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று அனு­ம­தி­ய­ளித்­தது.

அதன்­படி எதிர்­வரும் 26 ஆம் திகதி குறித்த வாதங்­களை முன் வைப்­ப­தற்­காக என விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­வ­தாக கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே நேற்று அறி­வித்தார்.

கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட குண்டுத் தாக்­குதல் குறித்த வழக்குக் கோவை நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்­தது. அதில் 7 சந்­தேக நபர்கள் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவர்­களில் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக ஏற்­க­னவே வேறு குற்­றச்­சாட்டில் மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­துள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இந் நிலையில் நேற்­றைய தினம் 7 ஆவது சந்­தேக நப­ரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் மற்றும் சட்­டத்­த­ரணி இவோன் நிராஷா ஆகியோர் ஆஜ­ரா­கினர். 5,6 ஆம் சந்­தேக நபர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள, 26, 27 வய­து­களை உடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசு­ருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய இளம் மெள­லவி ஆசி­ரி­யர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் ஆஜ­ரானார்.

கொவிட் நிலைமை கார­ண­மாக சந்­தேக நபர்கள் எவரும் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சந்­தேக நபர்­களை நீதிவான் மேற்­பார்வை செய்தார்.

இந் நிலையில் மன்றில் வாதங்­களை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன், தனது சேவை பெறு­நர்­க­ளான இரு­வ­ருக்கும் எதி­ராக கடு­க­ள­வேனும் சாட்­சிகள் இல்­லாத நிலையில், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அவர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைப்­பது நியா­ய­மற்­றது என வாதிட்டார்.
இதன்­போது நீதிவான் சி.சி.டி. அதி­கா­ரி­க­ளிடம், குறித்த இரு­வ­ருக்கும் எதி­ராக வழக்குத் தொட­ரப்­ப­டுமா அல்­லது சாட்­சிகள் இல்­லையா என வின­வினார்.
அதற்கு பதி­ல­ளித்த சி.ஐ.டி.யினர் விசா­ரணை கோவை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரின் ஆலோ­சனை கிடைத்­ததும் அது தொடர்பில் அறி­விப்­ப­தாக கூறினர்.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி இந்த இரு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், தடுப்புக் காவல் விசா­ர­ணையின் பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த இரு­வரும், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்­கு­மாறு வறு­பு­றுத்­தப்­பட்­ட­தாக ஏற்­க­னவே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமந்­திரன் மன்­றுக்கு அரி­வித்­துள்ள நிலையில், அது தொடர்பில் உயர் நீதி­மன்றில் இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் நிலு­வையில் உள்­ளது.

இவ்­வா­றான நிலையில், 7 ஆவது சந்­தேக நப­ரான ரிஷாத் பதி­யுதீன் சார்பில் விஷேட வாதங்­களை முன் வைக்க சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் நீதி­மன்றின் அனு­ம­தியைக் கோரினார். அதற்கு அனு­ம­தித்த நீதிமன்றம் அந்த வாதங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி முன் வைக்குமாறு சட்டத்தரணிக்கு அறிவித்த நிலையில், சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்தது. விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.