மத்ரஸா விடுதிகளில் சிகிச்சை நிலையங்கள்?

ஆராய்கிறது வக்பு சபை

0 613

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொவிட் 19 வைரஸ் தொற்றும், தொற்றுக் காரணமாக மரண வீதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் அடிப்படைவசதிகளுடன் கூடிய மத்ரஸா கல்லூரி விடுதிகளை கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவது தொடர்பில் வக்பு சபை ஆலோசித்து வருகிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். இது தொடர்பான மத்ரஸாக்களின் விபரங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அடிப்­படை வச­தி­க­ளுடன் கூடிய மத்­ரஸா விடு­தி­களில் கட்­டில்கள், கழிப்­பறை வச­திகள் மற்றும் போதி­ய­ளவு இட வசதி இருப்­பதால் அவற்றை கொவிட் 19 சிகிச்சை நிலை­ய­மாக மாற்­று­வதில் சிர­மங்கள் ஏற்­ப­டாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரி­விக்­கையில், ‘நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­தோரே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மரண வீதமும் அதி­க­ரித்­துள்­ளது. நாட்டில் வைரஸ் தொற்று நோயா­ளர்­களை அனு­ம­திப்­ப­தற்கு வைத்­தி­ய­சா­லை­களில் போதிய இட­மு­மில்லை. இதனால் நாளாந்தம் அநேகர் வீடு­களில் மர­ணிக்­கி­றார்கள். இந்­நி­லை­யினை கருத்திற் கொண்டே வக்பு சபை மத்­ரஸா விடு­தி­களை கொவிட் 19 சிகிச்சை நிலை­ய­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஆலோ­சித்து வரு­கி­றது.

தற்­போது மத்­ர­ஸாக்கள் மூடப்­பட்­டுள்­ளதால் இதனால் சிர­மங்கள் எதுவும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அத்­தோடு ஒரு சில பள்­ளி­வா­சல்­க­ளிலும் கொவிட் 19 சிகிச்சை நிலை­யங்­களை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.
பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யு­டனே தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும். நிர்­வா­கிகள் தன்­னிச்­சை­யாக தீர்­மானம் எடுக்க முடி­யாது. அத்­தோடு இதற்­காக நிதி சேக­ரிப்­ப­திலும் ஈடு­பட முடி­யாது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வா­சல்கள் நினைத்­த­வாறு நிதி சேக­ரிப்பில் ஈடு­பட முடி­யாது. முதலில் வக்பு சபையின் அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதற்­கான வழி­முறை பின்­பற்றப் பட வேண்டும்.
பாது­காப்பு அமைச்சும் உளவுப் பிரிவும் முஸ்லிம் சமூகம் செல­விடும் நிதி தொடர்பில் உன்­னிப்­பாக கவனம் செலுத்தி வரு­கி­றது என்­பதை நாம் மறந்­து­விடக் கூடாது.
கொவிட் 19 வைரஸ் தொற்­றினை இல்­லாமற் செய்­வதில் முஸ்லிம் சமூகம் அதி­கூ­டிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதே­வேளை ‘கொவிட் 19 தொற்று நோயினால் பாதிக்­கப்­படும் நோயா­ளர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வாசல் வளா­கத்தில் கொவிட் 19 சிகிச்சை மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்டின் வேறு சில மாவட்டங்களிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் இவ்வாறான கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.