தடுப்பூசி விடயத்தில் தடுமாற்றம் வேண்டாம்

0 654

அஷ்ஷெய்க் பளீல்

பத்­வா­வுக்­கான சர்­வ­தேச இஸ்­லா­மிய மன்­றங்­களும் முன்­னணி இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞர்­களும் தடுப்­பூசி ஏற்றிக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்ள சூழ்­நி­லையில் அதனை பின்­வ­ரு­மாறு அணு­கலாம்.

தடுப்­பூசி ஏற்றிக் கொள்­வது:-
தற்­காப்பு முயற்சி- மார்க்கக் கடமை
இது மார்க்கம் கூறும் தற்­காப்பு முயற்­சி­களில் ஒன்­றாகும்.
“ஈமான் கொண்­ட­வர்­களே! முன்­னெச்­ச­ரிக்­கை­யாக நடந்து கொள்­ளுங்கள்.”(அல்­குர்ஆன்)
“உங்­க­ளையே நீங்கள் அழி­வுக்குள் தள்­ளிக்­கொள்­ளா­தீர்கள்” (அல்­குர்ஆன்)
“ஒட்­ட­கையைக் கட்டு; அல்­லாஹ்வின் மீது நம்­பிக்கை வை!” (ஹதீஸ்)
“ஒவ்­வொரு நோய்க்கும் மருந்­துண்டு. மருந்து செய்­யுங்கள்” (ஹதீஸ்)

துறை சார்ந்த நிபு­ணர்­களைக் கேளுங்கள்!
ஒரு விவ­காரம் தொடர்­பாக சுய­மாக முடி­வெ­டுக்க முடி­யாமல் போகும் போது அந்த துறை சார்ந்­த­வர்­க­ளது ஆலோ­ச­னையைப் பெற­வேண்டும் என்ற வகையில் சுகா­தார துறையில் இருக்­கின்­ற­வர்­க­ளது ஆலோ­ச­னை­களின் பேரில் தான் தடுப்­பூசி ஏற்­றப்­ப­டு­கி­றது.
“உங்­க­ளுக்கு தெரி­யா­விட்டால் வேதத்தை உடை­ய­வர்­க­ளிடம் கேட்டுக் கொள்­ளுங்கள்” (அல்­குர்ஆன்)
“அவர்­க­ளது விட­யங்கள் ஆலோ­ச­னையின் அடிப்­ப­டை­யி­லேயே இடம்­பெறும்” (அல்­குர்ஆன்)
துறை­சார்ந்த முஸ்லிம் வைத்­தி­யர்கள் உட்­பட சுகா­தாரத் துறையைச் சேர்ந்­த­வர்கள் தடுப்­பூசி ஏற்­றிக்­கொள்ள வேண்டும் என்று கூறு­வதை நாம் ஏற்று நடக்க வேண்டும்.
சுகா­தார துறையில் முஸ்லிம் வைத்­தி­யர்­களும் கணி­ச­மான அளவில் இருக்­கி­றார்கள். அவர்கள் மருத்­துவ அறிவை மாத்­தி­ர­மன்றி இஸ்­லா­மிய உணர்­வோடும் அல்­லாஹ்வை பயந்த நிலை­யிலும் இருப்­ப­தா­கவே காணு­கிறோம். எனவே தடுப்­பூசி ஏற்றிக் கொள்­வது நல்­ல­தல்ல என்­றி­ருந்தால் அவர்கள் அது பற்றிக் கூறி­யி­ருப்­பார்கள். மாறாக அவர்கள் தடுப்­பூசி ஏற்றும் படி ஊக்­கு­விக்­கி­றார்கள். அவர்கள் சுய­ந­ல­னுக்­காக நிலைப்­பா­டு­களை எடுத்தால் கியாமத் நாளில் அல்­லாஹ்­விடம் நிச்­ச­ய­மாக சிக்­கிக்­கொள்ள வேண்டி வரும். சந்­தே­க­மில்லை.

ஆதா­ர­பூர்­வ­மாக அணு­குவோம்
தடுப்­பூசி ஆபத்­தா­னது, எனவே ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று எவ­ரா­வது சொல்­வ­தாயின் அவர் அதற்கு விஞ்­ஞான பூர்­வ­மான, அறி­வு­பூர்­வ­மான ஆதா­ரங்­களை முன்­வைக்க வேண்­டுமே தவிர ஆங்­காங்கே உலா­வரும் தக­வல்­களை ஆதா­ர­மாகக் கொள்­ளக்­கூ­டாது.
தடுப்­பூசி என்­பது நோய்த்­த­டுப்­புக்­காக உலகில் பொது­வாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு தீர்வுத் திட்டம். அதே நேரம் அது பிழை­யா­னது என்று கூறு­வ­தற்கும் எவ­ருக்கும் உரி­மை­யுண்டு. ஆனால் இத்­திட்டம் பிழை­யா­னது அல்­லது ஆபத்­தா­னது என்றால் அதற்­கான பதி­லீடு என்ன என்றும் அவர்கள் சொல்ல வேண்டும். யாருக்கும் குறை சொல்­லலாம் .ஆனால் காத்­தி­ர­மான தீர்­வு­க­ளையும் சொல்ல வேண்டும்.

சதிகள் இருப்­பதை நாம் அறிவோம்
சதி­வ­லைகள் பற்­றிய கோட்­பாட்­டுகள் (Conspiracy Theories) என்­பது உல­கத்தில் வெகு­வாக பேசப்­ப­டு­கின்ற ஒரு கருத்து. இலு­மி­னாட்­டிகள், பண முத­லைகள், சுய­ந­ல­மிகள் போன்றோர் இருக்­கி­றார்கள் என்­ப­தையும் நாம் அறிவோம். மருந்து மாபியா (Drugs Mafia) என்­பதை வைத்­தி­யர்கள் கூட மறுக்க முடி­யாது. உலகம் சதி­கா­ரர்­க­ளது கையில் சிக்­கி­யி­ருக்­கி­றது என்று கூறு­கிறோம். ஆனால், குறை கூறிக் கொண்­டி­ருக்கும் நாம் உல­கத்­துக்கு ஆக்­கப்­பூர்­வ­மா

ஹரா­மான உள்­ளீ­டுகள் சில பல மருந்­து­களில் இருப்­ப­தாக நாமும் ஏற்­கிறோம். ஆனால், ஹலா­லான உள்­ளீ­டுகள் கொண்ட மருந்­து­களை உரு­வாக்கும் மருந்து நிறு­வ­னங்­களை (Pharmaceutical Companies) உரு­வாக்­கவும் அவற்­றுக்­கான வளங்­களை திரட்­டவும் நாம் எத்­தனை ரூபாய்­களை செல­வ­ழித்­தி­ருக்­கிறோம்?

முஸ்லிம் கர்ப்­ப­வ­திகள் பிள்ளைப் பேறின் போது அந்நிய ஆண்­க­ளுக்கு அவ்­ரத்தை காட்டக் கூடாது என்று நாமும் நீங்­களும் பேசு­கிறோம். ஆனால் எமது முஸ்லிம் பெண்­களை பல்­க­லைக்­க­ழகம் அனுப்பி வைத்­தி­யர்­க­ளா­கவும் மகப்­பேற்று நிபு­ணர்­க­ளா­கவும் மாற்­று­வ­தற்கு எந்த அளவு கரி­சனை எடுக்­கிறோம்?

இவை­யெல்லாம் நியா­ய­மான கேள்­விகள். இவை விடை காணப்­ப­டாத கேள்­வி­க­ளாக தொடர்ந்தும் இருந்து வரு­கின்ற பொழுது எமது சர்ச்­சைகள் பற்றி யோசிக்க வேண்டி இருக்­கி­றது. நாம் முயற்­சிக்­காத போது ஏற்­க­னவே அத்­து­றையில் முயற்சி செய்து கொண்­டி­ருப்­போரில் தான் தங்­கி­யி­ருக்க வேண்டும்.

சுருக்­க­மாகச் சொன்னால், இப்­போது நமக்கு முன்னால் ஒரு சிகிச்சை வழி­யாக தடுப்­பூ­சியும் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை

அதில் சில பக்க விளை­வுகள் இருப்­பதை ஏற்­றுக்­கொண்­டாலும் அதனை ஏற்­றாமல் இருப்­பதால் ஏற்­படும் விளை­வுகள் அதனை விடவும் அதி­க­மா­னவை

ஒரு குறிப்­பிட்ட கரு­மத்தை கட்­டா­ய­மாக செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கின்ற பொழுது அக்­கா­ரி­யத்தில் உள்ள சாத­கங்­க­ளையும் பாத­கங்­க­ளையும் சீர்­தூக்கி பார்க்க வேண்­டு­மென்றும் பாத­க­மான விளை­வு­களை விடவும் சாத­க­மான விளை­வுகள் அதிகம் இருப்பின் அக்­கா­ரி­யத்தை கட்­டா­ய­மாகச் செய்ய வேண்டும் என்று இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞர்கள் சொல்­வார்கள்.

“ஒரு விவ­கா­ரத்தில் சாத­கங்­களும் பாத­கங்­களும் இருப்பின் அதில் எது அதி­க­மாக இருக்­குமோ அதற்கு முன்­னு­ரிமை வழங்கி தெரி­வு­செய்­யப்­பட வேண்டும்” என்­பது எமது சட்ட அறி­ஞர்கள் கூறிய விதி­யாகும்.

ஒரு பெண் மஹ்ரம் இல்­லாமல் பயணம் செய்­ய­லா­காது என்­பது இஸ்­லா­மிய சட்­ட­மாக இருந்தும் கூட உம்மு குல்தூம் (ரலி)அவர்கள் மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வுக்கு தனி­யாக ஹிஜ்ரத் வரு­வ­தற்கு நபி­ய­வர்கள் அனு­ம­தித்­தார்கள். தனித்து பயணம் போவதில் இருக்­கின்ற ஆபத்தை விடவும் மக்­காவில் தங்கி இருப்­பது ஆபத்து அதிகம் என்று உணர்ந்­த­தனால் அந்த அனு­மதி வழங்­கப்­பட்­டது

அப்­துல்லாஹ் இப்னு ஹுதாபா அஸ்­ஸஹ்மீ (ரலி) அவர்கள் ஹிரகல் மன்­னனின் சபைக்குச் சென்ற போது முஸ்லிம் கைதி­களை விடு­தலை செய்ய வேண்­டு­மாயின் மன்­னனின் தலையை அப்­துல்லாஹ்(ரலி) முத்­த­மிட வேண்டும் என்று மன்னர் சொன்னார். அவ்­வாறு முத்­த­மி­டு­வ­தற்கு இஸ்­லாத்தில் அனு­மதி இல்­லா­விட்­டாலும் 100 கைதி­க­ளது விடு­தலை அதனை விடவும் பெரி­யது என்று உணர்ந்­த­தனால் அப்­துல்லாஹ் அவ­ரது தலையை முத்­த­மிட்டார். உமர்(ரலி) அவர்­க­ளது சபைக்கு அப்­துல்லாஹ் (ரலி) அவர்கள் வந்த போது அவ­ரது தலையை உமர்(ரலி) அவர்கள் முத்­த­மிட்­டார்கள். இது விரி­வான ஆய்­வுக்கு உட்­பட்ட பகு­தி­யாகும்.

அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும்
தடுப்­பூசி ஏற்றிக் கொண்டால் கொரோனா தொற்­றுக்­கான சாத்­தி­யங்கள் குறைவு என்று வைத்­தி­யர்கள் சொன்­னார்­களே தவிர நோய் வர­வே­மாட்­டாது என்று யாரும் சொல்­ல­வில்லை. ஒவ்­வொ­ரு­வ­ரது உடம்பை பொறுத்தும் அத­னது தாக்கம் வித்­தி­யா­சப்­படக் கூடும். எந்­த­வொரு மருந்­துக்கும் பக்க விளை­வுகள் இருப்­ப­தையும் எந்த ஒரு வைத்­தி­யரும் மறுக்­க­வில்லை. மறுத்தால் அவர் வைத்­தி­யரும் அல்ல. சாதா­ரண பர­சி­ட­மோ­லுக்கும் பக்க விளை­வுகள் உண்டு.

கொவிட் கார­ண­மாக இறந்­த­வர்கள் எல்­லோரும் தடுப்­பூசி போடா­த­வர்­க­ளு­மில்லை.
தடுப்­பூசி போட்­ட­வர்கள் கொவிட் கார­ண­மாக இறக்­க­வில்லை என்றும் யாரும் சொல்­ல­வு­மில்லை.

எம்மால் இயன்­ற­வரை தற்­காப்பு முயற்­சி­களில் கட்­டா­ய­மாக ஈடு­ப­டுவோம். முடிவை அல்­லாஹ்­விடம் ஒப்­ப­டைத்து விட்டு அவ­னது தீர்ப்பை முழு­ம­ன­துடன் ஏற்போம்.அல்லாஹ் நாடு­வதே நடந்­தேறும்.

நாட்டு சட்­டத்தை மதிப்­பதா
இல்­லையா?
இலங்கை அரசு தடுப்­பூசி ஏற்­று­வதை கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றது. அதற்கு விரோ­த­மாக செல்­ப­வர்கள் நாட்டின் சட்­டத்தை உடைப்­ப­வர்­க­ளா­கவும் சட்­டத்­துக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளா­கவும் பார்க்­கப்­ப­டு­வார்கள். எனவே அவர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டுவர். எனவே தடுப்­பூ­சிக்கு எதி­ராக பேசுவோர் தைரி­ய­மாக தமது பெயர்­களைக் கூறி முன்­வர வேண்டும். சட்­டத்தின் முன் நிற்க தயா­ராக இருக்க வேண்டும். அதற்கு தயா­ராக இல்லை என்றால் ஆங்­காங்கு பேசு­வதில் எந்த அர்த்­தமும் கிடை­யாது.

நாம் முஸ்­லிம்கள் என்ற வகையில் நோய் வராமல் காப்­ப­தற்கும் நோய் வந்த பின்னர் சிகிச்சை செய்­வ­தற்­கு­மான பின்­வரும் ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் :
1. சுத்­த­மா­கவும் சுகா­தா­ர­மா­கவும் இருப்­பது
2. உட­லுக்குத் தேவை­யான சகல உரி­மை­க­ளையும் முழுமையாக வழங்குவது
3. நோய் வராமல் இருப்பதற்கான தற்காப்பு முயற்சிகளில் உச்சகட்டமாக விடுபடுவது
4. நோய் வந்த பின்னர் சிகிச்சைகளில் சக்திக்குட்பட்ட வகையில் ஈடுபடுவது.
5. அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்பதும் பாவங்களை விடுவதும் நற்கருமங்களில் அதிகமாக ஈடுபடுவதும்.
6. நாம் இவ்வளவு முயற்சிகளை எடுத்த பொழுதிலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி உலகில் அணுவும் அசையாது என்ற ஆழமான நம்பிக்கையோடு செயல்படுவது. (களா கத்ர்)

இதில் மூன்­றா­வது அம்­ச­மான ‘நோய் வராமல் இருப்­ப­தற்­கான தற்­காப்பு முயற்­சி­களில் உச்­ச­கட்­ட­மாக விடு­ப­டு­வது’ என்­ப­திலும் ஒரு விட­ய­மான தடுப்­பூசி ஏற்றிக் கொள்­வது பற்றி மட்­டுமே இக்­கட்­டு­ரையில் பேசப்­பட்­டது. இது சக்­திக்கு உட்­பட்ட வகையில் எழு­தப்­பட்­டது. தவ­றுகள் இருப்பின் அல்லாஹ் மன்னிப்பானாக!- VIdivelli

Leave A Reply

Your email address will not be published.