தனது உழைப்பால் சமூகத்தையே வாழ வைத்த வள்ளல் றிபாய் ஹாஜியார்

0 443

ரூமி ஹாரிஸ்

அந்­த­வ­கையில் ஊரிற்கும், சமூ­கத்­திற்கும், நாட்­டிற்கும் தமது சொந்த நிதி­யி­லி­ருந்து கோடா­ன­கோ­டி­களால் எண்­ணற்ற சேவைகள் புரிந்த அறிவுத் தந்தை நளீம் ஹாஜியார், கொடை வள்ளல் றிபாய் ஹாஜியார் போன்­ற­வர்­களின் வகி­பாகம் பாராட்­டத்­தக்­கது. இந்த ஆக்கம் அண்­மையில் கால­மான பிர­பல சமூக சேவை­யா­ளரும், வர்த்­த­க­ரு­மான ஸ்ரீலங்கா சிகா­மணி ZAM றிபாய் ஹாஜியாரின் வாழ்க்கைப் பய­ணத்தின் சில பக்­கங்கள் குறித்து அவ­தானம் செலுத்துகிறது.

ஆரம்ப காலமும்,
மாணவப் பரு­வமும்
பேரு­வளை நக­ர­ச­பையின் முத­லா­வது அமர்வின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான ஸைனுல் ஆப்தீன் மரிக்கார், தம்பி ஹாஜியார் ஆலி­ய­தும்மா தம்­ப­தி­க்கு இரண்­டா­வது பிள்­ளை­யாக றிபாய் அவர்கள் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பேரு­வ­ளையில் பிறந்தார். சிறுவன் றிபாய் தற்­போ­தைய பேரு­வளை மரு­தானை அல்­பா­ஸி­யதுல் நஸ்­ரியா முஸ்லிம் பெண்கள் பாட­சா­லையில் தனது ஆரம்பக் கல்­வி­யினை 1941ஆம் ஆண்டு ஆரம்­பித்தார். பின்னர் கொழும்பு ஹமீத் அல் ஹுஸை­னியா கல்­லூரி, கம்­பளை ஸாஹிரா கல்­லூரி, தர்­கா­நகர் ஸாஹிரா கல்­லூரி போன்­ற­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வி­யினை மேற்­கொண்டார்.

தொழில் பிர­வேசம்
தனது பாட­சாலைக் கல்­வியை நிறை­வு­ செய்த மாணவன் றிபாய் உயர்­கல்­வி­யினை தொட­ராமல் தொழில் செய்­வ­தற்கு ஆயத்­த­மானார். இரத்­தி­ன­புரி நக­ரி­லுள்ள கடை­யொன்றில் பத்து ரூபாய் மாத சம்­ப­ளத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ள­ராக இணைந்­து­கொண்டார். பின்னர் கொழும்பு மரு­தா­னை­யி­லுள்ள கொழும்பு ஸ்டோரில் தொண்­ணூறு ரூபாய் மாத சம்­ப­ளத்­திற்கு விற்­ப­னை­யா­ள­ராக இணைந்­து­கொண்டார். அங்கு சில காலம் பணி­யாற்­றிய பின்னர் அந்­நி­று­வ­னத்­தி­லி­ருந்து விலகி பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஷெரீப் அன்ட் பாயிஸ் டெக்ஸ்டைல் நிறு­வ­னத்தில் நூற்றி இரு­பத்­தைந்து ரூபாய் மாத சம்­ப­ளத்­திற்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் சில காலம் பணி­யாற்­றிய பின்னர் ‘சில்க் பரடைஸ்’ நிறு­வ­னத்தில் நூற்றி அறு­பது ரூபாய் மாத சம்­ப­ளத்­திற்கு பணி­யாற்­றினார். பின்னர் கொழும்­பி­லுள்ள சாரதாஸ் நிறு­வ­னத்தில் இரு­நூறு ரூபாய் மாத சம்­ப­ளத்­திற்கு விற்­ப­னை­யா­ள­ராக இணைந்­து­கொண்டார்.

பேரு­வ­ளை­யி­லி­ருந்து நாளாந்தம் கொழும்­பிற்கு போக்­கு­வ­ரத்து செய்­வது சிர­ம­மாக இருந்­த­மை­யினால் சிறிய வாடகை அறை ஒன்றில் கொழும்பில் தங்­கி­யி­ருந்தார். இவ்­வாறு கொழும்­பி­லுள்ள சில வியா­பார நிலை­யங்­களில் பல வரு­டங்கள் பல்­வேறு சிர­மங்­க­ளோடும், அர்ப்­ப­ணங்­க­ளோடும் விற்­ப­னை­யா­ள­ராக பணி­யாற்றி வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் எவ்­வாறு கதைப்­பது? எவ்­வாறு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பொருட்­களை விற்­பனை செய்­வது? போன்ற வாடிக்­கை­யாளர் தொடர்­பா­டல்­க­ளையும், விற்­பனை நுட்­பங்­க­ளையும் பல வருட அனு­ப­வ­மூ­டாக கற்­றுக்­கொண்டார். வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் இன்­மு­கத்­துடன் உற­வாடி பொருட்­களை விற்­பனை செய்­வதில் கைதேர்ந்­த­வ­ராக இருந்தார். கடை­சி­வரை அவ­ரது வியா­பா­ரத்தின் வெற்­றிக்கு இது பேரு­த­வி­யாக இருந்­த­தெ­னலாம். இவ்­வாறு வியா­பார நிலை­யங்­களில் பணி­யாற்­றிக்­கொண்டே சிறிய சேமிப்­புக்­க­ளைக்­கொண்டு தனது ஓய்வு நேரங்­களில் சிறி­ய­ள­வி­லான வியா­பா­ரங்­க­ளையும் அவ்­வப்­போது மேற்­கொண்டார். தான் ஒரு விற்­ப­னை­யாளர் என்ற நிலை­யி­லி­ருந்து வியா­பாரி என்ற அந்­தஸ்தை அடை­வ­தற்­கான கனவுப் பய­ணத்­தினை அப்­போதே ஆரம்­பித்தார்.

திரு­மண வாழ்க்கை
1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பைச் சேர்ந்த ஸித்தி பாயிஸா என்­ப­வரை திரு­மணம் செய்தார் றிபாய். சரி­யாக இன்­றுடன் அவ­ரது திரு­மண வாழ்க்­கைக்கு 54 ஆண்­டுகள் நிறை­வடை­கின்­றன. “கொழும்பில் இவ்­வா­றான உய­ரிய அந்­தஸ்­துள்ள பெண் ஒரு­வரை திரு­மணம் முடிப்­பது குறித்து தான் நினைத்­துக்­கூடப் பார்க்­க­வில்லை. இது இறை­வனின் பேர­ரு­ளாகும்” என்று றிபாய் ஹாஜியார் தனது வாழ்க்கை வர­லாறு தொடர்­பி­லான ஆவ­ணப்­ப­டத்தில் தனது மனைவி குறித்து கூறி­யி­ருந்தார். இறை­வனின் பேர­ரு­ளினால் குடும்ப வாழ்வில் ஒரு ஆண் பிள்­ளையும், இரண்டு பெண் பிள்­ளை­யு­மாக மூன்று பிள்­ளை­களும், பதின்­மூன்று பேரக்­கு­ழந்­தை­களும் உள்­ளனர். றிபாய் ஹாஜி­யாரின் குடும்ப வாழ்­விலும், வியா­பா­ரத்­திலும், சமூக சேவை­க­ளிலும் உறு­து­ணையாய் இருந்த அவ­ரது அன்பு மனைவி ஸித்தி பாயிஸா 2018 ஆம் ஆண்டு இறை­வ­னடி சேர்ந்தார்.

தொழி­ல­திபராக…
திரு­ம­ணத்தின் பின்னர் Refai’s எனும் பெயரில் ஆடை வியா­பார நிலை­ய­மொன்றை நடாத்தி தனது வியா­பார கன­வினை ஆரம்­பித்தார் ZAM றிபாய் ஹாஜியார். பின்னர் அவ­ரது மனை­வியின் குடும்­பத்­தி­னரால் கொழும்பு ஒபரோய் ஹோட்­டலில் ஆரம்­பிக்­கப்­பட்ட புத்­தக வியா­பார நிலை­யத்­திற்கு பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். இச்­சந்­

மாணிக்க வியாபாரத்தின் ஆரம்ப நாட்களில்…

தர்ப்­பத்தில் தனக்கு அறி­மு­க­மான இரத்­தி­னக்கல் வியா­பா­ரத்தில் ஈடு­படும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டார். அவர்­க­ளுக்குத் தேவை­யான இரத்­தி­னக்­கற்­களை தனது உற­வி­னர்கள் மூல­மாக பெற்று விற்­பனை செய்ய ஆரம்­பித்தார். இதன்­மூலம் குறிப்­பி­டத்­தக்­க­ள­வி­லான இலா­பத்­தினைப் பெற்­றுக்­கொண்டார். இதுவே ZAM றிபாய் அவர்­க­ளது இரத்­தி­னக்கல் வியா­பா­ரத்தின் ஆரம்ப படிக்­கற்­க­ளாகும்.
பின்னர் தனது ஒன்­று­விட்ட சகோ­த­ர­ரான ஸாபிர் பாஷா அவர்­களின் உத­வி­யுடன் கொழும்பு ஹோட்­டல்­க­ளி­லுள்ள வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களை சந்­தித்து இரத்­தி­னக்கல் வியா­பா­ரத்­தினை மேற்­கொண்­டு­வந்தார். இரத்­தி­னக்கல் வியா­பா­ரத்தில் றிபாய் ஹாஜியார் அவர்­க­ளிடம் காணப்­பட்ட உண்மை, நேர்மை, நியா­ய­மான விலை, உயர்ந்த தரம் போன்­ற­வற்­றினால் ஈர்க்­கப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள், வர்த்­தகர் றிபாய் ஹாஜி­யா­ரு­ட­னான வர்த்­தக தொடர்­பு­களை பேணிக்­கொண்­டனர். இதன்­மூலம் சர்­வ­தேச அளவில் வாடிக்­கை­யா­ளர்­களின் நன்­ம­திப்பைப் பெற்­றுக்­கொண்டார். தனக்­கென தனி­யான வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்­பொன்­றி­னையும் அவர் உரு­வாக்­கத் ­த­வ­ற­வில்லை. நாளுக்கு நாள் வியா­பாரம் அமோ­க­மாக நடை­பெற ஆரம்­பித்­தது. கொழும்­பி­லுள்ள தனது சொந்த வீட்­டி­லேயே ஒரு இரத்­தி­னக்கல் காட்­சி­ய­றை­யினை அமைத்து வியா­பா­ரத்­தினை மேற்­கொண்டார். பின்னர் நாள­டைவில் வியா­பா­ரத்தின் வளர்ச்சி கார­ண­மாக றிபாய் ஹாஜியார் தனது வியா­பா­ரத்தை நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்த எண்­ணினார்.

1976 ஆம் ஆண்டு தனது பெயரின் முத­லெ­ழுத்­துக்­க­ளைக்­கொண்டு ZAM Gems எனும் வர்த்­தக நாமத்தில் இரத்­தி­னக்கல் வியா­பார நிலை­ய­மொன்றை ஒரே­யொரு ஊழி­ய­ருடன் ஆரம்­பித்தார். தனது அய­ராத முயற்­சியின் பல­னா­கவும், இறை­வனின் பேர­ரு­ளி­னாலும் சாதா­ரண விற்­ப­னை­யா­ள­ராக தொழில் சந்­தையில் பிர­வே­சித்த ZAM றிபாய், தொழி­ல­திபர் ZAM றிபாய் ஹாஜி­யா­ராக பரி­ண­மித்தார். இறை­வனின் பேர­ரு­ளி­னாலும், அய­ராத உழைப்­பி­னாலும் வர்த்­த­க­ராகும் தனது கன­வினை நன­வாக்­கிக்­கொண்டார்.
ZAM Gems இரத்­தி­னக்கல் வியா­பா­ரத்தில் தேசிய ரீதியில் மட்­டு­மல்­லாது சர்­வ­தேச ரீதி­யிலும் தனக்­கென தனி­யி­டத்­தி­னையும், நன்­ம­திப்­பி­னையும் குறு­கிய காலத்­தி­லேயே ஈட்­டிக்­கொண்­டது. இதன்­மூலம் கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் ZAM Gems தனது சொந்தக் கட்­ட­டத்­தி­லேயே தனது காட்­சி­ய­றை­யினை 1989 ஆம் ஆண்டு நிறு­வி­யது. ZAM Gems பின்னர் தனது கிளை­யினை கண்டி நகரில் ஆரம்­பித்­தது. மேலும் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் உட்­பட நாட்டின் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள், வர்த்­தக அங்­கா­டிகள் போன்­ற­வற்றில் காட்­சி­ய­றை­களை நிறு­வி­யது. ZAM Gems வர்த்­தக நாமம் வெளி­நாட்டு வாடிக்­கை­யா­ளர்­களின் பேர­பி­மா­னத்தை பெற்­ற­மை­யினால் கடல்­க­டந்த நாடு­க­ளிலும் சர்­வ­தேச முன்­னணி விமான நிலை­யங்­களில் ZAM Gems தனது காட்­சி­ய­றை­களை நிறுவி போட்டி நிறைந்த இரத்­தி­னக்கல் மற்றும் ஆப­ர­ணங்கள் சந்­தையில் தன்னை நிலை­நி­றுத்திக் கொண்­டுள்­ளது. இது­வரை தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் 15 கிளை­களைக் கொண்­டுள்­ளது ZAM Gems நிறு­வனம்.

ZAM Gems ஊடாக எண்­ணற்ற இரத்­தி­னக்கல் வியா­பா­ரிகள் தங்­க­ளது இரத்­தி­னக்­கற்­க­ளுக்கு நியா­ய­மான விலை­யினை பெற்று இலா­ப­ம­டைந்து வரு­வ­துடன், ZAM Gems காட்­சி­ய­றை­களில் மற்றும் ஆப­ரண வடி­வ­மைப்பு தொழிற்­சா­லை­களில் நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள் வேலை­வாய்ப்­பினை பெற்­றுள்­ளனர். இந்த வியா­பா­ரத்­தி­னூ­டாக இலங்­கையின் தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கும் குறிப்­பி­டத்­தக்­க­ள­வி­லான அந்­நி­யச்­செ­லா­வணி கிடைத்­து­வ­ரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

கொடை வள்ளலாக…
ZAM றிபாய் ஹாஜியார் கோடீஸ்­வ­ர­ரா­னதன் பின்னர் கொடை வள்­ள­­லான ஒரு­வ­ரல்ல. மாறாக விற்­ப­னை­யா­ள­ராக கடையில் பணி­யாற்றும் போதே பெற்­றுக்­கொண்ட சிறிய சம்­ப­ளத்­தி­லேயே தனது உற­வி­னர்­க­ளுக்கும், நண்­பர்­க­ளுக்கும் தனது சக்­திக்­கேற்ப உத­வி­பு­ரியும் நற்­ப­ழக்­கத்­தி­னைக்­கொண்­டவர். அவ­ரது வியா­பா­ரத்­தையும், வளர்ச்­சி­யையும் போலவே அவ­ரது பிற­ருக்கு உதவும் பண்பும் கூடவே வளர்ந்­தது என்­பது பாராட்­டுக்­கு­ரி­யது.

றிபாய் ஹாஜியார் “தான் மட்டும் வாழாது, தனது குடும்­பத்­தி­ன­ரையும், ஊர் மக்­க­ளையும், சமூ­கத்­தி­ன­ரையும், நாட்டு மக்­க­ளையும் தன்னால் இயன்­ற­ளவு வாழ­வைத்தார்” என்­பதே அவ­ரது தனித்­து­வ­மாக இருந்­தது. “எங்­க­ளுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனை­வ­ரையும் வாழ­வைப்­போமே..” என்ற பாட­லி­னையே றிபாய் ஹாஜியார் அடிக்­கடி முணு­மு­ணுத்­த­தாக அறி­ய­மு­டி­கி­றது. அத­னால்தான் இன்று அவர் இறந்த பின்­னரும் அவ­ரைப்­பற்றி எல்லா ஊட­கங்­களும் றிபாய் ஹாஜியார் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றன. செல்­வத்தைக் கொடுக்­கின்ற இறைவன் எல்­லோ­ருக்கும் அதனை பிற­ருக்கு வழங்­கு­வ­தற்­கான உள்­ளத்­தினை கொடுப்­ப­தில்லை. அவ்­வாறு இரண்டும் கிடைக்­கப்­பெற்ற சொற்­ப­மா­ன­வர்­களில் றிபாய் ஹாஜி­யாரும் ஒரு­வரே.

றிபாய் ஹாஜி­யா­ரது சமூக சேவைப்­ப­ணி­களைத் தடுக்­காமல் அவ­ரது நற்­ப­ணி­களை ஊக்­கு­வித்த பெருமை அவ­ரது மனைவி உட்­பட அவ­ரது பிள்­ளைகள், உடன் பிறப்­புக்கள் மற்றும் குடும்­பத்­தி­ன­ரையே சாரும். அவ­ரது குடும்­பத்­தி­ன­ரது பூரண ஒத்­து­ழைப்­புடன் இப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­மை­யினால் தங்­கு­த­டை­யின்றி றிபாய் ஹாஜி­யா­ரினால் சமூக சேவைப்­ப­ணி­களை முழு­வீச்­சுடன் மேற்­கொள்­ள­மு­டி­யு­மாக இருந்­த­தெ­னலாம்.

ZAM Trust எனும் சமூ­க­சேவை நிதி­யத்­தினை நிறுவி அதன்­மூலம் குடும்­பத்­தி­னர்கள், ஊழி­யர்கள், பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், அனர்த்த நிவா­ர­ணங்கள், வீட­மைப்புத் திட்­டங்கள் என இன, மத, பிர­தேச வேறு­பா­டு­க­ளின்றி பல்­வேறு சமூக நலப்­ப­ணி­களை மேற்­கொண்­டு­வந்தார் றிபாய் ஹாஜியார். தனது செல்வச் செழிப்­பிலும் பெண்கள் கல்­வி­யினை வலி­யு­றுத்­தி­யது மட்­டு­மல்­லாது முன்­னு­தா­ர­ணத்­தி­னையும் தனது குடும்­பத்­தி­லேயே உரு­வாக்­கினார். தனது மகள் வர்தா றிபாய் அவர்­களை வைத்­தி­ய­ராக்­கினார். நாட்­டிற்கும், சமூ­கத்­திற்கும் பல்­வேறு சேவை­களை வைத்­தியர் வர்தா றிபாய் மேற்­கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ZAM றிபாய் ஹாஜியார் அவர்­க­ளது பொரு­ளா­தாரம், கல்­வித்­துறை, சமூக சேவைப் பங்­க­ளிப்­புக்­களை பாராட்டி கௌர­விக்கும் முக­மாக இலங்கை ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­ப­டு­கின்ற அதி­யுயர் விரு­து­களில் ஒன்­றான ஸ்ரீலங்கா சிகா­மணி விருது 2005 ஆம் ஆண்டு ZAM றிபாய் ஹாஜியார் அவர்­க­ளுக்­கு வழங்கி வைக்­கப்­பட்­டது.

குடும்­பத்­தி­ன­ருக்­கான உதவி
உழைக்க ஆரம்­பித்த காலம்­மு­தலே இளைஞர் றிபாய் தனது சொற்ப வரு­மா­னத்­தி­லி­ருந்தே தனது நெருங்­கிய குடும்­பத்­தி­ன­ருக்கு தன்னால் இய­லு­மான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­வரும் ஒரு­வ­ரா­கவே இருந்தார். பின்னர் தனது பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கேற்ப குடும்­பத்­தி­ன­ருக்­கான அவ­ரது நன்­கொ­டை­களும் அதி­க­ரித்த வண்­ணமே இருந்­தன. குடும்­பத்­தி­ன­ருக்குத் தேவை­யான ரமழான் கால உலர் உண­வுகள் முதல் திரு­ம­ணத்­திற்­கான உத­வித்­தொ­கைகள், நோயா­ளி­க­ளுக்­கான மருத்­துவ செல­வுகள், சுய­தொழில் வாய்ப்­புக்கள், மின்­சாரம் மற்றும் குழாய் நீர் இணைப்பு போன்­ற­வற்றை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான கொடுப்­ப­ன­வுகள், வீடு கட்­டிக்­கொ­டுப்­பது வரை குடும்­பத்­தி­ன­ருக்கு தேவை­யான பல்­வேறு உத­வி­க­ளையும் நீண்­ட­கா­ல­மா­கவே மேற்­கொண்­டு­வந்தார். குடும்­பத்­தி­ன­ரோடு மட்டும் நின்­று­வி­டாது தனது பழைய வகுப்புத் தோழர்கள், அய­ல­வர்கள், நண்­பர்கள் என சக­ல­ருக்கும் எந்­த­வித வேறு­பா­டு­மின்றி உத­விய தாராள மனம்­ப­டைத்­தவர் என்­பது அனை­வரும் அறிந்த உண்­மை­யாகும்.

ஊழி­யர்­க­ளுக்­கான உதவி
ZAM Gems நிறு­வ­னத்தின் வளர்ச்­சியில் நம்­பிக்­கையும், நேர்­மையும், அர்ப்­பண சேவை­யும்­மிக்க அதன் ஊழி­யர்­க­ளது வகி­பாகம் மெச்­சத்­தக்­கது. அதனை கருத்­திற்­கொண்டு தனது ஊழி­யர்­க­ளுக்கு கௌர­வ­மான வாழ்க்­கை­யினை வழங்­க­வேண்­டு­மென்­ப­தற்­காக ஊழி­யர்­க­ளுக்குத் தேவை­யான உலர் உணவுப் பொருட்கள், பாட­சாலை உப­க­ர­ணங்கள், திரு­மண உத­வித்­தொ­கைகள், மருத்­துவ உத­விகள், வீட­மைப்பு போன்ற ஒத்­து­ழைப்­புக்­களை தனது ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கி­வ­ரு­கின்­றது.

கல்­வித்­துறை
ZAM றிபாய் ஹாஜியார் அவர்கள் தனது ZAM Trust ஊடாக பாட­சா­லை­க­ளுக்­கான கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு பெரு­ம­ள­வி­லான நிதி­யினை வழங்­கி­யுள்ளார். பாட­சா­லை­க­ளுக்குத் தேவை­யான வளங்­களை வழங்­கு­வ­த­னூ­டாக மாண­வர்­களின் கற்றல் நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்தி கல்­வித்­து­றையில் மறு­ம­லர்ச்­சி­யினை ஏற்­ப­டுத்­து­வதே ZAM றிபாய் ஹாஜியார் அவர்­க­ளது குறிக்­கோ­ளாக இருந்­தது. அத­ன­டிப்­ப­டையில் நாட­ளா­விய ரீதியில் பல பாட­சா­லை­க­ளுக்குத் தேவை­யான கட்­ட­டங்­களை ZAM Trust அன்­ப­ளிப்புச் செய்­துள்­ளது.

குறிப்­பாக பேரு­வ­ளையில் அமைந்­துள்ள மாளி­கா­ஹேனை முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்­திற்குத் தேவை­யான சகல வச­தி­க­ளு­டனும் கூடிய மூன்று மாடிகள் கொண்ட நான்கு கட்­ட­டங்கள் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் இப்­பா­ட­சாலை ZAM றிபாய் ஹாஜியார் மகா வித்­தி­யா­ல­ய­மாக பெயர்­மாற்றம் செய்­யப்­பட்டு பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பாத்­திமா முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரிக்கு நான்கு மாடிக் கட்­ட­ட­மொன்றும், தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரிக்கு நான்கு மாடிக் கட்­ட­ட­மொன்றும், மக்­கொனை அல் ஹஸ­னியா மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், தர்கா நகர் ஸாஹிரா கல்­லூ­ரிக்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், பேரு­வளை மஹ­கொடை I.L.M ஸம்­ஸுதீன் வித்­தி­யா­ல­யத்­திற்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், அட்­டு­ளு­கமை அல் கஸ்­ஸாலி தேசிய பாட­சா­லைக்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், வியங்­கல்லை முஸ்லிம் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், களுத்­துறை முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரிக்கு மூன்று மாடிக் கட்­ட­ட­மொன்றும், பேரு­வளை மரு­தானை அல் பாஸி­யதுல் நஸ்­ரியா முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரிக்கு கட்­ட­டங்கள் கட்­டு­வ­தற்­கான காணி­யொன்றும், விசா­ல­மான விளை­யாட்டு மைதா­னமும் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் பேரு­வளை மரு­தானை அல் பாஸி­யதுல் நஸ்­ரியா முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரி­யினை ஆரம்­பிக்கும் போது பாட­சா­லைக்குத் தேவை­யான காணி­யினை 1936ஆம் ஆண்டு ZAM றிபாய் அவர்­களின் தந்­தை­யான மர்ஹும் ஸைனுல் ஆப்தீன் மரிக்கார் அவர்கள் அன்­ப­ளிப்­புச்­செய்­தி­ருந்­தமை இங்கு நினை­வு­கூ­றத்­தக்­கது. மேலும் களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள பல முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை ZAM றிபாய் அவர்கள் வழங்­கி­யுள்­ளார்கள்.

ஆன்­மீ­கத்­துறை
சன்­மார்க்க விழு­மி­யங்­க­ளு­டனும், அற­நெ­றி­க­ளு­ட­னும்­கூ­டிய சமூ­க­மொன்றை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் பள்­ளி­வா­சல்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது. அந்­த­வ­கையில் ZAM Trust ஊடாக பேரு­வளை, எலந்­த­கொடை ஷேக் முஸ்­தபா ஜும்ஆ பள்­ளி­வாசல் முழு­மை­யாக கட்­டப்­பட்­ட­தோடு, பேரு­வளை மொல்­லி­ய­மலை ஹிழ்­ரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் வெலிப்­பன்னை மஸ்­ஜிதுன் நபவி ஜும்ஆ பள்­ளி­வாசல் என்­பன புன­ர­மைப்புச் செய்து கொடுக்­கப்­பட்­டன. மேலும் பேரு­வளை மஸ்­ஜிதுல் அப்றார் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் மைய­வாடி நவீ­ன­ம­யப்­ப­டுத்தல் பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யே­தாடு காலத்­திற்குக் காலம் மஸ்­ஜிதுல் அப்றார் பள்­ளி­வா­சலின் புன­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உத­விகள் செய்­யப்­பட்­டுள்­ளன. களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு ZAM றிபாய் ஹாஜியார் அவர்கள் பல்­வேறு நன்­கொ­டை­களை வழங்­கி­வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சுகா­தா­ரத்­துறை
கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சாலை உட்­பட பல வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குத் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளையும், கட்­டட வச­தி­க­ளையும் ZAM Trust அன்­ப­ளிப்­புச்­செய்து வரு­கி­றது.

வீட­மைப்பு
ZAM Trust பேரு­வளை மற்றும் மன்னார் பிர­தே­சங்­களில் நூற்றி ஐம்­ப­திற்கும் மேற்­பட்ட வீடு­களை வறிய மற்றும் தேவை­யு­டை­யோ­ருக்கு அன்­ப­ளிப்புச் செய்­துள்­ளது. குறிப்­பாக மன்னார் பிர­தே­சத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு மீண்டும் தமது பூர்வீக பூமிகளில் மீளக்­கு­டி­யே­றிய குடும்­பங்­க­ளுக்கு வீட­மைப்­புத்­திட்­ட­மொன்று அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்த பேரு­வளை மரு­தானை மக்­க­ளுக்கு மஸ்­ஜிதுல் அப்றார் பள்­ளி­வா­ச­லினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி வீட­மைப்புத் திட்­டத்­தி­றகு ZAM Trust குறிப்­பி­டத்­தக்­க­ள­வி­லான பங்­க­ளிப்­பினை வழங்­கி­யி­ருந்­தது. மேலும் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்குத் தேவை­யான மின்­சார இணைப்பு மற்றும் குழாய்நீர் இணைப்­புக்­களும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மாதாந்த கொடுப்­ப­ன­வுகள்
ZAM Trust மாதந்தம் நாட­ளா­வி­ய­ ரீதியில் தொண்­ணூறு வித­வைகள், மற்றும் அநா­தை­க­ளுக்குத் தேவை­யான நிதி­யு­த­வி­களை வழங்­கி­வ­ரு­வ­துடன், தெரி­வு­செய்­யப்­பட்ட முப்­பது பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்குத் தேவை­யான புல­மைப்­ப­ரி­சில்­களை மாதாந்தம் வழங்­கி­வ­ரு­வ­துடன், வறிய நூறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை மாதாந்தம் தொடர்ந்தும் அன்பளிப்புச் செய்து வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரமழான் மாதத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களும், ஸகாத் உதவித் தொகைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டு சமூகசேவை
ZAM Trust தனிப்பட்ட நிதியமாக இருந்து பல்வேறு சமூகசேவைப்பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில் நாடளாவிய ரீதியில் சமூக சேவைப்பணிகளை மேற்கொண்டு வரு­கின்ற ZAM ZAM Foundation, Fathih Academy போன்ற முன்­னணி சமூக சேவை அமைப்­புக்­க­ளு­டனும் இணைந்தும் செயற்­பட்டு வரு­கின்­றமை விசேட அம்­ச­மாகும். மேலே பட்­டி­ய­லி­டப்­பட்ட சமூக சேவைகள் மட்­டு­மல்­லாது இன்னும் பல்­வே­று­வி­த­மான சமூ­கப்­ப­ணி­களை சமூக முன்­னேற்­றத்­தையும் இறை திருப்­தி­யையும் மாத்­தி­ரமே இலக்­காகக் கொண்டு ZAM Trust மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

மறைவு
தர்மம் தலை­காக்கும் என்­ப­து­போல ZAM றிபாய் அவர்கள் சுமார் 85 வரு­டங்கள் உயிர் வாழ்ந்தார். இன்­றைய கால­கட்­டத்தில் ஒரு மனிதன் ஐம்­பது வய­தினை தாண்­டு­வதே அபூர்­வ­ம­மா­னது. அந்­த­வ­கையில் உற­வி­னர்­க­ளையும், ஏழை­க­ளையும் சேர்ந்து நடந்­த­மை­யி­னாலும், அதி­க­ம­திகம் தர்மம் செய்­த­மை­யி­னாலும் இறைவன் அன்­னா­ருக்கு நீடித்த ஆயுளை வழங்­கி­யி­ருந்தான் எனலாம். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி அதி­கா­லையில் கொழும்பு தனியார் வைத்­தி­ய­சா­லையில் ZAM றிபாய் அவர்கள் கொவிட் 19 தொற்று கார­ண­மாக கால­மானார். இன்னா லில்­லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்­னாரின் ஜனாஸா கிழக்­கி­லங்­கையின் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நக­ரி­லுள்ள விசேட மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

யா அல்லாஹ்! ணுயுஆ றிபாய் ஹாஜியார் அவர்­க­ளது சகல பாவங்­க­ளையும் மன்­னித்து, அன்­னா­ரது சகல சமூக சேவை­க­ளையும் பொருந்­திக்­கொண்டு மேலான ஜென்­னத்துல் பிர்தௌஸ் எனும் சுவ­ன­ப­தியை வழங்­கு­வா­யாக!

“உன் பிறப்பு ஒரு சம்­ப­வ­மாக இருக்­கலாம், ஆனால் உன் இறப்பு ஒரு சரித்­த­ர­மாக இருக்­க­வேண்டும்.” என்ற முன்னாள் இந்­திய ஜனா­தி­பதி டொக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்­க­ளது கூற்­றுப்­படி சரித்­தி­ர­மா­கவே வாழ்ந்து இறந்து போனார் ZAM றிபாய் ஹாஜியார். மண்ணுள் மறைந்தாலும் எண்ணற்ற இதயங்களில் என்றும் வரலாறாய் மலர்ந்துகொண்டிருப்பார் ZAM றிபாய் ஹாஜியார்.- VIdivelli

Leave A Reply

Your email address will not be published.