துபாய்க்கு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

0 354

(எம்.ஐ.அப்துல் நஸார்)
இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், உகண்டா மற்றும் நைஜீ­ரியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து துபாய்க்குப் பய­ணிப்­ப­வர்கள் தமது வரு­கையின் போது கொவிட் -19 பரிசோதனை சான்­றி­தழைச் சமர்ப்­பிக்கத் தேவை­யில்லை, ஆனால் வரு­வ­தற்கு முன்­ன­தாக நுழைவு அனு­ம­திக்­காக பதிவு செய்­தி­ருத்தல் வேண்டும்.

ஐக்­கிய அரபு அமீ­ரக விசா வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு மாத்­திரம் என்ற வகையில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான நுழைவு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என அமீ­ரக விமான நிறு­வனம் அறி­வித்­துள்­ளது, அவர்கள் புறப்­ப­டு­வ­தற்கு குறைந்­தது 48 மணி நேரத்­திற்கு முன்பே அவர்­க­ளுக்கு கொவிட் -19 பரிசோதனை சான்­றிதழ் வழங்­கப்­பட்­டி­ருத்தல் வேண்டும் என டைம்ஸ் ஒப் ஓமான் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

‘கொவிட் பரிசோதனை சான்­றி­தழின் மூலப் பிர­தி­யுடன் QR குறி­யீட்­டி­னையும் இணைத்து வழங்கும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆய்­வ­கங்­க­ளி­லி­ருந்து COVID -19 PCR பரி­சோ­தனை அறிக்­கைகள் மாத்­தி­ரமே ஏற்­றுக்­கொள்­ளப்­படும்’ என விமான நிறு­வனம் மேலும் தெரி­வித்­துள்­ளது. ‘விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 4 மணி நேரத்­திற்கு முன்­ன­தாக பய­ணிகள் தங்கள் COVID -19 PCR பரி­சோ­த­னை­யினை செய்­தி­ருத்தல் வேண்டும்.’
ரெபிட் அன்­டிஜென் சோதனை அறிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. மற்­றொரு PCR பரி­சோ­தனை துபாய்க்கு வந்­த­வுடன் எடுக்­கப்­படல் வேண்டும்.

‘மேற்­படி தேவைப்­பா­டு­க­ளி­லி­ருந்து ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு விலக்­க­ளிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது ஆனால் துபாய்க்கு வந்தவுடன் COVID -19 PCR பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர்’ என அமீரக வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.