உம்ரா ஏற்பாடுகள் தொடர்பில் முகவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு

0 357

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும், உம்ரா பய­ணத்­துக்­காக பதிவு செய்து கொள்­ளு­மாறும் சில உம்ரா பய­ண ­மு­க­வர்கள் பொது­மக்­களை கோரி வரு­வ­தாக அரச ஹஜ் குழு­வுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஆனால் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சு உம்ரா தொடர்பில் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வரை அறி­விப்புச் செய்­ய­வில்லை. அதனால் உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் வழங்­கி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஹஜ் மற்றும் உம்ரா அனு­ம­திப்­பத்­திரம் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இது­வரை எந்­தவொரு முகவர் நிலை­யத்­துக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே உம்ரா பய­ணத்­துக்­கென முகவர் நிலை­யங்­க­ளுக்கு முற்­பணம் செலுத்த வேண்டாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் பொது மக்­களை வேண்­டி­யுள்ளார்.

எவ­ரேனும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு உம்ரா பய­ணத்­துக்­காக பதிவு செய்து கொண்டு முற்­பணம் வழங்­கி­யி­ருந்தால் அரச ஹஜ் குழு அது தொடர்பில் எந்தப் பொறுப்­பி­னையும் ஏற்க மாட்­டாது. சவூதி அரே­பி­யா­வி­ட­மி­ருந்து உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கிடைத்தால் அது தொடர்பில் பொது­மக்கள் தெளிவு படுத்­தப்­ப­டு­வார்கள். அத்­தோடு அதன்­பின்பே உம்ரா முக­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்கும் எனவும் அவர் தெரி­வித்தார்.

இதே வேளை சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சு உலகின் பல நாடு­க­ளுக்கு உம்­ரா­வுக்­கான அனு­ம­தி­யினை வழங்கி நிபந்­த­னை­க­ளையும் விதித்­துள்­ளது. அந்த நாடு­களின் பட்­டி­யலில் இலங்கை உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

சவூதி அரே­பி­யா­வுக்கு உம்ரா பய­ணத்­துக்­காக விஜயம் செய்யும் பய­ணிகள் பைசர், மொடர்னா, அஸ்ட்ரா செனெகா, அல்­லது ஜோன்ஸன் அன்ட் ஜோன்ஸன் கொவிட் 19 தடுப்­பூ­சி­களில் ஏதே­னு­மொன்றில் இரண்டு டோஸ்­க­ளையும் ஏற்றிக் கொண்­டி­ருக்க வேண்டும் எனவும் நிபந்­தனை விதித்­துள்­ளது.

இதே­வேளை சினோபாம் தடுப்­பூசி இரண்டு டோஸ்­க­ளையும் ஏற்றிக் கொண்­டுள்­ள­வர்கள் தடுப்புச் சக்தியை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக மேற்குறிப்பிட் தடுப்பூசிகளில் ஒன்றினை மேலதிகமாக ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சவூதி அரேபியா நிபந்தனை விதித்துள்ளது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.