தடுப்பூசி ஏற்றிக்கொண்டோருக்கு உம்ராவுக்கு அனுமதி: சவூதி

0 613

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தடுப்­பூ­சி­களை ஏற்றிக் கொண்­டுள்ள வெ ளிநாட்­ட­வர்­களை உம்ரா யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சின் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கொவிட் 19 தொற்­றினால் முடக்­கப்­பட்­டி­ருந்த சவூதி அரே­பி­யாவின் பொரு­ளா­தாரம் இதன் மூலம் மீண்டும் வளர்ச்­சி­யுறும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கொவிட் 19 வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்பு பெறும் நோக்கில் சுமார் 18 மாதங்­க­ளுக்கு முன்பு சவூதி அரே­பியா தனது எல்­லை­களை மூடி வைத்­தி­ருந்­தது. பல உலக நாடு­க­ளி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக சவூதி அரே­பி­யா­வுக்கு கிடைத்­து­வந்த கோரிக்­கை­க­ளை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை முதல் சவூதி அரே­பி­யாவின் எல்­லைகள் உம்ரா யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு திறந்து விடப்­பட்­டுள்­ள­தாக சவூதி செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

உம்ரா யாத்­தி­ரை எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் மேற்­கொள்ள முடி­யு­மா­ன­தாகும். உல­கெங்­கு­மி­ருந்து வரு­டாந்தம் மில்­லியன் கணக்­கான மக்கள் உம்ரா யாத்­திரை மேற்­கொள்­வது வழக்­க­மாகும். ஆனால் ஹஜ் யாத்­திரை முஸ்­லிம்­க­ளுக்கு கட­மை­யாகும். ஒவ்­வொரு முஸ்­லிமும் தனது வாழ்வில் ஒரு தட­வை­யேனும் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள வேண்டும்.

கொவிட் 19 வைரஸ் பரவல் முஸ்லிம் யாத்­தி­ரி­கர்கள் பயணம் மேற்­கொள்­வதில் தடை­களை உரு­வாக்­கி­யது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளி­யி­டப்­பட்ட சவூதி அரே­பி­யாவின் அறி­விப்­புக்கு முன்பு சவூதி அரே­பி­யாவில் வசிக்கும் நோய்த் தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கா­த­வர்கள் மாத்­தி­ரமே உம்ரா யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இதே­வேளை கடந்த மாதம் சவூதி அரே­பி­யாவில் வாழும் வெளிநாட்­ட­வர்கள் உட்­பட 60 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே வரு­டாந்த ஹஜ் கட­மைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
என்­றாலும் சவூதி அரே­பியா தடுப்­பூசி ஏற்றிக் கொண்­டுள்ள வெளிநாட்டு உல்­லாசப் பய­ணி­களை கடந்த 1ஆம் திகதி முதல் நாட்­டுக்குள் படிப்­ப­டி­யாக அனு­ம­தித்து வரு­கி­றது. வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சில நிபந்­த­னை­க­ளையும் விதித்­துள்­ளது.
சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தரும் வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் பய்சர், அஸ்ட்ரா செனெக்கா, மொடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்ஸன் தடுப்­பூ­சி­களில் ஏதே­னு­மொன்றில் 2 டோஸ்­களை பெற்­றி­ருக்க வேண்டும். அத்­தோடு தேவை­யேற்­பட்டால் தனி­மைப்­ப­டுத்­தலில் இருக்க வேண்டும் என பிரதி ஹஜ் அமைச்சர் அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் தெரி­வித்தார்.

ஒவ்­வொரு நாட்­டி­லி­ருந்தும் எத்­தனை எண்­ணிக்­கை­யானோர் யாத்­திரை மேற்­கொள்ள முடியும், எந்­தெந்த நாடு­க­ளி­லி­ருந்து வருகை தர முடியும் என்­பதை ஒவ்­வொரு நாட்­டி­னதும் கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்றைக் கருத்­திற்­கொண்டு தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் என சவூதியின் பிரதி ஹஜ் அமைச்சர் தெரி­வித்தார்.

கொவிட் 19 வைரஸ் பரவல் கார­ண­மாக உல­க­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் தமது சமய கட­மை­களை மேற்­கொள்ள முடி­யாது பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பெரும்­பா­லானோர் பல வரு­டங்­க­ளாக இதற்­காக காத்­தி­ருந்­தார்கள்.
‘உம்ரா யாத்­தி­ரைக்கு மீண்டும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை உம்ரா யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு நிவா­ர­ண­மா­க­வுள்­ளது’ என எகிப்தைச் சேர்ந்த அஹமட் ஹமட்னா தெரி­வித்­துள்ளார். இதே­வேளை அவுஸ்­தி­ரே­லி­யாவை வதி­வி­ட­மாகக் கொண்ட பொறி­யி­ய­லாளர் மொஹமட் ரகாப், ‘தான் உம்ரா யாத்­திரை மேற்­கொள்ள தொடர்ந்தும் தயங்­கு­வ­தாகக் கூறி­யுள்ளார்.

மக்­காவில் மக்கள் கூட்­ட­மாக இருப்­பார்கள். அதனால் கொவிட் 19 வைரஸ் தொற்­று­வ­தற்­கான வாய்ப்பு அதிகம் உள்­ளது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
சவூதி அரே­பி­யாவின் செய்திச் சேவையின் அறிக்­கையின் படி சவூதி அரே­பியா ஒவ்­வொரு மாதமும் 60ஆயிரம் உம்ரா யாத்­தி­ரி­கர்­களை அனு­ம­திக்கும் இவ்­வெண்­ணிக்கை படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கலாம். மாதம் 2 மில்­லியன் யாத்­தி­ரி­கர்கள் அளவில் அதி­க­ரிக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாத்­தி­ரி­கர்­களை அனு­ம­திப்­பது சவூதி அரே­பி­யாவின் புனித தலங்­களின் பொறுப்­பா­ளர்­க­ளான சவூதி ஆட்­சி­யா­ளர்­களின் கௌர­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாகும். புனித தலங்கள் ஆட்­சி­யா­ளர்­களின் மிகவும் பலம் வாய்ந்த அர­சியல் மூல­மாகும்.
2019 செப்­டெம்பர் மாதத்­துக்கும் 2020 மார்ச் மாத்­துக்­கு­மி­டையில் சவூதி அரே­பியா 400,000 உல்­லாச பயண விசாக்­களை வழங்­கி­யது என்­றாலும் அதன் பின்பு கொவிட் தொற்று கார­ண­மாக சவூதி அரே­பி­யாவின் எல்­லைகள் மூடப்­பட்­டன.

சவூதி அரே­பியா தேசிய ரீதியில் கொவிட் தடுப்­பூசி ஏற்றும் திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­தி­யுள்­ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதென்றால் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டயமாகும். அத்தோடு கல்வி நிலையங்களில் பங்குபெறுபவர்கள், பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துபவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது அவசியமாகும்.

சவூதி அரேபியாவில் சுமார் 532000 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 8300ற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன. முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற 2019ஆம் ஆண்டு 2.5 மில்லியன் மக்கள் ஒன்றுகூடினார்கள்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.