இஷாலினி விவகாரத்தில் திட்டமிட்ட பொய்ப் பிரசாரம்

நீதிமன்றில் நிரூபிப்போம் என்கிறார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

0 917

ஏ.ஆர்.ஏ. பரீல்

ரிசாத் பதி­யுதீன் வீட்டில் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி மர­ணித்த இஷா­லி­னியின் மரணம் தொடர்பில் ஆரம்­பத்தில் சாதா­ரண விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. ஆனால் அர­சியல் அழுத்­தங்கள் கார­ண­மாக தற்­போது விசா­ர­ணைகள் வேறு திசைக்குத் திரும்­பி­யுள்­ளது.
இஷாலினியின் தாயாரின் பின்­ன­ணியில் சில சக்­திகள் இதற்­காக செயற்­ப­டு­கின்­றன. அவர்கள் யார் என்­பதை நாம் இனங்­கண்­டுள்ளோம். நீதி­மன்றில் நாம் அவர்­களை உறு­திப்­ப­டுத்­துவோம் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.
ஊடகவியளாலர் சமுதித்தவுக்கு  வழங்­கிய நேர்­கா­ண­லொன்­றிலே அவர் இவ்­வாறு கூறினார்.

ரிசாத் பதியுதீனுடனான உங்கள் தொடர்புகள் என்ன? நீங்கள் அவரது உறவினரா?
நான் பல்­வேறு வகையில் ரிஷாத் பதி­யு­தீ­னுடன் தொடர்­பு­பட்­டுள்ளேன். நான் அவ­ரது அர­சியல் கட்­சியின் சட்ட ஆலோ­சகர். அவ­ரது குடும்­பத்தின் சட்ட ஆலோ­சகர். இஷா­லி­னியின் மரணம் தொடர்­பான சட்­டத்­த­ர­ணிகள் குழுவில் நானும் ஒரு உறுப்­பினர். ரிஷாத் எனது உற­வி­ன­ரல்ல. ரிசாத் பதி­யு­தீனை 2002 லிருந்து எனக்குத் தெரியும். அவ­ரது கட்சி நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­படுகிறேன்.

ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இறந்தார் எனக் கூறப்படுகிறது. சமூகத்தில் பேசப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது விசாரணையின் பின்பே தெரியவரும். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
இஷா­லி­னியின் மரணம் தொடர்பில் ஆரம்­பத்தில் சாதா­ரண விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. சம்­பவம் இடம்­பெற்ற ஜூலை 3ஆம் திகதி பொரளை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். விசா­ர­ணையின் போது குற்­ற­வியல் விசா­ர­ணைப்­பி­ரி­வி­னரும் வந்­தனர். கைரேகை அடை­யாள நிபுணர்கள் வந்­தனர். இர­சா­யன பகுப்­பாய்வு அதி­கா­ரி­களும் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டனர். தெற்கு குற்­ற­வியல் விசா­ரணை பிரிவு அதி­கா­ரிகள் வந்­தார்கள். இந்த விசா­ர­ணைகள் சம்­பவம் நடந்த தினத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்­டன.
அன்­றி­லி­ருந்து விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் சில தினங்­களின் பின்பு விசா­ரணை வேறு திசைக்கு திரும்­பி­யது. இரண்டு தினங்­களின் பின்பு இந்­நிலை ஏற்­பட்­டது. விசா­ரணை அர­சி­ய­லுக்கு திருப்­பப்­பட்­டது. அர­சியல் நோக்­குடன் சிலர் இதில் தலை­யிட்­டார்கள். பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் திகாம்­பரம் சென்றார். மனோ கணேசன் சென்றார். வடிவேல் சுரேஷ், இரா­தா­கி­ருஷ்ணன் என்போர் ஆர்ப்­பாட்­டங்­களில் தொடர்­பு­பட்­டனர். இவர்­க­ளுக்­கி­டையில் அர­சியல் போட்­டி­யேற்­பட்­டது. இந்த விவ­கா­ரத்தை யார் சரி­யாக செய்­கி­றார்கள் என்­பதை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்­க­ளுக்­குள்­ளேயே போட்­டி­யேற்­பட்­டது.

தற்போதைய விசாரணைகள் தொடர்பில் உங்களுக்கு சந்தேகமுள்ளதா?
விசா­ரணை நடத்­தப்­படும் முறை தொடர்பில் எமக்கு பிரச்­சினை உள்­ளது. சந்­தே­க­முள்­ளது. ஆரம்ப விசா­ர­ணைகள் முறை­யாக நடத்­தப்­பட்­டது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யுள்­ளது. அதன்­பின்பு நடை­பெறும் விசா­ர­ணை­களில் சில தரப்­பினர் சமூக ஊட­கங்கள் என்­பன அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கின்­றனர். ஊட­கங்­களில் கருத்து தெரி­விக்­கு­மாறு என்னை ரிஷாத் பதி­யுதீன் வேண்­டிக்­கொள்­ள­வில்லை. ரிஷாதின் அர­சியல் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள், கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களே என்னை வேண்­டிக்­கொண்­டார்கள். இவ்­வி­வ­கா­ரத்தில் சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்­பது மக்­களின் பொது­வான அபிப்­பி­ரா­ய­மாக உள்­ளது.

சிறுமியின் மரணத்தின் பின்பு ரிசாத் பதியுதீனை சந்தித்தீர்களா? ரிசாதை அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சிக்கப்படுகிறதா?
இஷா­லி­னியின் மர­ணத்தின் பின்பு நான் ரிஷாத் பதி­யு­தீனை சி.ஐ.டி.க்குச் சென்று சந்­திக்­க­வில்லை. அவர் தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த போது அங்கு சென்றேன். ஆனால் சந்­திக்கும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. அவ­ருடன் தொலை­பே­சி­யூ­டா­க­வா­வது பேசு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை. இஷா­லி­னியின் சம்­ப­வத்தில் ரிசாதை சம்­பந்­தப்­ப­டுத்தி அவரை அர­சி­ய­லி­லி­ருந்து ஓரங்­கட்ட வேண்டும். பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் பலர் இருக்­கி­றார்கள். அத்­தோடு அவ­ருடன் குரோ­த­மாக செயற்­ப­டு­ப­வர்கள் உள்­ளார்கள். சம­யத்­துக்கு எதி­ரான தரப்­பினர் இருக்­கி­றார்கள்.
ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரா­ன­வர்கள் அர­சாங்­கத்­திலும் இருக்­கி­றார்கள். அமைச்­சர்கள் உள்­ளார்கள். அவர்கள் இது­பற்றி பேசியும் உள்­ளார்கள். குரோ­த­மாக அவர்கள் பேசு­வதை எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது.

ரிசாதின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்ததும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்ததும் நாடகமொன்றா?
ரிஷாத்தின் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 20ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக கையு­யர்த்­தி­யதும் கம்­மன்­பி­லவின் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்­ததும் நாட­க­மல்ல. அவர்­க­ளுக்கு சுயா­தீ­ன­மாக செயற்­பட முடியும். அவர்­க­ளுக்கு எதி­ராக கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சிக்கு வாக்­க­ளித்த மக்கள் இவர்­க­ளுக்கு எதி­ரா­கவே பேசி­யுள்­ளார்கள். கண்­டனம் தெரி­வித்­துள்­ளார்கள்.
ரிஷாத் பதி­யு­தீனை நான் சி.ஐ.டி.யில் இரு தட­வைகள் சந்­தித்­துள்ளேன். அப்­போது ரிஷாத் பதி­யுதீன் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கட்­சியின் தீர்­மா­னத்தை எழுத்து மூலம் அறி­விக்­கும்­படி என்னை வேண்­டிக்­கொண்டார். கட்­சியின் தீர்­மா­னத்தை மீற வேண்டாம் என்று அறி­விக்­கும்­ப­டியும் கூறினார். கட்­சியின் அர­சியல் உயர் பீடம் அவர்­க­ளுக்கு அறி­வித்த போதும் அவர்கள் கட்­சியின் தீர்­மா­னத்­தையும் மீறி வாக்­க­ளித்­தார்கள்.

இஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?
இஷா­லி­னியின் மரணம் தொடர்பில் அவர் வாழ்ந்த சூழல் பற்றி ஆராய்ந்து கூற­வ­தென்றால் இது ஒரு கொலை­யல்ல. குறிப்­பாக பிரேத பரி­சோ­தனை அறிக்கை மற்றும் நீதி­மன்ற அறிக்­கை­யின்­படி இது கொலை­யல்ல. சிலர் இது தொடர்பில் முறைப்­பாடு செய்­த­தன் பின்பே விசா­ர­ணைகள் மீண்டும் ஆரம்­பத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இஷா­லினி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது வாக்­கு­மூ­ல­மொன்று டாக்­ட­ருக்கு வழங்­கி­யுள்ளார். அதில் தற்­கொலை செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­ட­தாகக் கூறி­யுள்ளார். அத­னா­லேயே பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூலம் பெறாமல் இருந்­தி­ருக்­கலாம். இஷா­லினி அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சுய­நி­னை­வுடன் இருந்­த­தாக டாக்­டரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்சம்பவம் மூடி மறைக்க முயற்சிக்கப்படுகிறதா?
ரிஷாத் பதி­யுதீன் தரப்­பி­னரோ அல்­லது நானோ இந்தச் சம்­ப­வத்தை மூடி­ம­றைக்க வேண்­டிய தேவை இல்லை. அவ்­வாறு ஒரு­போதும் முயற்­சிக்­க­வு­மில்லை. சுயா­தீன விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் நிலை­மையே இன்றும் உள்­ளது.

இஷாலினியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளாமை சந்தேகத்துக்குரியதாக உள்ளதல்லவா?
இஷா­லினி தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி மர­ணிக்கும் வரை 12 நாட்­க­ளுக்குள் பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூலம் பெறாமை சந்­தே­கத்­துக்கு இட­மென்றால் அது தொடர்பில் விசா­ரணை நடத்­தலாம். அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சுய­நி­னை­வுடன் இருந்­த­தாக டாக்­டரின் வைத்­திய அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கட்டில் அட்­டை­யுள்­ளது. B அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதை நான் கண்டேன். அவ்­வ­றிக்­கை­யி­லும் அவர் அனு­ம­தி­யின்­போது சுய­நி­னை­வுடன் இருந்­த­தா­கவும் பேசக்­கூ­டிய நிலையில் இருந்த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சம்பவம் 6.20க்கு இடம்பெற்றுள்ளது. ஆனால் வைத்தியசாலைக்கு 8.30க்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஏன் இந்த தாமதம்-?
இந்தச் சம்­பவம் 6.20க்கு இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­வது தவறு. 6.45க்கே இடம்­பெற்­றுள்­ளது. அதற்கு சி.சி.ரி.வி. பதிவு ஆதா­ர­மாக உள்­ளது. 7.01க்கு 1990க்கு (அம்­புலன்ஸ்) அழைப்பு விடுக்­கப்­பட்­டது. 7.10க்கு அம்­பி­யுலன்ஸ் வந்­தது. ஆனால் 8.30க்கே வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தவ­றான பிர­சா­ர­மாகும். 1990ஐ அழைத்த பதிவு உள்­ளது. அம்­பி­யுலன்ஸ் அறிக்கை உள்­ளது. இவற்றை எவ­ராலும் மறைக்க முடி­யா­தல்­லவா? இது தொடர்பில் நீதி­மன்­றுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. என்­றாலும் ஊட­கங்கள் எதிர்­த­ரப்பின் கருத்­துக்­க­ளையே பிர­சாரம் செய்­கின்­றன.

ரிசாதின் மாமனார் இஷாலினியின் பெயரை வைத்தியசாலைக்கு இஷானி என்று ஏன் வழங்கியுள்ளார்?
இஷா­லி­னியின் பெயரை இஷானி என வைத்­தி­ய­சா­லைக்கு ரிசாதின் மனை­வியின் தந்தை கூறி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் பெயர் வைத்­தி­ய­சா­லையில் எவ்­வாறு எழு­தப்­பட்­டது என்­பது எமக்குத் தெரி­யாது. பெயரில் ஒரு எழுத்து தவ­ற­வி­டப்­பட்­டுள்­ள­மையா இங்­குள்ள பாரிய பிரச்­சினை? ரிசாத் வீட்டில் இஷானி என்றே அழைத்­தி­ருக்­கி­றார்கள். அந்தப் பெயரே வைத்­தி­ய­சா­லைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

சிறுமிக்கு ரிஷாதின் வீட்டில் அநியாயங்கள் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப் பட்டுள்ளதே?
இஷா­லி­னிக்கு ரிசாத்தின் வீட்டில் ரிசாத்தின் மனைவியினால் அநி­யா­யங்கள் செய்­யப்­பட்­ட­தா­கவும், அவ­ரது தலை கழி­வறை கொமட்­டுக்குள் திணிக்­கப்­பட்ட­தா­கவும் யார் கூறி­னார்கள்? அதை கண்­ட­வர்கள் யார்? அந்தப் பிள்ளை இருந்த அறை பற்றி தவ­றான கருத்தே தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறை நாய் கூண்டு என்று கூற முடி­யுமா? பத்­தி­ரி­கை­க­ளிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இஷாலினியின் அறை வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்ததா?
இஷா­லி­னியின் அறை வீட்­டுக்கு வெளியே அமைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ரிசாதின் வீடு சுற்­று­வர மதில் கட்­டப்­பட்­ட­தாகும். வீட்டின் சமை­ய­ல­றைக்கும் இஷா­லி­னியின் அறைக்­கு­மி­டையில் மத்­தியில் கதவு ஒன்று உள்­ளது. இத­னா­லேயே வீட்­டுக்கு வெளியே அந்த அறை உள்­ள­தாகக் கூறு­கி­றார்கள். அறையில் காற்­றாடி இருக்­க­வில்லை, மின் இணைப்பு இருக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­வது முழு­மை­யாக பொய்­யா­ன­தாகும். ஊட­கங்­களே இவ்­வாறு பொய் பிர­சாரம் செய்­கின்­றன.
வீட்­டுக்குள் மண்­ணெண்ணெய் இருந்­த­தா­கவும், லைட்டர் இருந்­த­தா­கவும் பெரிது படுத்­தப்­ப­டு­கி­றது. வீடு­களில் இவை பாவிக்­கப்­ப­டு­கின்­றன. மண்­ணெண்­ணெயை ரிசாத் வீட்­டாரால் மறைத்­தி­ருக்க முடி­யு­மல்­லவா? அவ்­வாறு இடம்­பெ­ற­வில்லையே.

ரிசாதின் வீட்டில் தனக்கு அடிப்பதாக சிறுமி தொலைபேசியூடாக தாயாருக்கு தெரிவித்துள்ளார்.தாயார் 3 நாட்களில் வருவதாக கூறியுள்ள நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது சந்தேகத்துக்கு உரியதல்லவா?
இஷா­லினி தனக்கு ரிசாதின் வீட்டில் அடிப்­ப­தாக தனது தாயா­ருக்கு தொலை­பே­சி­யூ­டாக தெரி­வித்­த­போது தாயார் தான் அங்கு வரு­வ­தாக தெரி­வித்து 3 நாட்­களில் அவர் தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்டார் என்று கூறு­வது சந்­தே­கத்­துக்கு உரி­யது தான். நாமும் சந்­தே­கப்­ப­டு­கிறோம். இதற்கு சுயா­தீன விசா­ரணை நடத்­தப்பட் வேண்டும் என்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் இந்த தொலை­பேசி உரை­யாடல் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தனக்கு அடிக்­கி­றார்கள் என்று கூறி­யி­ருந்தால் அதுவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
பிள்­ளையின் தாயார் ஆரம்­பத்தில் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூல­மொன்று அளித்­துள்ளார். ஆனால் தற்­போது அவர் ஊடக மாநா­டு­களில் வேறு­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கிறார். இதன் பின்­ன­ணியில் யார் இருக்­கி­றார்கள்? இந்த ஊடக மாநா­டு­களை யார் நடாத்­து­கி­றார்கள்? என்­பதை நாம் நீதி­மன்றில் தெரி­விப்போம்.
இஷா­லினி தற்­கொலை செய்து கொண்­டாரா? அதற்­கான காரணம் என்ன? அது தொடர்­பான சுயா­தீன விசா­ர­ணையை நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் சந்­தேகம் ஏற்­ப­டு­வது சாதா­ர­ண­மா­ன­தாக இருக்க வேண்டும்.
இஷா­லி­னியின் தாயார் இப்­போதே சந்­தே­கங்­களை வெளி­யி­டு­கிறார். ஆரம்­பத்தில் வெளி­யி­ட­வில்லை. தாயாரின் பின்­ன­ணியில் இருந்து செயற்­ப­டு­ப­வர்­களை இனங்­காணும் முயற்­சியில் நாம் ஈடு­பட்­டுள்ளோம். அவ்­வா­றா­ன­வர்­களை என்னால் இப்­போது பெய­ரிட்டு கூற­மு­டி­யாது.
ரிசாதை மாத்­தி­ர­மல்ல எவ­ரையும் சந்­தே­கிக்க முடியும். பல வழக்­கு­களில் பலர் சந்­தேக நபர்­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வி­வ­கா­ரத்தில் ரிசாத் சந்­தேக நப­ராக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

ரிசாதின் வீட்டிர் 11 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள். இருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவிக்கிறார்களே?
ரிசாதின் வீட்டில் 11 பெண்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள் என்று கூறப்­ப­டு­வது எப்­ப­டி­யென்று தெரி­ய­வில்லை இதை பொலி­ஸாரே தெரி­விக்க வேண்டும். இதனை நான் முழு­மை­யாக மறுக்­கிறேன். தரகர் சங்­கரின் மகளும் ரிசாதின் வீட்டில் வேலை செய்­துள்ளார். இந்த வீட்டில் பணி­பு­ரிந்த எவரும் இவ்­வா­றான நிலை­மைக்கு உள்­ளா­க­வில்லை. இருவர் கொலை செய்­யப்­பட்­டார்கள் என்றால் அவர்கள் எங்கு? எவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டார்கள் என்று தெரி­விக்­கப்­பட வேண்டும். ஊட­கங்­களே தவ­றான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கின்­றன. ஊட­கங்­க­ளுக்கு இவ்­வா­றான தவ­றாக பிர­சா­ரங்­களை வழங்க சில தரப்­பினர் உள்­ளனர். அனு­ச­ரணை வழங்­கு­கி­றார்கள். இது சூழ்ச்­சி­யாகும். இவர்கள் யார் என்­பதை நாம் வெளிப்­ப­டுத்­துவோம். அதற்­கான சாட்­சி­யங்கள் உள்­ளன. நீதி­மன்ற விசா­ர­ணையின் போது இவை வெளிப்­ப­டுத்­தப்­படும். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கு­ப­வர்கள் இருக்­கி­றார்கள். தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன.

ரிசாதின் சகோதரர் மொஹமட் ஹனீப் 2007 இலிருந்து 2016வரை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன அல்லவா?
ரிசாதின் மொஹமட் ஹனீப் என்ற சகோ­தரர் 2007 இலி­ருந்து 2016 வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­பட்­ட­தாக ஊடகங்கள் தெரி­விப்­பது பச்சைப் பொய்­யாகும். ரிசா­துக்கு இந்தப் பெயரில் சகோ­தரர் ஒருவர் இல்லை. இது தவ­றான செய்­தி­யாகும். டாக்டர் ஷாபியின் கருத்­தடை விவ­காரம் போன்ற பொய்­யான பிர­சா­ரமே இது. இப்­படி பொய்­யான செய்­திகள் வெளி­யி­டு­வது தவறு. இதற்காக நாம் நீதிமன்றம் செல்வோம். அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.

இஷாலினியின் தாயார் தனது மகள் எவருடகும் தொடர்பு வைத்திருக்கவில்லை எனக் கூறியுள்ளாரே?
எந்­த­வொரு தாயாரும் தனது மகள் எவ­ரு­டனும் தொடர்பு வைத்­தி­ருக்­க­வில்லை என்றே கூறுவார். இதற்கு இஷா­லி­னியின் தாயார் விதி­வி­லக்­கல்ல. அனைத்து விட­யங்­களும் பூரண விசா­ர­ணை­களின் பின்பே உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
சுயா­தீ­ன­மான சாதா­ர­ண­மான விசா­ரணை நடாத்­தப்­பட வேண்டும். ஆனால் இஷா­லி­னியின் தாயார் ஊடக மாநா­டு­களில் முஸ்­லிம்கள் பற்­றியே கூறு­கிறார். பிரேத பரிசோதனை நடத்தியவர் முஸ்லிம் என்கிறார். முஸ்­லிம்கள் என்­பதால் தனக்கு நம்­பிக்­கை­யில்லை என்று தெரி­விக்­கிறார்.
ஊட­கங்கள் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வரு­கின்­றன. ரிசாத்­தி­டமோ, மனை­வி­யி­டமோ சட்­ட­வி­ரோ­த­மான காணி உறு­திகள் இல்லை. சட்­ட­வி­ரோ­த­மாக அவர் காணி­களைப் பெற்றுக் கொள்­ள­வு­மில்லை.

ரிசாத் பதியுதீனும் அவரது சகோதரர் ரியாஜும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதல்லவா?
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ரிசாத் பதி­யு­தீ­னுக்கும், ரியாஜ் பதி­யு­தீ­னுக்கும் எந்த தொடர்­பு­மில்லை. நான் பொறுப்­புடன் கூறு­கிறேன். இத்­தாக்­குதல் தொடர்­பி­லான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கை­களை வாசித்துப் பார்த்தால் இது தெளி­வாக விளங்கும். ஒரு­வ­ருடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­தற்­காக இவ்­வாறு குற்றம் சுமத்த முடி­யாது.
இவர்கள் இரு­வ­ரையும் விட இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் இருக்­கி­றார்கள். ஆணைக்­குழு அறிக்­கை­யிலும் இது குறிப்­பிடப்­பட்­டுள்­ளது. அவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள். சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்காகவே ரிசாத், ரியாஜ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.