வர­லாற்றில் ஹஜ்ஜை பாதித்த தொற்று நோய்கள்

0 2,250

தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்

மக்­காவில் உள்ள புனித பள்­ளி­வா­ச­லுக்கு மேற்­கொள்­ளப்­படும் யாத்­திரை ஹஜ். நீண்ட தூரங்­களில் வாழும் மக்கள் இப் புனித கட­மையை நிறை­வேற்ற வரு­வது பழ­மை­யான வழக்­க­மாகும். மேலும் உல­க­ளவில் வரு­டாந்தம் நிகழும் மிகப்­பெ­ரிய சமய ஒன்­று­கூ­டல்­களுள் இதுவும் ஒன்­றாகும்.

தற்­போ­தைய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பர­வ­லுக்கு முன்னர், வர­லாறு நெடு­கிலும் பல்­வேறு தொற்று நோய்­களால் ஹஜ் கட­மைக்கு பல்­வேறு இடர்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. சில சந்­தர்ப்­பங்­களில் புனித மக்கா நக­ரத்­திற்கு ஹஜ் கட­மைக்குச் செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது, சில சந்­தர்ப்­பங்­களில் ஹஜ் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட யாத்­தி­ரி­கர்­க­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.

மக்கா நகர மக்­களும், யாத்­தி­ரி­கர்­களும் தொற்று நோய்­களால் பாதிக்­கப்­பட்­டனர். மக்­காவில் வர­லாற்று ரீதி­யாக பதிவு செய்­யப்­பட்ட முத­லா­வது தொற்று தொடர்பில் பிர­பல முஸ்லிம் அறி­ஞரும் வர­லாற்­றா­சி­ரி­ய­ரு­மான இப்னு கதீர் தனது ‘அல்-­பித்யா வன்-­நி­ஹாயா’ (ஆரம்பம் மற்றும் முடிவு) என்ற புத்­த­கத்தில் ‘‘ 968 ஆம் ஆண்டு அல்-­மஷ்ரி என அழைக்­கப்­படும் ஒரு தொற்­றுநோய் மக்கா நக­ரத்தைத் தாக்­கி­யது. இதனால் யாத்­தி­ரி­கர்­கர்கள் பலர் உயி­ரி­ழந்­த­தோடு அவர்­க­ளது ஒட்­ட­கங்­களும் கொல்­லப்­பட்­டன. ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றி­ய­வர்­களும் அத­னை­ய­டுத்து இறந்­தனர் ’’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்தக் கால­கட்­டத்தில், நோய் அல்­லது பிற நோய்­களால் ஏற்­பட்ட மோச­மான சமூக மற்றும் பொரு­ளா­தார சூழ்­நி­லைகள் கார­ண­மாக குறிப்­பாக தொற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளி­லி­ருந்து பிற்­கா­லத்தில் யாத்­தி­ரி­கர்­களின் வருகை குறிப்­பி­டத்­தக்க அளவில் வீழ்ச்சி கண்­ட­தாக பல வர­லாற்­றா­சி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.
19 ஆம் நூற்­றாண்டில் அறி­மு­க­மான புதிய போக்­கு­வ­ரத்து வழி­மு­றைகள் கார­ண­மாக உல­கெங்­கிலும் உள்ள பெரிய குழுக்கள் ஹஜ்­ஜுக்கு வரு­வது எளி­தா­கி­யது, இதனால் நோய்கள் பரவும் வாய்ப்பும் வேக­மா­கி­ய­தோடு அதனைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலையும் ஏற்­பட்­டது.

அதே நூற்­றாண்டில் தொற்­று­நோய்­களால் பல பாதிப்­புக்கள் ஏற்­பட்­டன. உல­கெங்­கிலும் பல்­வேறு நோய்கள் பரவி மில்­லியன் கணக்­கா­ன­வர்­களைக் கொன்­றதால் உல­க­ளா­விய ரீதியில் மக்­களின் ஆயுள் எதிர்­பார்க்கை வெறு­மனே 29 வய­தாக குறைந்­தது. ஹிஜாஸ் பிராந்­தியம் தொற்று நோயால் குறிப்­பாக கொலரா தொற்று நோயினால் பெரும் பாதிப்பை எதிர்­கொண்­டது. இத் தொற்று இந்­திய யாத்­தி­ரி­கர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அந்தப் பகு­தியில் ஏற்­பட்­டது.

ஹிஜாஸ் பிராந்தியத்தில் கொலரா பரவியபோது…

தனி­மைப்­ப­டுத்­தலின் செயல்­தி­றனைப் பற்றி முஸ்­லிம்கள் நீண்ட கால­மாக அறிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். ஏனென்றால் ‘நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அங்­கி­ருந்து வெளி­யே­றா­தீர்கள்; அது ஒரு குறிப்­பிட்ட தேசத்தில் பர­வு­வ­தாக நீங்கள் கேள்­விப்­பட்டால், அந் நிலத்­திற்குள் நுழைய வேண்டாம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்­ப­த­னா­லாகும். உஸ்­மா­னிய பேர­ரசு காலத்தல் எகிப்து போன்ற நாடு­க­ளுக்கு தொற்று நோய்­க­ளுள்ள சில நாடு­க­ளி­லி­ருந்து எவ­வே­ரனும் திரும்பி வந்­தால் அவர்கள் பெரும்­பாலும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டனர்.
எனினும், அக்காலத்தில் தனி­மைப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கைகள் பர­வ­லான பொது சுகா­தாரக் கொள்­கையின் ஒரு பகு­தி­யாக இருக்­க­வில்லை. உல­க­ளா­விய நோய்ப் பரவல் தொடர்பில் உலகம் அறிந்­தி­ருக்­க­வில்லை. பிளேக் போலல்­லாமல், கொலரா முற்­றிலும் புதிய நோயாகும். அது தொடர்பில் உலக மக்­க­ளுக்கு மிகக் குறைந்­த­ளவு அறிவே காணப்­பட்­டது.

கொலரா மக்­கா­வுக்குச் செல்லும் பாதை­களை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கி­யது. குறிப்­பாக சுயெஸ் கால்வாய் திறக்­கப்­பட்ட பின்னர், கப்­பல்கள் மற்றும் ரயில்வே வழி­யாக கொலரா நோய் பர­வு­வ­தற்கு வாய்ப்பு ஏற்­பட்­டது. ஹிஜா­ஸுக்குள் நுழை­வ­தற்கு முன்னர் சுயெஸ் கால்­வா­யிலோ அல்­லது செங்­க­ட­லிலோ 15 நாட்கள் தனி­மைப்­ப­டுத்­தலில் இருக்­கு­மாறு யாத்­தி­ரி­கர்கள் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இந்த நோய் முதன்­மு­தலில் 1821 இல் அரே­பிய தீப­கற்­பத்தில் தோன்­றி­யது. எனினும், இது 1831 ஆம் ஆண்டு வரை ஹிஜாஸை வந்­த­டை­ய­வில்லை. இது மக்­காவில் முதன்­மு­றை­யாக பர­வி­ய­போது, அந்த நேரத்தில் வந்த யாத்­தி­ரி­கர்­களுள் நான்கில் மூன்று பகு­தி­யினர் இறந்­தனர். ‘இந்­திய தொற்­றுநோய்’ என்று அழைக்­கப்­பட்ட இந் தோய் மிக வேக­மாகப் பர­வி­யது.

1831 ஆம் ஆண்டு மக்­காவில் பர­விய கொலரா கார­ண­மாக 20,000 பேர் கொல்­லப்­பட்­ட­தா­கவும், அடுத்­த­டுத்த தொற்­று­நோய்கள் புனித நக­ரத்தின் பகு­தி­க­ளுக்கு 1841, 1847, 1851, 1856–-57, மற்றும் 1859 ஆகிய ஆண்­டு­களில் பர­வி­ய­தாக இண்­டி­யானா யுனி­வர்­சிட்டி பிரஸ் வெளி­யிட்­டுள்ள ‘தெற்­கா­சி­யாவில் சுகா­தார வர­லா­றுகள்’ (Histories of Health in South Asia) என்ற புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்து.

உஸ்­மா­னிய பேர­ரசு 1840 ஆம் ஆண்டில், தனி­மைப்­ப­டுத்­தலை அமுல்­ப­டுத்­தி­யது. எல்லைக் கட­வை­க­ளிலும் புனித பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அரு­கி­லுள்ள நக­ரங்­க­ளிலும் பய­ணி­களை நிறுத்­து­வ­தற்­கான ஏற்­பாடும் செய்­யப்­பட்­டது.

இவ்­வா­றான தொற்று நோய் அச்­சு­றுத்­தல்­களை குறைப்­ப­தற்­காக 1895 ஆம் ஆண்டு, மக்­காவில் முத­லா­வது சுகா­தாரப் பணி­யகம் நிறு­வப்­பட்­டது. முதலில் சுகா­தார நிலை­மை­களின் வளர்ச்­சி­யு­டனும், பின்னர் தடுப்­பூ­சிகள் மற்றும் நுண்­ணுயிர் எதிர்ப்புச் செயற்­பா­டுகள் போன்ற எதிர்­வி­ளை­வு­க­ளு­டனும், படிப்­ப­டி­யாக, உலகம் எதிர்­நோக்­கிய தொற்­றுநோய் வெகு­வாகக் குறைந்­தது.

1950 களின் முற்­ப­கு­தியில், சவூதி அரே­பியா, ஜித்தா நக­ருக்கு வெளியே யாத்­தி­ரி­கர்­க­ளுக்­காக ஒன்­று­சே­ரு­மி­ட­மொன்றை நிர்­மா­ணித்­தது. பின்னர் இது மன்னர் அப்துல் அஸீஸ் வைத்­தி­ய­சா­லை­யாக மாற்­ற­ம­டைந்­தது.

கொவிட்-19 சுகா­தார நெருக்­க­டியைக் கையாள்­வதில் சவூதி அரே­பி­யாவின் சர்­வ­தேச அளவில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வெற்­றிக்கும், 1865 இல் கொலரா கார­ண­மாக பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இறந்­த­தற்கும் இடையில், நோயை நிர்­வ­கிப்­பதில் 95 ஆண்­டு­க­ளுக்கும் மேலான அனு­ப­வத்தை சவூதி அரே­பியா பெற்­றுள்­ளது.

‘சவூதி அரே­பியா பொது சுகா­தா­ரத்­து­றையில் விரி­வான அனு­ப­வத்தைப் பெற்­றுள்­ளது, குறிப்­பாக பல ஆண்­டு­க­ளாக ஹஜ் மற்றும் உம்ரா பருவ காலங்­களில் ஏரா­ள­மான யாத்­தி­ரி­கர்­களை வர­வேற்­கின்­றது’ என தொற்று நோய் வைத்­திய நிபு­ணரும் ஜித்­தா­வி­லுள்ள மன்னர் பஹத் உள்­ளக மருத்­துவத் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரு­மான டாக்டர் வாயென் பஜாமூம் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் வர­லாற்றைப் பொறுத்­த­வரை கூட்­டங்­களை நிர்­வ­கிப்­ப­திலும் நோய்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­திலும் நவீன சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் குறிப்­பி­டத்­தக்க அனு­ப­வத்தைக் கொண்­டுள்­ளனர்.

ஹஜ் மற்றும் உம்ரா ஆராய்ச்சி நிறு­வனம் அண்­மையில் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில், தொற்று நோய்கள் தற்­போ­தைய ஹஜ் பரு­வ­கா­லங்­க­ளுக்கு உண்­மை­யான அச்­சு­றுத்­த­லாகக் காணப்­ப­டு­கின்­றன எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

முந்­தைய ஹஜ் பருவ காலங்­களில் 26-–60.5 சத­வி­கிதம் நோயா­ளி­க­ளுக்கு தடிமல் மற்றும் நிமோ­னியா போன்ற சுவாச நோய்கள் இருந்­தன. ஏனை­யோ­ருக்கு குடல் சம்­பந்­தப்­பட்ட நோய்கள், வயிற்­றுப்­போக்கு மற்றும் மூளைக்­காய்ச்சல் போன்ற நோய்­களும் ஏற்­பட்­டன. ஹஜ்ஜின் போது தொற்று நோய்கள் கார­ண­மாக ஏற்­பட்ட இறப்­புக்கள் 1.08 -– 13.67 சத வீத­மாகும். இது சரா­ச­ரி­யாக 7.1 சத­வீ­த­மாகும்.

‘குணப்­ப­டுத்­து­வதை விட தடுப்­பது சிறந்­தது’ (prevention is better than cure) என்ற கொள்­கையை சவூதி அரே­பியா ஆத­ரிக்­கி­றது என பஜாஹ்மூம் குறிப்­பிட்டார். குறிப்­பாக இது கொவிட் -19 தொற்­று­நோயை முன்­மா­தி­ரி­யாகக் கையாண்­டதில் எடுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்தக் காலத்­தின்­போது அர­சாங்கம் ஹஜ் கட­மை­யினை நோயெ­திர்ப்பு சக்­தியைப் பெற்ற உள்ளூர் யாத்தி­ரி­கர்­க­ளுக்கு மாத்­தி­ர­மென மட்­டுப்­ப­டுத்­தி­யது.
‘வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் மற்றும் புனித தலங்­க­ளுக்கு வரு­ப­வர்­களின் பாது­காப்பைப் பேணு­வதில் சவூதி அரே­பியா மிக ஆர்­வ­மாக உள்­ளது, மேலும் பாது­காப்பின் அடிப்­ப­டை­களில் ஒன்று தடுப்­ப­தாகும். இதற்­காக தடுப்­பூசி வழங்­கப்­ப­டு­கின்து. பல தசாப்­தங்­க­ளாக காணப்­படும் பல்­வேறு மருத்­துவ நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தடுப்­பூ­சி­களின் வகி­பாகம் மறுக்க முடி­ய­ா­த­தாகும்’’ எனவும் பஜாமூம் தெரி­வித்தார்.
அத்­த­கைய ஒரு நெருக்­கடி மூளைக்­காய்ச்­ச­லாகும். இது மக்­காவில் உள்ள புனித தலங்­களில் மக்கள் கூடும்­போது வேக­மாகப் பர­வக்­கூ­டி­யது. அதன் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த தடுப்­பூ­சிகள் அவ­சி­ய­மாகும்.

இங்­கி­லாந்தை தல­மாகக் கொண்ட மூளைக்­காய்ச்சல் ஆராய்ச்சி ஆதார நிலை­யத்தின் கூற்­றுப்­படி, மூளைக்­காய்ச்சல் தொற்­று­நோய்கள் ஹஜ் யாத்­தி­ரை­யோடு தொடர்­பு­பட்டுக் காணப்­ப­டு­கின்­றன. யாத்­தி­ரி­கர்கள் தமது சொந்த நாடு­க­ளுக்குத் திரும்­பிய பின்னர் உலகின் பல நாடு­களில் இந்த நோய் ஏற்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக சவூதி அரே­பியா 2002 முதல் ஹஜ் மற்றும் உம்­ராவின் போது சவூதி அரே­பி­யா­வினுள் நுழை­வ­தற்கு தடுப்­பூசி போட்டுக் கொள்­வதை கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளது. அதன் பின்னர் ஹஜ் கட­மை­யோடு தொடர்­பு­டைய நோய்த் தொற்­றுக்கள் எவையும் இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போ­தைய கொவிட் 19 தொற்­று­நோய்க்கு முன்னர் கடை­சி­யாக சர்­வ­தேச யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்­த­போது, சவூதி சுகா­தார அமைச்சின் பொது சுகா­தார கரி­ச­னைகள் 2019 அறிக்கை, ஹஜ் கட­மையை நிறை­வேற்றும் பகு­தியில் உள்ள அனை­வ­ருக்கும் மூளைக்­காய்ச்சல் தடுப்­பூசி கட்­டா­ய­மா­னது என்­பதைக் குறிப்­பிட்­டுள்­ளது. சில நாடு­களைச் சேர்ந்த யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு போலியோ மற்றும் மஞ்சள் காய்ச்சல் தடுப்­பூ­சிகள் அவ­சி­ய­மா­வ­தோடு பருவ காலங்­களில் ஏற்­படும் காய்ச்­ச­லுக்கு விரும்­பினால் தடுப்­பூசி செலுத்திக் கொள்ள முடியும்.

டெங்கு காய்ச்சல், போலியோ, நுரை­யீரல் காசநோய், எபோலா மற்றும் லாசா காய்ச்சல் உள்­ளிட்ட இரத்­தக்­க­சிவு காய்ச்சல், அம்மை, ஜிகா வைரஸ், இரத்­தத்தில் பரவும் வைரஸ்கள் மற்றும் உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் ஆகி­யவை சுகா­தார அமைச்சு எச்­ச­ரிக்­கை­வி­டுக்கும் ஏனைய நோய்­க­ளாகும்.

ஒரு குறிப்­பிட்ட பிராந்­தி­யத்தில் ஒரு தொற்று நோயின் பர­வ­லான தன்மை அல்­லது உலகில் ஒட்­டு­மொத்­த­மாக காணப்­படும் நிலை போன்ற குறிப்­பிட்ட கார­ணி­களின் அடிப்­ப­டை­யிலும் சில நோய்கள் பர­வு­வ­தற்கு உதவும் சுற்­றுச்­சூழல் கார­ணிகள் குறிப்­பிட்ட பருவம் அல்­லது வானிலை மாற்­றங்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான தடுப்­பூசி பட்­டி­யல்கள் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன என பஜாமூம் விளக்­கினார்.

‘இந்த ஆண்டு கொவிட் 19 பர­வி­ய­வுடன், இந்த ஹஜ் பருவ காலத்­திற்­கான முதன்­மை­யான தடுப்­பூசி இந்த நோய்க்கு எதி­ரா­ன­தா­கவே இருந்­தது’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

மூளைக்­காய்ச்சல் தொடக்கம் சவூதி அரே­பி­யாவில் பல்­வேறு தொற்­று­நோய்கள் மற்றும் வைரஸ் பர­வல்கள் ஏற்­பட்­டுள்­ளன. 2009 ஆம் ஆண்டில், பன்­றிக்­காய்ச்சல் பர­வி­யதால் வய­தா­ன­வர்கள், குழந்­தைகள் மற்றும் நீண்­ட­கால நோய்­களால் பாதிக்­கப்­பட்ட யாத்­தி­ரி­கர்கள் அந்த ஆண்டு ஹஜ் செய்­வதைத் தடுப்­ப­தற்கு சவுதி அரே­பியா தீர்­மா­னித்­தது.

மேலும், 2013 ஆம் ஆண்டு மத்­திய கிழக்கு சுவாச நோய்க்­குறி கொரோனா வைரஸ் (மேர்ஸ்) அதி­க­ரித்­ததன் கார­ண­மாக, வய­தான மற்றும் நீண்­ட­கா­ல­மாக நோய்­வாய்ப்­பட்ட முஸ்­லிம்­களை ஹஜ் செய்­வதைத் தவிர்க்­கு­மாறு சவூதி அரே­பியா வலி­யு­றுத்­தி­யது. ஏனெனில் இந்த நோய் கார­ண­மாக ஏற்­க­னவே சவூதி அரே­பி­யாவில் டசின் கணக்­கான மக்கள் அந்த நோயினால் கொல்­லப்­பட்­டி­ருந்­த­மை­யி­னா­லாகும்.

மேலும், 2014 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­க­ளுக்­கி­டையே ஆபி­ரிக்­காவில் 11,300 பேரைப் பலி­கொண்ட எபோலா வைரஸ் பர­வலின் போது, சவூதி அரே­பியா குறிப்­பி­டத்­தக்க திட்­டங்­களை உரு­வாக்­கி­யது. இதில் விமான நிலை­யங்­களில் மருத்­துவ ஊழி­யர்­களை பணிக்­க­மர்த்­துதல், உல­கெங்­கி­லு­மி­ருந்து சுமார் 3 மில்­லியன் முஸ்­லிம்கள் ஹஜ் செய்ய திரண்­டி­ருந்த நிலையில் தனி­மைப்­ப­டுத்தும் பிரி­வு­களை அமைப்­ப­து­மாகும். மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட கினியா, சியரா லியோன் மற்றும் லைபீ­ரியா ஆகிய மூன்று நாடு­க­ளுக்கும் யாத்­தி­ரைக்­கான ன்று நாடுகளுக்கும் யாத்திரைக்கான விசாக்களை வழங்குவதை நிறுத்தி வைத்தது.

உலகளவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொவிட் 19 பரவியதால், டசின்கணக்கான பணியாளர்கள் மூலம் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாயல் தளங்கள் சுத்­தி­­க­ரிப்­பட்­ட­ன. நாட்டிற்குள் யாத்திரிகர்கள் நுழைவதை இடைநிறுத்த முடிவு செய்த சவூதி அரேபியா உம்ரா மற்றும் ஹஜ் செய்வதற்கான சுகாதார வழிமுறைகளை அமுல்படுத்தியது – இந்த முடிவை உலக சுகாதார அமைப்பு வரவேற்றது.

‘சவூதி அரேபியா ஏலவே பெற்றுக்கொண்டுள்ள அனுபவத்திற்கு மேலதிகமாக கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் கிட்டத்தட்ட இரண்டு வருட அனுபவத்தைப் பெற்றிருப்பது எதிர்கால சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அசாதாரண திறன்களை எங்களுக்குத் தருகிறது’ என பஜாமூம் சுட்டிக்காட்டினார்.
சில மாதங்களுக்குள் சவூதி அரேபியா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும், சவூதி அரேபியா விரைவில் சர்வதேச யாத்திரிகர்களை மீண்டும் அழைக்கும் என பஜாமூம் நம்பிக்கை தெரிவித்தார்.

‘‘இந்த தொற்றுநோய் நாம் எதிர்கொண்ட பல நெருக்கடிகளில் ஒன்றாகும், இது காலப்போக்கில் எம்மைக் கடந்து செல்லும். எதிர்காலத்தில் நம்மை வலிமையுடன் நிலை நிறுத்திக்கொள்வதற்கான ஒரு நினைவாக நாம் இதனைப் பார்க்கின்றோம்’’ எனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.