இல்யாஸ் கரீமின் நிதியுதவியில் 300 மில்லியனில் புதிய கட்டிடம்

0 383

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் சுமார் 300 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­பட்ட 13 கட்­டில்­களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்­ள­டக்­கி­ய­தாக புதிய சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­யியல் மற்றும் சிறு­நீ­ர­க­வியல் பிரிவு கட்­டிடம் நேற்று பிர­த­ம­ரினால் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

இல­வச சுகா­தார சேவையின் சிறந்த பிர­தி­ப­லன்­களை இலங்கை வாழ் மக்­க­ளுக்கு கிடைக்க செய்யும் உன்­ன­த­மான நோக்­கத்தில் ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறு­வ­னத்தின் பூரண நிதி உத­வியின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்­டிடம் நிறு­வப்­பட்­டுள்­ளது.

இதற்­கான நிதி நன்­கொ­டையை ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறு­வ­னத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் மற்றும் அவ­ரது பிள்­ளைகள் வழங்­கி­யி­ருந்­தனர்.

குறித்த நிகழ்வில் சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி, சுகா­தார அமைச்சின் செய­லாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்­திய நிபுணர் எஸ்.எச். முண­சிங்க, சுற்­றாடல் துறை அமைச்சின் செய­லாளர் விசேட வைத்­திய நிபுணர் அனில் ஜாசிங்க, தேசிய வைத்­தி­ய­சா­லையின் பிரதி சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் W.K.விக்­ர­ம­சிங்க, E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறு­வ­னத்தின் தலைவர் இல்யாஸ் ர் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.