ஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக

0 1,163

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்­றினால் மர­ணிக்கும் நபர்­களை நல்­ல­டக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை பிரி­வுக்­குட்­பட்ட மஜ்மா நகர் பகு­தியில் நல்­ல­டக்கம் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. அதை சாப்­ப­மடு எனும் பகு­திக்கு மாற்­று­வ­தற்கு பரிந்­து­ரைக்­கு­மாறு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்­கான ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்டம் நேற்று மாவட்­டத்தின் ஐந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

மாவட்ட செய­லா­ளரும் அர­சாங்க அதி­ப­ரு­மா­கிய கே. கரு­ணா­க­ரனின் ஏற்­பாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுவின் இணைத் தலை­வ­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தலை­மையில் இடம்­பெற்ற இக் இக்­கூட்­டத்­திலே தவி­சாளர் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொரோனா உடல்கள் அதி­க­ரித்துச் செல்­வதைத் தொடர்ந்து நாம் ஆராய்ந்த போது கிரான் பிர­தேச செய­லகம், ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை ஆகிய பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட சாப்­ப­மடு எனும் பிர­தே­சத்தை அடை­யாளம் கண்­டுள்ளோம்.

அடை­யாளம் காணப்­பட்­டுள்ள குறித்த இடத்தில் உடல்­களை நல்­ல­டக்கம் செய்ய அவ­சர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று தவி­சாளர் மேலும் தெரி­வித்தார்.

குறித்த மையவாடியில் புதன்கிழமை 28 ஆம் திகதி வரை 1170 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். -Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.