நூற்றுக் கணக்கான பள்ளிவாயல்களை வடிவமைத்த இந்து மத கட்டடக் கலைஞர் கோவிந்தன் கோபாலகிருஷ்ணன்

0 401

எம்.ஐ.அப்துல் நஸார்

நூற்­றுக்கு மேற்­பட்ட பள்­ளி­வா­யல்கள், நான்கு தேவா­ல­யங்கள் மற்றும் ஒரு கோயில் ஆகி­ய­வற்றை வடி­வ­மைத்­துள்ள 85 வய­தான கோவிந்தன் கோபா­ல­கி­ருஷ்ணன் ஒரு அசா­தா­ரண கட்­டடக் கலைஞர்.

‘பள்­ளி­வாயல் மனிதர்’ என்று பர­வ­லாக அறி­யப்­படும் அவர் ஆறு தசாப்­தங்­க­ளாக நீடிக்கும் தனது வாழ்க்­கையில், ‘மனி­த­கு­லத்தின் ஒற்­றுமை’ மீது தான் அன்பு செலுத்­து­வ­தாகக் குறிப்­பி­டு­கிறார்.

இந்­தி­யாவின் தெற்கு நக­ர­மான கேர­ளாவின் திரு­வ­னந்­த­பு­ரத்தில் உள்ள தனது சாதா­ரண வீட்டில் அல்­குர்ஆன், பைபிள் மற்றும் இந்து வேதங்­களின் பிர­தி­களை வைத்­தி­ருக்கும் வயது முதிர்ந்த அவர் மத நல்­லி­ணக்­கத்தில் உறு­தி­யான நம்­பிக்கை கொண்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டு­கின்றார்.

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­கின்றேன், அதே­போல சப­ரி­மலை யாத்­தி­ர­யின்­போது 41 நாட்கள் விர­த­மி­ருக்­கின்றேன். 60 வய­தான எனது மனைவி ஜெயா கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்­தவர், அதனால் உயிர்த்த ஞாயிறு விர­தத்­திலும் அவ­ருடன் பங்­கேற்­கின்றேன் என சிரித்­த­வாறே குறிப்­பி­டு­கின்றார்.

‘எனது இரு மகன்­களில் ஒருவர் முஸ்லிம் பெண்­ணையே திரு­மணம் செய்­துள்ளார். எனது வீட்­டுக்கு வரும் அனைத்து மதத்­த­வர்­க­ளையும் வர­வேற்­கின்றேன். சம­மான மரி­யா­தை­யி­னையும் வழங்­கு­கின்றேன்.’ என்றும் அவர் குறிப்­பி­டு­கின்றார்.

சுய­மா­கவே கட்­ட­டத்­து­றை­யினைக் கற்­றுக்­கொண்ட கோபா­ல­கி­ருஷ்ணன் பாட­சாலைக் கல்­வியை முடித்துக் கொண்­டதன் பின்னர் குடும்­பத்தின் பொரு­ளா­தார நிலை கார­ண­மாக தனக்கு கல்­லூரிக் கல்­வி­யினைத் தொடர்­வ­தற்கு முடி­யாமல் போய்­விட்­ட­தாகக் குறிப்­பி­டு­கின்றார்.

அதன் பின்னர் கட்­டட ஒப்­பந்­தக்­கா­ர­ரான தனது தந்­தை­யிடம் உத­வி­யா­ள­ராக இணைந்து கொண்டார்.

இளம் வயது கோபா­ல­கி­ருஷ்ணன் தனது தந்­தையால் கட்­டப்­ப­டு­கின்ற கட்­ட­டங்­களின் வரை­ப­டங்­களை தனது குறிப்­பேட்டில் பதிவு செய்யத் தொடங்­கினார். பின்னர் அவற்றின் விவ­ரங்­களை அசல் கட்­ட­மைப்­பு­க­ளுடன் ஒப்­பிட்டு, நுட்­பங்கள், நிழற்­ப­டங்கள் மற்றும் வண்ணத் திட்­டங்கள் தொடர்பில் தனது தந்­தை­யிடம் கேட்­ட­றியும் பழக்­கத்தைக் கொண்­ட­வ­ராக இருந்தார்.

இத­னி­டையே, அவர் 1960 களில் புகழ்­பெற்று விளங்­கிய ஆங்­கி­லோ-­இந்­திய பட வரை­ஞ­ரான லா சல்­டா­னா­வுடன் நட்பை வளர்த்துக் கொண்டார், அவர் வரை­தலின் அடிப்­ப­டை­களை கோபா­ல­கி­ருஷ்­ண­னுக்கு கற்றுக் கொடுத்தார்.

‘நான் கேரள பொதுப்­பணித் துறையில் ஊதியம் பெறாத ஒரு பயிற்­சி­யா­ள­ரா­கவும் பணி­யாற்­றினேன், இது எனது கைவினைப் பணி­களில் எனக்கு உத­வி­யது, பின்னர் கேர­ளாவின் சின்­ன­மான பாளையம் பள்­ளி­வாயல் புன­ர­மைப்புப் பணி­களில் எனது தந்­தைக்கு உதவத் தொடங்­கினேன்’ என அவர் அல் ஜஸீ­ரா­விடம் தெரி­வித்தார்.

‘இந்த கட்­ட­மைப்பை மீண்டும் புன­ர­மைக்க ஐந்து ஆண்­டுகள் சென்­றன, அது ஒரு சிறந்த கற்றல் அனு­ப­வ­மாகும். கட்­ட­டக்­க­லைதான் எனது கடமை என்­பதை இது எனக்கு உணர்த்­தி­யது’ என கோபா­ல­கி­ருஷ்ணன் நினைவு கூர்ந்தார். அவர் வர்த்­தக மற்றும் குடி­யி­ருப்பு இடங்கள், வணிக வளா­கங்கள் மற்றும் சன­ச­மூக மத்­திய நிலை­யங்கள் என ஏரா­ள­மான கட்­டடப் பணி­களை நிறை­வேற்­றி­யுள்ளார்.

1964 ஆம் ஆண்டில் இந்­தி­யாவின் அப்­போ­தைய ஜனா­தி­பதி டாக்டர் ஜாகிர் உசேன் அவர்­களால் பாளையம் பள்­ளி­வாயல் திறந்து வைக்­கப்­பட்­ட­போது தந்­தை-­மகன் இரு­வ­ருக்கும் மிகவும் பெரு­மை­யாக இருந்­தது.

ஒரு இந்து – ஒரு கிறிஸ்­தவ நண்­பரின் (லா. சல்­டானா) துணை­யுடன் ஒரு பள்­ளி­வா­யலைக் கட்­டி­யெ­ழுப்­பவும், ஒரு கோவி­லுக்கும் தேவா­ல­யத்­திற்கும் இடையில் அமைந்­தி­ருக்கும் ஒரு பள்­ளி­வா­யலைக் கட்­டவும் இறைவன் அருளே கார­ண­மாக இருந்­தது என நான் நம்­பு­கின்றேன். இது சமய நல்­லி­ணக்­கத்தின் பிர­கா­ச­மான உதா­ர­ண­மாகும் எனவும் கோபா­ல­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

கட்­ட­டக்­க­லையில் முறை­யான பட்டம் இல்லை என்­றாலும், கட்­ட­டக்­கலை நுட்­பங்­களைப் பற்­றிய கட்­டடப் பணியில் ஈடு­பட்ட அவ­ரது உள்­ளு­ணர்வு, அவ­ரது அர்ப்­ப­ணிப்­பு­ட­னான பணி நெறி­முறை மற்றும் வாடிக்­கை­யா­ளரின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கும் அப்பால் வழங்­கு­கின்ற திருப்­தி­க­ர­மான சேவை ஆகி­யவை அவ­ரது வெற்­றிக்குக் கார­ண­மா­கின.

திரு­வ­னந்­த­பு­ரத்தில் மூன்று மாடி குடி­யி­ருப்பு ஒன்றை நிர்­மா­ணித்­ததே அவர் தனி­யாக மேற்­கொண்ட முத­லா­வது வேலை­யாகும். இது உரி­மை­யா­ளரை மிகவும் கவர்ந்­தது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இருப்­பினும், 1976 ஆம் ஆண்டில் திரு­வ­னந்­த­பு­ரத்தில் பீமாப்­பள்ளி ஜும்ஆ பள்­ளி­வாயல் கட்­டட நிர்­மா­ணத்­திற்கு தலைமை தாங்­கி­ய­போது அவ­ரது தொழில் வாழ்க்­கையில் ஒரு திருப்­பு­முனை ஏற்­பட்­டது. ஒரு பெரிய கட்­ட­மைப்பை சிறுகச் சிறுக சேக­ரிக்­கப்­படும் நன்­கொ­டைகள் மூலம் கட்டி முடிக்க 18 ஆண்­டுகள் தேவைப்­பட்­டன.

வரவு செலவு தொடர்­பான சவால்கள் இருந்­த­போ­திலும், கோபா­ல­கி­ருஷ்ணன் தனது படைப்­பு­களில் புத்­தம்­புது வடி­வங்­க­ளையும் புது­மை­யையும் புகுத்­தினார். பழங்­கால வடி­வங்­களில் மாற்­றங்­களைச் செய்தார்.

உதா­ர­ண­மாக, கரு­நா­கப்­பள்­ளியில் உள்ள ஷேக் மஸ்ஜித், முக­லாய காதல் நினை­வுச்­சின்­ன­மான தாஜ்­ம­ஹாலைப் போன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. கொல்­லத்­திற்கு அரு­கி­லுள்ள ஜியா­ர­து­மூது பள்­ளி­வாயல் இந்­தோ-­ச­ர­செனிக் பாணி­களின் கல­வை­யாகும். அதே நேரத்தில் திரு­வ­னந்­த­பு­ரத்தில் உள்ள சலாய் பள்­ளி­வாயல் சம­கால கட்­ட­டக்­கலை நுட்­பங்­களைத் தழு­வி­ய­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

இக் கட்­டடக் கலை­ஞ­ரான கோபா­ல­கி­ருஷ்ணன் தனது வேலை­யினை பரந்­து­பட்­ட­தாக மேற்­கொண்­டுள்ளார். அரபு மொழியில் எழு­தப்­பட்ட புனித அல்­குர்­ஆனின் வச­னங்­க­ளினால் பள்­ளி­வாயல் முகப்­பு­களை அலங்­க­ரித்­துள்­ள­தோடு கேர­ளாவின் உள்ளூர் மொழி­யான மலை­யா­ளத்தில் அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­பு­க­ளையும் அவர் கட்­டிய கட்­ட­மைப்­பு­களில் பொறித்­துள்ளார்.

கோபா­ல­கி­ருஷ்­ணனின் புது­மை­யான செயற்­பாடு தொடர்பில் பலர் மகிழ்ச்­சி­ய­டைந்­தாலும், சில விமர்­ச­கர்கள் ஆட்­சே­ப­னை­களை முன்­வைத்­துள்­ளனர்.

பீமா­பள்ளி பள்­ளி­வா­யலில் தாமரை வடி­வத்தைப் பயன்­ப­டுத்­தி­ய­போது சர்ச்சை உரு­வா­னது. ‘தாமரை ஒரு அழ­கான மலர், இந்­தி­யாவின் தேசிய மலர். எனவே ஒரு கலை­ஞ­னாக, அதைப் பயன்­ப­டுத்­து­வதில் எந்த தவ­றையும் நான் காண­வில்லை. ஆனால் சிலர் அதை வேறு­வி­த­மாகப் பார்த்­தார்கள்,’ என அவர் அல் ஜஸீ­ரா­விடம் தெரி­வித்தார்.

தாமரை மலர் பல்­வேறு இந்து கட­வுள்­களின் உரு­வங்­க­ளுடன் காணப்­ப­டு­வ­தோடு ஆளும் இந்து தேசி­ய­வாத பார­திய ஜனதா கட்­சியின் (பாஜக) தேர்தல் சின்­ன­மா­கவும் உள்­ளது.

எனினும், பழைய மர­பு­களை மீண்டும் கண்­டு­பி­டிக்கும் அவ­ரது முனைப்­பு­க­ளுக்கு எதிர்ப்­புகள் ஏற்­பட்­டாலும் ‘இறை­வனின் இல்லம் தப்­பெண்­ணங்­க­ளி­லி­ருந்து விடு­பட்­ட­தாக இருக்க வேண்டும் என்­பதால் தனது மனச்­சாட்­சிப்­படி பள்­ளி­வா­யல்­களை கட்டும் பணி­யினை தொடர்ந்து மேற்­கொள்­ளப்­போ­வ­தாக அவர் கூறு­கின்றார்.

கோபா­ல­கி­ருஷ்­ணனின் பணி­களில் குறிப்­பி­டத்­தக்க விடயம் என்­ன­வென்றால் கேர­ளா­வுக்கு வெளி­யே­யுள்ள எந்த இஸ்­லா­மிய கட்­ட­டக்­கலை நிர்­மா­ணங்­களை பார்க்­க­வு­மில்லை அந்த இடங்­க­ளுக்கு விஜயம் செய்­தி­ருக்­க­வு­மில்லை.

முயற்­சித்­தலும் பிழை­யா­தலும் என்ற கற்றல் முறை­மூ­லமும் மிகக் கூர்­மை­யான அவ­தா­னத்தின் மூல­மா­கவும் தான் வடி­வ­மைக்கும் கட்­ட­மைப்­புக்­க­ளுக்­காக புதிய கலை­யம்­சங்­களைக் கண்­டு­பி­டிக்­கின்றார்.

தனது கட்­டட வடி­வ­மைப்­புக்­க­ளுக்கு இந்­தோ-­ச­ர­செனிக் வடி­வ­மைப்பு மாதி­ரி­யினை பின்­பற்­று­வ­தாக குறிப்­பிடும் அவர், பிர­பல பிரித்­தா­னிய அறி­ஞரும் வராற்­றி­ய­லா­ள­ரு­மான பேர்ஸி புரெ­ள­ணினால் எழு­தப்­பட்ட ‘இந்­திய கட்­ட­டக்­க­லை-­இஸ்­லா­மிய காலப்­ப­குதி மற்றும் கட்­ட­டக்­க­லை-­இந்து காலப்­ப­குதி’ ஆகிய புதிய பாதை­யினை உரு­வாக்­கிய புத்­த­கங்­களை தனது வேத­நூ­லாகக் கரு­து­கின்றார்.

கோபா­ல­கி­ருஷ்­ணனின் மாறு­படும் வடிங்கள், புதிய தலை­முறை வழி­பாட்­டி­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு ஆத­ர­வாகக் காணப்­ப­டு­கின்­றன. பள்­ளி­வா­யல்­களின் பாரம்­ப­ரிய வண்­ணங்­களை மாற்­றி­ய­மைத்து, இளஞ்­சி­வப்பு மற்றும் வெளிர்­பச்சை நிறங்­களைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

உல­க­ளா­விய தொற்று தற்­போது அவரைச் சுற்­றி­யுள்­ள­வர்­களின் வாழ்க்­கையைப் புரட்டிப் போட்­டுள்ள இந்த சவால்­மிக்க சூழ்­நி­லையில் அவர் தனது பணி­யினை எவ்­வாறு மேற்­கொள்­கின்றார்?

‘காலையில் 6.00 மணிக்கு எழுந்து பத்­தி­ரி­கை­யினை வாசித்து முடித்­து­விட்டு 8.30 மணி­ய­ளவில் காலைச் சாப்­பாட்டை முடித்­து­விட்டு எனது புத்­த­கத்தை வடி­வ­மைக்கும் பணிக்­காக எனது மேசைக்குச் சென்று அமர்வேன். நான் எழு­திக்­கொண்­டி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர் ‘நான் கண்ட குர்ஆன்’ (Njaan Kanda Quran) குர்­ஆ­னி­லி­ருந்து நான் பார்த்­த­வையும் புரிந்­து­கொண்­ட­வையும் என்­பது அதன் கருத்­தாகும்’

1,200 பக்­கங்கள் கொண்ட அந்தப் புத்­த­கத்தைப் பூர்த்­தி­செய்ய கோபா­ல­கி­ருஷ்­ண­னுக்கு ஆறு வரு­டங்கள் சென்­றன. ‘வாச­கர்கள் மிக எளி­தா­கவும் அர்த்­த­புஷ்­டி­யு­டனும் குர்­ஆனைப் புரிந்­து­கொள்ள உதவும்’ என அவர் குறிப்­பி­டு­கின்றார்.

‘அல்­குர்­ஆனை வாசிக்­கும்­போது பைபிள் மற்றும் கீதை­யி­லுள்ள போத­னை­க­ளை­யொத்த உப­தே­சங்கள் இருப்­ப­தைக்­கண்டு ஆச்­ச­ரி­யப்­பட்டேன். அல்­குர்­ஆனின் ஒவ்­வொரு வச­னங்­க­ளையும் எடுத்து ஏனைய இரு சமய வச­னங்­க­ளுடன் ஒப்­பீடு செய்யும் அதே­வேளை எனது விப­ர­மான கருத்­துக்­க­ளையும் பதிவு செய்­கின்றேன். இந்த விட­யம்தான் எனது புத்­த­கத்தின் மூலக் கருத்­தாகக் காணப்­ப­டு­கின்­றது. என்­றா­வது ஒரு நாள் இந்த புத்­தகம் பிர­சு­ரிக்­கப்­படும் என நான் எதிர்­பார்க்­கின்றேன்.’

மதங்­க­ளுக்­கி­டை­யே­யான புரி­த­லையும் சகிப்­புத்­தன்­மை­யையும் ஊக்­கு­விக்கும் ஒரு சமூக, தொண்டு நிறு­வ­ன­மான ‘மான­வ­மைத்ரி’ என்ற அமைப்பினை கோபாலகிருஷ்ணன் ஏற்படுத்தியுள்ளார். இனம், மதம், சாதி குல அடிப்படையில் வேறுபட்டுக் கிடக்கும் உலகம் தொடர்பான பார்வையின் விளைவே இவ்வமைப்பின் தோற்றமாகும்.

வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள கோபாலகிருஷ்ணன் தன்னிடம் இன்னும் ஒரு நிறைவேறாத பணி உள்ளது என்று கூறுகிறார்: கீதை, குர்ஆன் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய சமய சிந்தனைக்கான பாடசாலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்பதே அந்தப் பணியாகும் எனவும் தெரிவிக்கின்றார்.

‘ஒரு நாள், என்னுடைய இந்த கனவையும் நனவாக்குவேன் என நம்புகிறேன் எனத் தெரிவிக்கும் இந்தக் கட்டடக் கலைஞர், இறைவனை அடைவதற்கான ஒரு வழியாக நாம் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், கடவுள் இறுதியில் ஒருவரே என்பதை நாம் அனைவரும் உணர முடிந்தால் அது மிகச் சிறந்ததாக இருக்கும்’ எனவும் குறிப்பிடுகின்றார்.

‘நாம் இதனை உணர்ந்து அனைத்து மதங்களையும் மதிக்கும் தருணத்தில், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரும். உலகம் அதற்கு ஒரு சிறந்த இடமாக காணப்படுகின்றது’ என்பது அவரது கருத்தாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.