பள்ளிவாசல்களில் குர்பான் பிராணிகள் அறுக்க ஏன் தடை? மாடறுப்பு தடை சட்டத்திற்கு நாம் காரணமாக கூடாது

பிற சமூகத்தினரின் விமர்சனங்கள், கொவிட் நிலைமைகளை கருத்திற் கொண்டே தீர்மானம் என்கிறார் வக்பு சபை தலைவர்

0 601

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘சமூ­கத்தின் நன்மை கரு­தியே பள்­ளி­வா­சல்­களில் உழ்­ஹிய்­யா­வுக்கு மாடு­களை அறுப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. ஏனைய சமூ­கத்­தி­னரால் பிரச்­சி­னைகள் உரு­வா­கக்­கூ­டாது என்­ப­துடன் கொவிட் 19 தொற்­றி­லி­ருந்தும் எம்மை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கான தீர்­மா­ன­மே­யன்றி சமூ­கத்தை அசெ­ள­க­ரி­யப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­க­வல்ல’ என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்­களில் உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடுகள் அறுப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி‘க்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், இவ்­வா­றான தடை இதுதான் முதன் முறை­யல்ல. கடந்த வரு­டமும் இவ்­வா­றான தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வா­றான சுற்று நிரு­ப­மொன்­றினை வக்பு சபை வெளி­யிட்­டது.

மிரு­க­வதைச் சட்டம் அதா­வது மாடுகள் அறுப்­பதை தடை­செய்­யவும் சட்டம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. இச்­சட்­டத்­துக்கு பெரும்­பான்மை ஆத­ர­வுண்டு. இந்­நி­லையில் நாம் பள்­ளி­வா­சல்­களை மாடுகள் அறுக்கும் இடங்­க­ளாக உப­யோ­கப்­ப­டுத்­து­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தல்ல.

ஊட­கங்கள் இதனைப் பெரி­து ப­டுத்­தலாம். மாடுகள் அறுப்­பதை தடை­செய்யும் சட்­டத்­துக்கு இது சாத­க­மாக அமை­யலாம். என­வேதான் பள்­ளி­வா­சல்­களை இதற்­காகப் பயன்­ப­டுத்த வேண்டாம் எனக் கேட்­டுக்­கொள்­கிறேன்.
உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்ற திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தங்கள் வீடு­களில் அல்­லது வேறு இடங்­களில் சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்­க­ளுடன் சுகாதார அதிகாரிகளின் நிபந்தனைகளைப் பேணி மேற்கொள்வதே சிறந்ததாகும். பள்ளிவாசல்களில் மாடறுப்பதை தடை செய்வதை எதிர்ப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.