கொரோனா தடுப்பு மருந்தும் நமது புரிதல்களும்

0 457

மூதூர் முறாசில்

கொரோ­னாவின் பேரலைத் தாக்­குதல் நம் நாட்­டையும் நிலை­கு­லையச் செய்து வரு­கின்­றது. பொது­வாக இத்­தாக்­கு­தலில் இருந்து காத்துக் கொள்­வ­தற்கு எல்­லோரும் முயற்­சித்தும் முழு­மை­யாக ஒத்­து­ழைத்தும் வரு­கின்றோம்.

இந்­நி­லையில் கொரோ­னா­வி­லி­ருந்து பாது­காப்பைப் பெறும் முதன்மை வழி­மு­றை­யாக கொரோனா தடுப்பு மருந்தை வாங்­கு­வ­திலும் அதனைக் குடி மக்­க­ளுக்கு வழங்­கு­வ­திலும் ஆர்வம் காட்டும் முன்­னணி நாடு­களைப் போலவே இலங்கை நம் தாய் நாடும் செயற்­பட்டு வரு­கின்­றது. பணம் செலுத்­தியும் நன்­கொ­டை­யா­கவும் தடுப்பு மருந்தைப் பெறு­வதில் தொட­ராக முயற்­சித்து வரு­கின்­றது.

கொரோ­னா­விற்கு எதி­ரான செயற்­பாட்டில் ஈடு­ப­டுவோர், இல­குவில் கொரோனா பாதிப்­பிற்கு உள்­ளாகும் பிரி­வினர் முத­லா­னோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்கி நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் இத்­த­டுப்பு மருந்தை பெற்­றுக்­கொ­டுக்கும் மேலான எண்ணம் அர­சாங்­கத்­திற்கு உண்டு.

அர­சாங்­கத்­தினால் இல­வ­ச­மாக -இல­கு­வாக வழங்­கப்­படும் இத்­த­டுப்பு மருந்தை கொரோ­னா­வி­லி­ருந்து பாது­காப்புப் பெறு­வ­தற்கு தமக்குக் கிடைத்த பேர­திஷ்­ட­மாகக் கருதி அதனை ஏற்­றிக்­கொள்­வதில் பெருந்­தொ­கை­யானோர் ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். அதே­வேளை, சிலர் அதனை ஏற்றிக் கொள்­வ­தி­லி­ருந்து விலகி ஒதுங்­கி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இவ்­வாறு சிலர் இத்­த­டுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கா­மைக்கு முக்­கி­ய­மாக மூன்று கார­ணங்­களை அவ­தா­னிக்க முடியும். இக்­கா­ர­ணங்­களில் ஒன்று இம்­ம­ருந்தைப் பெற்றுக் கொள்­வ­தனால் பக்­க­வி­ளை­வு­க­ளுக்கு உள்­ளாக நேரிடும் என்ற அச்­ச­மாகும். மற்­றொன்று இத் தடுப்பு மருந்து தொடர்­பாக எதுவும் அறிந்­தி­ரா­மை­யாகும். மூன்­றா­வது காரணம், இம்­ம­ருந்தைப் பெற்றுக் கொள்­வ­தி­லுள்ள அலட்­சிய மனோ­பா­வ­மாகும்.

இம்­முதல் கார­ணத்தை கூர்ந்து நோக்­கினால் சமூக ஊட­கங்கள் ஊடாக தடுப்பு மருந்து தொடர்பில் போதிய அறி­வில்­லா­த­வர்­க­ளினால் இடப்­பட்ட பதி­வுகள் அல்­லது தடுப்பு மருந்து தொடர்­பி­லான பதி­வு­க­ளுக்கு இடப்­பட்ட பின்­னூட்­டங்கள் மூல­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிழை­யான புரி­தல்­களே இவ்­வச்­சத்­திற்­கான அடிப்­ப­டை­யாக அமைந்­துள்­ள­தனைக் காண­மு­டி­கின்­றது. அத்­தோடு அரை­குறை கேள்வி ஞானத்­தோடு வாய்க்கு வந்­த­மா­திரி கதை பின்னும் சில­ரினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட வதந்­தியோ அல்­லது சுய­மா­கவே ஏற்­ப­டுத்திக் கொண்ட பிர­மையோ அல்­லது சந்­தே­கமோ மக்­களில் சிலர் இத்­த­டுப்பு மருந்து தொடர்பில் அச்­சப்­ப­டு­வ­தற்­கான கார­ண­மா­க­வுள்ள.

எனவே, இக்­கா­ர­ணங்கள் அனைத்­துமே அறி­வி­ய­லுக்குப் பொருந்­தாது என்­பதை இனங்­கண்டு அவற்­றைப்­பு­றந்­தள்­ளி­விட்டு, கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­வ­ருதல் வேண்டும்.

தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளும் நூற்றுக் கணக்­கா­னோரில் ஓரி­ரு­வ­ருக்கு சிறிய காச்சல் ஏற்­ப­டலாம். பல­ருக்கு மருந்து ஏற்­றப்­பட்ட இடத்தில் ஓரிரு நாட்கள் சிறிய நோவு தென்­ப­டலாம். சரி­யாகக் கூறு­வ­தானால் வய­தா­ன­வர்கள் பல­ருக்கு ஈர்ப்பு வலிக்கு எதி­ரான (Tetanus toxoid vaccine) தடுப்பு மருந்தைப் பெற்ற அனு­பவம் இருக்­கலாம். அம்­ம­ருந்தைப் பெறு­வதைக் காட்­டிலும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறு­வது மிகவும் சௌக­ரி­ய­மா­ன­தா­கவும் இனி­மை­யான அனு­ப­வ­மா­கவும் அமையும். இதனை செலுத்தும் போதும் செலுத்­திய பின்பும் பெரி­தாக எவ்­வித அசௌ­க­ரி­யமும் தென்­ப­டு­வ­தில்லை.

தற்­போது கிடைக்­கப்­பெறும் இத்­த­டுப்பு மருந்தில் பார­தூ­ர­மான எவ்­வித பக்க விளை­வு­களும் இல்லை. ஆதலால் இதனை ஏற்­றிக்­கொள்ள அச்­சப்­ப­டு­வ­தற்கு எவ­ருக்கும் எவ்­வித தேவை­யு­மில்லை. தொற்று நோய்­க­ளுக்­கெ­தி­ரான தடுப்பு மருந்­தேற்றல் என்­பது நேற்று இன்று உரு­வான விட­ய­மல்ல. இற்­றைக்கு 200 வரு­டங்­க­ளுக்கு முன்பு பெரி­யம்மை (Smallpox) வைரஸ் நோயினால் உலகம் பேர­ழிவை எதிர் நோக்­கி­யி­ருந்த காலத்தில் தடுப்பு மருந்தை கண்­டு­பி­டித்து அதனை ஏற்­றி­யது முதல் பல்­வேறு தொற்று நோய்­க­ளுக்கு எதி­ரான தடுப்பு மருந்­துகள் கண்டு பிடிக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தோடு தடுப்பு மருந்­தேற்­றலில் அதீத நிபு­ணத்­து­வத்­தையும் உலகம் நிலை நிறுத்­தி­யுள்­ளது.

நீண்ட கால­மாக இலங்கை நம் நாட்டில் பல்­வேறு தொற்று நோய்­க­ளுக்­கெ­தி­ரான தடுப்பு மருந்­துகள் நடை­மு­றையில் உள்­ளன. பெரி­யம்­மைக்கு எதி­ரான தடுப்பு மருந்து இற்­றைக்கு 135 வரு­டங்­க­ளுக்கு முன்பு 1886 ஆம் ஆண்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 1949 ஆம் ஆண்டில் காச­நோக்கு எதி­ரான பிசிஜி (BCG) தடுப்பு மருந்து ஏற்­றப்­பட்­டது. 1961ஆம் ஆண்டில் தொண்­டைக்­க­ரப்பான், குக்கல் மற்றும் ஈர்ப்பு வலிக்கு எதி­ரான முக்­கூட்டு தடுப்பு மருந்து அறி­முகம் செய்­யப்­பட்­டது. அதே­போல 1962ஆம் ஆண்டில் போலி­யோக்கு எதி­ரான வாய்­மூ­ல­மான சொட்டு மருந்து வழங்­கப்­பட்­டது.

தற்­போது குழந்­தை­யொன்று பிறந்­ததன் பின்பு அதே தினத்தில் அல்­லது பிறந்து நான்கு வாரங்­க­ளுக்குள் பிசிஜி தடுப்பு மருந்து ஏற்­றப்­ப­டு­வது முதல் குழந்தைப் பருவம், முன்­பள்ளிப் பருவம், பள்ளிப் பருவம், மற்றும் வளர்ந்­தோ­ருக்­கென பல்­வேறு நிலை­களில் ஏற்­றத்­தக்க வெவ்­வேறு நோய்­க­ளுக்கு எதி­ரான தடுப்­பூ­சிகள் நடை­மு­றையில் உள்­ளன.

இலங்­கையில் பயன்­பாட்­டி­லுள்ள இத்­த­கைய தடுப்பு மருந்­துகள் போலவே கொரோனா தடுப்பு மருந்தும் பல்­வே­று­பட்ட ஆய்­வு­களைத் தொடர்ந்து உற்­பத்தி செய்­யப்­பட்டு வழங்கப்படுகின்றது. ஆனால், ஏனைய தடுப்பு மருந்துகளை தமக்கோ அல்லது தமது பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் பச்சிளம் குழந்தைகளுக்கோ வழங்குவதற்கு பெரும்பாலும் எவரும் அச்சம் கொள்வதில்லை. அவ்வாறெனில், கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுவதற்கும் எவரும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையே இல்லை.

எனவே, கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்பெறுவதானது உரிய தரப்பினருக்கு அந்நோயிலிருந்து விடுபடுவதற்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதி அதனைப் பெற்றுக் கொள்வதற்கு முழுமனதுடன் முன்வருதல் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.