புனர்வாழ்வளிப்பதுடன் அப்பாவிகள் உடன் விடுவிக்கப்படவும் வேண்டும்

0 694

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் கடும் போக்குத் தன்­மையை தளர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதாகவும் இதற்­காக சுயா­தீ­ன­மான முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் உதவி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்றும் புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்­சன ஹெட்­டி­ஆ­ரச்சி தெரி­வித்திருக்கிறார்.

தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை புனர்­வாழ்­வுக்கு தெரி­வு­செய்யும் ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கான சட்ட ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கென தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவும் குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவும் இணைந்து, சட்ட ஏற்­பா­டுகள் ஊடாக புனர்­வாழ்வுத் திட்­டத்­துக்கு இட­மாற்றம் செய்யும் என்றும் அவர் தெரி­வித்துள்ளார்.

‘உள்­ளூரைச் சேர்ந்த எந்த கட்­சி­யையும் அர­சி­ய­லையும் சேராத சுயா­தீ­ன­மான முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மூலம் புனர்வாழ்வளிக்கப்படும். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் பின்பு சமூ­கத்­துக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். இது முற்று முழு­வதும் புதிய புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­ட­மாகும். இது தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லிகள் புனர்­வாழ்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது போன்ற திட்­ட­மல்ல. தனி­நாடு கோரிக்­கையை முன்­வைத்து தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லிகள் போரிட்­டார்கள். போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்பு அவர்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டார்கள். இந்த திட்­டத்­தி­லி­ருந்தும் முஸ்லிம் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை புனர்வாழ்வளிக்கும் திட்டம் வேறு­பட்­ட­தாகும்’ என்றும் புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்­சன ஹெட்­டி­ஆ­ரச்சி தெரி­வித்திருக்கிறார்.

இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­ற­ வ­கையில் இது­வரை 700 க்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிசார் கூறு­கின்­றனர். இவர்­களில் மாவ­னல்லை சிலை உடைப்பு மற்றும் வனாத்­த­வில்லு வெடி பொருட்கள் மீட்பு ஆகிய இரு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது மாத்­தி­ரமே இது­வரை வழக்குத் தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது வழக்குத் தொடர மேலும் பல மாதங்கள் எடுக்கும் என பாது­காப்புச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

அந்த வகையிலேயே குறிப்பிட்ட ஒரு தொகையினரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில் சட்ட ரீதியான சில சிக்கல்கள் உள்ள போதிலும் காலம் காலமாக சிறையில் இருப்பதை விட புனர்வாழ்வு பெற்றேனும் தமது உறவுகள் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பதே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது குடும்பத்தவர்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதற்கப்பால் இது­வரை முஸ்லிம் சமூ­கத்தின் பல முக்­கி­யஸ்­தர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்களது விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வதற்கான எந்தவித நகர்வுகளையும் காண முடியவில்லை. அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் கைது செய்­யப்­பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இவரும் முன்னர் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­வரே.
தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலியும் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும், கவி­ஞரும் ஜாமிஆ நளீ­மியா மாண­வ­ரு­மான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்­கப்பால்11 அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றில் ஜன­நா­யக ரீதி­யாக தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வந்த அமைப்­பு­களே அதி­க­மாகும். இவற்றில் சில­வற்றின் பிர­தான வேலைத்­திட்டம் சமூக நலன் நட­வ­டிக்­கை­க­ளே­யாகும். உரிய கார­ணங்கள் எது­வு­மின்றி இந்த அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இதன் காரணமாக இவர்கள் மூலம் கல்வி உள்ளிட்ட உதவிகளை பெற்று வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது அதனை தமது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதானது வெட்கத்துக்குரியதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் அநீதியுமாகும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைப் பயன்படுத்தி நாடகமாடுவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதுடன் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாக்குவதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.