கொவிட் 19 நிலைமையை காரணம் காட்டி சில பள்ளிகளின் இமாம்கள் முஅத்தின்கள் பணி நீக்கம்

சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது திணைக்களம்

0 585

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 நிலை­மையை காரணம் காட்டி நாட­ளா­விய ரீதியில் பள்­ளி­வா­சல்­களில் பணி­பு­ரியும் இமாம்கள், முஅத்­தின்கள் மற்றும் பணி­யா­ளர்கள் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பா­டுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவர்­களில் அதி­க­மானோர் கொவிட் 19 நிலைமை கார­ண­மாக சம்­பளம் வழங்க முடி­யாது என்று காரணம் காட்­டியே பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்­ரபை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு கருத்துத் தெரி­வித்தார்.

“சம்­பளம் வழங்க முடி­யாது எனத்­தெ­ரி­வித்து பலர் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வா­றான முறைப்­பா­டு­களை முன்­வைப்­ப­தற்கு பலர் தயக்கம் கொண்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இவ்­வாறு பள்­ளி­வா­சல்­களின் பணி­யா­ளர்­களை பணி­யி­லி­ருந்தும் நீக்­கு­வது சட்­ட­வி­ரோ­த­மாகும். பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளினால் இவ்­வாறு பள்­ளி­வா­சல்­களின் பணி­யா­ளர்­களை வேலை­யி­லி­ருந்தும் நீக்க முடி­யாது. இது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். இவ்­வா­றான நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக தொழிற்­சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டு­களை திணைக்­க­ளத்தின் கள உத்­தி­யோ­கத்­தர்கள் மாவட்ட ரீதியில் பரி­சீ­லித்து வரு­கின்­றார்கள். முறைப்­பா­டு­களின் உண்­மைத்­தன்­மையை உறுதி செய்த பின்பு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இமாம்கள், முஅத்­தின்கள், ஏனைய பணி­யா­ளர்கள் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் தொடர்ந்தும் கிடைத்து வரு­கின்­றன. பள்­ளி­வா­ச­லொன்றில் 40 வரு­ட­காலம் முஅத்­தி­னாக கட­மை­பு­ரிந்த ஒருவர் இவ்­வாறு பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்றார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ‘விடி­வெள்ளி’ இலங்கை இமாம்கள் மன்­றத்தின் தலைவர் மௌலவி பெளசுல் அமீரைத் தொடர்பு கொண்டு வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு கருத்துத் தெரி­வித்தார். “சம்­பளம் வழங்க முடி­யாது என்று காரணம் காட்டி தாம் வேலை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக சுமார் 35 பேர் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். பல இமாம்கள், முஅத்­தின்கள் விடு­மு­றையில் தங்கள் வீடு­க­ளுக்குச் சென்­றுள்ள நிலையில் மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணத்­தடை கார­ண­மாக மீண்டும் வேலைக்கு வர முடி­யாத நிலையில் இருக்­கி­றார்கள். இவ்­வா­றா­ன­வர்­களும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களால் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்கள். சில பள்ளிவாசல் நிர்வாகங்கள் கொவிட் 19 ஐ காரணம் காட்டி மாதாந்தம் அரைவாசி சம்பளத்தையே வழங்கி வருகின்றன. எனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்“ எனத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.