சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல்வேறு அல் குர்ஆன் மொழியெர்ப்புக்கள் காணப்படுவதால் குர்ஆன் சொல்ல வருகின்ற கருத்துக்களை பிழையாக விளங்கவும் விளக்கவும் வழிவகுக்கிறது. அந்த வகையில் ஒரு மத்திய குழுவின் கண்காணிப்பில் ஒரு மொழிபெயர்ப்பு பொதுமக்கள் பாவனைக்காக பதிக்கப்படல் வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானது ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு என்பதாகும். மூன்று மொழிகளிலும் இலங்கையில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் வரையில் எந்த தர்ஜுமா பாவிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும், இலங்கையில் வெளியிடப்படும் தர்ஜுமாவுக்கான ஏற்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உலமாக்களதும் அமைப்புகளதும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஷரிஆ கவுன்சில், தேசிய ஷூரா கவுன்சில், SCOT ஆகிய அமைப்புகளின் அபிப்பிராயங்களும் கேட்கப்பட்டுள்ளன. இது பற்றிய அப்பிராயங்களை நேரடியாக director@muslimaffairs.gov.lk என்ற ஈமெய்லுக்கு அனுப்பி வைக்கலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.- Vidivelli