அஹ்னாபிற்கு எதிரான ஆதாரங்கள் இல்லாதவிடத்து  உடனடியாக விடுதலை  செய்யப்பட வேண்டும்

0 433

பயங்­க­ர­வாதத்­ த­டைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்து, தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜசீ­மிற்கு எதி­ரான ஆதா­ரங்கள் எவையும் இல்­லா­த­வி­டத்து அவர் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்றும் அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் காலப்­ப­கு­தியில் அவ­ரது மனித உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

இது­கு­றித்து சர்­வ­தேச மன்­னிப்­புச்­ச­பையின் தெற்­கா­சி­யப்­பி­ராந்­தியப் பணிப்­பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் கலா­நிதி ஜகத் பால­சூ­ரி­ய­விற்குக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்ளார். அக்­க­டி­தத்தில் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:

சந்­தே­க­நபர் என்று கருதும் ஒரு­வரை எவ்­வித குற்­றப்­ப­தி­வு­களும் விசா­ர­ணை­க­ளு­மின்றி 18 மாதங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் தடுத்­து­வைப்­ப­தற்­கான அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்ற பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி கைது­செய்­யப்­பட்டுத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் 26 வய­து­டைய கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜசீமின் தற்­போ­தைய நிலை­வரம் தொடர்பில் உங்­க­ளு­டைய அவ­தா­னத்­திற்குக் கொண்­டு­வ­ர­வி­ரும்­பு­கின்றேன். எவ்­வித குற்­றச்­சாட்­டுக்­களோ அல்­லது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஆதா­ரங்­களோ இல்­லாமல், அஹ்னாப் ஜசீம் 400 நாட்­க­ளுக்கும் அதி­க­மான காலம் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது நியா­ய­மான முறையில் வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான அவ­ரது உரி­மையைப் புறக்­க­ணிக்­கின்­றது.

அஹ்னாப் ஜசீம் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் காலப்­ப­கு­தியில் மிகவும் மோச­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் அவர் நடாத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­வ­துடன் சட்ட உத­வியை நாடு­வ­தற்கும் அவ­ருக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. அஹ்னாப் ஜசீமை நீதி­மன்­றத்தில் முன்­நி­லைப்­ப­டுத்­து­வ­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில் அதி­கா­ரிகள் அஹ்னாப் ஜசீமின் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஒத்­து­ழைப்பைப் பேண­வில்லை. அது­மாத்­தி­ர­மன்றி அஹ்னாப் ஜசீ­முக்கும் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடை­யி­லான உரை­யா­டல்கள் அதி­கா­ரி­களால் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளன.

கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி அஹ்னாப் ஜசீம் கொழும்­பி­லி­ருந்து தங்­காலை தடுப்­பு­நி­லை­யத்­திற்கு மாற்­றப்­பட்டார். அதற்கு மறுநாள் அவ­ரது குடும்­பத்­தா­ருடன் எவ்­வித தொடர்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்­தாமல் அவர் நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

பல நாட்­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் அஹ்னாப் ஜசீம் அவ­ரது குடும்­பத்தார் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், அவ­ரது  உடல்­நலன் மற்றும் பாது­காப்பு தொடர்பில் அவ­ரது குடும்­பத்­தினர் பெரிதும் அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். தடுத்­து­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது பொய்­யான வாக்­கு­மூ­லத்தை வழங்­கு­மாறும் அவரால் புரிந்­து­கொள்ள முடி­யாத மொழியில் எழுத்­தப்­பட்­டி­ருந்த ஆவ­ணத்தில் கையெ­ழுத்­தி­டு­மாறும் அதி­கா­ரிகள் அஹ்னாப் ஜசீமை வற்­பு­றுத்­தி­ய­தாக அவ­ரது தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­துள்­ளனர். இது சர்­வ­தேச ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மனித உரி­மைகள் பிர­க­ட­னத்­திற்கு அமை­வாக அவ­ரது உரி­மை­களை மீறும் செயற்­பாடு மாத்­தி­ர­மல்ல, மாறாக நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கும் முற்­றிலும் முர­ணா­ன­தாகும்.

தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்கும் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்டம் சீரான சட்­டத்­தி­ருத்­தங்கள் மூலம் மறு­சீ­ர­மைப்­புச்­செய்­யப்­படும் வரையில் அதன்கீழ் புதி­தாக கைது­ ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதைத் தவிர்ப்­பது குறித்து செயற்­திட்­ட­மொன்றை வகுக்­கு­மாறு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

இலங்­கைவாழ் முஸ்லிம் சமூ­கத்­தினர் இலக்­கு­வைக்­கப்­பட்டு அடக்­கு­மு­றை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் சூழ்­நி­லை­யி­லேயே அஹ்னாப் ஜசீமின் கைது இடம்­பெற்­றி­ருக்­கி­றது. எனவே அஹ்னாப் ஜசீமின் மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நான் உங்­களைக் கேட்­டுக்­கொள்­கின்றேன். அதே­வேளை அவர் குற்­ற­மி­ழைத்­த­மைக்­கான முறை­யான சான்­றுகள் எவையும் இல்­லா­த­வி­டத்து அவரை விடு­தலை செய்­யு­மாறும் வலி­யு­றுத்­து­கின்றேன். அஹ்னாப் ஜசீமின் குடும்­பத்­தினர் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் அவரைச் சந்­திப்­ப­தற்குத் தடை ஏற்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்­ப­தையும் உறு­தி­செய்­ய­வேண்டும். மேலும் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தை மீளாய்­வு­செய்து அதில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.