அஹ்னாப் ஜஸீமின் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது

19 ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கையெழுத்திட்டது எப்படி: சட்டத்தரணி கேள்வி

0 442

( எம்.எப்.எம்.பஸீர்)
‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரை, பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் நீண்­ட­காலம் தடுத்து வைக்க, ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்ட தடுப்புக் காவல் உத்­த­ர­வா­னது சட்ட விரோ­த­மா­னது என உயர் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அஹ்­னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்­ட­வி­ரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று முதன் முறை­யாக பரி­சீ­ல­னைக்கு வந்த போது, மனு­தாரர் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் இதனை தெரி­வித்தார்.

அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்ட போது, அர­சியல் அமைப்பின் 19 ஆவது திருத்தம் அமுலில் இருந்­தது என சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன், அதன் பிர­காரம் ஜனா­தி­பதி எந்த அமைச்சுப் பத­வி­யையும் வகிக்க முடி­யாது எனவும், அப்­படி இருக்­கையில் அஹ்­னாபை தடுத்து வைக்க தடுப்புக் காவல் உத்­த­ரவில் ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்­டுள்­ளமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சி­ய­ல­மைப்பின் 17 ஆவது உறுப்­பு­ரை­யுடன் இணைத்து வாசிக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பின் 126 அவது உறுப்­பு­ரைக்கு அமைய, சட்­டத்­த­ரணி செல்­லையா தேவ­பாலன், அஹ்னாப் சார்பில் தாக்கல் செய்­துள்ள இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று, பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய, காமினி அம­ர­சே­கர மற்றும் ஷிரான் குண­ரட்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு வந்­தது.

எஸ்.சி.எப்.ஆர். 114/ 2021 எனும் இலக்­கத்தின் கீழ் உயர் நீதி­மன்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள இம்­மனு தொடர்பில் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கலா­நிதி கனக ஈஸ்­வ­ரனின் கீழ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி இல்­லியாஸ், சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

இந்த மனுவில் பாது­காப்பு செயலர் கமல் குண­ரத்ன, பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்விஸ், குறித்த பிரிவின் வவு­னியா கிளை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கே.கே.ஜே. அனு­ர­சாந்த, குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இந்த மனு­வா­னது பரி­சீ­ல­னைக்கு வந்த போது, மனு தொடர்பில் பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டுள்ள போதும், அவ­சர மனு­வாக கருதி விசா­ரணை செய்­வ­தற்கு எடுத்­துக்­கொள்­வது தொடர்பில் அவர்­க­ளுக்கு உரிய அறி­வித்தல் வழங்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதன்­போதே, மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன், தடுப்புக் காவலில் உள்ள அஹ்னாப் ஜஸீம், நீண்ட கால­மாக எந்த குற்­றச்­சாட்டும் இன்றி அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தமது மகனின் வய­தையே கொண்ட அவ­ரது நிலைமை தொடர்­பி­லான இந்த மனுவை குறு­கிய நாட்­க­ளுக்குள் பரி­சீ­லிக்க வேண்டும் எனவும், அதற்­காக எந்த நாளில் என்­றாலும் மன்றில் ஆஜ­ராக தான் தயார் எனவும் குறிப்­பிட்டார். இதன்­போதே ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்ட தடுப்புக் காவல் உத்­த­ரவும் சட்ட விரோ­த­மா­னது என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் மன்றில் இருந்த சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி ரஜித்த பெரே­ரா­விடம், வழக்கு சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்கள் கைய­ளிக்­கப்­பட்ட நிலையில், அடுத்த தவணையின் போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதம நீதியரசர் அறிவுறுத்தினார். இந் நிலையிலேயே குறித்த மனு அவசர மனுவாக கருதி, எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாயன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.