உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களுக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் மூலம் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

0 897

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் கடும் போக்குத் தன்­மையை தளர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­காக சுயா­தீ­ன­மான முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் உதவி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்­சன ஹெட்­டி­ஆ­ரச்சி தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் கடும் போக்குத் தன்­மையை தளர்த்­து­வ­தற்­கான பணிகள் இன்னும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது புனர்­வாழ்­வுக்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களைத் தெரி­வு­செய்யும் ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கான சட்ட ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கென தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவும் குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவும் இணைந்து, சட்ட ஏற்­பா­டுகள் ஊடாக புனர்­வாழ்வுத் திட்­டத்­துக்கு இட­மாற்றம் செய்யும் என்றும் அவர் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் இத்­திட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில், ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்டு கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் கடும்­போக்கு தன்­மையை தளர்த்தும் திட்­டத்­துக்­காக தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்கள் என்­னிடம் அனுப்பி வைக்­கப்­ப­டு­வார்கள்.

புனர்­வாழ்வு குழு அவர்­க­ளுக்கு உரிய உத­வி­களை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றது. அவர்கள் பின்பு சமூ­கத்­துக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். உள்­ளூரைச் சேர்ந்த எந்த கட்­சி­யையும் அர­சி­ய­லையும் சேராத சுயா­தீ­ன­மான முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் இந்த திட்­டத்­துக்கு உதவி புரி­வ­தற்­காக இணைத்து கொள்­ளப்­ப­டு­வார்கள்.

இது முற்றும் முழு­வதும் புதிய புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­ட­மாகும். வேறு­பா­டான திட்­ட­மாகும். இது தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லிகள் புனர்­வாழ்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டமை போன்ற திட்­ட­மில்லை. தனி­நாடு கோரிக்­கையை முன்­வைத்து தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லிகள் போரிட்­டார்கள். போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்பு அவர்கள் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டார்கள். இந்த திட்­டத்­தி­லி­ருந்தும் புதிய திட்டம் வேறு­பட்­ட­தாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்­டத்­துக்கு முஸ்லிம் சமூகத்தின் மார்க்க புத்திஜீவிகளின் ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொள்ளப்படும். 12500 தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டனர். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களும் புனர்வாழ்வளிக்கப்படுகிறார்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.