காதி நீதிமன்ற முறைமையை ஒழிக்க அமைச்சரவை தீர்மானம்: முஸ்லிம் சமூகம் பலத்த அதிருப்தி

0 602
  • சிவில் அமைப்புகள் கூடி ஆராய்வு
  • சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தவும் தீர்மானம்

காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிப்­பது உள்­ளிட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் அமைச்­ச­ர­வையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்கள் ஒரு­த­லைப்­பட்­ச­மா­னவை என முஸ்லிம் சமூ­கத்தில் பலத்த அதி­ருப்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. காதி­நீ­தி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும், முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணம் தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பன உள்­ளிட்ட பல தீர்­மா­னங்கள் அண்­மையில் அமைச்­ச­ர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள நிலையில், இது குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மார்க்க, சிவில் தலை­மைத்­து­வங்­களின் அபிப்­பி­ரா­யங்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என்றும் மாற்றுக் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான போதிய அவ­காசம் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் நீதி அமைச்சர் அலி சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட, முஸ்லிம் சட்ட சீர்­தி­ருத்த ஆலோ­சனைக் குழுவும் மேற்­படி தீர்­மா­னங்கள் தொடர்பில் ஏகோ­பித்த சம்­ம­தத்தை முன்­வைக்­க­வில்லை என்றும் அக் குழுவின் உறுப்­பி­னர்கள் மத்­தி­யிலும் இது தொடர்பில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே கருத்து வேறு­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் தெரிய வரு­கி­றது. இக் குழுவின் அங்­கத்­த­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர்,
முதல் மூன்று அமர்­வு­களில் மாத்­தி­ரமே பங்­கேற்­ற­தா­கவும் பின்னர் இக் குழு­வி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்து விட்­ட­தா­கவும் தற்­போது அறிய முடி­கி­றது.

இத­னி­டையே, முஸ்லிம் சமூ­கத்தின் மார்க்க, சிவில் தலை­மை­க­ளிடம் ஆலோ­சிக்­காது எதேச்­சா­தி­கா­ர­மான முறையில் முஸ்லிம் சமய விவ­காரம் தொடர்பில் அமைச்­ச­ரவை மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்தை சட்ட ரீதி­யாக சவா­லுக்­குட்­ப­டுத்­து­வது தொடர்பில் சிவில் அமைப்­புகள் கொழும்பில் சில தினங்­க­ளுக்கு முன்னர் கூடி ஆராய்ந்­துள்­ளன. சிரேஷ்ட முஸ்லிம் சட்­டத்­த­ரணி ஒருவர் தலை­மையில் இடம்­பெற்ற இக் கூட்­டத்தில், அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கும்­பட்­சத்தில் அதனை எதிர்த்து உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களைத் தாக்கல் செய்­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இதேவேளை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இத்தீர்மானம் கவலையையும் அதிருப்தியையும் தருவதாக தெரிவித்துள்ளது.

காதி நீதிபதிகள் போரமும் இத்தீர்மானத்தைக் கண்டித்து நீதியமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அமைச்­ச­ர­வையில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரா­கவும் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இருக்கின்ற போதிலும், காதி நீதிமன்ற முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட யோசனைகளை தான் அமைச்சரவையில் முன்மொழியவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.